Wednesday, June 28, 2006

தமிழ்சினிமா தமிழ்ப் பெண்களைக் கேவலப் படுத்துகிறது

இயக்குனர் மகேந்திரனுடனான சந்திப்பில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள்

நா. கதிர்வேலன்

துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.

திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து 1996என்ற அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவை எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 1996ன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோதுதான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.

சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள். அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம். சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.

அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது. என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தார் தலைவர். உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.

நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்?. உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம். ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப் படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்... யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.

நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.

கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார். விமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது, சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.

Quelle - Kumutham-June-2006

Friday, June 16, 2006

PLEASE, STOP THE HUMAN RIGHTS VIOLATIONS

BY THE SRI LANKAN GOVERNMENT

இலங்கையில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தமிழர்கள் மேலான தாக்குதலை நிறுத்தக்கோரி UN க்கு இந்த online petition அனுப்பப்படுகிறது. முடிந்த அளவு இதை நண்பர்களுக்கு அனுப்பி கையெழுத்து பெற உதவவும். நன்றி.

http://www.petitiononline.com/UN061506/petition.html

Friday, June 09, 2006

கன்பரா கண் விழிக்குமா?

தெ.நித்தியகீர்த்தி

அல்லைப்பிட்டி நெஞ்சிலே அனலைக் கொட்டிவிட்டது. அந்தக் குழந்தையின் பிஞ்சு முகம் மீண்டும், மீண்டும் நெஞ்சக் கதவுகளைத் தட்டி எதையோ கேட்கின்றது. பேச முடியாத சிறுவர்களுக்காகப் பேசுங்கள். “அப்பாவி மக்களின் அநியாயச் சாவிலே கொக்கரிக்கும் கொடூர சிறிலங்காவின் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுங்கள்” என்று இரத்த வெள்ளத்தில் இருந்த அந்தக் குடும்பத் தலைவனும், தலைவியும் கதறுவது காதில் ஒலிக்கின்றது. அதனாலோ என்னவோ கன்பராவில் உரிமைக் குரல் ஒலிக்கப் போகின்றது என்று கேள்வியுற்றதும் மெல்பேர்ன் மக்கள் துள்ளி எழுந்தனர்.

பயண ஒழுங்குகள் செய்வதில் ஒரு குழு வேகமாக இயங்க ஆரம்பித்தது. எத்தனை பஸ்கள்? எத்தனை கார்கள்? எத்தனை பேர் வருவார்கள்? தொலை பேசிகள் தொடர்ந்து பேசின. இரவுகள் பகலாகின. பல புதிய நட்புறவுகள் உருவாகின. நான் முந்தி, நீ முந்தி என்று உதவுவதற்குப் பலர். எப்படியும் போக வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொருவருக்கும். பலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆவலோடு ஆட்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மாறி மாறி வரும் தொலை பேசி அழைப்புகளில் தடுமாறி நின்றார்கள்.

“ அண்ணை பஸ்ஸில இடமில்லை. உங்கடைக் காரைக் கொண்டு வாரீங்களோ? உங்களோட இன்னும் நாலு பேர் வருவீனம்.” உரிமையோடு கேட்கும் குரல்கள்.

பலர் வருகின்றார்கள் என்றதும் மகிழ்வோடு மறுக்காது ஏற்றுக் கொண்டு, “ முருகா, டயரும் செக் பண்ணல்லை. வழியில ஏதும் நடக்கக் சுடாது” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார்கள். நட்ட நடுநிசியில், டயர் வெடித்த போது கொட்டும் பனியில் கை விறைக்க இன்னொரு வழுக்கல் டயரை மாற்றி, புன்முறுவலோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

“தம்பி நானும் வர வேணுமடா”

“அப்பா, 700 கிலோ மீட்டரப்பா. உங்களால அவ்வளவு தூரம் இருக்க ஏலாது”

“அப்பா இல்லே சொல்லுறார். கூட்டிக் கொண்டு போவன்.” அம்மா கண்டிப் போடு சொல்லி, மெதுவாக “ நானும் வாரன்” என்கின்றாள்.

இயலாத வயது. இருவருமே தொடர்ந்து ஒரு இடத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாதவர்கள். மகனால் மறுக்க முடியவில்லை. எழுநூறு கிலோ மீட்டர்களை அரை மணிக்கு ஒரு முறை காரை நிறுத்தி, அவர்களை ஆசுவாசப்படுத்தி ஏற்றிச் செல்கிறான்.

பஸ்ஸில், பிள்ளை அழுகின்றது.

“உமக்குச் சொன்னனான். ஒன்றறை வயசுப் பிள்ளையை இந்தக் குளிருக்குள்ள பஸ்ஸில கூட்டிக் கொண்டு போக ஏலாது என்று கேட்டால்தானே?” கணவன் கடிந்து கொள்கின்றான்.

“ அதுக்கென்னப்பா. அல்லைப்பட்டி பிள்ளைக்காக என்ரை பிள்ளையும் ஒருக்கா அழட்டுமே”

அந்தத் தாயின் வார்த்தையைக் கேட்ட எண்பத்தேழு வயதுப் பெரியவர் குளுசையை வாயில் போட்டுக் கொண்டு, ‘இந்தப் பிள்ளைக்கு இவ்வளவு துணிவென்றால், நான் கிழடு பஸ்ஸில செத்தால்தான் என்ன’ என்று எண்ணுகின்றார். ஆனாலும் கன்பரா சென்று எங்கள் ஈழ மக்களுக்காகக் கத்தி விட்டுத்தான் சாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கின்றார். தங்கள் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையை கட்டுப்படுத்த முடியாது பேரூந்தில் ஏறிக் கொண்ட அவர் வயதுக்காரர்கள், அடிக்கடி பேரூந்தை நிறுத்த முடியாது சலத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

இரவு 12 மணி. தொலை பேசி ஒலிக்கின்றது.

“என்னடி நித்திரை கொள்ளயில்லையே”

“எல்லாரும் கன்பராவுக்குப் போகீனம்.”

“ஓமடியப்பா எனக்கும் போக வேணும் போல இருக்கு. இந்த மனுசனுக்கு நாளைக்கென்று ஒபிசில கண்டறியாத மீட்டிங்காம்”

“இவரும் ஓவர்சீஸ். எடியே நாங்கள் கார் ஓடிக் கொண்டு போவமே. இன்னும் இரண்டு பேரைக் கேட்பம்”

“நல்ல ஜடியா”

நாலு பெண்கள் இரவு, இல்லை காலை 2.30 மணிக்குப் புறப்பட்டு காரில் 700 கிலோ மீற்றர்கள் ஓடி கன்பராவை பகல் 10 மணிக்கு அடைகின்றார்கள். காலைக் கடனை பாராளுமன்ற கார்ப் பார்க்கில் இருந்த லேடீசில் முடித்து விட்டு விழிப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றார்கள்.

கன்பராவில் தேனீக்கள் போல் எங்கள் தமிழ் அன்பர்களில் வாகனங்கள் அங்குமிங்கும் ஓடுகின்றன. மெல்பேர்ன், பிரிஸ்பேர்னில் இருந்து வந்த நூற்றுக் கணக்கானவர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவுகளைத் தாராளமாகத் திறந்து புன்னகை பூத்த முகத்தோடு வரவேற்ற அந்த நல்ல உள்ளங்களில் தமிழரின் விருந்தோம்பல் பொங்கி வழிந்தது. இடியப்பம், சொதி, முட்டைப் பொரியல், கிழங்குக் கறி என்று அத்தனை பேருக்கும் அங்கே விருந்து. அது மட்டுமா மதிய போசனத்துக்கு உணவுப் பொதி வேறு.

பாராளுமன்ற முன்னிலை. புற்றீசல் போல் திரண்டு வருகின்றது புலம் பெயர்ந்த தமிழர் படை. கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், கைலாகு கொடுத்து நடக்கும் வயோதிபர்கள், துடிப்போடு நிற்கும் இள வயதினர்.. அப்பபப்பா என்ன காட்சி? தமிழ்ப் பேரலை பாராளுமன்றத்தை மோதி நின்றது. சிட்னியில் இருந்து தொடர்ந்து வரும் பேரூந்துகள் வரிசையாக வரும் எறும்புகள் போல் வந்து கொண்டிருந்தன. அல்லைப்பிட்டி கொடூரக் கொலையைச் சித்தரித்து அண்ணாவியார் இளையபத்மநாதன் அமைத்திருந்தது வெறும் காட்சிப் பொருளல்ல. உலகத்தின் மனச் சாட்சியை உலுக்கும் கேள்வி. சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு மறுக்க முடியாத சாட்சி. இன்பத்தமிழொலி முதல் சிகரம் தொலைக்காட்சி வரை ஓடியோடி செய்தி சேர்க்கும் ஊடகவியலாளர் சுறுசுறுப்பாக இயங்குகின்றார்கள்.

“ கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே”

ஆழிப் பேரலை எழுப்பிய ஓசை போல் தமிழர் குரல் பாராளுமன்ற உயர்ந்த சுவர்களில் முட்டி மோதியது. உணர்வு வெள்ளத்திலே அள்ளுண்ட அந்த மக்களின் குரல் மகேசன் காதிலும் விழுந்திருக்கும். அவன் தோடுடைய செவியன் அல்லவா? இரும்பாகிவிட்ட மேலை நாட்டு ஆளும் அரசியல்வாதிகளின் செவிகளில் விழுந்ததா? பல பாராளுமன்ற உறுப்பினர் தமிழருக்காக மனமுருகிக் குரல் கொடுத்தார்கள். அவர்களுள் டொன் மேபி மனதில் நிறைந்தார். தமிழருக்கு தனி நாடே தீர்வு என்று பேசிய பிறையன் செனிவிரத்தனா அவர்களைச் செவிமடுத்த என்னருகில் இருந்த நண்பர்,

“தமிழீழம் கிடைத்ததும் இவரை நாங்கள் ஓர் அமைச்சர் ஆக்க வேண்டும் ” என்றார்.

கத்திக் கத்தி அனா பரராஜசிங்கத்தின் குரல் அடங்கினாலும் குமுறல் அடங்கவில்லை.

“இது ஒரு சனநாயக நாடு. இங்கே எங்கள் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது குற்றமல்ல. கொடுக்காமல் இருப்பதே தமிழருக்கு இழைக்கப்படும் குற்றம்” என்று ஒரு குட்டிப் பெண் அழகான ஆங்கிலத்தில் உணர்ச்சி பொங்க பேசிய போது, ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் அவள் தாயை நினைத்துக் கொண்டேன்.

தொண்டை வறண்டு போகும் வேளையில் தாகந் தீர்க்க ஒரு தண்ணீர்ப் பந்தலே அங்கிருந்தது. பசி தீர்க்க உணவு. தேடித் தேடி வந்து எங்களுக்குத் தந்துதவிய தொண்டர்களை நன்றியோடு நோக்கினோம்.

மடை திறந்த வெள்ளம் போல், தமிழர் மீது சுமத்தப்பட்ட தடை உடைக்கப் புறப்பட்ட தமிழர் படை பல செய்திகளைக் கூறியது. உணர்வால் நாம் ஒன்று பட்டவர்கள். தமிழரின் உரிமைக் குரலைத் தடைகளால் நசுக்கி விட முடியாது. தமிழர் போரை வலிந்து ஏற்றவர் அல்ல. தங்கள் தற்காப்புக்காக, தமது மனித உரிமைகளைப் பேண ஆயுதம் தூக்கியவர்கள். தற்கொடை அவர்கள் தற்காப்பின் உயரிய தியாகம். நம்மை ஆண்டு, எங்களுக்கு அடிமை சாசனம் எழுதி அதை சிறிலங்காவின் கையில் கொடுத்த கொலொனிய மேற்கத்தைய நாட்டு ஆட்சியாளர், மீண்டும் நம் உரிமைகளைப் பறிக்க இன வெறி கொண்ட அரசுக்கு உதவ முன் வந்தால், அதை எதிர்த்து குரல் கொடுக்க புலம் பெயர்ந்த தமிழர் தயங்க மாட்டார்கள். சிறிலங்காவின் அரசியல் படுகொலைகளையும், அரச பயங்கரவாதத்தையும் தடுத்து நிறுத்த முடியாத மேற்கத்தைய நாடுகள், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்குப் பயங்கரவாத வண்ணம் பூசுவது அவர்கள் இயலாமையா? அல்லது தமது சர்வதேச அரசியல், பொருளாதார இலாபங்களுக்காக ஓர் இனத்திற்கு அடிமை சாசனம் எழுத உதவுகின்றார்களா?

ஒரு திரை இசைப் பாடல் நினைவு வருகின்றது.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை”

அலைகடல் போல் கன்பராவில் கூடிய மக்களின் செய்தி இதுவே. யார் தடுத்தாலும் தமிழினம் தன் விடுதலை பெற்றே தீரும்.

மெல்பேர்னில் தொடர்ந்து நடந்த பகிரங்கக் கண்டனக் கூட்டத்திற்கு என்றுமில்லாத அளவில் திரண்ட மக்களின் செய்தி மேலும் அதை உறுதிப்படுத்தியது.

Tuesday, June 06, 2006

புதிய பூ

எங்கள் குடும்பத்தில் இன்று ஒரு புதிய பூ பூத்திருக்கிறது.
சிந்து, நதியுடன் நிலாவும் சேர்ந்திருக்கிறாள்.

Sinthu & Nila

Nathi

Monday, June 05, 2006

அமெரிக்காவுக்குத் தெரியுமா இந்த வலி

உலகத்தில் பயங்கரவாதங்களைப் பட்டியலிடும் அமெரிக்கா தனது பயங்கரவாதத்தைப் பற்றி மூச். என்னதான் மறைக்க முயன்றாலும் சமீபகாலமாக பத்திரிகைகள் அமெரிக்க இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஈராக்கைச் சேர்ந்த இமான் வலிட் என்ற ஒன்பது வயது சிறுமியின் பேட்டியே முதலிடம் பெறுகின்றது.

மேற்கு ஈராக்கில் உள்ள ஹடீத்தா என்ற நகரத்தில் 2005 நவம்பர் 19ம் திகதி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 24பேர்களை அமெரிக்க இராணுவம் அநியாயமாகச் சுட்டுக் கொன்றது. இந்த நிகழ்வை நேரடியாகப் பார்த்த இமான் வலிட்டின் பேட்டியே தற்போது முக்கிய செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. இந்த பயங்கரமான அமெரிக்க இராணுவத்தின் வெறியாட்டத்தில் இமான் வலிட் தனது தாய் தந்தை உட்பட ஏழு உறவினர்களை இழந்திருக்கிறாள்.

தனது தந்தையைக் கொலை செய்த இராணுவத்தினர் அவரது உடலை முற்றாக எரியுமாறு செய்து விட்டுத் தாயைக் கொலை செய்யும் போது அந்தக் காட்சியைக் காண முடியாது தானும் தனது தம்பியும் தலையணைகளால் தமது முகத்தை மூடிக் கொண்டதாகச் சொல்லும், இந்த அனர்த்தத்தில் இருந்து தப்பிக் கொண்ட இமான் வலிட் "நாங்கள் அனுபவிக்கும் எங்களது மனவலிகளை எங்களைப் போன்று அமெரிக்கர்களுக்கும் உணர்த்த வேண்டும் " என்று கூறியிருக்கிறாள். ஒரு சிறுமி துணிந்து கமராவிற்கு முன்னால் இப்படி பேட்டி தருகிறாள் என்றால் எந்தளவுக்கு அவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் என்பது புரிகிறது.

அமெரிக்காவே பயங்கரவாதப் பட்டியல் தயாரிப்பதால் ஒரு போதும் அதன் பெயர் அதில் வராது.

Sunday, June 04, 2006

கவிஞர் சோதியாவுக்கு நோர்வே மாநகர சபை விருது

நோர்வே அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட்டத்தின் கல்விப்பணி மேலாளரும் கவிஞருமான சோதியாவுக்கு நோர்வே மாநகர சபையின் சிறந்த சமூகச் செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் வாழும் தமிழர் ஒருவருக்கு முதன்முறையாக சிறந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கலைப்படைப்பாளிக்குரிய விருது நோர்வே அரச நிர்வாகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தின் கல்விப்பணி மேலாளரும் கவிஞருமானவர் சிவதாஸ் சிவபாலசிங்கம் (கவிஞர் சோதியா என்றும் அறியப்பட்டவர்). மேலதிக விபரங்களுக்கு

சோதியாவின் கவிதை ஒன்று
முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில்

அழகு...

மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நின்றான்.

அழகு அவன்
விழிகளிலா..!
மொழி மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!

சிரிக்கக் கூடாதென உதட்டை
விரிக்காதிருந்தாலும்
விழிகளில் அது வழிந்தது.

பார்க்கக் கூடாதென விழியைச்
சுருக்கியிருந்தாலும்
கருமணிகள் கட்டுடைத்து
என் விழியோடு மோதின.

இவனோடு பேசாது போனால்
எனக்குப்
பேசத் தெரிந்ததில்
என்ன பிரயோசனம்..!

பெயர் என்ன...?

விழி விரித்து
இதழ் உடைத்து
மௌனம் கலைத்தான்.

பெயர் கூட அழகுதான்.
படமெடுக்க அனுமதிப்பானா..?

அனுமதியின்றி....
அவசரமாய்....
குறை நினைப்பானா..?

இப்போ.......
மனத்திரையில் அவன் வந்து
மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நிற்கிறான்.

அழகு அவன்
விழிகளிலா..!
மொழிய மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!

சந்திரவதனா
october-2002

Saturday, June 03, 2006

நட்பு

எனக்காகச் சிரிக்கவும்
எனக்காக அழவும்
நான் சிரிக்கும் போது என்னோடு சிரிக்கவும்
நான் அழும் போது என் கண்ணீரைப் போக்கவும்
விழும் போது தூக்கி விடவும்
தவறும் போது திருத்தி விடவும்
முக்கியமாக
என்னில் நம்பிக்கை வைக்கவும்
எனக்கு நம்பத்தகுந்தவராகச் செயற்படவும்
ஒரு உறவு இருக்குமேயானால்
அது நட்பு

நட்பு
காதலை விடப் புனிதமானது
சுயநலமற்றது
பொறாமை அறியாதது

நல்ல நட்புக் கிடைப்பது அரிது
கிடைத்து விட்டால் அது ஞாலப் பெரிது.

சந்திரவதனா
1999

Friday, June 02, 2006

மழையை எனக்கும் பிடிக்கும்

என்ன இது? கண் மூடி விழிப்பதற்குள் கொளுத்தி எறிந்த வெயிலில் பளபளத்துக் கொண்டிருந்த நகரில் இருள் சூழ்ந்து கொண்டது. அண்ணாந்து பார்த்தேன். கார்முகிலின் ஊர்வலம். அங்கொன்று இங்கொன்றாய் ஓரிரு மழைத்துளிகள்.

எல்லோரும் பஸ் தரிப்பிடங்களையும், கார் தரிப்பிடங்களையும் நோக்கி விரையத் தொடங்கினார்கள்.

"அந்தக் கடைக்கு இனிப் போகேலாது. நாங்கள் சாதிக்க மாட்டோம். வா போவோம்." சில குழந்தைகளை இழுத்துக் கொண்டு தாய்மார்கள் ஓடினார்கள்.

மழை கொட்டப் போகின்றது என்பதை அவர்கள் திடமாகக் கணித்துக் கொண்டார்கள்.

சில நிமிடங்களில் நகர்வீதி வெறிச்சோடி... பொட் பொட்டென்று பெருந்துளிகளாய் என்னையும் மண்ணையும் தொட்ட மழையில் நான் மட்டும் தனியாக நடந்து கொண்டிருந்தேன்.

தாழ்வாரங்களிலும், கடை வாசல்களிலும் ஒதுங்கியவர்கள் குடை இல்லாமல் நடை போடும் என்னை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மழை எனக்குப் பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

Thursday, June 01, 2006

மதுமிதாவுக்காக

வலைப்பதிவர் பெயர்: சந்திரவதனா

வலைப்பூ பெயர்: மனஓசை
சுட்டி(url) : http://manaosai.blogspot.com/

வலைப்பூ பெயர்: ஈழகானங்கள்
சுட்டி(url) : http://padalkal.blogspot.com/

வலைப்பூ பெயர்: ஈழத்துக் கலைஞர்கள்
சுட்டி(url) : http://kalaignarkal.blogspot.com/

வலைப்பூ பெயர்: காதல்
சுட்டி(url) : http://kathal.blogspot.com/

வலைப்பூ பெயர்: குழந்தைகள்
சுட்டி(url) : http://kulanthaikal.blogspot.com/

வலைப்பூ பெயர்: சாதனை பெண்கள்
சுட்டி(url) : http://vippenn.blogspot.com/

வலைப்பூ பெயர்: சினிமாப் பாடல்கள்
சுட்டி(url) : http://cinemapadalkal.blogspot.com/

வலைப்பூ பெயர்: சிறுகதைகள்
சுட்டி(url) : http://chandravathanaa.blogspot.com/

வலைப்பூ பெயர்: தமிழீழம்
சுட்டி(url) : http://thamileelam.blogspot.com/

வலைப்பூ பெயர்: தாயககீதங்கள்
சுட்டி(url) : http://thayagageetham.blogspot.com/

வலைப்பூ பெயர்: தீட்சண்யம்
சுட்டி(url) : http://theedchanyam.blogspot.com/

வலைப்பூ பெயர்: துணுக்குச் செய்திகள்
சுட்டி(url) : http://seithikal.blogspot.com/

வலைப்பூ பெயர்: படித்தவை
சுட்டி(url) : http://padiththavai.blogspot.com/

வலைப்பூ பெயர்: புகைப்படம்
சுட்டி(url) : http://pukaippadam.blogspot.com/

வலைப்பூ பெயர்: புத்தகம்
சுட்டி(url) : http://thamilbooks.blogspot.com/

வலைப்பூ பெயர்: புனர்வாழ்வு
சுட்டி(url) : http://tronews.blogspot.com/

வலைப்பூ பெயர் : பெண்கள்
சுட்டி(url) : http://pennkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : பெட்டகம்
சுட்டி(url) : http://sammlung.blogspot.com/

வலைப்பூ பெயர்: மகளிர்
சுட்டி(url) : http://mahalir.blogspot.com/

வலைப்பூ பெயர்: மருத்துவம்
சுட்டி(url) : http://maruththuvam.blogspot.com/

வலைப்பூ பெயர்: மாவீரர்கள்
சுட்டி(url) : http://maaveerarkal.blogspot.com/

வலைப்பூ பெயர் : Tagesthemen
சுட்டி(url) : http://thumi.blogspot.com/

ஊர்: ஸ்வெபிஸ்ஹால்

நாடு: ஜேர்மனி

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திரு மாலன் அவர்கள்.

முதல் முதலாக 2003 ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று திரு.மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்தினார். அப்போது இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.

மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.

சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.

அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் மதி கந்தசாமியின் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

அன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.

அந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக
காசி தயாரித்த தமிழ்மணம் தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்றது. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது
.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 27.7.2003

இது எத்தனையாவது பதிவு: மனஓசையில் 423வது.
எனது எல்லா வலைப்பதிவுகளையும் சேர்த்தால் 1500க்கு மேல்

இப்பதிவின் சுட்டி(url): http://manaosai.blogspot.com/2003_07_27_manaosai_archive.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம். எதை விரும்பினாலும் அதை என்னால் அங்கே பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது. இவைகளோடு இலவசம். சுலபமாக எதையும் இணைக்கக் கூடிய தன்மை.

வலைப்பூவின் அறிமுகம் வித்தியாசமானதாகவே இருந்தது.

சந்தித்த அனுபவங்கள்: சந்தோசமான அனுபவங்களே.
வலைப்பூக்களின் அறிமுகமும், அதனாலான அனுபவங்களும் உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய சமாச்சாரங்களாகவே இருந்தன. இன்னும் இருக்கின்றன. பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வரவும், சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கிறது.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து தரிசிக்க முடிகிற திருப்தி ஏற்படுகிறது.

பெற்ற நண்பர்கள்: பல இனிய நண்பர்கள்.
முகம் தெரியா விட்டாலும், தமது சந்தோசங்களையும், ரசனைகளையும் அவ்வப்போது என்னோடும் பகிர்ந்து, என்னைச் சந்தோசப் படுத்துவது மட்டுமல்லாமல், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தாமாகவே ஓடி வந்து உதவ முனையும் நல்ல உறவுகள்.

கற்றவை: நிறைய. கல்லாதவை அதையும் விட அதிகம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: தாராளமான சுதந்திரம்

இனி செய்ய நினைப்பவை: நினைப்பது எல்லாவற்றையும் செய்து விட முடிவதில்லை. அதனால் செய்தால், அதன் பின் சொல்கிறேன்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பருத்தித்துறையில் ஆத்தியடி என் பிறப்பிடம்.தியாகராஜா சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் நான் இரண்டாவது. பெண்களுள் மூத்தவள். கற்றது வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில்.

கணிதமும் கல்வியும் என்னோடு நன்றாகவே இசைந்திருந்தாலும் காதலும், கல்யாணமும் அந்த வயதில் இன்னும் இசைவாக இருந்தன. அதன் சின்னமாய் என் சந்தோசங்களாய் திலீபன், தீபா, துமிலன் என மூவர். அவர்களிடமிருந்து அதி அற்புத பரிசுகளாய் சிந்துவும், நதியும் என் பேத்திகள்.

என் பெற்றோர்கள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதனால் நிறைய வாசிக்கிறேன்.

மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. கோபங்களையும் குமுறல்களையும் மட்டுமல்ல என்னைச் சுற்றியுள்ள உண்மைகளையும் எனது எண்ணங்களையும் கூட எழுத்தால் கூறுவது எனக்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. அநியாயங்களையும் அக்கிரமங்களையும் மென்று விழுங்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட எழுத்து உதவுகிறது. அதனால் எழுத வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் எழுதுகிறேன்.

தஞ்சம் என்று வந்த போது என்னைத் தாங்கிய நான் 20 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற யேர்மனியின் ஸ்வெபிஸ்ஹால் நகரையும் அங்கு வாழ் மக்களையும் எனது தாயகத்துக்கு அடுத்த படியாக நேசிக்கிறேன்.

என்னிடம் மனிதநேயமும் மனதில் பாசமும் நிறையவே உண்டு. கலைகளில் ஆர்வமும் கலைஞர்களில் மதிப்பும் உண்டு. மண்ணுக்காய் தம் இன்னுயிரை ஈந்த அந்த மான மறவர்களை மனதாரப் பூசிக்கிறேன்.

அநீதி கண்டால் எந்தளவுக்குக் கொதித்துப் போகிறேனோ அதையும் விட அதிகமாக அன்பு எந்த வடிவில் கிடைத்தாலும் அடிமையாகிப் போகிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
யாருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்.

காசி தயாரித்த தமிழ்மணம் தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்றது. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite