ஒரு பேப்பர் 23ம் வந்து விட்டது.
22ம் பேப்பரைப் பார்த்து எழுத நினைத்தும் எழுதாமல் விட்டவைகளில் முக்கியமானது -
ஒருபேப்பர், செல்வநாயகியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்துள்ள செய்தி.
எது ஆன்மீகம்? என்ற
செல்வநாயகியின் தொடர் கட்டுரை மரத்தடி.கொம்மில் இருந்து எடுக்கப் படுவது தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
நிற்க, வாசகர் பகுதியில் செல்வநாயகியின் கட்டுரையைப் பாராட்டி யாராவது ஒருவராவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.
மற்றும்,புலத்தில் புகைப்படம் மட்டும் பார்த்து நடக்கும் திருமணங்களால் விலை போகும் பலரின் வாழ்க்கையைப் பார்த்து குழம்பியிருக்கிறார்
எல்லாளன்.
இது குறித்து உங்களையும் யோசிக்கச் சொல்லியுள்ளார். `ஆயிரம் காலத்துப் பயிர்` என்று அந்த நாட்களில் சொன்னார்கள். இப்போ பயிரின் தரத்தையோ நிலத்தின் தன்மையையோ ஆராயாமல் நட்டால் போதுமென்றுதான் திருமணங்கள் நடக்கின்றன. யோசிக்க வேண்டிய விடயந்தான்.
கைவிசேசத்தையும் பக்கற்றிலே கொடுக்கீனமாம்.
அருணன் பெருமூச்சு விடுகிறார். செவ்வாய்கிரகத்துக்கு விடுமுறையைக் களிக்கச் சென்று வரும் காலம் வந்தாலும், இலங்கை இனப்பிரச்சனை தீராது, பேச்சுவார்த்தை என்று பேய்க்காட்டப் படும் என்பதை
இவர் சொல்லும் விதம் நன்றாயிருக்கிறது.
ந.ஹேமராஜின் பெறுபேறுகள் சிறுகதையும் நல்ல கருவைக் கொண்டுள்ளது.
அறுவைப்பக்கத்தில் வழமை போல அல்வாசிட்டியின் றியாலிட்டி இடம் பிடித்திருக்கிறது. கூடவே சயந்தனின் பின்னப் பெயிலாகாம என்ன செய்ய! வானம்பாடியின் புலம் பெயர் தமிழர் வாழ்க்கை தமிழோசையின் அரசியல் ஒரு விளக்கம் என்பன இடம் பிடித்துள்ளன.
சினிமாப் பகுதியில் அருண் வைத்தியநாதனின் நுனிப்புல் மேய்தலும் தமிழ் சினிமா ரசனையும் மீனாவின் மும்பை எக்ஸ்பிரஸ் என்பன இடம் பிடித்துள்ளன.