Thursday, June 16, 2005

நம்பமுடியவில்லை


காஞ்சி பிலிம்ஸ்ஸின் பதிவிலிருந்த கற்பழித்த மாமனாருக்கே மருமகளை மனைவி ஆக்கி கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. என்பதைப் படித்தேன். நம்ப முடியவில்லை. இப்படியும் இந்த 21ம் நூற்றாண்டில் மூடத்தனமான தீர்ப்பு வழங்குவார்களா?

சம்பவத்தன்று நூர் முகமது வெளியே சென்றிருந்தார். அப்போது நூர் முகமதுவின் தந்தை அலி முகமது அவரை(இம்ரானா) கற்பழித்து விட்டாராம்.கணவன் வீடு திரும்பியதும் அவரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார் இம்ரானா. ஆனால் கணவன் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
இவர் ஒரு கணவனா? எந்தக் கணவனாலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று இது. இதை எப்படி அவர் அலட்சியப் படுத்தினார். இப்படியும் கணவன்மார்கள் இருப்பார்களா?

பஞ்சாயத்தினர் எப்போது அலிமுகமது இம்ரானாவை கற்பழித்துவிட்டாரோ அது முதல் அவர் நூர் முகமதுவின் மனைவி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். எனவே 7 மாதம் 10 நாள் அவர் தனித்து இருந்து சுத்தமானவராக மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அலிமுகமதுவை அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
நல்ல தீர்ப்பு! அந்த ஆண்களின் மனசெல்லாம் அழுக்கு. இம்ரானா சுத்தமாக வேண்டுமா?

நம்பமுடியவில்லை.

காஞ்சிபிலிம்ஸ்ஸின் பதிவில் இதற்கான எனது கருத்தை எழுத முடியவில்லை. அதனால்தான் இங்கு எழுதியுள்ளேன்.

13 comments :

SHIVAS said...

இந்த மாதிரியான அவலங்கள் எப்போது ஆரம்பித்தது என்று திரு.நேசகுமாரைக் கேளுங்கள், ஆதாரங்களுடன் சொல்வார்.

நல்லடியார் said...

சந்திரவதனா, எனது பதிவில் "காஞ்சி பிலிம்ஸ்-க்கு ஒரு விளக்கம் என்ற பதிவையும் பார்க்கவும்.

காஞ்சியாரே, அது என்ன முஸ்லிம்களுக்கு எதிரான அல்லது சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு நேச குமாரை கேளுங்கள் என்ற சிபாரிசு? ஏன் முஸ்லிம் பெயர் கொண்ட பதிவர்களே கிடைக்கவில்லையா? அல்லது உங்கள் பகுத்தறிவு தடுக்கிறதா?

Anonymous said...

நேச குமார் என்ன இஸ்லாமிய சட்டங்களுக்கு அத்தாரிட்டியா? போயும் போயும் அந்த ஆளைப் போய் சிபாரிசு செய்கிறாரே இந்தக் காஞ்சி மலம்ஸ்..

G.Ragavan said...

இந்த விஷய்த்தை நானும் பல இடங்களில் படித்தேன்.

நம்முடைய வலைப்பூ நண்பர்களின் தனிப்பட்ட மதம் தொடர்பான விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம்.

இது போன்றவை எங்கே தொடங்கியது என்பது பிரச்சனை இல்லை. ஆனால் இன்றைக்கு இப்படிச் செய்வது சரியா என்பது கேள்வி.

இந்தத் தீர்ப்பைச் சொன்னவர் எந்தக் கடவுளை நம்புகின்றாரோ அந்தக் கடவுள் அவரை மன்னிக்காமல் நரகத்துக்குத்தான் அனுப்புவார்.

தன்னுடைய மனைவிக்கு இந்த நிலை ஏற்படக் காரணாமான கணவன்....அவன் ஆணா? த்தூ!

மாமனாரின் இன்ப வெறி என்று காமப்படம் இருப்பதாகப் பேச்சு. இந்த மாமானார்.......ச்சீ....நைந்து போன வாழைநார். இவரை ஆண்மை நீக்கம் செய்திடல் வேண்டும்.

இப்படி எந்த மதத்தினர் செய்திருந்தாலும் தவறே.

G.Ragavan said...

சந்திரவதனா,

இந்த வழக்கு பற்றிய மேலும் சில தகவல்கள்.

மிர்சாபூர் காவல்துறை அந்த மாமனாரைக் கைது செய்திருக்கிறது.

இம்ரானா தனது பிறந்த வீட்டில் உள்ளார். இவருக்கு வயது இருபது. ஆனால் ஐந்து குழந்தைகள். இதுதான் பெண் சுதந்திரத்தின் இன்றைய நிலை.

இந்த நிலையில் வழக்கை நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்று அந்த ஊர் மத அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறதாம். இதுவும் ஒரு கொடுமைதான். நடந்தது கிரிமினல் குற்றம். அதற்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு....இந்த மத அமைப்புதான் வரலாற்றுப் புகழ் பெற்ற முந்தய தீர்ப்பை வழங்கியது. இதை ஏற்றுக் கொண்டால்....எல்லா ஊர்களிலும் அந்த அந்த மத அமைப்புகள் தங்கள் ஆள் கற்பழித்தால் தீர்ப்பைத் தாங்களே கூறிக் கொள்வார்கள்.

Anonymous said...

//இந்த நிலையில் வழக்கை நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்று அந்த ஊர் மத அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறதாம். இதுவும் ஒரு கொடுமைதான்//

ஏனென்றால் இந்த தப்பைத்தான் அவர்களின் வழிகாட்டி முதலில் செய்தார். அவரின் காமத்தை தூண்டியது தன் மருமகளின் உடை அமைப்பு என்று அந்த மருமகளின் மீதே குற்றம் சுமத்தினார். இந்த மாதிரியான தவற்றை தடுக்கவே பெண்கள் அனைவரும் படுதா அணியவேண்டும் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.அது இன்றும் தொடர்கிறது. அந்தோ பரிதாபம். மதங்கள் அனைத்தையும் மூட்டை கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கு இந்த மாதிரியான சம்பவங்கள் நமக்கு சமிக்கை கொடுக்கின்றன என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

"எம்மதமும் சம்மதம்" என்பதெல்லாம் பத்தாம்பசலித்தனம்.

G.Ragavan said...

பேரில்லாதவர்களுக்கு நான் பொதுவாக பதில் சொல்வதில்லை. முகத்தைக் காட்டத் துணிவில்லாதவர்கள் என்பது எனது கருத்து.

இருந்தாலும் உங்களுக்குச் சொல்கிறேன்.

// எம்மதமும் சம்மதம்" என்பதெல்லாம் பத்தாம்பசலித்தனம். //

மதமே பத்தாம்பசலித்தனம்தான் இன்றைய நிலையில்.

இந்த இம்ரானா விஷயத்தை முதலில் கிரிமினல் குற்றம் என்ற வகையில் அனுகவேண்டும். தீர்பு நீதிமன்றத்தில் கிடைத்தால் சரி. இல்லை....வேறொரு அமைபினால்தான் கிடைக்குமென்றால்......அந்தக் கருத்தைச் சாடலாம். இந்த வழக்குக்குத் தொடர்புள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசலாம்.

Chandravathanaa said...

காஞ்சிபிலிம்ஸ்
நேசகுமாரின் இணைப்பைத் தந்ததற்கு நன்றி.

றாகவன்
உங்கள் கருத்தும் என் கருத்தோடு ஒத்துப் போகிறது.
இதில் மதம் பற்றிப் பார்க்க என்ன இருக்கிறது. எந்த மதத்தவரானாலும் தவறு தவறுதானே.

கற்பழித்தவருக்கே, பாதிக்கப் பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதுதான் தண்டனை என்றால், இப்படியான சுயகட்டுப்பாடு இல்லாத ஆண்கள் எப்படித் திருந்துவார்கள்?

இதுதான் கற்பழித்தவருக்கான தண்டனை என்றால், எவரும் தாம் விரும்பிய பெண்ணை அடைவதற்கு அவளை வன்புணர்ச்சி செய்தாலே போதுமே! அவள் சம்மதமின்றி அவளை அந்த இச்சை கொண்ட சுய கடடுப்பாடற்ற மனிதனுக்கு சட்டப்படி சொந்தமாக்கி விடுவார்களே!

இதற்கு மதமும் துணை நிற்குமானால் அந்த மதம் எதற்கு? அதற்கு ஒரு அமைப்பு எதற்கு?

G.Ragavan said...

சரியாகச் சொன்னீர்கள் சந்திரா. நமக்குப் பிடித்தமான பெண்ணை வன்புணர்ந்து விட்டால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நியாயம் உண்டாகி விடும். இதை மதத்தைப் பார்க்காமல் அந்தந்த மதத்தவர்களே கட்டுப்படுத்துவது நல்லது.

நல்லடியார் said...

//இந்த மத அமைப்புதான் வரலாற்றுப் புகழ் பெற்ற முந்தய தீர்ப்பை வழங்கியது. // அவர்கள் நிச்சயமாக மத அமைப்பாக இருக்க முடியாது. கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகவே படுகிறது.

இஸ்லாமிய சட்டத்தில் அத்தகைய கயவனை கல்லால் அடித்துக் கொள்ளலாம். அப்போது இதே பெண்ணுரிமை பேசுபவர்கள், மனித உரிமை பேசத் தொடங்கி விடுவார்கள்.

,
//ஏனென்றால் இந்த தப்பைத்தான் அவர்களின் வழிகாட்டி முதலில் செய்தார்// சந்தடி சாக்கில், ஒரு பெயரிலி யாரோ வாந்தி எடுத்ததை சொல்லி விட்டு சென்றுள்ளார். இதைத்தான் சொல்கிறேன், இவர்களுக்கு இஸ்லாத்தை குற்றம் சொல்லியே, தங்கள் பிழைப்பை நடத்தி வருகிறார்கள் என. நன்றி.

சந்திரவதனா, என் கருத்துக்களை மத கண்ணோட்டத்தில் அணுக மாட்டீர்கள் என நம்புகிறேன்.

கயல்விழி said...

கற்பழித்தவனை வெட்டியெறியாது. பெண்ணை சுத்தப்படுத்துகிறார்களாம்.

பெண்ணியவாதிகள் பெண்ணிய நலன் கொண்டவர்களது போராட்டங்கள் இந்த நேரத்தில் தான் அவசியம். சும்மா பேசி என்ன பயன்.

Chandravathanaa said...

சந்திரவதனா,
என் கருத்துக்களை மத கண்ணோட்டத்தில் அணுக மாட்டீர்கள் என நம்புகிறேன்.


நல்லடியார் நிட்சயமாக நான் அப்படிப் பார்க்க மாட்டேன். ஆனால் மதத்தைச் சாட்டி மத்த்தின் கோட்பாடு என்ற பெயரில் ஒருத்தி அநீதியான முறையில் நடாத்தப் படுவாளேயாயின் அந்த இடத்தில் மதம் பற்றிக் கதைப்பதில் தவறில்லை.

இஸ்லாமிய சட்டத்தில் அத்தகைய கயவனை கல்லால் அடித்துக் கொள்ளலாம். அப்போது இதே பெண்ணுரிமை பேசுபவர்கள், மனித உரிமை பேசத் தொடங்கி விடுவார்கள்.

அனேகமான சமயங்களில் கற்பழிக்கப் பட்டாலென்ன மனம் விரும்பித் தன்னை இழந்தாலென்ன தண்டனை பெண்ணுக்கத்தான் கொடுக்கப்படுகிறது.
காதலித்ததற்காகவோ அல்லது உடலுறவு கொண்டதற்காகவோ கசையடிகளும் கல்லடிகளும் பெரும்பாலும் பெண்களுக்குத்தான் கிடைக்கின்றன.

G.Ragavan said...

சந்திரவதனாவின் கருத்துகள்தான் என்னுடையதும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite