
மேற்கு ஈராக்கில் உள்ள ஹடீத்தா என்ற நகரத்தில் 2005 நவம்பர் 19ம் திகதி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 24பேர்களை அமெரிக்க இராணுவம் அநியாயமாகச் சுட்டுக் கொன்றது. இந்த நிகழ்வை நேரடியாகப் பார்த்த இமான் வலிட்டின் பேட்டியே தற்போது முக்கிய செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. இந்த பயங்கரமான அமெரிக்க இராணுவத்தின் வெறியாட்டத்தில் இமான் வலிட் தனது தாய் தந்தை உட்பட ஏழு உறவினர்களை இழந்திருக்கிறாள்.
தனது தந்தையைக் கொலை செய்த இராணுவத்தினர் அவரது உடலை முற்றாக எரியுமாறு செய்து விட்டுத் தாயைக் கொலை செய்யும் போது அந்தக் காட்சியைக் காண முடியாது தானும் தனது தம்பியும் தலையணைகளால் தமது முகத்தை மூடிக் கொண்டதாகச் சொல்லும், இந்த அனர்த்தத்தில் இருந்து தப்பிக் கொண்ட இமான் வலிட் "நாங்கள் அனுபவிக்கும் எங்களது மனவலிகளை எங்களைப் போன்று அமெரிக்கர்களுக்கும் உணர்த்த வேண்டும் " என்று கூறியிருக்கிறாள். ஒரு சிறுமி துணிந்து கமராவிற்கு முன்னால் இப்படி பேட்டி தருகிறாள் என்றால் எந்தளவுக்கு அவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் என்பது புரிகிறது.
அமெரிக்காவே பயங்கரவாதப் பட்டியல் தயாரிப்பதால் ஒரு போதும் அதன் பெயர் அதில் வராது.
6 comments :
சந்திரவதனா உலகபயங்கரவாதியாக இன்றைக்கு ஜார்ஜ் புஷ்ஷூம், அமெரிக்க அரசும்தான் இருக்கிறது. இது உலகத் தொழிலாளி வர்க்க - ஜனநாயக இயக்கங்களின் குரல். ஜார்ஜ் புஷ் என்னதான் பசுவேடமிட்டாலும், அது அரக்கத்தனமான வெறிகொண்ட புலிதான். இந்த ஏகாதிபத்திய வெறியாட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்திட உலகம் முழுவதும் உள்ள படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை மிக வலுவாக கட்டியமைத்திட வேண்டும். நம்முடைய இணையமும் இதற்கு இணைப்புகளை உண்டாக்கட்டும். தமிழ்மணம் இந்த ஒரு விஷயத்திற்காகவே கடும் எதிர்ப்பினை தமிழ் அறிவுலகம் தெரிவித்திட வேண்டும் என்று விழைகிறேன். அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதச் செயலுக்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி சந்திரவதனா,
அமெரிக்காவின் அராஜகங்கள அவ்வப்போது ஊடகங்களில் வந்து கொண்டுதான் இருகின்றன. உலக பயங்கராவாதி அமெரிக்காவா அல்லது இஸ்ரேலா என்று பட்டி மன்றம் ஒருபக்கம் நடந்து கொண்டாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிம் கொ.ப.செ க்கள் தமிழ்மணத்தில் அதிகம் உள்ளதை "சந்திப்பு" அறியவில்லை போலும்.
இறைத்தூதர்கள் வாழ்ந்த பூமி என்பதால் அரேபியாவின் மீது சில முஸ்லிம்களுக்கு பாசம் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் இனித்துக் கிடப்பது அவர்களால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதன்றி வேறென்னவாக் இருக்கும்?
இது மிகவும் வேதனைக்கும் வருத்ததிற்கும் உரிய செயலாகும். இந்திய அரசு இதனை வன்மையாக கண்டிக்கிருக்க வேண்டும். அப்படிச் செய்யாத்து வேதனையை அதிகரிக்கிறது.
மேற்கு ஈராக்கில் நடந்ததை எழுதியிருக்கிறீர்கள் சந்திரவதனா . கடந்த மார்ச் மாதம் தென் ஈராக்கில் இஸாக்கி நகரத்தில் ஐந்து குழந்தைகள் நான்கு பெண்கள் உட்பட பதினொரு பேரை அமெரிக்க இராணுவம் சுட்டுக் கொன்றதை சமீபத்தில் பிபிசி வெளிக் கொணர்ந்ததை அறிந்திருப்பீர்கள். அதையும் உங்கள் கட்டுரையில் சேர்த்திருக்கலாம்.
"நாங்கள் அனுபவிக்கும் எங்களது மனவலிகளை எங்களைப் போன்று அமெரிக்கர்களுக்கும் உணர்த்த வேண்டும் "
இந்தப் பெண்ணின் குமுறலை தீவிரவாதியின் குரல் என்பார்களா?. தீவிரவாதிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். உருவாக்குபவர்கள் ?...
//இந்தப் பெண்ணின் குமுறலை தீவிரவாதியின் குரல் என்பார்களா?. தீவிரவாதிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். உருவாக்குபவர்கள் ?...//
யோசிக்க வேண்டிய, மிக மிக முக்கியமான கேள்வி..ஆனால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?
Post a Comment