Saturday, May 27, 2006

பேரன் பேர்த்தி - குறும்படம்


- மூனா -

தாத்தாவுக்குத் தன் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசை. பக்கத்து வீட்டுச் சிறுமி தன்னுடன் தமிழ் கதைக்கும் போது அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி தனது பேரப் பிள்ளைகள் பிரெஞ் கதைக்கும் போது அவரிடம் காணாமல் போய்விடுகிறது. அவரது பேரன், பேத்திக்கு தமிழ் தெரியாதது இறுதியில் அவருக்கு வினையாக முடிந்து விடுகிறது. பராவின் பேரன் பேர்த்தி குறும்படத்தின் கதை இதுதான்.

சொல்ல வந்ததை பரா திருப்தியாகச் சொல்லி விட்டாரா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.

பிள்ளைகள் விளையாடுகிறார்கள். தாத்தா வீட்டுக்கு வருகிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள். தாத்தா பார்க்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள் தாத்தா பாடுகிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள தாத்தா யோசிக்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள் தாத்தா குளிக்கிறார்.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள்......
இப்படிப் படம் போய்க் கொண்டிருக்கிறது.

புலம்பெயர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித் தர வேண்டும் என்று பரா தனது குறும்படத்துக்கு எடுத்துக் கொண்ட கருத்து வலுவானது. அதை இன்னும் வலுவாகத் தந்திருக்கலாம். சில காட்சிகளை நீட்டித் தராமல் அழுத்தமான விசயங்களைச் சொல்லியிருக்கலாம்.

தகப்பனும் மகனும் உரையாடுவது, ஏதோ முன்பின் தெரியாதவர்கள் உரையாடுவதுபோல் அன்னியப்பட்டிருக்கின்றது. மூத்த கலைஞர் ரகுநாதன் நடிப்பு அபாரம். சிறுவர்கள் நடிப்பில் மிளிர்கிறார்கள். ஆனால் அம்மாவும் அப்பாவும் நடிப்பில் அந்தோ பரிதாபம். இறுதிக்காட்சியில் சிறுவர்களின் கண்ணீரைப் பார்க்கும் போது நெஞ்சில் ஒரு நெருடல். அதேநேரம் அப்பாவும், அம்மாவும் வந்து அழும்போது அவர்களுக்காக நாம் அழவேண்டும் போல் இருந்தது. பிள்ளைகளுக்கு அழுதழுது தந்தை தமிழ் வசனங்களைச் சொல்லிக் கொடுப்பது, கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு.. பாசமலர் காலத்துப் பாணி.

பரா காட்சிகளை இன்னும் அழகாகச் செதுக்கியிருந்தால் அற்புதமான குறும்படம் கிடைத்திருக்கும். ஆனாலும் பராவின் இந்த முயற்சி வீண் போகவில்லை. பராவின் பேரன் பேத்தியைப் பார்த்த பின்னர் குறும்படங்கள் நிறைய வரும் நிறைவைத் தரும் என்ற நம்பிக்கை வருகிறது.

பேரன் பேர்த்தி குறும்படத்தைப் பார்க்க

-மூனா
26.5.2006

Friday, May 26, 2006

மதுமிதாவுக்காக

T

வலைப்பதிவர் பெயர்: சந்திரவதனா

வலைப்பூ பெயர் : மனஓசை
சுட்டி(url) : http://manaosai.blogspot.com/

வலைப்பூ பெயர் : ஈழகானங்கள்
சுட்டி(url) : http://padalkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : ஈழத்துக் கலைஞர்கள்
சுட்டி(url) : http://kalaignarkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : காதல்
சுட்டி(url) : http://kathal.blogspot.com/

வலைப்பூ பெயர் : குழந்தைகள்
சுட்டி(url) : http://kulanthaikal.blogspot.com/

வலைப்பூ பெயர் : சாதனை பெண்கள்
சுட்டி(url) : http://vippenn.blogspot.com/

வலைப்பூ பெயர் : சினிமாப் பாடல்கள்
சுட்டி(url) : http://cinemapadalkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : சிறுகதைகள்
சுட்டி(url) : http://chandravathanaa.blogspot.com/

