கணினியைப் பார்க்கும் எண்ணமே முதலில் இருக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு உந்துதல். பார்த்து விட்டுப் படுப்போமே என்றது மனது.
சுவையான, சுவாரஸ்யமான தகவல்களுடன் மனது இணைய முன்னரே ஆரம்பகால வலையுலக நண்பர் டோண்டு இராகவனின் மரணச்செய்தி அதிர்ச்சியைத் தந்தது.
கால ஓட்டத்தில் அவருடனான எனது தொடர்பு அறவே அற்றுப் போய்விட்டாலும், தமிழ்வலையுலகின் ஆரம்பகாலங்களில் கருத்துக்கள், கட்டுரைகள், பின்னூட்டங்கள்.. என்று நிறைய விடயங்களைப் பரிமாறியதை மறந்து விட முடியாது. குறிப்பாக அவர் ஜெர்மன்மொழி பெயர்ப்பிலும் தேர்ச்சி பெற்றவராதலால் அது சம்பந்தமாகவும் பல கருத்துக்களைப் பரிமாறியுள்ளோம். எனது அனேகமான பதிவுகளுக்கு ஒற்றைவரியிலேனும் பின்னூட்டமிடுவார்.
ஆனாலும் எப்படியோ அவரை அடியோடு மறந்த விட்டேன். மரணச்செய்தியைப் பார்த்ததும், அதிர்ச்சியும், ஞாபகங்களும்...
டோண்டு இராகவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
அண்ணாரின் ஆத்மா சாந்தியடை பிராத்திப்போம்.மீண்டும் உங்களை எழுத வைத்த நினைவுகள் மூலம் அவரின் மொழிப்புலமையும் அறிய முடிந்தது!
ReplyDeleteசந்திரவதனா,
ReplyDeleteஎன்னையும் தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்! டோண்டு இறுதி வரை என் நெருங்கிய நண்பராகவே இருந்தவர்.
நான் வலைப்பூவில் எழுதுவதை பெருமளவில் குறைத்துக் கொண்டபோதும், என் இடுகை ஒன்றை வாசித்து, அதனால் உந்தப்பட்டு தமிழ் வலையுலகுக்கு எழுத வந்த (இது அவரே கூறியது) டோண்டு அவர்கள் கடைசி வரை எழுதிக் கொண்டே தான் இருந்தார். நல்ல நண்பர் ஒருவரை இழந்து விட்டேன்!
டோண்டு பற்றிய என் அஞ்சலி கட்டுரைகளை வாசிக்க:
http://balaji_ammu.blogspot.in/2013/02/blog-post.html
http://balaji_ammu.blogspot.in/2013/02/blog-post_6.html
அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com
நன்றி தனிமரம்.
ReplyDeleteநன்றி பாலா!
ReplyDeleteஉங்களை மறக்கவில்லை. சில பாடல்களைக் கேட்கும் போது கண்டிப்பாக ஞாபகத்தில் வருவீர்கள். எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றான பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. என்ற பாடல் சம்பந்தமான ஒரு பதிவினூடே எனக்கு அறிமுகமும், நட்புமானீர்கள். தொடர்புகள் இல்லாது போயிருந்தாலும் அவ்வளவு எளிதில் மறப்பதற்கில்லை.