Thursday, July 28, 2005

நீரும் 32 பல்லையும் காட்டும்

அன்று சென்றல் தியேட்டருக்கு ஏதோ ஒரு படம் பார்க்கக் கணவருடன் சென்றிருந்தேன். இடைவேளை ஆரம்பமாக குப்பென மின்விளக்குகள் ஒளிர்ந்தன. இருளில் இருந்து திரையின் ஒளியை மட்டும் நோக்கியதில் களைப்படைந்திருந்த கண்கள் ஒளி கண்டு மலர்ந்தன. தெரிந்தவர்களின் புன்சிரிப்புக்கள், தலையாட்டல்களில் மனமும் உற்சாகமடைந்து கொண்டிருந்தது.

திடீரென யாரோ பின்னால் நிற்பது போன்ற உணர்வு. சட்டென்று திரும்பினேன். நந்தகுமார் மாஸ்டர் எனது கணவரின் தோள்களைத் தட்டினார். ரியூட்டரியில் கணித மாஸ்டர் வராத வேளைகளில் அவருக்குப் பதிலாக வரும் மாஸ்டர். நண்பி திலகத்தின் முறை மச்சான். அவர்களுக்குள் காதலும் கூட. அதனால் எங்கள் சீண்டல்களுக்கும் சில சமயம் ஆளாபவர். எனது கணவரின் நண்பர். ஐந்து வருடங்களின் பின் சந்திக்கிறேன். திலகத்துக்கும் அவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் இருப்பதாக ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன்.

எனது கணவரோடு இரண்டு கதை கதைத்து விட்டு என் பக்கம் திரும்பி "சந்திரவதனா...! றேடியோவிலை உங்கடை பெயர் வராத நாட்களே இல்லை. ஒரு நாளைக்கு மூன்று தரத்துக்குக் குறையாமல் உங்கடை ஏதாவது ஆக்கங்கள் போகுது. இண்டைக்கும் அந்தக் கவிதை நல்லாயிருந்தது." பாராட்டி விட்டு மீண்டும் கணவரோடு கதைக்கத் தொடங்கி விட்டார்.

அந்த வயசில் எனக்குக் கிடைத்த அந்தப் பாராட்டில், உச்சி குளிர்ந்ததில் சந்தோசத்தை அடக்க முடியாமல் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தேன்.

படம் முடிந்து சைக்கிளில் வீடு திரும்பும் போது கணவர் ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாய் சைக்கிளை உழக்கினார். "ஏன்...?" என்ற கேள்வியை வீட்டில் வந்து இறங்கும் போதுதான் கேட்டேன்.

சடாரென்று சூடாக வீழ்ந்தன வார்த்தைகள் "சும்மா அவனவன் வந்து, கவிதை நல்லாயிருக்கு, கட்டுரை நல்லாயிருக்கு எண்டுவான். நீரும் 32 பல்லையும் காட்டும்."

எனக்கு ஒருதரம் சப்தநாடியும் அடங்கி ஒடுங்கின.

சந்திரவதனா
28.7.2005

Tuesday, July 26, 2005

தமிழை உத்தியோக பூர்வமாக்க...


அவுஸ்திரேலியாவிலிருந்து மின்னஞ்சல் மூலமாக ஒரு வேண்டுதல் வந்துள்ளது. அக்கறையுள்ளவர்கள் உங்கள் வாக்குகளையும் அளியுங்கள்.

NOW WE HAVE A OPPORTUNITY TO CAST OUR VOTES TO MAKE TAMIL AS OFFICIAL LANGUAGE IN THE UN. PLEASE DO NOT MISS THIS GRATE OPPORTUNITY. ASK ALL OUR KNOWN PEOPLES TO VOTE FOR IT.
Go to:http://petitions.takingitglobal.org/ClassicalTamil

Tuesday, July 12, 2005

மின்னஞ்சலில் வந்த கண்டனம்


எனது இந்தக் கட்டுரையை திண்ணையில் வாசித்து விட்டு கலைமணி இம்மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். கலைமணி அவர்களை அவமதிக்கும் எண்ணத்துடனோ, அல்லது அவரோடு சண்டை பிடிக்கும் எண்ணத்துடனோ இதை இங்கே நான் பதியவில்லை. அவரது கருத்தை கருத்தாக ஏற்று, இதற்கான மற்றவர்களின் கருத்துக்களை அறியும் நோக்குடனேயே இதை இங்கு தந்துள்ளேன்.

கற்பனைகள் கற்பனைகளாகவே இருக்கட்டும்.
7/11/2005 தேதி திண்ணையில், புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும் என்ற தலைப்பில் உங்களது கட்டுரையினை படித்தேன். கட்டுரையின் பொருளும், நோக்கமும் பொது கருத்தையோ அல்லது ஒரு கருத்தாக்கத்தையோ கொண்டு உருவாக்கவில்லை என்று நம்புகிறேன். உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் அனுபவம் கொண்டு எழுதினீர்கள் போலும்.

இதற்கு முன்னர் இப்படி ஒரு கட்டுரை வெளியிட்ட போது, எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன். இருந்தாலும் நீங்கள் அதை எல்லாம் ஒரு பொருட்டாகவே கொண்டதாக தெரியவில்லை. மாறாக இன்னமும் அதிக வேகத்துடன் உண்மைக்கு மாறான கருத்துகளை உண்மை போல எழுதுவருகிறீர்கள்.

இந்த கட்டுரைகளை படிக்கையில் எனக்கு தோன்றுவதெல்லாம், அப்படி என்ன உங்களிடம் அப்படி ஒரு தாழ்வு மனட்பான்மை. ஒருதலை பட்சமாக ஆண்வர்கத்தையே விமர்சிப்பது கண்டனத்துகுறியது.

உலகில் உள்ள அத்தனை தமிழர்களையும் ஒவ்வொருவராக கேட்ப்போம், உங்களின் வீட்டில் சந்திரவதனா எழுதியதுபோல் நடக்கிறதா என்று. அனேகமாக 97% மக்கள் இல்லை என்றுதான் கூறுவார்கள்.

ஆணும், பெண்னும் சமம் என்று ஒத்துக்கொண்டதோடு மட்டும் நில்லாமல், பெண் ஆண்களைவிட பல விஷியங்களில் இன்னமும் திறம்பட செயலாற்ற முடியும் என்று நிறுபித்தாகியும் விட்ட இந்த கால கட்டத்தில், பொருந்தாத, உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

இந்த கட்டுரைகள் மூலம் நீஙகள் தேடுவது என்ன, தொன்று தொட்டு
கெட்டப்பழக்கங்கள் என்று பிரித்துவிடப்பட்ட ஆணின் பழக்க வழக்கங்களிலே
பெண்ணுக்கு சம உரிமைவேண்டும் என்றா? அல்லது ஆண்கள் தனக்கு இளயவளாக தாரம் வேண்டும் என்று கேட்பது போல், இனி பெண்களும் தங்களுக்கு இளையவனாக மாப்பிள்ளை வேண்டும் என்று கோரும் புரட்சியோ? அல்லது கணவன்மார்கள் என்னதான் எடுத்து சொன்னாலும், அடம் பிடித்து வேலைக்கு போய். தனது நலனையும் வீணாக்கியதோடு மட்டும் இல்லாது குடும்பத்தார் அனைவரது நலனையும்
கவலைக்கிடமாக்குவதையா? அல்லது இப்படி வேறு ஏதேனும் ஒரு விஷியத்தில் சண்டித்தனம் செய்வதைத்தான் பெண் சுதந்திரம் என்று கற்பனையாக நினைப்பதோடு மட்டும் இல்லாது. அதை கருத்தாக்கம் செய்யும் வேலை எல்லாம் ஒன்றும் வேண்டாம்.

கதைகளும், நாவல்களும், திரைப்படங்களும், மற்றும் அத்தனை ஊடகங்களும்
கொடுக்கும் அடிமை பெண் கதா பாத்திரங்கள் பார்ப்பவர்கள் பார்த்து சந்தோஷ படுவதற்காக கற்பனையாக உருவாக்கப்பட்டவைகள். அவைகளை பார்த்துவிட்டு இப்படி பிதற்றல் கட்டுரைகளை படைக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

அன்புடன்,
கலைமணி.

Monday, July 11, 2005

புத்தகங்களோடு - 5


புலம் பெயர்ந்த பின் ஆனந்தவிகடன் குமுதம்... போன்றவைகளுடன் மட்டுமாய் இருந்த எனது வாசிப்பு உலகம் 1997 யூன் 9 ஐபிசி தமிழின் வரவுக்குப் பின் சற்று விரிவடையத் தொடங்கியது.

