Tuesday, January 03, 2017

அப்பால் ஒரு நிலம்

வாசிப்பின் அலாதியான சுகத்தை சுகித்தவாறே குணா கவியழகனின் ´அப்பால் ஒரு நிலத்தை` வாசித்துக் கொண்டிருக்கிறேன். 

மற்றவர்களைப் போல என்னால் ஒரு புத்தகத்தை மிக வேகமாக வாசித்து விட முடியாது. நான் வாசிக்கும் போது சில பக்கங்களையும், சில பந்திகளையும், சில வசனங்களையும் திரும்பத் திரும்ப வாசித்து, சுகித்துக் கொள்வேன். அதனால் ஒவ்வொரு புத்தகத்தையும் வாசித்து முடிக்க எனக்கு நிறைய நேரங்கள் தேவைப்படும்.


குணா கவியழகனின் கதை சொல்லும் உத்தி சற்று வேறானது. மிகுந்த சுவாரஸ்யமானது. கதைக்களம் போர்க்களமாக இருப்பதால் அது தரும் உணர்வுகளும் வேறானவை.


„நாறல் மீனைப் பூனை பார்த்த மாதிரி...“ என செல்வம் அருளானந்தம் எழுதித் தீராப் பக்கங்களில் எழுதியதை வாசித்து வயிறு குலுங்கச் சிரித்தேன். பிறகும் நினைத்து நினைத்துச் சிரித்தேன். இதே „நாறல் மீனைப் பூனை பார்த்த மாதிரி...“ என்று குணா கவியழகன் எழுதியதைப் படித்துச் சிரிக்க முடியவில்லை. இங்கு பூனையாக இலங்கை இராணுவமும், நாறல் மீனாக இராணுவத்திடம் பிடிபட்ட வீரன் என்ற கதையின் நாயகனும்... அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


கூடவே கவிதாவின் `யுகங்கள் கணக்கல்ல´ வையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் நான் வாசித்த கதைகள் பற்றிய சிந்தனைகள் எழும் போதெல்லாம் கவிதாவுக்கு அந்த நேரத்தில் எப்படி இப்படியான சிந்தனைகள் எழுந்தன என்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன. கதையின் நாயகர்களும், கருக்களும் எங்கிருந்து கவிதாவுக்குக் கிடைத்தார்கள் என்பதை ஆறுதலாகக் கவிதாவிடமே கேட்க வேண்டும். புத்தகத்தை முழுதாக வாசித்து விட்டுக் கேட்கலாமென்றிருக்கிறேன்.


ந்திரவதனா
29.11.2016
   


https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10154255566952869?pnref=story

No comments:

Post a Comment