Friday, November 27, 2009

உங்களை நாங்கள் வணங்குகின்றோம்!


எங்கள் இலட்சிய மாடத்தின்
அத்திவாரக் கற்களே!
அமைதியாக எம் மண்ணில்
புதைந்திருக்கும் விதைகளே!

பூகம்பங்களாய் களமாடிய நீங்கள்!
பூவிதழ்களாய் விரிந்திருக்கிறீர்கள்-ஆனால்
இங்கெரியும் தீபங்களால் நீங்கள்
மூட்டிடும் விளக்குகள் ஏராளம்!

கல்லறைக்குள்ளிருந்தே களப்புலிகளைப் பிரசவிக்கும்
வல்லமை கொண்டவர்கள் நீங்கள்!
மலர்தூவ வருவோரின் மனங்களில் பொறிபாய்ச்சி
கனல் தெறிக்க வைப்பவர் நீங்கள்!

நெய்யூற்றி உங்கள் முன்னால்
விளக்கெரிப்போம் நாங்கள்-உங்கள்
இலட்சியத்தின் சுமையினை துணிந்தே
பொறுப்பெடுப்போம் நாங்கள்!

- தீட்சண்யன்

1 comment:

  1. உங்களுகு பாராட்டுக்கள்.... மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

    ReplyDelete