Thursday, December 01, 2011

The Mourning After - Ahilan Karunaharan´s TV Interview

http://manaosai.blogspot.com/2011/04/mourning-after.html

Monday, November 21, 2011

தமிழ் விக்கி ஊடகப் போட்டி

இணையத்தில் தமிழ்/தமிழர் தொடர்பான கட்டற்ற (public domain) பல்லூடக ஆவணங்களை (படங்கள், ஒலிக்கோப்புக்கள், நிகழ்படங்கள்) அதிகரிக்கும் நோக்கில் தமிழ் விக்கியூடகம் ஒரு போட்டியை நவம்பர் 15, 2011 இல் இருந்து பெப்ரவரி 29, 2012 வரை நடத்துகிறது. எவ்வளவோ நாட்களாக நீங்கள் எடுத்த பல படங்களும் பிறவும் உங்கள் கணினியில் மட்டும் இருந்துவிடாமல், எல்லோருடனும் பகிரும் வண்ணம் உங்கள் பங்களிப்பை வழங்கி பல பரிசுகளைப் (9 பரிசுகள்) பெறும் வாய்ப்பைப் பெறுங்கள். உங்கள் பங்களிப்பு வெவ்வேறு விக்கியூடங்களில் காட்சிப்படுத்தப்படும். மேலதிக விபரங்களை http://ta.wikipedia.org/wiki/Contest என்ற முகவரியில் பெறலாம். மேலும் இந்த போட்டியை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவும் உதவுங்கள். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம்.

Tuesday, August 02, 2011

முந்தி வடிவாய் இருந்தவள்!

நான் வேலை பார்க்கும் வங்கியில் வருடாவருடம் நத்தார் தினத்துக்கு சில நாட்கள் முன்பாக அங்கு வேலை பார்த்து ஓய்வில் சென்றவர்களை அழைத்து விருந்துபசாரம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. தற்போது சில வருடங்களாக அவர்களை வரவேற்று உபசரிப்பதற்கு தெரிவாகும் வெள்ளை நிற ஜேர்மனியப் பெண்களுக்குள் கறுப்பாக நானும் ஒருத்தி இருந்தேன்.

அது உண்மையில் ஒரு சந்தோசமான பொழுது. மிகவும் வயதானவர்கள் (80-90). அப்போதுதான் 63-65 ஐத் தாண்டியவர்கள் என்று 63க்கு மேற்பட்ட வயது கொண்ட பலரும் வருவார்கள். குழந்தைகள் போல சிலர் நடந்து கொள்வார்கள். மிகவும் அன்பாகவும், ஆசையாகவும் எம்மோடு பேசிக் கொள்வார்கள். அப்படித்தான் கடந்த விருந்துபசாரத்திலும் நானும் மற்றவர்களுமாக அவர்களுக்கு தேநீர், கோப்பியுடன் விதவிதமான Cakes ஐப் பரிமாறிக் கொண்டும், அருகிலிருந்து கதைத்துக் கொண்டும்.. என்று பொழுதை இனிமையாகக் கழித்துக் கொண்டிருந்தோம்.

அப்போதுதான், சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வில் சென்ற என்னை நன்கு தெரிந்த ஒரு பெண், எமது வங்கியின் வேறொரு கிளையில் இருந்து ஓய்வில் சென்ற இன்னொரு பெண்ணுக்கு என்னைக் காட்டி “இவள் முந்தி நல்ல வடிவாய் இருந்தவள்“ என்றாள்.

சந்திரவதனா
29.7.2011

Friday, May 06, 2011

போறாளே பொன்னுத்தாயி.. பொலபொலவென்று..



அப்போது 1996 இல் திடீரென எங்கள் வீட்டில் ஒரு முடிவு எடுக்கப் பட்டது. அது எனது மகள் நியூசிலாந்து சென்று ஒரு வருடம் படிப்பது என்பது.

என் மகளின் விருப்பம் அது. எனது கணவரின் அம்மா, அண்ணா குடும்பம், அக்கா குடும்பம் எல்லோரும் அங்கு இருப்பதால் எனது கணவரும் அதற்கு சந்தோசமாகச் சம்மதித்து விட்டார். எனது கணவரின் அண்ணனுக்கோ, அக்காவுக்கோ பெண்குழந்தைகள் இல்லாத காரணத்தால் அவளின் வரவையொட்டி அவர்களும் பெரிய ஆரவாரப்பட்டார்கள். எனது விருப்பு, வெறுப்புகள் முற்றிலுமாக இந்த விடயத்தில் அடிபட்டுப் போய் விட்டது. நான் கையாலாகதவளாய் நின்றேன்.

பிரிவை நினைத்து மிகவும் பயமாக இருந்தது. மனசு சோர்ந்து சோர்ந்து அழுதது. ஆனாலும் அவள் நியூசிலாந்து போவது உறுதியான முடிவாகி விட்டது. அவளை அழைத்துப் போவதற்கு நியூசிலாந்திலிருந்து எனது கணவரின் அண்ணா, அண்ணியும், மாமியும் ஜேர்மனிவரை வந்திருந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் புறப்படுவதற்கு முதல்நாள் இரவு எல்லோரும் சேர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட்டுப் பாட வேண்டும் என்று எனது மைத்துனர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரும் பாடினார்கள்.

எனது மகள் போறாளே பொன்னுத்தாயி... என்று இந்தப் பாடலைப் பாடத் தொடங்கினாள். அவள் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. அப்போதுதான் அவளின் கவலையை முழுவதுமாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. கொஞ்சம் நான் வலிமையாக இருந்திருந்தால் அந்தப் பயணத்தைத் தடுத்திருக்கலாம் என்று தோன்றியது. இன்றும் கூட கண்கலங்காமல் இந்தப் பாடலை என்னால் கேட்க முடிவதில்லை.

Monday, April 04, 2011

The Mourning After

BELIEVABLE CHARACTERS IN ONE-MAN SHOW
 
The Mourning After
Written and performed by Ahi Karunaharan
Directed by Miria George
Tawata Productions

at THE BOX, Buick St, Petone, Wellington
From 30 Mar 2011 to 2 Apr 2011

Reviewed by Ewen Coleman, 1 Apr 2011
originally published in The Dominion Post


Telling one’s story is an important part of any culture and using theatre as a medium f0r this is becoming increasingly popular. It is therefore interesting to see this happening with what many would consider a lesser known culture within NZ society, that of the Sri Lankans.

Although born in the Britain and raised in Sri Lanka for the first seven years of his life writer, performer Ahi Karunaharan has spent the past 21 years in NZ, including graduating from Toi Whaakari: NZ Drama School.

It his connection with his own people and his sense of theatricality that has inspired him to create a fascinating one man show – The Mourning After. Although the characters and incidents are fictional much of the material for the show has been garnered from the lives of real people.

The narrator Karunaharan leaves NZ to return to the family village in Sri Lanka with the ashes of his deceased father and a photo, that of an unknown women given to him by his father before he died. What he finds on his return is heartbreaking, the village is one of many wiped out in the 2004 Boxing Day tsunami. Little was left after the devastating waves and little has happened since. One of the characters, a fisherman, now spends his time, six years later, alone, foraging through the rumble looking for family treasures.

As the narrator meets up with various characters looking for answers to who the women in the photo is and what relevance she has to his family the wider issues of loss, love and family frictions are canvassed.

When Karunaharan started working on this piece 15 months ago, he would not have anticipated the disasters that were going to befall Christchurch and Japan would add poignancy.

Unlike many other multi-character one person shows where it is difficult to differentiate between the many characters, Karunaharan has limited himself to the narrator and four main characters thus allowing himself to develop these into real believable people with their own characteristics which he portrays with confidence and feeling. The uncle, the fisherman, the old lady at the gate and the niece calling the crows are all cleverly imbued with their own idiosyncrasies through gesture, voice and movement.

The stance, poise, bent body, turned in toes of each coupled with Karunaharan’s graceful agility to move around the stage brings the piece alive. There is also tension between the characters as the identity of the women in the photo is slowly revealed which adds depth, making it a most engaging and entertaining piece of theatre.
______________________________
For more production details, click on the title above. Go to Home page to see other Reviews, recent Comments and Forum postings (under Chat Back), and News.


See also reviews by:
 John Smythe

Tuesday, March 22, 2011

சங்கடங்கள்

வர வர Privacy என்பது கிடைக்காமலே போய் விடுகிறது. எங்கு சென்றாலும் தெரிந்தவர்கள்.

பிள்ளகைளுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்கள், பார்ப்பவர்கள், எனக்குத் தெரிந்தவர்கள் என்று எங்கும் நிறைந்திருக்கிறார்கள்... அந்தத் தெரிந்தவர்கள்.

சில வாரங்களுக்கு முன், சற்று ஆறுதலாக இருந்து கதைப்போமே என்று நண்பியுடன் ஒரு சிற்றுண்டிச்சாலையில் சென்றமர்ந்தேன். இரண்டு கதைதான் கதைத்துச் சிரித்திருப்போம். அதற்கிடையில் எனது மேலதிகாரி, தனது உப அதிகாரிகள் இருவருடன் வந்து “ஹலோ“ சொல்லி விட்டு எமக்குப் பின்னால் இருக்கும் மேசையில் அமர்ந்து கொண்டார். அதற்குப் பின் சற்று உரத்துக் கூடக் கதைக்க முடியவில்லை. மனம் விட்டுச் சிரிப்பதெங்கே!

வரி இலாகாவில் கொஞ்சம் பொய் எழுதினால்தான் வருடம் முழுவதும் கட்டியவரியின் ஒரு கணிசமான பங்கையேனும் திருப்பிப் பெறமுடியும். கடந்த வாரம் அப்படித்தான் பத்திரங்களை நிரப்பிக் கொண்டு வரி இலாகாவுக்குச் சென்றேன். நிறையப் பேர் காத்திருந்தார்கள். நானும் காத்திருந்து எனது முறை வர உரிய அதிகாரியிடம் சென்று பத்திரங்களை ஒப்பித்தேன். சில கேள்விகளின் பின் “நீங்கள் துமியின் அம்மாதானே..!“ என்றார். நான் ஆச்சரியத்துடன், நீங்கள்.. என்ற போது, “நான் துமியின் கைப்பந்தாட்ட ரெயினர்“ என்றார். மிக நட்பாக அவர் என்னோடு கதைத்து, பத்திரங்களைச் சரிபார்த்தாலும் என்னுள்ளே சங்கட உணர்வு.

உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றால், வழமையாக அங்கு வருபவர்கள் ஒரு ´ஹலோ` வோடோ அன்றி அது கூட இல்லாத IPhone னோடோ ஐக்கியமான படி உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள். எந்தத் தொந்தரவும் இருக்காது. இப்போது அந்த சுதந்திரம் கூட இல்லாது போய்க் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் எனது குடும்பமருத்துவர் எனக்குப் பின்னால் நின்று சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தார். நேற்று பின்னால் குடும்ப வைத்தியர். பக்கத்தில் எனது பகுதிநேர வேலை மேலதிகாரி.

சனிக்கிழமைகளில்தான் எனது கணவருடன் Shopping, அது.. இது.. என்று வெளியில் சுற்றுவேன். ஒவ்வொரு முறையும் சிலர் என்னைப் பிடித்து விடுவார்கள். “ஹாய் சந்திரா..! எப்படி இருக்கிறாய்? கண்டு கனகாலம்.. போன்ற பாணிகளில் அவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரையும் முறித்துக் கொண்டு போக வேண்டியிருக்கும். அல்லது எனது கணவரின் முறைப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite