Friday, July 16, 2004
மூக்குத்தி
நிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை. ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன்.
உண்மையில் என்ன?
ஆதிகாலத்தில் இவையெல்லாம் காரணத்தோடுதான் செய்யப் பட்டன. இடையிலே எப்படியோ அடிமைச் சின்னங்களாகி விட்டன.
உதாரணமாக,
பூக்களுக்கு பஞ்சினைப் போல ஈரத்தை உறிஞ்சும் இயற்கையான தன்மை உண்டு. அதனால் Hair drier இல்லாத அந்தக் காலத்தில் கூந்தலில் நிறையப் பூக்களைச் சூடி தலையைக் காய வைத்தனர். ஆனால் கணவனை இழந்த பின் தலை ஈரத்தோடே இருக்கலாம் என்பது போல, கணவனை இழந்த பெண்கள் பூச்சூட மறுக்கப் பட்டது எப்போது வந்தது? ஏன் வந்தது என்பது கேள்விக்குறியே.
மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.
மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது எப்படி வந்தது என்பது தெரியவில்லை. அப்படிக் கழற்றும் போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது.
இத்தனை நன்மைகள் இருந்தும் நான் மூக்குக் குத்தவில்லை.
மூக்கைக் குத்தும் போது வலிக்கும் அல்லவா!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
▼
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
3 comments :
கணவன் இறந்தவுடன் வண்ணச்சேலை வெண் சேலையாகின்றது ஆகவே சேலை அடிமைச் சின்னம்,பொட்டு அழிக்கப்படுகின்றது ஆகவே பொட்டு அடிமைச் சின்னம்,தாலி கழற்றப்படுகின்றது ஆகவே தாலி அடிமைச் சின்னம்,காப்புகள் உடைக்கப்படுகின்றன ஆகவே காப்பு அடிமைச் சின்னம்,ஆதிகாலத்தில் தலை மொட்டையடிக்கப்பட்டது ஆகவே தலை அடிமைச் சின்னம் இன்னும் ஏதாவது இருக்கா.இவற்றை செய்யென்று ஏவுவதே அச்டிமைத்தனம் ஒழிக்கவேண்டியது அவற்றை ஒழிய மூக்குத்தியையும் தாலியையும் அல்ல.வேலி அடிமைச் சின்னமென்று பிடுங்கிப்போடுவது செடிக்கு பாதுகாப்பில்லை.வேலி தேவையற்ற சூழலை உருவாக்குவதே முக்கியம்
மன்னிக்க வேண்டும்.
மேற்கண்ட விஞ்ஞான நியாயப்படுத்தல்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
குர் ஆனை காப்பாற்ற இப்படியான எரிச்சலூட்டும் நியாயப்படுத்தல்களை செய்யும்போது எனக்கு வெறுப்பு தலைக்கேறுவதுண்டு.
இங்கே சிலர் இந்துமதத்தை , கிறிச்துவத்தை, பெளத்தத்தை ஏன், படிப்படியாக தமது உதிர்வுக்காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் உலக மதங்கள் அனைத்துக்கும் முட்டுக்கொடுத்து நிற்பாட்டுவதற்காக இப்படியான நியாயப்படுத்தல்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளன.
இவற்றில் உண்மைகளும் இருக்கலாம்.
மூக்குத்தி கபால வாயுவை அகற்றுகிறதோ என்னவோ, கபால வாயுவை அகற்றுவதற்காகத்தான் மூக்குத்தி குத்தப்பட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தங்க ஆபரணங்கள் புழக்கத்துக்கு வந்த காலப்பகுதியை தற்போது நான் நினைவில் வைத்திருக்கவில்லை.ஆனால் , தங்க ஆபரணங்கள் உலகம்பூராகவும் ஏறத்தாழ ஒரே காலப்பகுதியில் பரவலாக புழங்கத்தொடங்கின. உடலில் துவாரம் ஏற்படுத்தி தங்கத்தை கொழுவிக்கொள்ளும் பழக்கம் உலகம் பூராகவும் இருந்திருப்பதற்கு சான்றுகள் உண்டு.
மிகவும் சுதந்திரமான பெண்கள் வாழ்ந்த, தாய்வழிச்சமுதாயத்தில், புராதன பொதுவுடமை வாழ்க்கை முறையில் பருவப்பெண்கள் கபாலத்தில் வாயுக்களை சுமந்துகொண்டிருந்தார்கள்.
மூக்குத்தி பெரும்பாலும் குத்திக்கொள்ளாத மேற்குலக பெண்கள் பல்வேறுசாதனைகளை செய்து, ஓரளவுக்காவது விடுதலைய நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பார்க்கும் போது என்னவோ, கபாலத்திலிருக்கும் வாயுவுக்கும் விடுதலை உணர்வுக்கும் சம்பந்தமிருப்பதாக படுகிறது.
ஆபரணங்களின் ஆரம்பம் மனிதருக்கு இயல்பாகவே இருக்கும் அழகுணர்வுதான் என்பதில் எனக்கு சந்தேகமெதுவுமில்லை.
எமது பண்டைய விஞ்ஞானைகள், அல்லது கடவுளிடம் உயிரியல் விஷயங்களை கேட்டுத்தெரிந்துகொண்டு வந்த ஞானிகள் கூடி ஆராய்ந்து, நிறைய பரிசோதனைகள் செய்து, உடல்நலத்துக்கு நல்லது என்று கண்டறியப்பட்ட மூக்குத்தியை பரவலாக்கம் செய்து, படிப்படியாக பெண்கள் எதிர்நோக்கிய உயிரியல் குளறுபடிகளை தீர்த்துவைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள்?
நீங்கள் எழுப்பிய சந்தேகமே இதற்கு பதில் தருகிறது.
கணவனை இழந்தவள் வேறு ஆண்களை அணுகக்கூடாது. எனவே ஆண்களின் போகத்துக்குரிய எல்லாம் அவளிடமிருந்து பறிக்கப்படுகின்றன. ஆக அவளிடமிருந்து பறிக்கப்படுவனவெல்லாம் ஆண்களின் போகத்துக்குரியவை. பெண்ணே ஆணின் போகத்துக்குரியவள் என்று கருதித்தானே உடன்கட்டை ஏறவைத்தார்கள்?
பெண்களின் கபாலவாயுக்களை அகற்ற மூக்குத்தியை கண்டுபிடித்து அறிமுகாப்படுத்திய "எமது" ஞானிகளுக்கு, பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது என்பதை சொல்லிக்கொடுக்க, ஒரு கலிலியோ பிறந்துவரவேண்டியதாயிற்று.
தைக்கத்தெரியாமல், நீட்டுநீட்டு துணிகளால் ஆடையணிந்துகொண்டிருந்தவர்களுக்கு(சேலை வேட்டி) தையலையும் ரவிக்கையையும் அறிமுகப்படுத்த முகலாயர்கள் வரவேண்டியதாயிற்று.
எமது பெருமைக்குரிய பண்டைய அறிஞர்களுக்கு, பெண்களும் மனிதர்கள் தான் என்று ஏற்றுக்கொள்ளவும் , விதவைக்கொடுமையை, பெண்ணடிமைத்தனத்தை தடுத்து நிறுத்தவும் வழிதெரியாமலிருந்திருக்கிறது.
அரசனின், அதிகாரவர்க்கத்தின் எச்சிலில் வாழ்ந்துகொண்டிருந்த அவர்களுக்கும் அவர்களின் சமயங்களுக்கும் உலகின் ஏற்றதாழ்வுகளுக்கெல்லாம், போனபிறவியைச்சொல்லி, அதிகாரவர்க்கத்தை காப்பாற்றுவதைத் தவிர வேறு வேலை இருக்கவில்லை. பாவம் பசித்த நாய்கள் என்ன செய்யும். வருந்தி உழைக்கவேறு தெரியாது.
இந்தியக்கலாச்சாரம் என்பது குப்பை.(எமது கலாச்சாரம்?) அதில் ஏதாவது ஒருசில விஷயங்கள் தேறலாம். குப்பையை கிளறிக்கொண்டிருப்பதைவிட அதை எறிந்துவிட்டு, உருப்படியான மனிதக்கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய பெருமையை தமிழர்கள் தட்டிக்கொள்வோம்.
