Saturday, February 12, 2005
வேண்டுகோள்
வலைப்பதிவுகளின் வளர்ச்சி பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். இதில் காசியின் தமிழ்மணத்தினூடான முயற்சிகள் வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பெரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்த வளாச்சிகளின் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த ஒரு வசதி இல்லாது போய் விட்டது போல் தெரிகிறது. முன்னர் ஒரு சொல்லைக் கொடுத்து அது சம்பந்தமான ஆக்கங்களைத் தேடக் கூடிய வசதி இருந்தது. இப்போது அதைக் காணவில்லை. பல தடவைகள் Blogsஇல் ஏதாவதொன்றைத் தேட முனைந்து முடியாமல் கூகிளை நாடி நேரத்தைத் தொலைத்திருக்கிறேன். இந்த தேடும் வசதியும் தமிழ்மணத்தில் சேர்க்கப் பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். (ஏற்கெனவே இருந்து நான் அதைக் கண்டு பிடிக்காவிட்டால் சுட்டிக் காட்டுங்கள்.)
அத்தோடு துறைசார்ந்து வலைப்பதிவுகள் பட்டியலிடப் பட வேண்டும். அதை இன்று பாலாஜியும் குறிப்பிட்டிருந்தார். இதையும் வேறு யாரும் செய்வதையும் விட காசியே செய்து தமிழ்மணத்தில் இ.இதழ்கள் பக்கம் போல அமைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
// இந்த தேடும் வசதியும் தமிழ்மணத்தில் சேர்க்கப் பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். (ஏற்கெனவே இருந்து நான் அதைக் கண்டு பிடிக்காவிட்டால் சுட்டிக் காட்டுங்கள்.)//
ReplyDeleteஹஹ்ஹா, சரியாச் சொன்னீங்க:-)
'இன்று புதிதாய் எழுதப்பட்டவை
20 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்படுகிறது'ன்னு ஒரு பட்டி தெரியுதே அதோட வலது ஓரமா ஒரு லென்ஸ் இருக்கு பாருங்க, அதைக் கையில் எடுத்தா தேடலாம்.
தேடும் வசதியைத் தேடும் வசதி செய்யணும்... :(
nantri kasi.
ReplyDelete///தேடும் வசதியைத் தேடும் வசதி செய்யணும்///