ஐபிசி வானொலியில், இரவி அருணாச்சலம் அவர்கள் நடாத்திய ஒரு நிகழ்சியினூடு சக்தி பெண்கள் இதழின் அறிமுகம் கிடைத்தது. சக்தி இதழ் 1990 ஒகஸ்டில் மைத்திரேஜியின் முழுமுயற்சியுடனும் சுகிர்தா, கலிஸ்டா இராஜநாயகம் ஆகியோரின் பங்களிப்புடனும் காலண்டிதழாக ஆரம்பிக்கப் பட்டது. எனக்கு அறிமுகமான அந்தப் பொழுதில் அவ்விதழ் ராஜினி, அநாமிகா, பிறேம்ராஜ்(நோர்வே), ரவி(சுவிஸ்) ஆகியோரின் பக்கத்துணையுடன் தயாநிதியின்(நோர்வே) முழுமுயற்சியுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. சக்தியின் வெளியீடாக 10.7.1999 இல் புது உலகம் எமை நோக்கி என்ற புத்தகம் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களுடன் வெளி வந்தது.

இந்தக் கட்டத்தில் ஐபிசியின் இதே நிகழ்ச்சியினூடு பத்மனாபஐயரின் முயற்சியுடன் வெளியாகும் லண்டன் நலன்புரிச் சங்க வெளியீடான இன்னுமொருகாலடியின் அறிமுகமும் கிடைத்தது.

சக்தியின் மூலம் மனோகரனின் அம்மா இதழின் அறிமுகம் கிடைத்து அதையும் பெற்று வாசிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்த காலங்களில் ஓரளவுக்கேனும் பரந்துபட்ட சஞ்சிகைகள் வெளியீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தன. இருந்தாலும் நான் வாழும் நகரம் தமிழர்களோ, தமிழ்க்கடைகளோ இல்லாத ஒரு நகரமாகையால் புதிய புதிய வெளியீடுகளை வலிந்து தேடிப் பெற்றாலேயன்றி சுலபமாகப் பெறுவதென்பது முடியாத காரியமாகவே இருந்தது. இன்னும் இருக்கிறது.

அப்படியிருந்தும் நானும் எனது கணவருமாக... போகுமிடங்களிலெல்லாம் வாங்கியும், நண்பர்களின் உதவியோடும்... என்று பெற்றுச் சேமித்து வைத்திருக்கும் தமிழ்ப்புத்தகங்கள்

புது உலகம் எமை நோக்கி(சக்தி வெளியீடு - 10.7.1999)
ஊடறு - பெண் படைப்பாளிகளின் தொகுப்பு - 2002(தொகுப்பாளர்கள் -றஞ்சி, தேவா, விஜி, நிரூபா )

பெண்கள் சந்திப்பு வெளியீடுகள்
பெண்கள் சந்திப்பு மலர் - 2001
பெண்கள் சந்திப்பு மலர் - 2002(பால்வினை சிறப்பு மலர்)
பெண்கள் சந்திப்பு மலர் - 2004

லண்டன் நலன் புரிச்சங்க வெளியீடுகள்
கிழக்கும் மேற்கும் (1997 )
இன்னுமொருகாலடி(1998)
யுகம் மாறும் (1999யூன்)
கண்ணில் தெரியுது வானம் (டிசம்பர்2001)

Adele Balasingam
The will to Freedom 2001(இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம்)

அருணன்
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை (கட்டுரை-1997)

இரா.இராசேந்திரன்
லோகமானிய திலகர்(யூலை1986)

முனைவர் இரா.இளவரசு
இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்(1990)

முனைவர்.பா.இறையரசு
தமிழர் நாகரிக வரலாறு-(1993)

எழிலன்(திரு.அமலேந்திரன்)
இரவல் இதயங்கள் (கட்டுரை-மார்ச்1997, பூவரசு கலை இலக்கியப் பேரவை வெளியீடு)


க.கணபதிப்பிள்ளை
ஈழத்து வாழ்வும் வளமும்(1962)

கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம் (9 பாகங்கள்)
கவிதைகள் 5வது தொகுதி – 1972

ஆ.சி.கந்தராஜா
உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு - 2003)
பாவனை பேசலன்றி(சிறுகதைத் தொகுப்பு - 2000)
தமிழ் முழங்கும் வேளையிலே(செவ்விகளின் தொகுப்பு - 14.11.2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)

கருக்கு பாமா
தழும்புகள் காயங்களாகி

பொ.கருணாகரமூர்த்தி
கிழக்கு நோக்கி சில மேகங்கள்( சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல்1996)
ஒரு அகதி உருவாகும் நேரம் (மூன்று குறுநாவல்கள்-ஏப்ரல்1996)
அவளுக்கென்றொரு குடில்(1999)

மு.கருணாநிதி
குறளோவியம் (1985)

கோசல்யா சொர்ணலிங்கம்
கோசல்யா கவிதைகள் (கவிதைகள்-2000)

சோ.சந்திரசேகரன்
இலங்கை இந்தியர் வரலாறு(1989)

சந்திரா தியாகராஜா(சந்திரா ரவீந்திரன்)
நிழல்கள் (சிறுகதைத் தொகுப்பு)

த.சரீஷ்
தென்றல் வரும் தெரு (கவிதைகள் 2002)

சாந்தி ரமேஷ்வவுனியன்
அழியாத ஞாபகங்கள் (கவிதைகள்-சித்திரை-2001)
இன்னொரு காத்திருப்பு (கவிதைகள் - 2000)
கலையாத நினைவுகள் (சிறுகதைத் தொகுப்பு-2001)

சித்தார்த்தன்
யாதும் ஊரே-1992

வேலணையூர் சுரேஸ்
களத்தீ(போர்க்காலக்கவிதைகள்-1992);
உலராத மண்(போர்க்காலக்கவிதைகள்-1995)

சுஜாதா
ஏன்? எதற்கு? எப்படி?(ஆனந்தவிகடன் வெளியீடு-1992)

புலவர் செந்துறைமுத்து
இலக்கண வரலாற்றுப் பேழை(1986)

வித்துவான் க.செபரத்தினம்
ஈழத்துத் தமிழ் சான்றோர்

மட்டுவில் ஞானக்குமாரன்
முகமறியா வீரர்களுக்காக (கவிதைகள் - 2000)

டொமினிக் ஜீவா
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (1999)

டீ.தங்கநேயன்
எம்.ஜ.ஆரும் ஈழத்தமிழரும்(ஈழமுரசு பிரசுரம்)

திக்கவயல் தர்மகுலசிங்கம்
வரலாற்றில் தமிழும் தமிழரும்(1999)

தி.திலீபன் - (நோர்வே நக்கீரனார்)
துப்பாக்கியில் துளிர் விடும் தேசம் (கவிதைகள்-1997)

சி.சு.நாகேந்திரன்
அந்தக் காலத்து யாழ்ப்பாணம்(2004)

நாவண்ணன்
கரும்புலி காவியம்
அக்கினிக்கரங்கள்(போர்க்கால உண்மைக்கதை-1995)

நித்தியகீர்த்தி(நிதி)
மீட்டாதவீணை(நாவல்-1972)

பழ நெடுமாறன்
தமிழீழம் சிவக்கிறது(1993)

பாலரஞ்சனி சர்மா
மனசின் பிடிக்குள் - (ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு-2001)

சு.மகேந்திரன்
காலவெளி(சிறுகதைகளும் கவிதைகளும் -2000)

மதன்
மதன் ஜோக்ஸ்-1
மதன் ஜோக்ஸ்-2
வந்தார்கள் வென்றார்கள் (1994)

மு.மேத்தா
கண்ணீர் பூக்கள் (கவிதைகள் -1974)

ரமேஸ்வவுனியன்
தேடல் (26கவிதைகள் - 2000)

ரவி-சுவிஸ்(பாலமோகன்)
செட்டை கழற்றிய நாங்கள் (கவிதைகள் - 1995)

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
தில்லையாற்றங்கரையில்(நாவல் Jan 1998)
பனிபெய்யும் இரவுகள்(நாவல் Sep 1993)

கவிஞர் வாலி
அவதார புருஷன் (கவிதை நடை - 1996)
சிகரங்களை நோக்கி

வைரமுத்து
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்(நாவல் 1991)
சிகரங்களை நோக்கி(கவிதைக்கதை 1992)

ஜெயமோகன்
நாவல் (விமர்சனம்)

காஞ்சி ஸ்டாலின்
செம்பியர் கோன் (நாடகம் - 1991)

தமிழீழவிடுதலைப்புலிகள் வெளியீட்டுப்பிரிவினரின் வெளியீடுகள்
அம்மாளைக் கும்பிடுறானுகள் - உண்மைக்கதைகள் (1994)
கப்டன் ரஞ்சன் (அரசியல் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள்-மாசி 1998)
உயிரைப்பிழியும் உண்மைகள் (ஜெகத் கஸ்பார்-வெரித்தாஸ் தமிழ்ப்பணிக்கு வந்த மடல்களின் தொகுப்பு)
மேஜர்.கிண்ணி(கஸ்ரோ-மார்கழி 1992)
மாவீரர் குறிப்பேடு(1990)
போர்ப்பறைப் பாடல்கள்
வானம் எம் வசம்(கவிதைகள்-1995)
ஏழு சிறுகதைகள்(வன்னியில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களின் 13சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு)

ஆறுமுகநாவலர்
நன்னூல் காண்டிகையுரை - எழுத்ததிகாரம்(2000)பதிப்பாசிரியர் புலியூர் கேசிகன்
நன்னூல் காண்டிகையுரை - சொல்லதிகாரம(2001)பதிப்பாசிரியர் புலியூர் கேசிகன்

ச.சரோஜா
மரியாதை ராமன் கதைகள்(நவம்பர்1990)

திருக்குறள்
சித்தர் பாடல்கள்(1987)
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
திருமூலரின் திருமந்திர விருந்து
சங்கஇலக்கியம் 15 பாகங்கள்(1995)
பதினெண்கீழ்கணக்கு 5 பாகங்கள்
நளன் தமயந்தி
சிலப்பதிகாரம்(1984)

இரவல் கொடுத்ததால் என்னிடமிருந்து இல்லாமல் போன புத்தகங்களில் நினைவில் உள்ள சில
முகில்வாணன் கவிதைகள்
காசி ஆனந்தன் கவிதைகள்

படிக்காமலே விட்ட புத்தகங்களில் நினைவில் உள்ள சில
பகவத்கீதை

படிக்க விரும்பும் புத்தகங்களில் நினைவில் உள்ள சில
அம்பையின் படைப்புக்கள்
ஏழாம் உலகம்(ஜெயகாந்தனின்)
சில நேரங்களில் சில மனிதர்கள்(ஏற்கெனவே படித்திருந்தாலும் இன்னுமொருமுறை படிக்க விருப்பம்)
Gone with the wind

புத்தகங்களோடு-1
புத்தகங்களோடு-2
புத்தகங்களோடு-3
புத்தகங்களோடு-4
தற்சமயம் என்னிடமுள்ள புத்தகங்கள்-1
தற்சமயம் என்னிடமுள்ள புத்தகங்கள்-2

இவைகளில் பல புத்தகங்களுக்கு நான் மதிப்புரையும் விமர்சனமும் எழுதியுள்ளேன். அவைகளை அவ்வப்போது நேரம் கிடைக்கும் பட்சத்தில் இங்கு பதிய முயற்சிக்கிறேன்.

இவைகளை விட ஜேர்மனிய மொழியில் உள்ள ஓவியம், சரித்திரம், நாவல், சிறுகதை, மருத்துவம், புவியியல்... புத்தகங்கள் நிறைய உள்ளன. அவைகளை சமயம் வரும் போது மதிப்புரையுடன் இங்கு பதிய முயற்சிக்கிறேன்.

சந்திரவதனா
11.7.2005

Wednesday, July 06, 2005

இப்படியும் ஒரு தீர்ப்பு - கண்டனம் சல்மா


அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தை பெண் எழுத்தாளர் ஒருவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவியிடையே எடுக்கப்படக்கூடிய எந்தவிதமான முடிவிலும் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியமோ அல்லது வேறு எந்த அமைப்போ தலையிட அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளரான சல்மா கூறியுள்ளார்.

மாமனாரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் தனது கணவனைவிட்டு விலகி, மாமனாரையே திருமணம் செய்ய வேண்டும் என்று உள்ளூர் முஸ்லிம் அமைப்பு ஒன்று கூறிய தீர்ப்பு தொடர்பாக, அனைத்திந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர்கள் இருவர் தெரிவித்த கருத்துக் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாமனாரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் பெண், இந்தப் பாலியல் வல்லுறவு மூலம், தனது கணவனுடன் சேர்ந்து வாழும் தகுதியை இழந்து விட்டதாக அந்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் அவர்களுடைய குழந்தைகளை கணவனே தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும், எப்படியிருந்த போதிலும் பாலியல் வல்லுறவை செய்தவர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயினும் இவர்களது கருத்து அவர்களது சொந்தக் கருத்து என்றும், அது வாரியத்தின் கருத்து அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் இருவரது கருத்துகள் குறித்து இந்திய பெண் உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இவர்களது கருத்தை வன்மையாக கண்டித்த முஸ்லிம் பெண் எழுத்தாளரான சல்மா, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பெண்கள் விடயத்தில் சரியாக நடந்து கொள்வதில்லை என்ற கருத்தே பொதுவாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் அந்த அமைப்பு ஆணாதிக்க மனப்பாங்குடன் நடந்து கொள்கிறது என்பதை நிரூபித்துள்ளதாகவும், அந்த அமைப்பில் பெண்கள் எவரும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

சமூகத்தின் உரிமைகளை இந்த அமைப்பு தனது கைகளில் எடுத்துக்கொள்ள முயலுவதாகவும் ஆனால் சமூகத்தில் அதற்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாடியாது என்றும் சல்மா கூறினார்.

nantri-பிபிசி-29.6.2005

ஒலிம்பியா 2012


2012 இல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இடமாக லண்டன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Tuesday, July 05, 2005

கரும்புலிகள்


கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றாகிப் போகும்
காவிய நாயகர்கள்-கரும்புலிகள்.

தீப்பந்தாகக் கனன்றபடி
விண்ணோக்கிச் செல்லும் எங்கள்
தேசத்தின் காப்பரண்கள்

மனித நேயங்கள் மதிக்கப் படாத போது
மனிதக் குண்டுகளாய் மாறிக் கொள்பவர்கள்
மாற்றானின் மடியருகில் சென்று
கூற்றுவனை முதுகில் தட்டி
குசலம் விசாரிப்பவர்கள்

எங்கள் அடையாளங்களை நிலை நிறுத்துவதற்காக
தங்கள் அடையாளங்களை விலையாய்க் கொடுப்பவர்கள்
எங்கள் மண்ணில் வர்ணங்கள் பூப்பதற்காக
தங்கள் வாழ்வை மர்மங்களால் நிறைத்துக் கொள்பவர்கள்

முகம் தெரியாமலே மறைந்து போன இவர்கள்
சில சமயங்களில்
சுவரொட்டிகளிலும் கூடத் தலை காட்டுவதில்லை

ஊருலகம் அறிந்திடாத மண்ணின் மைந்தர்கள் - இவர்கள்
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்.

தீட்சண்யன்

Monday, July 04, 2005

திசைகள்

ஆடி மாத திசைகள் கவிதைச் சிறப்பிதழாக...!

புத்தகங்களோடு - 4


இப்படியே புத்தகங்களும், வாசிப்பும் என்னோடும், என் வாழ்க்கையோடும் மட்டுமன்றி, என் குடும்பத்தோடும் ஒன்றியிருந்தன.

இப்படியிருக்கையில்தான் அமைதியாயிருந்த எங்கள் குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டது. ஆர்ப்பரித்த பருத்தித்துறைக் கடலின் அலையோசை, சீறி வந்த பீரங்கிக் குண்டுகளுக்குள் அமிழ்ந்து போகத் தொடங்கியது. நெடிதுயர்ந்த பனை உதிர்த்த பனம்பூவை நுகர்ந்தபடி நாம் நடந்த பனங்கூடல் பாதைகளும், அரசு உதிர்த்த இலைகள் சரசரக்க நாம் நடந்த வீதிகளும் சிங்கள எதிரிகளின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடத் தொடங்கின. நாமுண்டு, நம் சொந்தமுண்டு... என்று கூடி வாழ்ந்த நாமெல்லாம் கல்லெறிபட்ட பறவைக் கூட்டங்களாய் சிதறத் தொடங்கினோம். பயமும் ஓட்டமும் வாழ்வாகிப் போக சிறகிழந்த பறவைகளின் சோகம் எங்கள் சொந்தமாகத் தொடங்கியது. உறவுகளை மட்டுமல்ல உடைமைகளையும் இழந்தோம். ஓடி வந்து ஜேர்மனியில் தஞ்சம் கோரிய போது பிரிவு, துயர், தனிமை... இவை தவிர வேறெதுவும் எமக்குச் சொந்தமாக இருக்கவில்லை.

எல்லாவற்றையும் இழந்திருந்தோம். துயர் நிரம்பிய மனசுக்குள் மிதந்து வரும் நினைவுகளை மீட்டி மீட்டி வாழத் தொடங்கினோம்.

ஆரம்பத்தில் மருந்துக்குக் கூடத் தமிழ்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இங்கு கிடைக்கக் கூடிய தெரியாத பாசையில் இருந்த புரியாத வரிகளை சும்மா சும்மா வாசித்தோம். ஆற்றாத ஒரு கட்டத்தில்தான் எரிமலை, ஈழநாடு போன்றவற்றின் அறிமுகங்கள் கிடைத்தன. அத்தோடு இந்தியாவிலிருந்து ஆனந்தவிகடன், குமுதம், அம்புலிமாமா, Chandamama போன்றவற்றையும் சந்தா கட்டிப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினோம். இவை எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் குழந்தைகளின் வாசிப்பு அவாவுக்கும் பிரியமான தீனியாகின.

இந்த ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றிலிருந்து நானும் எனது கணவருமாகச் சேர்த்துத் தொகுத்துக் கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள்.

அரசு மணிமேகலை
பூவே இளம் பூவே

ஆனந்த்
புத்தகப் பையில் துப்பாக்கி(1998)

இந்திரா சௌந்தர்ராஜன்
கோட்டைப்புரத்து வீடு (1990)
ரகசியமாக ஒரு ரகசியம்

இந்துமதி
துள்ளுவதோ இளமை(1992)

உத்தமசோழன்
தொலைதூர வெளிச்சம்
கசக்கும் இனிமை(மினித்தொடர்) 1999

சத்தியப்பிரியன்
மறந்து போகுமா ஆசை முகம்(1997)-ஓவியம்-மாருதி

சு.சமுத்திரம்
வாடாமல்லி

சிவசங்கரி
இன்னொருத்தி+இன்னொருத்தி

சுதாங்கன்
அந்தக் கனல் வீசும் நேரம்

சுஜாதா
ஆ........
பூக்குட்டி(1990)
அனிதாவின் காதல்கள்
புதிய தூண்டில் கதைகள்
புதிய தூண்டில் கதைகள்-2
தீண்டும் இன்பம்(1998)

ஞாநி
வோட்டுச்சாவடி(மினித்தொடர்) 1999
தவிப்பு

எஸ் எஸ் தென்னரசு
சேதுநாட்டுச் செல்லக்கிளி(சரித்திரத்தொடர்)-1990

தேவிபாலா
மடிசார் மாமி
இப்படிக்குத் தென்றல்

பாஸ்கர் சக்தி
வெயில் நிலவு இரவு (1997)

பட்டுக்கோட்டை பிரபாகர்
மதில் மேல் மனசு(1999)
வெட்டு- குத்து... கண்ணே, காதலி!
தீர்ப்பு தேடி வரும்

பி.வீ.ஆர்
குப்பத்து சாஸ்திரிகள்

மேலாண்மை பொன்னுச்சாமி
அச்சமே நரகம்

மணியன்
காதலித்தால் போதுமே

மதுரா
மஞ்சள் மல்லிகை(விகடன் இலக்கியப் போட்டியில் 50,000 ரூபா பரிசு பெற்ற குறுநாவல்(1996)

மலரோன்
ஆக்ஷன்
ஒற்றையடி காதல் பாதை(ரீன் ஏஜ் தொடர் 1997)

மெரினா
நாடகம் போட்டுப் பார்(மினித்தொடர்)

ரவிகாந்தன்
நகுல்

ரா.கி.ரங்கராஜன்
ஸிட்னி ஷெல்டன்(1992)-(லாராவின் கதை-தமிழில் ரா.கி.ரங்கராஜன்)
நான் கிருஷ்ண தேவராஜன்-1996(சரித்திரத்தொடர்)
டயானா (வின் வாழ்க்கை)-1997
இல்லாத கேஸ்(எக்ஸ்பிரஸ் தொடர்)

ராஜேஸ்குமார்
நீல நிற நிழல்கள்
ஊமத்தம் பூக்கள்(1998)

கவிஞர் வாலி
பாண்டவர் பூமி(புதுக்கவிதையில் மகாபாரதம்)
பாண்டவர் பூமி - பாகம் -2 (புதுக்கவிதையில் மகாபாரதம்)
அவதாரபுருஷன்(புதுக்கவிதையில் இராமாயணம்)

விசு
மீண்டும் சாவித்திரி (1993)

விஷ்வக்ஸேனன்
பத்மவியூகம்(சரித்திரத்தொடர்)- 1997

விஜயராணி
அம்பாரிமாளிகை(விகடன் இலக்கியப் போட்டியில் 1இலட்சம் ரூபா பரிசு பெற்ற சமூகநாவல்(1996) - ஓவியம்-மணியம் செல்வன்)

இரா.வேலுச்சாமி
அங்கே பாடறாங்க(சிறிய தொடர்)

வைரமுத்து
தண்ணீர் தேசம்(கவிதைக்கதை)

ஸ்டெல்லா புரூஸ்
அது வேறு மழைக்காலம்
பனங்காட்டு அண்ணாச்சி
மாயநதிகள்

ஜாவர் சீதாராமன்
உடல் பொருள் ஆனந்தி

கிரேஸி மோகன்
மயங்குகிறாள் ஒரு மாது(நகைச்சுவை நாடகம்)
மீண்டும் மிஸ்டர் கிச்சா(நகைச்சுவைக் கட்டுரைகள்)

பிரசன்னா
அவன் அது அவர்கள்(தொடர் நாடகம்)

Dr.சி.எஸ் மோகனவேலு
ஜேர்மனியை வியக்க வைத்த தமிழ்புயல்

அறுசுவை நடராஜன்
கல்யாண சமையல் சாதம்

சுவாமி சுகபோதானந்தா
மனசே ரிலாக்ஸ் பிளீஸ்

பல் டாக்டருடன் பத்து நாட்கள்

துன்பமான நேரங்கள் - உறுதியான உள்ளங்கள்

ஞாபகப்பெட்டி (படக்கதை)- சித்திரத்தொடர்

இதைவிட சிறுகதைகளின் தொகுப்புகள்(25மட்டில்), ஜோக்ஸ் தொகுப்புகள் தனியாக...

2000 இற்குப் பின்னர் கணினியோடு எமது வாழ்வு ஒன்றி விட்டதால் வாசிப்புக்கள் ஓரளவு கணினிக்குள் என்றாகி விட்டன. ஆனந்தவிகடனுக்கும் குமுதத்துக்கும் சந்தா கட்டுவதை நிறுத்தி விட்டோம்.

(தொடரும்)

இவை தவிர்ந்த மற்றைய புத்தகங்களையும் என்னிடமுள்ள ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Sunday, July 03, 2005

Saturday, July 02, 2005

தமிழ்ப்புத்தகத் தகவல் மையம்

தமிழ்புத்தகங்களையும் அப்புத்தகங்களை எழுதியவர் வெளியிட்டவர்கள் போன்ற விபரங்களையும் தொகுக்கும் ஒரு அரிய முயற்சி வெங்கட் டினால் நடை முறைப் படுத்தப் பட்டுள்ளது.

சிவராஜ், பத்ரி, ராதாகிருஷ்ணன் போன்றவர்களோடு நானும் என் பங்குங்கு எனக்குத் தெரிந்த, எனது ஞாபகத்தில் உள்ள எழுத்தாளர்களையும் சில வெளியீடுகளையும் உள்ளிட்டுள்ளேன். இன்னும் தொடர்ந்தும் உள்ளிட உள்ளேன்.

இதில் ஆர்வமுள்ள மற்றவர்களும் உங்களுக்குத் தெரிந்த வெளியீடுகள் பற்றிய விபரங்களை இங்கு உள்ளிடுங்கள். மிகவும் பிரயோசனமான ஒரு தொகுப்பு.

புத்தக விக்கி - தகவல்கள் உள்ளிடுபவர்களுக்காக
தமிழ்ப் புத்தக விக்கி - புத்தக மேலட்டைகள்

Friday, July 01, 2005

பெண்குரல் அவிழ்க்கும் இணைய இதழ்(ஊடறு)

ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர்... என்று பெண்களின் ஆக்கங்களை, பெண்களுடன் சேர்ந்து, அழகான முறையில் தொகுத்து வெளியிட்ட றஞ்சி தற்போது பெண்குரல் அவிழ்க்கும் இணைய இதழ் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். கதை கவிதை கட்டுரை ஓவியம்... என்று அழகாக மலர்ந்துள்ளது. பாருங்கள்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite