அன்று ஒரு குடும்பச் சந்திப்பு.
வழமையாக எனது கழுத்தோடு இருக்கும் சங்கலியுடனேயே அந்நிகழ்வுக்குச்
சென்றிருந்தேன்.சிரிப்பும், சந்தோசமும் கலகலக்க பழைய நினைவுகளுடனும், புதிய
சங்கதிகளுடனும் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
என் உறவுகளில்
ஒருத்திதான் எனது கழுத்தில் இருந்த சங்கிலியைப் பார்த்து “எங்கே
வாங்கினனீங்கள்? மிகவும் அழகாக இருக்கிறது. உங்களுக்கு நல்ல பொருத்தமாகவும்
இருக்கிறது“ என்றாள். பல தடவைகள் அந்தச்
சங்கலியுடன் அவளைச் சந்தித்திருந்தேன். இன்று என்ன பிரத்தியேகமாகச்
சொல்கிறாள் என்ற நினைவு மனதுள் எழுந்தாலும் வார்த்தைகளால் என்னைச் சந்தோசப்
படுத்திய அவளுக்கு நன்றி கூறி விலகிய அடுத்த கண்த்தில் இன்னொரு உறவுப்பெண்
எனது சங்கிலியை உற்றுப் பார்த்தாள். “ஏன் இப்பிடிப் போட்டிருக்கிறீங்கள்?
இதுக்கு ஒரு நல்ல பென்ரன் வாங்கிப் போட்டிருந்தீங்களென்றால் வடிவாய்
இருந்திருக்கும்“ என்றாள்.
No comments:
Post a Comment