
தெருவீதியில் இருந்த ஒரு மயிர்க்கொட்டியைப் பார்த்து இரக்கம் கொண்டு ஒரு பெண்மணி அதை எடுத்து வீதிக்கு அப்பால் விடப் போன பொழுது விபரீதம் புரிந்திருக்கிறது. மயிர்க்கொட்டி பட்ட இடமெல்லாம் தடித்து உடலில் எரிச்சலைக் கொடுக்க அந்தப் பெண்மணி பயந்து போய் அவசர உதவியை அழைக்கும் நிலைக்குப் போய் விட்டார்.
இப்பொழுது தீயணைக்கும் படையினர் உடலை முழுதாக மறைக்கும் மஞ்சள் உடை அணிந்து மயிர்க்கொட்டிகளைத் தீயைப் பாய்ச்சி அழித்து வருகின்றனர். ஜேர்மனியில் சாக்சன் அன்கல்ற், பயர்ன், பாடன்வூற்றம் பேர்க் ஆகிய மாநிலங்களில் மயிர்க்கொட்டிகள் அதிகம் காணப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். பாடன்வூற்றம் பேர்க் மாநிலத்தில் காட்டுப் பகுதியில் இருக்கும் பாபிகியூ செய்யும் சில இடங்கள் மயிர்க்கொட்டிகளின் தொல்லையால் பாவனைக்குத் தடை செய்யப் பட்டிருக்கின்றன.
தீப்பிடிச்சு தீப்பிடிச்சு என்னை அழிடா என்று மரங்களில் ஒட்டியிருக்கும் மயிர்க்கொட்டிகள் பாடி ஆடாத குறை ஒன்றுதான் மிச்சம். 40 மில்லி மீற்றர் அளவுதான் என்றாலும் மயிர்க் கொட்டிகள் இங்கு இவர்களை பாடாயப் படுத்துகின்றன .
அந்த மயிர்க்கொட்டிகளை நாம் படுத்தும் பாட்டைப் பார்த்தால் சாவதற்கென்றே பிறப்பெடுத்து வருகின்றனவோ என்ற நெருடலான கேள்வி எழுகிறது.
ம்.. இப்ப, வெய்யில் சுள்ளென்று எறிக்கத் தொடங்க மசுக்குட்டி நூல் விட்டு இறங்கிற ஞாபகம் வந்து உடம்பெல்லாம் கடிக்கிறது போலை ஒரு உணர்வு.
15 comments :
மசுக்குட்டி,மயிர்க்கொட்டி இதெல்லாம் என்ன பாஷை?
//தெருவீதியில் இருந்த ஒரு மயிர்க்கொட்டியைப் பார்த்து இரக்கம் கொண்டு ஒரு பெண்மணி அதை எடுத்து வீதிக்கு அப்பால் விடப் போன பொழுது விபரீதம் புரிந்திருக்கிறது.//
ஜயோ பாவம்
மயிர்க்கொட்டி- என்பது நாங்கள் சொல்லும் மொசுக்கட்டை பூச்சியா?
புழு மாதிரி இருக்கும்,பேச்சு வாக்கில் பூச்சி என்று சொல்வோம்.
ஒண்ணும் புரியாதவன்
மசுக்குட்டி பேச்சுத்தமிழ்
மயிர்க்கொட்டி தான் சரியான சொல்.
இதெல்லாம் என்ன பாஷை என்று கேட்குமளவுக்கு இந்தச் சொல் இல்லை.
ஆமி, ஷெல்... எனறு வந்து எம்மைப் பயமுறுத்தத் தொடங்கிய காலத்துக்கு முன் இருந்தே
பேய், பிசாசுகளையும் விடத் தொல்லை தந்தவை இந்த மசுக்குட்டிகள்
படத்தைப் போடாமல் விட்டது எனது பிழை. முடிந்தால் படத்தையும் சேர்க்கிறேன்.
தர்சன் நன்றி
வடுவூர் குமார்
மொசுக்கட்டைதான் மசுக்குட்டியா என்பது தெரியவில்லை.
ஆனால் மயிர்க்கொட்டி வண்ணாத்திப்பூச்சியின் ஒரு பருவம்
அப்பாடியோவ்! படத்தை போட்டவுடன் தான் குழப்பம் தீர்ந்தது.நன்றி
சிட்னியில் எங்கட வீட்டிலை போனவருஷம் பின் காணியில் இருந்த ஒரு மரத்துக்கு எப்படியோ அழையா விருந்தாளியாக வந்து குடும்பக்கட்டுப்பாடு இல்லாமல் பெருகி அடுத்த விட்டுக்காரனுக்கும் தொந்தரவு கொடுத்துக் கடைசியில தோட்டக்காரனைக் கூப்பீட்டு எல்லா மரத்தையும் பிடிங்கி எறிஞ்சம். பொல்லாத ஜந்து இது
சந்திரவதனா!
இதைப்பற்றி ஒரு பதிவு "அழகின் ஜனனம்" எனப்போட்டேன்.இங்கும் அதற்குரிய பருவகாலத்தில் சிலவருடங்களாக இதன் தொல்லைகள் காட்டுப்பகுதியில் இருந்ததாகக் செய்தியில் காட்டினார்கள்.
ஆனால் 14 நாட்களில் அது வண்ணத்துப் பூச்சியாகிவிடுமென்பதால் அழிக்கவில்லை.
ஊரில் பட்டால் பட்ட இடம் தடிக்கும்; பூவரசங்குழையால் அந்த இடத்தில் தேய்துவிட்டால்; அது மாறிவிடும். இப்படி வைத்தியசாலைக்கெல்லாம் அலைவதில்லை;
ஆம் இவர்கள் நுளம்பு, மூட்டைக்கடிக்கே வைத்தியரைப் பார்ப்பவர்கள்.
நமக்கு அவை வாழ்வின் ஓர் அம்சம்.
இது வண்ணத்துப்பூச்சியின் ஒருபருவம். நமது உடலில் பட்டதும் மயிரைக் கொட்டுவதால்; காரணப்பெயர்
"மயிர்க்கொட்டி"... அது பேச்சில் மருவி "மசுக்குட்டி" ஆனது.
இதில் ஒரு வகை கறுப்பு நிறத்தில் "கம்பளி மயிர்க் கொட்டி" என்பார்கள். அளவில் பெரியது சுமார் 3 அங்குல நீளம் இருக்கும்.
அது பெரிய கறுப்பு மஞ்சள் வண்ணத்திப்பூச்சியாகும்.நீங்கள் கண்டிருக்கலாம்.
இது செண்பகத்தில் பிரியமான உணவு.
வடுவூர்குமார்
மயிர்கொட்டியைத்தான் மொசுக்கட்டை என்கிறீர்களா?
கானாபிரபா
மரங்களை வெட்டி எறிய வேண்டி வந்ததின் வேதனை உங்கள் எழுத்தில் தெரிகிறது.
வளர்த்த மரங்களை வெட்டி எறிவது எத்துணை கவலையானது என்பதும் எனக்குத் தெரியும்.
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி யோகன்.
சின்ன வயதிலேயே மயிர்க்கொட்டி வண்ணாத்திப்பூச்சியாவதும் வண்ணாத்திப்பூச்சி மீண்டும் மயிர்க்கொட்டியாவதையும் படித்தேன். ஆனாலும் மயிர்க்கொட்டியோடு வாழ முடியவில்லையே. வாழ்வது சில நாட்களேயானாலும் அந்த சில நாட்களுக்குள் வீட்டுக்குள் எப்படியோ வந்து எங்களைத் தொல்லைப் படுத்தியிருக்கின்றன. பொதுவாகவே புழுக்கள் என்றால் பயம் எனக்கு.
இதை எழுதும் போது கூட எனது உடலில் ஒரு வித பயத்தின் சிலிர்ப்பு. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.
ஊரிலே மயிர்க்கொட்டி நூல் விட்டு இறங்கும் என்ற பயத்திலேயே மரங்கள் நிற்கும் இடங்களைத் தவிர்த்திருக்கிறேன். எப்படித்தான் தவிர்த்தாலும் எப்படியோ எம்மீது தொத்தி விடுகின்றன.
எங்கள் வீட்டுச் சுவர் மிகவும் உயரமானது. அதிலே அதி உயரத்தில் கம்பளி மசுக்குட்டிகள் வந்து நிற்பதுண்டு. ஓட்டில் கூட ஒட்டிக் கொண்டு நிற்பதுண்டு. அதை அப்புறப் படுத்தும் வரை யாருக்கும் வீட்டில் நித்திரை வராது.
நூல் விட்டு இறங்குவது கூடுதலாக வெள்ளை மயிர்க்கொட்டிகளே.
http://nirmalaa.blogspot.com/2007/06/blog-post.html
ஒரு அழைப்பு விடுத்திருக்கிறேன் சந்திரா. குறிப்பிட்டதில் ஆட்சேபனை இருக்காது என்று நம்புகிறேன். நன்றி.
நன்றி நிர்மலா.
சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் நான் சாதிக்கவில்லை.
அதனால் என்ன எழுதுவதென்றும் தெரியவில்லை.
எழுத முடியுமா எனப் பார்க்கிறேன்.
iooo kadekuthu.
முசுக்கொட்டை மரத்தின் இலைகள்தான் இதற்கு உணவு..பட்டுப்புழுக்களாய் பரிணமிக்கும்..
கம்பளிப்பூச்சி என்றும் சொல்வதுண்டு..
தகவலுக்கு நன்றி தமிழ் வாலிபன்.
Post a Comment