ஆடை என்பது இயற்கையிலிருந்து எம்மைப்பாதுகாக்கும்ம் அடிப்படைத்தேவை. அதில் அழாகுணர்வு ஏற்றப்படுகிறது.
ஆபரணங்கள் அழகுணர்வின் வரவு.
அந்தளவில் அவை தேவையானவை.
அழகுணர்வு என்பது சுயாதீனமானதல்ல, மனித சிந்தனைகளைப்போல அதுவும் புறக்காரணிகளாலும் தேவைகளாலும் தீர்மானிக்கப்படுகின்றது.
மயூரன் மூக்குத்திக்கு விஞ்ஞான விளக்கம் எனக்குத் தெரியாது ஆனால் உலோகங்களில் சில உடலில் ஒட்டிக்கொண்டிருப்பதால் சில சில நோய்களுக்கு நிவாரணியாகும் என்பது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை.ஆனால் அதையே அந்தக் காலத்தில் கண்டறியும் அளவுக்கு விஞ்ஞானிகள் எங்கள் சமூகத்தில் இருக்கவில்லை என்ற உங்கள் கருத்து ஏற்புடையதன்று.மூக்குத்தி பெண்களுக்கு ஏற்படும் உடலுபாதைகளைத் தீர்த்து வைத்திருக்கலாம் வைக்காமலும் இருந்திருக்கலாம் ஆனால் மேற்குலகம் பெண்கள் முன்னேறியதற்கு மூக்குத்தி அணியாததுதான் காரணம் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது ஏனென்றால் முன்னேற்றத்தின் உச்சிப்படியில் இருந்து கொண்டு அவர்கள் தாம் விட்ட பிழையை எண்ணிப்பார்க்கிறார்கள் மூக்கில் மட்டுமல்ல உடலில் கவர்ச்சி எனத் தாங்கள் கருத்தும் பிரதேசங்களில் எல்லாம் உலோகங்களைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அதனை அடிமைத் தளை என்று நினைப்பதில்லை விடுதலைச் சின்னங்களாக பெருமையுடன் நினைக்கிறார்கள்.
மூக்குத்தி குத்தினால் தான் நீ அழகாக இருக்கிறாய் குத்தியே ஆகவேண்டும் என அடம்பிடிக்கும் ஆண்கள் தற்போது மிகவும் அரிது.காதுத்தோடு ஒரு பவுணுக்குப் பதிலாக இரண்டு பவுணில் போடவேண்டும் என அடம்பிடிக்கும் பெண்களே அதிகம் அவர்கள் மூக்குத்தியை கழற்றி எறிந்தால் விடுதலையாகப் போகின்றவர்கள் ஆண்களே பாவம் அதனை விற்றாவது அவர்கள் கடன் சுமையை குறைத்துக் கொள்வார்கள்.
மூக்குத்தியும் அணிகலன்களும் அந்தக்காலத்தில் ஆணால் அணிவிக்கப்பட்டிருக்கலாம் அதன் பின்னர் கணவன் இறந்ததும் அதனைக் கழற்றும் படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம் ஆகவே அந்தக் காலத்தில் அவையெல்லாம் அடிமைச் சின்னங்களாக இருந்திருக்கலாம் இப்போது அவற்றை பெண்களே விரும்பி அணிகிறார்கள் கணவன் இறந்தவுடன் வெண்சேலை அணியும் வழக்கமும் ஆபரணங்களைத் தூரப்போடும் வழக்கமும் அருகிவிட்டது இந்தக்காலத்தில் இவையெல்லாம் அடிமைச் சின்னங்கள் அவற்றை தூக்கி எறியவேண்டும் என்பது சரியான வாதமல்ல அப்படியாயின் ஒருகாலத்தில் ஆணின் போகப்பொருளாக இருந்த பெண்ணையும் இந்த பெண்விடுதலைக் காலத்தில் நெருப்பில் போடுவதை சரி என்பீர்களா
Post a Comment