Friday, September 01, 2006

பாடல்களிலிருந்து சில வரிகள் - 1


சில பாடல்களின் சில வரிகள் மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்றன
அப்படியான வரிகளில் ஒன்று.


கடவுள் ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

3 comments:

  1. அதற்கு அடுத்தவரிகளை விட்டு விட்டேர்களே அம்மணி
    அவைகள் இன்னும் பிரமாதமாக இருக்கும்
    கவையரசர் கண்ணதாசன் ஒரே போடாகப் போட்டிருப்பார் - பாவி மனிதர்களை!
    இதோ அந்த வரிகள்

    எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
    எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது?

    ReplyDelete
  2. இந்த வரிகளுக்கு இப்படியொரு விளக்கத்தைக் கேட்கப்பெற்றேன்:

    'ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
    ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்'

    'அதுவே' என்பது முந்தைய மனிதன் வாழ்க்கை, இன்பமாகக் கழிப்பதை நினைத்து அவதியுறும் மனிதரைக் குறிப்பதாக சொன்னார்.

    எனவே இரண்டு அர்த்தங்கள்...

    அடுத்தவர் கார், பங்களா என்று இன்பமாக இருக்கிறாரே, என்று நினைத்து தானும் முயன்று பணத்திற்கு அடிமையாவதால், வாழ்வு துன்பமயமாகும். பொறாமைப்பட வேண்டாம் என்கிறார். 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'

    அல்லது...

    வாழ்வை கொடுமை என்று எண்ணினால், அல்லாதவைகளே அனுபவமாக அமையும்.

    ReplyDelete
  3. சுப்பையா
    உங்கள் வரவில் மகிழ்ச்சி.
    அந்தப் பாடல் வரிகளை ஞாபகப் படுத்தியமைக்கு மிகவும் நன்றி.

    boston bala
    இந்தப் பாட்டை வைத்து இப்படி நான் சிந்தித்துப் பார்த்ததில்லை.
    விளக்கங்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete