நான் வலைப்பூவில் எழுதிய வாரத்தில் ரீ றீ என்பதில் ஒரு சந்தேகம் வந்தது.
தயவுசெய்து எப்படி/ஏன் டி/டீ >>> றி/றீ ஆனது என்று எழுதுங்களேன். மின்னஞ்சலனுப்பி கேட்கலாமென நினைத்தேன். பொதுவில் கேட்டால், என்னைப்போல வேறு யாருக்காவது இந்த சந்தேகமிருந்தால் பயன்படும் அல்லது வேறுயாராவதவது சொல்வார்கள் என்றுதான் இங்கேயிட்டேன்.Posted by அன்பு at September 22, 2004 09:02 AMஅதுபற்றித்தான் ஈயண்ணா முன்னரே விளக்கமளித்தாரே அன்பு. இதுபோலக் கேட்டதால் நீங்களும் தீண்டத்தகாதவர்கள் ஆகிவிடுவீர்கள் அவர்களுக்கு! t=ரி..அப்புறம் cricket ல் வரும் t=ற். அது ஆங்கிலமாம்...அது அப்படித்தான்!!! தோழிகூட டீ கடையை ரீகடை என்றே விளித்திருக்கிறார்.
Posted by Moorthi at September 22, 2004 08:11 PMஅன்பு ஆங்கில உச்சரிப்பு தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வேறுபடும்.மலேசியாவியிலும் சிங்கப்பூரிலும் அப்படித்தானே சொல்கிறார்கள் என்று சொன்னால் அது மலேசிய/சிங்கப்பூர் தமிழர்கள் தமிழ்நாட்டு வழிவந்தவர்கள் என்பதன் வெளிப்பாடு.அதையே ஐரோப்பாவிலோ கனடாவிலோ பார்த்தீர்களானால் அவர்களது உச்சரிப்பு ஈழத்தமிழர்களுடையதன் தொடர்ச்சியாக இருக்கும்
இது இன்று நேற்று நீங்களும் நானும் ஆரம்பித்த பிரச்சனை அல்ல மன்ற மையத்திலும் மடலாடற் குழுக்களிலிலும் பல்லாண்டுகாலமாக விவாதிக்கப்படுவது அதற்கு முன்னால் தமிழக ஈழ எழுத்தாளர்களும் நண்பர்களும் சந்தித்தபோது முட்டி மோதிக்கொண்ட விடயம்.
Hospital ஐ கொஸ்பிற்றல் என்றுதான் ஆங்கிலேயரும் சொல்வார்கள் சீனரும் சொல்வார்கள் பிரஞ்சுக்காரரும் சொல்வார்கள் ஈழத்தவரும் சொல்கிறார்கள் ஆனால் இந்தியர்கள் மட்டும்தான் ஹாஸ்பிடல் என்று சொல்கிறார்கள் என்று சொன்னால் அதற்குத் தீண்டாமைப் பட்டம்
ஆங்கிலத்துக்கு இதுதான் சரியான தமிழ் உச்சரிப்பு என்று நானோ நீங்களோ பட்டிமன்றம் நடத்தமுடியாது.ஏனெனில் இருவரும் ஆங்கிலத்தை தமிழில் எழுதி தமிழைக் கொலைசெய்து கொண்டிருக்கிறோம்.ஆங்கிலத்தை தமிழில் உச்சரிக்காமல் அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லை தெரிந்து பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.
உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்.
Posted by Eelanathan at September 23, 2004 01:54 AMHospital என்பதனை ஆங்கிலேயரும் சீனர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஹொஸ்பிடல் என்றுதான் சொல்வார்கள். கொஸ்பிற்றல் என்று அல்ல!!!
Posted by Moorthi at September 23, 2004 02:23 AM
ரீ - றீ பற்றி முடிந்தால் என் பதிவில் எழுதுகிறேன்.
Posted by chandravathanaa at September 28, 2004 03:39 AM
###########################
இவை அங்கு தரப்பட்ட பின்னூட்டங்கள்.
இது பற்றிய எனது கருத்து
நான் வலைப்பூவில் எழுதிய வாரத்தில் ரீ றீ என்பதில் ஒரு சந்தேகம் வந்தது. இதில் நான் சொல்வதுதான் சரியென்றோ அன்றி நீங்கள் நினைப்பதுதான் சரியென்றோ எந்த வாதமும் நாம் செய்து விட முடியாது.
ஏனெனில் ஆங்கிலத்தை நாம் தமிழில் எழுதி ஆங்கிலத்தைக் கொலை பண்ணுகிறோம்.
என்னதான் நாம் முயற்சி பண்ணி, எப்படித்தான் நாம் உச்சரித்தாலும் ஒரு யேர்மனியர் போல யேர்மன் மொழியையோ, அல்லது ஆங்கிலேயர் போல ஆங்கில மொழியையோ எம்மால் உச்சரிக்க முடியாது. ஒரு வேளை எங்கள் குழந்தைகள் அந்தந்த நாடுகளில் பிறந்த வளர்ந்து, அவர்களோடு கூடி வாழ்ந்து கொண்டு, அவர்கள் பாடசாலைகளில் படித்துக் கொண்டிருக்கும் போது அந்தந்த நாட்டு உச்சரிப்புகள் ஓரளவுக்குச் சரி வரலாம். அது கூட நாங்கள் வீட்டில் தமிழில் கதைக்கும் பட்சத்தில் சற்று வேறுபடும்.
இப்படியிருக்க நாம் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதி உச்சரிப்பது என்பதும், அதில் சரி பிழை தேடுவதும் சற்று நகைப்புக்குரிய விடயந்தான்.
ஆனாலும் நான் எப்படி ஆங்கிலத்தை உச்சரிக்கிறேனோ, அதற்கு மிகக் கிட்டிய உச்சரிப்பை ஒட்டிய தமிழையே இது போன்ற சமயங்களில் நான் பயன் படுத்துகிறேன்.
உதாரணமாக Tea என்பதற்கான உச்சரிப்பை ரீ என்கிறேன்.
அதன் ஆங்கில எழுத்து Dea என்று இருக்கும் பட்சத்தில் நானும் டீ என்பேன்.
ஏனெனில் T இற்கான உச்சரிப்பு ரீ
D இற்கான உச்சரிப்பு டீ
இதே போலத்தான்
TV - ரீவீ
நீங்கள் குறிப்பிடுவது போல டீவீ எனச் சொல்ல வேண்டுமானால்
அதற்கான ஆங்கில எழுத்து என்னைப் பொறுத்த வரையில் DV என இருக்க வேண்டும்.