
கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றாகிப் போகும்
காவிய நாயகர்கள்-கரும்புலிகள்.
தீப்பந்தாகக் கனன்றபடி
விண்ணோக்கிச் செல்லும் எங்கள்
தேசத்தின் காப்பரண்கள்
மனித நேயங்கள் மதிக்கப் படாத போது
மனிதக் குண்டுகளாய் மாறிக் கொள்பவர்கள்
மாற்றானின் மடியருகில் சென்று
கூற்றுவனை முதுகில் தட்டி
குசலம் விசாரிப்பவர்கள்
எங்கள் அடையாளங்களை நிலை நிறுத்துவதற்காக
தங்கள் அடையாளங்களை விலையாய்க் கொடுப்பவர்கள்
எங்கள் மண்ணில் வர்ணங்கள் பூப்பதற்காக
தங்கள் வாழ்வை மர்மங்களால் நிறைத்துக் கொள்பவர்கள்
முகம் தெரியாமலே மறைந்து போன இவர்கள்
சில சமயங்களில்
சுவரொட்டிகளிலும் கூடத் தலை காட்டுவதில்லை
ஊருலகம் அறிந்திடாத மண்ணின் மைந்தர்கள் - இவர்கள்
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்.
தீட்சண்யன்