வலைப்பூ பெயர் : தாயககீதங்கள்
சுட்டி(url) : http://thayagageetham.blogspot.com/

வலைப்பூ பெயர் : தீட்சண்யம்
சுட்டி(url) : http://theedchanyam.blogspot.com/

வலைப்பூ பெயர் : துணுக்குச் செய்திகள்
சுட்டி(url) : http://seithikal.blogspot.com/

வலைப்பூ பெயர் : படித்தவை
சுட்டி(url) : http://padiththavai.blogspot.com/

வலைப்பூ பெயர் : புகைப்படம்
சுட்டி(url) : http://pukaippadam.blogspot.com/

வலைப்பூ பெயர் : புத்தகம்
சுட்டி(url) : http://thamilbooks.blogspot.com/

வலைப்பூ பெயர் : புனர்வாழ்வு
சுட்டி(url) : http://tronews.blogspot.com/

வலைப்பூ பெயர் : பெண்கள்
சுட்டி(url) : http://pennkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : பெட்டகம்
சுட்டி(url) : http://sammlung.blogspot.com/

வலைப்பூ பெயர் : மகளிர்
சுட்டி(url) : http://mahalir.blogspot.com/

வலைப்பூ பெயர் : மருத்துவம்
சுட்டி(url) : http://maruththuvam.blogspot.com/

வலைப்பூ பெயர் : மாவீரர்கள்
சுட்டி(url) : http://maaveerarkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : Tagesthemen
சுட்டி(url) : http://thumi.blogspot.com/

ஊர்: ஸ்வெபிஸ்ஹால்

நாடு: ஜேர்மனி

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
திரு மாலன் அவர்கள் 2003 ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று Blog ஐ அறிமுகப் படுத்தினார். அப்போது இது எப்படி சாத்தியமாகுமென ஆச்சரியப் பட்டேன்.
மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது.

எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த "நாகரீகம்" என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 27.7.2003

இது எத்தனையாவது பதிவு: மனஓசையில் 418வது.
எல்லாவற்றையும் சேர்த்தால் 1500க்கு மேல்


இப்பதிவின் சுட்டி(url): http://manaosai.blogspot.com/2003_07_27_manaosai_archive.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரத்துடன், எதை விரும்பினாலும் அதை என்னால் அங்கே பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.

சந்தித்த அனுபவங்கள்:
வலைப்பூக்களின் அறிமுகம் உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒரு சமாச்சாரமாகவே இருந்தது. பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வர முடிந்தது. சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து அறிந்து கொள்ள முடிந்த திருப்தி ஏற்பட்டது.

பெற்ற நண்பர்கள்: முகம் தெரியாவிட்டாலும் மகிழ்வோடு பழகக் கூடிய பலர்.

கற்றவை: கைம்மண்ணளவு

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: தாராளமான சுதந்திரம்

இனி செய்ய நினைப்பவை:

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பருத்தித்துறையில் ஆத்தியடி என் பிறப்பிடம்.தியாகராஜா சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் நான் இரண்டாவது. பெண்களுள் மூத்தவள். கற்றது வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில்.

கணிதமும் கல்வியும் என்னோடு நன்றாகவே இசைந்திருந்தாலும் காதலும், கல்யாணமும் அந்த வயதில் இன்னும் இசைவாக இருந்தன. அதன் சின்னமாய் என் சந்தோசங்களாய் திலீபன், தீபா, துமிலன் என மூவர். அவர்களிடமிருந்து அதி அற்புத பரிசுகளாய் சிந்துவும், நதியும் என் பேத்திகள்.

என் பெற்றோர்கள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. கோபங்களையும் குமுறல்களையும் மட்டுமல்ல என்னைச் சுற்றியுள்ள உண்மைகளையும் எனது எண்ணங்களையும் கூட எழுத்தால் கூறுவது எனக்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. அநியாயங்களையும் அக்கிரமங்களையும் மென்று விழுங்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட எழுத்து உதவுகிறது.

தஞ்சம் என்று வந்த போது என்னைத் தாங்கிய நான் 20 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற யேர்மனியின் ஸ்வெபிஸ்ஹால் நகரையும் அங்கு வாழ் மக்களையும் எனது தாயகத்துக்கு அடுத்த படியாக நேசிக்கிறேன்.

என்னிடம் மனிதநேயமும் மனதில் பாசமும் நிறையவே உண்டு. கலைகளில் ஆர்வமும் கலைஞர்களில் மதிப்பும் உண்டு. மண்ணுக்காய் தம் இன்னுயிரை ஈந்த அந்த மான மறவர்களை மனதாரப் பூசிக்கிறேன். அநீதி கண்டால் எந்தளவுக்குக் கொதித்துப் போகிறேனோ அதையும் விட அதிகமாக அன்பு எந்த வடிவில் கிடைத்தாலும் அடிமையாகிப் போகிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
யாருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்.

Thursday, May 18, 2006

மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?


மரணம் என்ற சொல்லே மரித்து விட வேண்டுமென்றுதான் மனித மனம் ஆசைப் படும். மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..? மரணிப்பவர் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுதலை பெற்று விடுவார். ஆனால் அவரின் பிரிய உறவுகள் அப்போதுதான் துயரின் முழுவடிவத்தையும் முழுமையாகப் பரிசிப்பார்கள். துயரிலே மூழ்கி எழுவார்கள்.

ஆனாலும் மூக்கைச் சிந்திச் சீறி எறிகையிலும் ஆசைகளை மட்டும் எறிய மறந்து விடுவார்கள். வாழ்க்கை என்பது ஒரு மாயச்சுடர். சொல்லாமல் கொள்ளாமல் அந்த மாயச்சுடர் அணைந்து போய் விடும் என்று தெரிந்தும் ஆசை என்னும் மாயவலையில் வீழ்ந்து வாழும் காலத்தைச் சிக்கலாக்கி விடுவதுதான் மனித மனங்களின் இயல்பாகி விட்டது.

ஏன் இந்த அர்த்தமற்ற ஆசைகள்...!
ஆசைகள் ஆசைகளாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அதுவே பேராசையாய், பேரவாவாய், வெறியாய், பொறாமைத் தீயாய், ஏமாற்றமாய், துரோகமாய்... என்று நீண்டு, தம்மையும் அழித்து பிறரையும் அழித்து...!

ஒரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
அள்ளி வைச்ச ஆசையெல்லாம் கொள்ளி வைச்சால் போச்சு
தூங்கி விட்டால் ஓடி விடும் வாங்கி விட்ட மூச்சு...

(பாடல் - ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன்......
படம் - தீர்ப்பு, பாடியவர்-எம்.எஸ்.விஸ்வநாதன்.)


கொள்ளி வைக்கும் போது கூட வர எதுவுமே இல்லை. இருந்தும் ஏனிந்த ஆசைகள் மனதுக்கு..?

இன்னொரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்.
மூங்கிலிலே முத்துப்பல்லக்கு அதில் ஏறிச் செல்லச் சொத்து எதற்கு
கொள்ளியிட்டால் வேகும் எலும்பு அதில் கொண்டு செல்ல என்ன இருக்கு...

(பாடல் - குருடான கவிஞனுக்கு..... படம் - நெஞ்சில் ஒரு ராகம்.
பாடியவர் - ரி.எம்.சௌந்தர்ராயன்-சசிரேகா.)

மரணத்தைக் கண்ட பின்னும் மனங்கள் திருந்த மறுப்பதேன்...?
ஆசை.. ஆசை.. ஆசையில் என்னும் தீயில் வெந்து தணலாகி நீறாகும் போதும் நீறாகாத ஆசைகள்.

பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். போகும் போது என்ன கொண்டு போகப் போகிறோம்.

ஊசிமுனை கூட வருமா உன் கூட
உன் கணக்கைப் பார்க்கிறப்போ
சில்லறையா மிஞ்சும், வெறும் கல்லறைதான் மிஞ்சும்...
(பாடல் - ஆடும் வரை ஆட்டம். படம் - வீரப்பதக்கம்.
பாடியவர் - மலேசியா வாசுதேவன்.)


இருந்தும் நான், நீ, எனது, உனது... என்று அடித்துப் பிடித்துச் சண்டை.
வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போன்றது. ஊதிவிட்டால் நீர்க்குமிழி போன்ற வாழ்க்கை உடைந்து போய் விடும் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத படி ஆசைகள் அறிவுக் கண்ணை மறைத்து விடுகின்றன.

காயமிது பொய்யடா காற்றடைத்த பையடா
நீயிருக்கும் பூமியே நீர்க்குமிழிதானடா....
......குமிழிக்குள் குத்து வெட்டு கத்திச் சண்டை ஏனடா....
(பாடல் - ஓட்டைப்பானை...... படம் - ஜாதிமல்லி
பாடியவர் - மரகதமணி.)


ஒரு நாளைக்குப் பொசுக்கென்று போய் விடும் போது வீடு வாசல் பணம் பதவி எதுவுமே எம்முடன் கூட வருவதில்லை. இருந்தும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்தான் எத்தனை எத்தனை கனவுகள், நனவுகள், ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கோபங்கள், தாபங்கள், சண்டைகள், சல்லாபங்கள்... இன்னும் எத்தனை..! உடலை விட்டு உயிர் போன பின்தான் எல்லாமே மாயை என்பது புரிகிறது.

ஆடும் மேனி வெறும் தோணியே, ஆடித் தீர்ந்தால் அவன் ஞானியே
மனிதக் கணக்கு தினம் மாறுமே, கூட்டிக் கழித்தால் வெறும் மாயமே..
(பாடல் - ஏய் சலோமா......
படம் - சுபாஸ் பாடியவர் - வித்தியாசாகர்-சுவர்ணலதா)


மாயம் என்று தெரிந்தும் மனம் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்று பொல்லாத் தனமாய் அலையும். இந்தப் பொல்லாத் தனங்களும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான்.

தண்ணீரில் போடும் கோலம் போல வாழ்க்கையும் நிலைக்காதது. தரை மீது காணும் எதுவுமே நிலைக்காது.

அதைக் கவிஞர் கண்ணதாசன்
தரைமீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா..! என்கிறார்.

நாம் பிறக்கும் போது தன்னந் தனியாக வெற்றுடம்புடன் பிறக்கிறோம். பிறகு இறக்கும் போதும், பிறக்கும் போது எம்முள் இருந்த உயிர் கூட எம்மை விட்டகன்று வெறும் உடலமாய் கிடந்து சாம்பலாகப் போகிறோம். இடையிலே நாம் எதற்கெல்லாம் ஆசைப்பட்டு எம்முடன் சேர்த்து வைத்தோமோ அவையெதுவுமே எம்மோடு வருவதில்லை.

அதைத்தான் கவிஞர்
யாரோடு யார் வந்தது
நாம் போகும் போது யாரோடு யார் செல்வது....

என்று இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறார்.

வாழ்க்கை ஒரு நாடகம் போன்றது. நாமெல்லாம் அங்கு வெறும் நடிகர்கள்தான். உலகம்தான் மேடை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேஷம் கிடைத்து நடிப்போம். நாடகம் முடிய கூடி இருந்து பார்த்தவர்கள் கலைந்து ஓடி விடுவது போலவே எமது வாழ்க்கை நாடகம் மரணத்தில முடியும் போது கூடி இருந்தவர்கள் தம்பாட்டில் போய் விடுவார்கள்.

மிகவும் யதார்த்தமாகச் சிந்தித்து கவிஞர் அதை
ஆடும் வரை கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்.....
என்கிறார்.

தாயாலே வந்தது தீயாலே வெந்தது.
மெய்யென்று மேனியை யார் சொன்னது...
தாயின் மடியில் பிறந்து மண்ணின் மடியில் மடிந்து போகிறோம். மேனிக்கு மெய்யென்று கூட ஒரு பெயருண்டு. அந்த மெய்யே மெய்யற்றது என்று கூறும் விதம் அழகாயுள்ளது.

பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்

பிறந்தவுடன் அன்னையின் அணைப்புடன் பால் கிடைக்கும். இறக்கையில் உறவுகள் கூடி பால் ஊற்றுவர். தன்மைகள் வேறுபட்டு நின்றாலும் செயற்பாடு ஒன்றாகவே உள்ளது.

உண்டானது இரண்டானதால்
ஊர் போவது நாலானதால்
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய்யென்று மேனியை யார் சொன்னது....

இருவரின் இணைவில் கருவாகி, நால்வரின் துணையுடன் கடைசி இடத்துக்குப் போகும் இந்த மெய் பொய்யானது.

நாடகம் முடித்து வேசம் கலைத்து பாதைகள் பல மாறிப் பயணித்த இந்தப் பயணத்தை முடித்துக் கொள்வதுதான் மரணம்.

இந்தத் தத்துவத்தை உண்மையை எல்லோரும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் படியாக அதாவது உலக மேடையில் வாழ்க்கை நாடகத்தில் வேசம் போட்டுக் கூத்தாடும் நடிகர்களே, வாழ்க்கை நாடகம் முடியும் போது நாம் மரணிக்க கூடி நின்ற கூட்டம் வெறும் பார்வையாளர்களாய் ஓடி விடும் என்பதைக் கவிஞர் பாடலின் சுவையோ, மரணத்தைச் சொல்லும் சோகமோ சிறிதும் குறையாது அழகாகச் சொல்லியுள்ளார்கள்.

சந்திரவதனா
யேர்மனி
3.9.1999

ஒலிபரப்பு - 5.9.1999 ஐபிசி - கவிதைசிந்தும்நேரம்.

Wednesday, May 17, 2006

கல்லறைகள் விடை திறக்கும்... TTN இல்


இன்று ரீரீஎன் தொலைக்காட்சியில் பாட்டுக்கலசம் என்றொரு நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது தாயகத்திலிருந்து ஒளிபரப்பான ஒரு போட்டி நிகழ்ச்சியாகவே இருந்தது. தாயகப்பாடல்களை மையமாக வைத்தே கேள்விகள் கேட்கப் பட்டன. போட்டியில் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்களும், கிளிநொச்சி ராமநாதபுரம் வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

முதற் சுற்றுக்கான கேள்விகளுக்காக கல்லறைகள் விடை திறக்கும்... என்ற பாடல் பாடப் பட்டது. சாந்தன் அவர்களே நேரே வந்து அந்தப் பாடலை மிகவும் உருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் பாடிய போது மனம் அப்படியே பாடலுடன் ஒன்றிக் கலங்கி விட்டது.

கல்லறைகள் விடை திறக்கும் - அங்கு
மெல்லிய காற்றது இருக்கும்
பாலினைச் சொரிந்திடும் நிலவு - ஒரு
பாடலை எழுதிடும் இரவு... பாடலைக் கேட்க இங்கே

தொடர்ந்து இரண்டாவது சுற்றுக்கு சரணத்தைக் கொடுத்து பாடலைக் கேட்டார்கள். பங்குபற்றிய மாணவர்கள் மிக அழகாக முதல் அடியை எடுத்துப் பாடினார்கள். தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டினார்கள்.

மூன்றாவது சுற்றுக்கு ஆரம்ப இசை கொடுக்கப் பட்டு பாடலைக் கண்டு பிடிக்கும் படி கேட்கப் பட்டது. அதிலும் மாணவர்கள் அருமையாகப் பாடினார்கள்.

இந்நிகழ்விலே ஜெ.துஸ்யந்தினி என்ற மாணவி பாடிய போது மிகமிக அருமையாக இருந்தது. அந்த மாணவியைத் தொடர்ந்து பாடவிட்டால் என்ன என்று எண்ணத் தோன்றியது.

Sunday, April 30, 2006

சினைமுட்டைப்பை(ovary) மாற்று சிகிச்சை


- Srishiv -


இந்தக்கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்ப்போம்,
குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளாகக்கருதப்படும் இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளில் இந்த விஞ்ஞான முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கின்றது.சீனாவில் சென்ற 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியதைத்தொடர்ந்து, அடுத்த மாதமே நம் இந்தியாவின் தொழில் நகரங்களுள் சிறந்த நகரமான மும்பையில் நடந்தேறியது. மருத்துவர். திரு. பிரவீன் ம்ஹாத்ரே என்பவரின் சீரிய முயற்சியால், டி.எஸ்.கோத்தாரி மருத்துவமணை , மும்பையில் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை நல்லமுறையில் நடந்தேறியது. இந்த சினைமுட்டைப்பையினை டர்னரின் நோய் (Turner's Syndrome)(இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபாடு, ஒரே ஒரு x குரோமோசோம் மட்டுமே இருத்தல், இதன் விளைவுகள், குள்ளமாகப்பிறத்தல், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுள்ள அல்லது அளவு குறைந்த வளர்ச்சியுடைய பாலுறுப்புக்களுடன் பிறக்கும் குழந்தை)(இந்த நோய் 2000 குழந்தைகளுள் 1 குழந்தைக்கு வரும் வாய்ப்புள்ளது)தாக்கியிருந்த ஒரு 17 வயது பெண்ணிற்கு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இந்த டர்னரின் நோய் தாக்கிய குழந்தைகள் தங்கள் ஆயுளுக்கும் ஹார்மோன் தெரபி என்று கூறப்படும் ஒருவகை மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டியிருக்கும் , இந்த சிகிச்சை புற்றுநோயினை தோற்றுவிக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சினைமுட்டைப்பையினை தானமாகக்கொடுத்தவர் அந்த பெண்ணின் 26 வயது உறவுப்பெண் ஒருவர், அவர் இரண்டு குழந்தைக்குத்தாயானவரும் கூட. - தொடர்ச்சி

Tuesday, April 25, 2006

Mit dem Piepsen im Ohr


TAG DES LÄRMS / Reinhard Sorg und Norbert Eisen über die Gefahren sehr lauter Töne für das Gehör

Haarsinneszellen knicken bei zu hohem Schalldruck ab - Tinnitus droht

THUMILAN SELVAKUMARAN

Hörschäden - oft sind laute Geräusche die Ursache. Ein Piepsen im Ohr kann die letzte Warnung vor einem Tinnitus sein. Wir leben in einer "Lärmgesellschaft". Und heute, am internationalen Tag des Lärms, sollen die fatalen gesundheitlichen Folgen von zu lauten Geräuschen und Musik ins Bewusstsein gerückt werden.


Ein lauter Schrei ist für die empfindlichen Haarsinneszellen im Ohr genauso gefährlich wie zu laute Musik oder Lärm in Fabriken. Marita Pusch (13) aus Hall ist in dieser Hinsicht vorbildlich: "Musik höre ich lieber leise."
FOTO: THUMI

SCHWÄBISCH HALL "Durch richtigen Umgang mit Lärm lassen sich gesundheitliche Schäden vermeiden", sagt Reinhard Sorg. Rock-Konzerte oder Disko-Besuche seien nicht zwingend schädlich. "Nach drei Stunden Musikkonsum bei 80 Dezibel sollte jeder eine Pause einlegen. Idealerweise acht Stunden", sagt der Hörgerätespezialist. Sorg weiß, dass es meist nicht bei den drei Stunden bleibt.... more

Sunday, April 23, 2006

வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள்

வீட்டுவேலைகளைச் செய்வதில் ஆண்கள் உண்மையிலேயே சோம்பலானவர்கள் என்கிறார் எழுத்தாளர் Lili Stollowsky.

தினமும்
பெண்கள் சமையலறையில் 90நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 7நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் தோய்த்து அயர்ண் பண்ணுவதற்கு 30நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 2 நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் வீட்டைத் துப்பரவாக்குவதற்கும் அடுக்குவதற்கும் 109நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள்.
ஆண்கள் 11 நிமிடங்களை மட்டுமே.

பெண்கள் பிள்ளைகளைப் பராமரிக்க 170 நிமிடங்களைச் செலவழிக்கிறார்கள். ஆண்கள் 70 நிமிடங்களை மட்டுமே.

மொத்தமாக பெண்களை விட 3மணி நேரங்கள் அதிகமாக
ஆண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.

Monday, April 17, 2006

கவிஞர் நாவண்ணனுக்கு...




ஆற்றொழுக்கில் நின்ற அழுத விழிகளோடு...

...நண்பனே
இதற்கு முன் நான்
யாத்து வந்த கவிதைகளை
யான் படிக்க
உன் வீட்டில்
பூத்த முகத்தோடு
கேட்டு தலையசைப்பாய்-இன்று
யாத்து வந்தேன்
கவிதை உனக்காக-உயிர்
நீத்த உடலாய்-இங்கு
நிமிர்ந்து கிடக்கிறது.
கேட்கிறதா என் கவிதை?
பாத் தொடுக்க முடியாமல்
பதறிடுது என் நாக்கு
வற்றாப்பளையூர் தீட்சண்யா-நின்
வாய் மூடி விட்டதய்யா-இன்று
பற்றறுத்து விட்டு
பயணிக்கத் தொடங்கிவிட்டாய்
பந்தம் அறுத்து பாசம் அறுத்து
சொந்தம் விடுத்து சொர்க்கப் பிரவேசமா?...


...ஆற்றொழுக்கில் நின்ற என் அழுத விழிகளிலே
கவிதை விரல் கொண்டென் கண்ணீரைத் துடைத்தவனே
இன்று உனக்காய்
கவிதை வரி தீட்டிக் கண் கலங்கி அழவைத்தாய்
ஆற்றும் வகையறியேன்-உன்னவளை, பிள்ளைகளை
தேற்றும் வகையறியேன்-நீயோ
கூற்றுவன் மாளிகையில் குடியிருக்கப் போனாயே தீட்சண்யா!..."
என்று என் அண்ணன் தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்தில் கவி பாடி வழியனுப்பி வைத்தாய்.

இன்று, நீ மறைந்த சேதியில்...
கவியேதும் எழுத வார்த்தையின்றி..
நான்

Friday, April 14, 2006

வெற்றிப் படியேறு வெட்டித் தடை வீழ்த்தி


சிந்தனைக் கட்டுரை
- பாவன்னா பானா -

பொருளாதார வளம் கண்ட நாடுகளில் தனிமனிதர்களும் நிறுவனங்களும் தத்தமது நாடுகளை அத்தகைய நிலைக்குக் கொண்டு வர வெவ்வேறு விதமான உற்பத்தி யுக்திகளைக் கையாண்டார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு அணுகுமுறையைக் கையாள அவைகளுக்கு வெளியே ஆசியாவில் வேறொரு விதமான அணுகுமுறை கையாளப்பட்டது
குபேரர்களான யப்பானியர்களால். பொருளாக்கத்தில் செல்வச் செழிப்படைந்த இந்த இரு தரப்பினரதும் இலக்கு ஒத்ததாயினும் அதனை எட்டுவதில் அவர்களது சிந்தனைதான் வேறுவிதமாக இருந்தது. மிகுதி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite