Thursday, March 10, 2005

தெரிதல், ஒருபேப்பர்


தெரிதல் பற்றி ஈழநாதன் எழுதிய போது அதைப் பெற்றுக் கொள்ள எனக்கும் விருப்பம் என்று குறிப்பிட்டேன். பத்மனாபஐயருக்கு இது விடயமாக மின்னஞ்சல் செய்வதாகவும் சொன்னேன். ஆனால் நான் எழுத முன்னமே தெரிதல்கள் என்னை வந்தடைந்தன. இது பத்மனாபஐயரின் பாராட்டத்தக்க செயற்பாடுகளில் ஒன்று.

அடுத்து இவ்வாரம் வந்த பத்திரிகைகள்
முதலில் ஒருபேப்பர் 15, 16, 17. இரண்டு நாட்கள் கழித்து ஒரு பேப்பர் 18. எல்லாவற்றையும் வாசித்து விட்டு ஒரு சிறு குறிப்பாவது தர முயற்சிக்கிறேன்.

ஒரு பேப்பர் என்ற பெயர் எல்லோரையும் தொந்தரவு செய்வதால், அப்பேப்பருக்கு இன்னொரு பேப்பர் அல்லது கண்டறியாத பேப்பர் எனப் பெயர் வைக்கலாமென ஆசிரியர் குழு 17வது பேப்பரில் யோசித்துள்ளது. இனி 18வது பேப்பரைச் சரியாக வாசித்தால்தான் பெயர் வைத்தார்களோ அல்லது வைதார்களோ என்று தெரிய வரும்.

3 comments:

  1. இல்லை அக்கா தாம் பத்திரிகை தொடங்கி 1 வருடம் ஆகிவிட்டதாகவும் தயவு செய்து இனி பேரை மாத்துங்கள் பேரை மாத்துங்கள் என கேட்க வேண்டாம் என்றும் தாம் எப்படியோ இருந்து விட்டு போவதாகவும் வழமையான நகைச்சுவைப் பாணியில் கூறியிருக்கிறார்கள்

    ReplyDelete
  2. ஓஸிப்பேப்பர்தானே.அதுதான் பல ஆலோசனைகள் அவர்களுக்கு கிடைக்கின்றன.

    ஒரு பேப்பர் நல்ல பெயர்தானே..ஏன் மாற்றவேண்டும் என்ற கூப்பாடோ தெரியவில்லை.

    நல்ல தவறவிட்ட கட்டுரைகளும் பார்க்க கிடைக்கிறது.

    வாழ்க்கைத்துணை விளம்பரப்பக்கம் மட்டும் வேஸ்ட்.

    ReplyDelete
  3. சயந்தன் சுரதா
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
    சுரதா உங்களுக்குத் துணை இருப்பதால் வேஸ்ட் என்கிறீர்கள். இல்லாதவர்களுக்கு ஒருவேளை அது worthஆக இருக்கலாம்.

    ReplyDelete