வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள் உண்மையிலேயே சோம்பலானவர்கள் என்கிறார் எழுத்தாளர் Lili Stollowsky.
தினமும்
பெண்கள் சமையலறையில் 90நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 7நிமிடங்களை மட்டுமே.
பெண்கள் தோய்த்து அயர்ண் பண்ணுவதற்கு 30நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 2 நிமிடங்களை மட்டுமே.
பெண்கள் வீட்டைத் துப்பரவாக்குவதற்கும் அடுக்குவதற்கும் 109நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 11 நிமிடங்களை மட்டுமே.
பெண்கள் பிள்ளைகளைப் பராமரிக்க 170 நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள். ஆண்கள் 70 நிமிடங்களை மட்டுமே.
மொத்தமாக பெண்களை விட 3மணி நேரங்கள் அதிகமாக
ஆண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.
///வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள் உண்மையிலேயே சோம்பலானவர்கள் ///
ReplyDeletevery true in my personal experience :-).
எல்லா ஆண்க்களையும் அப்படி சொல்லிவிட முடியாதுக்கா....
ReplyDeleteவிதி விலக்கும் உண்டு!
நான் எப்போது மணமான நண்பர்கள்/தோழிகளின் வீட்டுக்கு போனாலும்.. சமையல் வேலை தொடங்கி கிச்சனின் அனைது வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்துகொள்வேன்.
அன்று அவர்களுக்கு கிச்சன் லீவு!
:)
முத்து
ReplyDeleteவரவுக்கும், கருத்துக்கு நன்றி.
பாலபாரதி
எதற்கும் விதிவிலக்கு உண்டு.
அதேநேரம் பல ஆண்கள் தமது வீட்டில் செய்ய மாட்டார்கள்.
மற்றைய வீடுகளில் செய்வார்கள்.
தமது மனைவியரின் சுமைகள் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.
மற்றைய பெண்களின் சுமைகளை உடனே தாங்க முனைவார்கள்.
நீங்கள் உங்கள் வீட்டில் எப்படி?
அய்யோ... எனக்கு இன்னும் மணமாகவில்லைக்கா..
ReplyDeleteகடைசி குழந்தையாகிப்போனதால்..
சிறுவயது முதல் எல்லா வேலைகளையும் என் தலையில் போட்டு விட்டு ஓடி விடுவார்கள் என் மூத்தவர்கள்..
அப்படித்தான்.. வீட்டு வேலைகளை கற்றுக்கொள்ள நேர்ந்தது..
இப்போதும் ஊருக்கு போகும் போது கூட என் துணிகளை நான் தான் துவைப்பேன். அவ்வப்போது சமையல் க்கட்டிலும் புகுந்து விளையாடுவது வழக்கம்.
நாளை துணைவியார் வந்தாளும் ஒப் பழக்கம் மாறாது.. நான் கற்றுக்கொண்ட நூல்களை இதற்கு காரணம் என்பேன்.
நல்ல எண்ணம் பாலபாரதி,
ReplyDeleteஉங்களுக்காகப் பிறந்திருப்பவர் கொடுத்து வைத்த பெண்ணாகத்தான் இருப்பார்.
சந்திரவதனா, நீங்க சொல்வது போல், எங்க அம்மா காலை ஒன்றரை மணி நேரம் சமையலறையில் இருந்து செய்யும் வேலைகளை, எங்க அப்பா, அம்மா இல்லாத நாட்கள்ல பத்து -இருபது நிமிடத்தில் முடித்துவிடுவார்.. (பேப்பர் படித்துக் கொண்டே..)
ReplyDeleteஇந்தப் புள்ளிவிவரத்தைப் பாத்தா அவர் என்ன சொல்வார் தெரியுமா? உண்மைதான், ஆண்கள் வேலைகளைச் சீக்கிரமாக முடிக்கிறார்கள் என்பார்.. :)
அம்மா இருக்கும் நாட்களில் இது இன்னும் நேரமாகும்... அப்பா எடுத்துவைக்கும் பாத்திரங்களின் ஒழுங்கு, சுத்தம் என்று, சமையல் தவிர்த்த பிற வேலைகளில் அம்மாவின் கண்காணிப்புக்குப் பயந்து வேலை செய்வது அவருக்குக் கஷ்டம்...
very true
ReplyDeleteநான் கூட சன்டே சமையல்தான். வாரத்திற்கு 7 நாள் நானும், மிச்ச நாட்களில் என் மனைவியும் சமைப்பார்கள். டேஸ்ட்டா சமைப்பமுல்ல. பொம்பளயாளுங்களை freeஆ விடுங்கைய்யா.
ReplyDelete