Saturday, January 31, 2004

வயல் வெளி

அருவிவெட்டு காலமதில் அமைதியுடன் அமர்ந்திருந்தேன்
குருவியினம் கூச்சலிட்டு குஞ்சுகளைக் கவர்ந்தழைக்க
புரவியினம் ஆங்காங்கே புற்தரையில் அலைந்திருக்க
கருவிகளின் ஒலி கேட்டு கலவரத்தால் அதிர்ந்து விட்டேன்.

தலைதூக்க முடியாது தள்ளாடி நிற்குமந்த
நிலை கெட்ட நெற் கதிர்கள் அலைந்து நிற்கும் வேளையிலே
தலை அறுத்துச் செல்வதற்கு வந்திருந்தார் கயவர் சிலர்
மலையொத்த கதிர்க்குவியல் நிலை குலைந்து சரிந்தனவே.

வயல் பாட்டுப் பாடிக்கொண்டே கதிர்க் கட்டைத் தலையில் வைத்து
கயல் விழியார் சென்றனரே வயலதனின் வரம்பினிலே
மயிலதனின் எழிலுடனும் முயலதனின் கதியுடனும்
செயலாற்றி நின்றனரச் சேரி இளம் பெண்கள் சிலர்.

ஆடவர்கள் வெட்டி வைக்க மங்கையர்கள் சுமந்து செல்ல
கூட நின்ற தோழர்களும் கூடி ஒன்றாய்ப் பாடினரே
ஓடி ஆடி உழைப்பவர்கள் உற்சாகமாய் இருக்க எண்ணி
நாடிவந்த நானும் நின்று நயமாகப் பாடினேனே.

சந்திரவதனா - 1975
ஓலிபரப்பு - இலங்கை வானொலி - 1981

Sunday, January 25, 2004

வீடு மாறி விட்டேன்

10.12.2003
மனஓசை மௌனித்துப் போய் விட்டதாக உங்களுக்குத் தோன்றலாம்.
ஓசை கூடினாலும் எதை.. எங்கே தொடங்கி, எதை... எங்கே முடிப்பது என்று தெரியாது இருக்கும். வீடு மாறுகிறேன். பெரிய வீட்டில் இருந்து சிறிய வீட்டுக்கு மாறுவது என்பது மகா கடினம். சின்னச் சின்னதாகச் சேர்த்து வைத்ததை எல்லாம் எறிந்து விட வேண்டும் என்னும் போது மனசு மறுக்கிறது. எனது பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் ஞாபகப் படுத்தும் பொக்கிசங்கள் அவை. பார்த்துப் பார்த்து... பத்திரப் படுத்தி.. நேரம் அசுர வேகத்தில் பறக்கிறது.

என்ன செய்தாலும் மனசின் ஒரு மூலையில் ஏதோ ஒரு ஏக்கம். எனது குழந்தைகள் யேர்மனிக்கு வந்ததிலிருந்து வாழ்ந்த வளர்ந்த வீடு. அதை விட்டுப் போகப் போகிறோம் என்பதில் கவலை. ஆனாலும் அவர்கள் தனித் தனியே போன பின் இந்தப் பெரிய வீட்டுக்கு அறா வாடகையையும் கட்டிக் கொண்டு நானும் கணவரும் தனியே என்ன செய்வது?

எனது மகள் கூட தொலைபேசியில் அழைத்து - அம்மா எங்கடை மூச்சுக்காற்று அந்த வீட்டுக்குள் இருக்கிறது. அதை விட்டுப் போறிங்களோ..? என்று கேட்கிறாள்.

உண்மையிலேயே வீடு மாறுவோம் என்று நானும் என் கணவருமாகத் தீர்மானித்த பின் பல வீடுகள் பார்த்தேன். எவ்வளவு நல்ல வீடு கிடைத்தாலும் எனது குழந்தைகளின் மூச்சுக் காற்றை நிறைத்து வைத்திருக்கும் இந்த வீட்டை விட மனமில்லாததால் ஏதோ ஒரு குறையைப் புதிதாகப் பார்க்கும் வீடுகளில் கண்டு பிடித்து வீடு மாறுவதை இழுத்தடித்துக் கொண்டு வந்தேன். இம்முறை எனது கணவருக்கு எந்த சாட்டும் சொல்ல முடியவில்லை. மாறித்தான் ஆவது என்றாகி விட்டது. ம்.........

ம்......... வீடு மாறி விட்டேன். 10.12.2003 அன்று எழுதியதை இங்கு பதிய முன் பழைய வீட்டில் இணைய இணைப்பு துண்டிக்கப் பட்டு விட்டது.
புதிய வீட்டுக்கான இணைய இணைப்பை எடுப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதில் இவ்வளவு நாட்களும்................ ஓடி விட்டன.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite