
ஆற்றொழுக்கில் நின்ற அழுத விழிகளோடு...
...நண்பனே
இதற்கு முன் நான்
யாத்து வந்த கவிதைகளை
யான் படிக்க
உன் வீட்டில்
பூத்த முகத்தோடு
கேட்டு தலையசைப்பாய்-இன்று
யாத்து வந்தேன்
கவிதை உனக்காக-உயிர்
நீத்த உடலாய்-இங்கு
நிமிர்ந்து கிடக்கிறது.
கேட்கிறதா என் கவிதை?
பாத் தொடுக்க முடியாமல்
பதறிடுது என் நாக்கு
வற்றாப்பளையூர் தீட்சண்யா-நின்
வாய் மூடி விட்டதய்யா-இன்று
பற்றறுத்து விட்டு
பயணிக்கத் தொடங்கிவிட்டாய்
பந்தம் அறுத்து பாசம் அறுத்து
சொந்தம் விடுத்து சொர்க்கப் பிரவேசமா?...
...ஆற்றொழுக்கில் நின்ற என் அழுத விழிகளிலே
கவிதை விரல் கொண்டென் கண்ணீரைத் துடைத்தவனே
இன்று உனக்காய்
கவிதை வரி தீட்டிக் கண் கலங்கி அழவைத்தாய்
ஆற்றும் வகையறியேன்-உன்னவளை, பிள்ளைகளை
தேற்றும் வகையறியேன்-நீயோ
கூற்றுவன் மாளிகையில் குடியிருக்கப் போனாயே தீட்சண்யா!..."
என்று என் அண்ணன் தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்தில் கவி பாடி வழியனுப்பி வைத்தாய்.
இன்று, நீ மறைந்த சேதியில்...
கவியேதும் எழுத வார்த்தையின்றி..
நான்