Wednesday, September 12, 2007

வசதிகளும் வசதியீனங்களும்

வீட்டுக்குள் நுழைந்ததும் வழமை போல வானொலியை அழுத்தினேன். பாடவில்லை. பேசவில்லை. மௌனம் காத்தது.

அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய் விட்டதால் யன்னல்களுக்குரிய சட்டர்கள் இன்னும் இழுக்கப் படாமலே இருந்தன. வெளி வெளிச்சம் இடைவெளிகளினூடு வீட்டுக்குள் நுழைய முயற்சித்தாலும் மெல்லிய இருள் கவிந்திருந்தது. ´ஏன் பாடவில்லை´ என்ற யோசனைக்கு முன்னரே வழமையான அவசரத்துடன் அடுத்த கட்ட வேலையாக யன்னலை நெருங்கி சட்டரை மேல் உயர்த்துவதற்கான பட்டனை அழுத்தினேன். ம்... கும். அதுவும் அசமந்த தனமாக அப்படியே நின்றது.

அப்போதுதான் உறைத்தது. மின்சாரம் இல்லை. ஜேர்மனியில் அப்படி நடப்பது அபூர்வம். மின்சாரத்தை ஏதாவது காரணத்துக்காக நிறுத்துவதாக இருந்தாலும் முற்கூட்டியே அறிவிப்பது மட்டுமல்லாமல் அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டு வாசற்கதவிலும் ´இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை மின்சாரம் நிறுத்தப் படும்´ என்பதை எழுதி ஒட்டி விடுவார்கள்.

வெளியில் விரைந்து கதவைப் பார்த்தேன். ஒன்றும் ஒட்டவில்லை.

அப்படியானால் எனது வீட்டில்தான் ஏதும் பிரச்சனையோ என்று நிலக்கீழ் அறைக்குப் போய் பார்க்க முயற்சித்தால் அங்கு கும்மிருட்டு. வெளி வெளிச்சம் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்த அந்த அறையில் தட்டித் தடவி, பின்னர் ரோச் நினைவு வர அதை எடுத்துப் பார்த்தால் எனது வீட்டில் பிழை இல்லை.

மின்சார இலாகாவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள எண்ணி தொலைபேசியைத் தட்டினால் அதுவும் உயிரிழந்தது போல இருந்தது.

ம்... வசதிகள் அதிகமானாலும் பிரச்சனைதான். இலக்கங்களைச் சுழற்றித் தொலைபேசிய காலம் போய் அழுத்தித் தொலைபேசும் காலம் வந்தது. அது கூடப் பரவாயில்லை. இப்போது தொலைபேசிகள் கூட மின்சாரத்தில். இந்த நிலையில் மின்சாரம் போனதும் வீட்டில்
எல்லாமே ஸ்தம்பிதம் அடைந்தது போல என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது.

அந்த நேரத்தில் அடுத்த ஆபத்பாந்தவன் கைத்தொலைபேசிதான். வசதிகளின் அதிஉச்ச பாவனைகளில் ஒன்றான கைத்தொலைபேசி கை கொடுக்க மினசார இலாகாவுடன் தொடர்பு கொண்ட போது "வீதி திருத்த வேலையின் போது ஒரு வயர் அறுந்து விட்டது. இரண்டு மணித்தியாலங்களில் சரி செய்து விடுவோம்" என்றார்கள்.

இரண்டு மணித்தியாலங்களும் என்ன செய்வது? கணினிக்கும் மின்சாரம் வேண்டுமே. மனம் அலுத்துக் கொண்டது.

சரி எதற்கும் முதலில் தேநீரை அருந்துவோம் என நினைத்து குசினிக்குள் சென்று தண்ணீர் சூடாக்கும் குவளையை எடுத்து தண்ணீர் விட்டு சுவிச்சை அழுத்தினேன். ம்... கரண்ட் இல்லை.

சுள்ளித் தடிகளும், விறகும் மூன்றுகால் அடுப்பும் இல்லையே என்ற ஒரு ஆதங்கம் சட்டென்று மனதில் வந்தது.

இரண்டு மணித்தியாலங்களும் இருண்ட வீட்டுக்குள், இயங்காத பொருட்களுடன் என்ன செய்வது?
வெளியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். மெல்லிய குளிர்ந்த காற்றும், சூரியனின் ஒளியும் என்னை இதமாகத் தழுவின.

இயற்கை அழகானது.

10 comments :

Anonymous said...

ithuve inida ental eppadi samalitthu iruppeerkal.. konjam yosiyunkal..ivvalavu valarchikku appuramum innum thadai irukkirathu
entha kalakattankalilum manithan ethaiyavathu ilappathum theduvathum...
aanal avanai theda maranthuvittan

thiru said...

இயற்கையோடு ஒன்றிய வாழ்வு உண்மையிலே இதமானது தான். தொழில்நுட்பத்திற்கு அடிமையான வாழ்க்கையில் எதையோ தொலைத்து, எதையோ தேடி...

வே.மதிமாறன் said...

please visit

www.mathimaran.wordpress.com

Chandravathanaa said...

Anonymous hat gesagt...
ithuve inida ental eppadi samalitthu iruppeerkal.. konjam yosiyunkal..


இந்தியா என்றால் ஒரு மண்ணெண்ணெய் குக்கரோ அன்றி 3கல் அடுப்போ கிடைக்காமலா போய் விடும்.

Chandravathanaa said...

உண்மைதான் திரு தொழில்நுட்பத்திற்கு அடிமையான வாழ்க்கையில் எதையோ தொலைத்து, எதையோ தேடி...

வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க வசதியீனங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

Chandravathanaa said...

மதிமாறன்
உங்கள் தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

ramachandranusha(உஷா) said...

மீண்டும் அழகான இல்லை இல்லை வடிவான ஆக்கம். இங்கு வந்ததும் ஆரம்பத்தில் மின்சார துண்டிப்பு தரும் எரிச்சல் அதிகமாய் இருந்தது. இப்பொழுது பழகிவிட்டது :-)

காரூரன் said...

Ontario மா‍காண‌த்தில் ஒரு பெரிய "black out" சில வருடங்களின் முன் ஏற்பட்டிருந்தது. அப்பொழுது தான் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கை எவ்வளவு தொழில் நுட்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை முற்றாக உணர்ந்து கொண்டேன். பொருளாதாரமே நின்று விட்ட நிலைமை. எவ்வளவு பணம் வங்கியில் இருந்தாலும், கையில் பணம் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்று அப்போது உணரக்கூடியதாக இருந்த்தது. எனது அம்மா பேணிகளுக்குள் இருந்து பணத்தை அப்பா பணம் இல்லை என்ற போது எடுத்து தந்ததை ஞாபகம் ஊட்டி சென்றது . எந்த விடயத்திலும் ஒரு முன் கூட்டிய தயார் நிலை தேவை. நல்ல பதிவு.

காட்டாறு said...

அது எப்படி உங்களுக்கு சிறு (இது சிறு விஷயமா என்று கேட்காதீர்கள்) விஷயத்தையும் இப்படி வடிவமா எழுத வருகிறது? கடைசி 2 வரிகள் அற்புதம்.
//வெளியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். மெல்லிய குளிர்ந்த காற்றும், சூரியனின் ஒளியும் என்னை இதமாகத் தழுவின.

இயற்கை அழகானது.
//

Chandravathanaa said...

உஷா, காரூரன், காட்டாறு
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite