Google+ Followers

Sunday, June 06, 2004

நிதர்சினி


பாரிஸ் நகரில் 12.2.1999 அன்று 12 வயது நிரம்பிய தமிழ்ச்சிறுமி நிதர்சினி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு, படுகொலை செய்யப் பட்டாள். நெஞ்சை உலுக்கிய அந்தக் கொலையைச் செய்தவர்கள் தமிழர்கள்தான். இன்று நினைத்தாலும் மனசு அதிர்கிறது.

வீட்டுக்கு நண்பர்கள் போல வந்து போகும் இரு தமிழர்கள்தான் நிதர்சினியின் அம்மா அப்பா இல்லாத ஒரு பொழுதில் வீட்டினுள் புகுந்து இந்தக் கொடுமையைச் செய்தார்கள். புலம் பெயருமளவுக்கு எம் வாழ்வில் அவலங்கள் நேர்ந்திருக்கும் காலத்தில் இப்படியொரு தகாத காரியத்தை எமது தமிழரே எப்படிச் செய்யத் துணிந்தார்களோ...?

கடந்த 24, 25 ந்திகதிகளில் இவர்களது மேன்முறையீட்டு மனுவை பிரான்சின் வேர்சைல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து, கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞரும், மூளாயைச் சேர்ந்த 37 வயது இளைஞருமாகிய இக் கொலையைச் செய்த இருவருக்கும் பிரான்ஸ் சட்டவிதியில் உள்ள அதிஉயர்ந்த பட்ச தண்டனைக் கோவையான பெர்பியூ சட்டத்தின் கீழ் 22 வருடச் சிறைத்தண்டனை அளிக்க உறுதி செய்துள்ளது..

7 comments :

Muthu said...

இக்கொடூர சம்பவத்தை நம்பவே இயலவில்லை. அதுவும் செயலில் ஈடுபட்டவர்கள் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை அறியும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை .இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களை 22 வருடம் சிறையில் வைத்திருப்பதால் ஆகும் செலவு தேவையான ஒன்றா.. ? இதுபோன்ற செயல்களுக்கு மரணதண்டனை தேவையான ஒன்றுதான்.

இளைஞன் said...

வணக்கம்...
எதற்காக மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று எல்லோரும் கூச்சலிடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. குற்றஞ் செய்தவர்களைக் கொலைசெய்யவேண்டும் என்பதற்கு முதல், குற்றத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கொலை செய்வதே சிறந்தது.

பாலியல் குற்றத்திற்காக 22 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் விடுமுறைக்காலத்தையும் இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

அப்படிப் பார்க்கப் போனால் ஈழத்தில் பல பாலியல் குற்றங்களைச் செய்த இந்திய அமைதிப்படைச் சிப்பாய்களிற்கு மரணதண்டனைக்கும் மேலாக ஏதாவது தண்டனை இருந்தால் அதனைக் கொடுத்திருக்கவேண்டும்.

இந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தான் இன்னமும் மரணதண்டனை என்கின்ற மனித உரிமை மீறல்களைச் செய்கிறார்கள். மரணதண்டனை கொடுப்பதற்கு இவர்கள் யார். அப்படி இவர்கள் மரணதண்டனை கொடுத்தால், இவர்கள் செய்த குற்றத்திற்கு யார் தண்டனை கொடுப்பது. கடவுளே ஒருவனைப் படைத்து, அவனுக்கு சகல வல்லமையும் கொடுத்து, அவனைக் குற்றஞ்செய்ய வைத்து, பிறகு அவதாரம் எடுத்து அவனைக் கொல்வதற்கு இது ஒன்றும் புராணப் பூச்சாண்டிக் கதையல்ல. மனிதம் மதிக்கப்படவேண்டும் என்று பேசப்பட்டு, அதனைச் செயற்படுத்த முனையும் காலம்.

தண்டனை என்பது குற்றவாளியைப் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனைவிடுத்து எதற்கெடுத்தாலும் மரணதண்டனை என்று கூப்பாடு போடுவதை முதலில் நிறுத்தவேண்டும்.

மனிதம் வெல்லட்டும் மனிதரிடை பகை கொல்லட்டும்.

நன்றி

நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்

ஈழநாதன்(Eelanathan) said...

நல்லது இளைஞன்.நல்லதொரு விளக்கத்தைக் கொடுத்துள்ளீர்கள்.மரணதண்டனை பற்றிய எனது பார்வையும் வித்தியாசமானது ஆனாலும் மேலோட்டமாகப் பார்த்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் தான் மரண தண்டனை கொடுக்கின்றார்கள் என்றில்லை இந்த நாடுகளில் கொடுக்க மட்டுமே செய்கிறார்கள் ஆனால் நிறைவேற்றுவதில்லை.ஆனால் உலகில் சட்டதிட்டங்கள் மிகக் கடுமையாகப் பேணப்படும் நாடுகள் என்று பார்த்தீர்களானால் சவூதியும்,சிங்கப்பூரும் அவற்றுள் அடங்கும் இங்கே அதியுச்சபட்சத் தண்டனையான மரணதண்டனைதான் இவை போன்ற குற்றங்களை குறைத்துள்ளன.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கொலையை எடுத்துப்பாருங்கள் அந்த ஒரு கொலை நடந்திருக்காவிட்டால் அந்த உயிர் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொண்டிருக்கும் என்று.அதிகபட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனை கொடுக்கலாம் இந்தியாவிலும் இலங்கையிலும் நடக்கும் ஜனநாயகக் கூத்தால் சுதந்திரதினம் பிறந்ததினம் அது இது என்று இரட்டை ஆயுள் தண்டனையை இரண்டரை வருடங்களில் முடித்துவிட்டு வெளியில் வருகிறார்களே அவர்களை என்ன செய்யலாம் என்கிறீர்கள்?

அதனை விட இப்படிப் பிஞ்சுகளைச் சீரழிப்பவர்கள் கூட ஒருவகையில் மனநோயாளிகள் தான் அவர்கள் செய்த காரியத்துக்காண பின்புலத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் எத்தனை பிஞ்சுகள் சிதைக்கப்படும் எல்லோரும் இப்படி என்று இல்லை நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் மன்னிப்பு இன்னும் நான்கு பேரை செய்தால் என்ன உயிரா போகப்போகுது என்ற துணிவு நிலைக்கு கொண்டுவந்துவிடும் மரணதண்டனை மூலம் குற்றத்தைத் தடுக்க முடியாது குறைக்கலாம்.

இந்திய இராணுவத்துக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள் அப்படிப் பார்த்தால் உலகில் உள்ள அத்தனை நாட்டு இராணுவங்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே விருமாண்டி மாதிரி விவாதம் பண்ணலாம் அதுவரை கோணேஸ்வரிகளுக்கு யார் பதில் சொல்வது?

இளைஞன் said...

பதில் கருத்துக்கு நன்றி ஈழநாதன். மற்றைய உலக நாடுகளின் இராணுவத்தையும் குறிப்பிட்டிருக்கலாம் தான், ஆனர்லும் இந்திய இராணுவம் எம்மோடு சம்பந்தப்பட்டதால் தான் அந்த உதாரணம். அதேபோல் மரணதண்டனை என்பது இன்னும் பல நாடுகளில் உள்ளதுதான். ஆனாலும் இலங்கையும் இந்தியாவும் தான் அதிகம் எம்மோடு சம்பந்தப்பட்டது. அதனால் தான் அவயிரண்டையும் குறிப்பிட்டேன்.

சரி விடயத்திற்கு வருவோம். இப்படிப்பட்ட குற்றங்களைப் புரிபவர்களும் ஒருவகை மனநோயாளிகள் என்று குறிப்பிடுகிறீர்கள். பிறகு எப்படி மனநேயாளிகளுக்கு மரணதண்டனை கொடுப்பது. அவர்களின் மனநோயைக் குணப்படுத்தவேண்டுமேயொழிய அவர்களை அழிப்பது அவசியமற்றது.

இந்தியாவையும் இலங்கையையும் விடுங்கள். அவர்களின் சனநாயக அரசியலையும் விடுங்கள். இவற்றையெல்லாம் ஒருபறம் வைத்துவிட்டு மனிதநேய அடிப்படையில் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒரு கொலை செய்பவனை அது குற்றம் என்று சொல்லிக் குற்றவாளியாக்குகிறோம். அந்தக் குறி்றவாளியை மரணதண்டனை என்கின்ற போர்வையில் அதே குற்றத்தை மீண்டும் நாம் செய்கிறோம். இது எந்த வகையில் நியாயம்?

மன்னிப்புக் கொடுக்கவேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால் மரணதண்டனை தேவையற்றது என்றே சொல்கிறேன். குற்றங்கள் குறைவதற்கு சுமுதாயம் சீர்திருத்தப்படவேண்டுமே ஒழிய, கொடூரமான மரணதண்டனை தீர்வாகாது.

இந்த மரணதண்டனையை இன்னொரு பார்வையிலும் பார்க்கலாம். செய்த குற்றத்திற்காக சில விநாடிகளில் குற்றவாளியைக் கொன்றுவிடலாம். அதோடு அந்தக் கதை முடிந்தது. குற்றவாளியும் தன் தவறை உணர்ந்திருக்க மாட்டார். ஆனால் 22 வருடங்கள் சிறைவாழ்க்கை என்பது, குற்றவாளி தன் தவறுகளை உணர்வதற்கும், அதற்கான தண்டனையை உயிரோடு இருந்து அனுபவிப்பதற்கும் வாய்ப்பாக அமையும்.

என்றோ ஒருநாள் எல்லோரும் மரணிக்கத்தான் போகிறோம், எனவே 10 பாலியல் குற்றங்களையும், 20 கொலைகளையுமு், 30 திருட்டுக்களையும் செய்துவிட்டு அடுத்தமாதமே மரணதண்டனையில் மரணித்தால் என்ன ஆகிவிடப் போகிறது?

நான் முன்னர் குறிப்பிட்டது போல, மரணதண்டனை என்பது குற்றவாளிக்கான தண்டனை அல்ல! அது வெறுமனே பழிவாங்கும் நடவடிக்கையே!

ஒருவருக்கு மரணதண்டனை கொடுப்பதனால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடப் போவதில்லை. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பாடல்வரிகள். உண்மையுங்கூட! குற்றஞ் செய்வதற்கான சூழல் இருக்கும் வரைக்கும் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கும். தவறைத் தவறென்று உணராத வரைக்கும் தவறுகள் நடந்து கொண்டேயிருக்கும்.

ஈழநாதன்(Eelanathan) said...

நல்லது இதையே இன்னொரு கோணத்தில் பாருங்கள் இரட்டை ஆயுள் தண்டனை என்பது 14 x2 =28 வருடங்கள் அதாவது ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கைக் காலத்தில் மூன்றிலொரு பங்கிற்கு மேல் அவன் சிறையில் கழிக்கவேண்டியிருக்கிறது.இக்காலகட்டத்தில் அவன் பெறும் தண்டனை அவன் மனதை மாற்றிவிட்டதாக வைத்துக் கொண்டாலும் வெளியே வந்து அவனால் மீண்டும் ஒரு மனிதனாக வாழ முடியுமா சமூகம் ஏற்றுக் கோல்வது ஏற்றுக்கொள்ளாதது வேறு கதை அதனை விட ஏறத்தாழ 28 வருடங்கள் சிறையில் வாழ்வது என்பது மரணதண்டனையை விட மேலானது.

நீங்கள் சொல்வது போல் இவர்கள் யார் இன்னோர் உயிருக்கு மரணதண்டனை வழங்க என்றால் அதே அவர்கள்தான் ஆயுள் தண்டனையையும் வழங்குகிறார்கள் இன்னொருவன் செய்தது குற்றம் என்று தீர்மானித்து ஆயுள்தண்டனை வழங்க யார் இவர்கள் கடவுள் படைப்பில் அனைவரும் சமம் அப்படியிருக்க கடவுளால் படைக்கப்பட்ட ஒரு உயிரை இன்னொரு உயிர் அழித்துவிட்டுப் போகிறது எனவே கடவுளால் படைக்கப்பட்டவராகிய இன்னொருவன் எப்படி அவனைத் தண்டிக்கலாம்?

இதைவிட தண்டனை வழங்கப்பட்டவன் குடும்பத்தை ஒருகணம் நினைத்துப்பாருங்கள் மரணதண்டனை வழங்கப்பட்டால் ஓரிரு மாதங்கள் அழுவார்கல் பின்னர் மனம்தெளிந்து வாழத்தொடங்கிவிடுவர்.இதுவே 28 வருடம் சிறையிலிருக்கும் ஒருவனால் குடும்பத்துக்கும் பலனில்லை அவனை குடும்பத்தில் ஒருவன் என்று சொல்லிக்கொண்டு வாழவும் முடியாது.

நானும் மரண தண்டனையை தீவிரமாக எதிர்ப்பவன் தான் குணப்படுத்த முடியாத நோயாளிகளை மேலே அனுப்புவதற்கு கருணைக்கொலை என்றொரு நடைமுறை இருக்கிறது இந்த மனநோயாளிகளுக்கும் அதுதான் ஆரம்பகட்டத் தீர்வு இதனைப் பார்த்து மனநோய் வராமல் நிறையப்பேர் தப்புவார்கள் அங்கு கிடைக்கும் இடைவெளியில் மனWஓய்க்காண மருந்தை கண்டுபிடித்துவிடலாம்

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான் ஆனால் திருடனுக்குத் தெரியத்தக்கதாக இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துப்பாருங்கள் திருடனே தானாகத் திருந்துவான்

Anonymous said...

தவறுகளை யார் செய்வது?
தனி மனிதன் கருவி மட்டும்தான்.
காரணம் எது?
தவறுகளுக்கு பொறுப்பு எது?
தனி மனிதனுக்கான தண்டனைகள் தவறுகளை ஒழித்த்விடுமா?
தவறுகள் இல்லாமல் போகவேண்டுமனால் திருத்தத்தை எங்கேயிருந்து தொடங்க வேண்டும்?
இந்த விடயத்தை மேலோட்டமக பார்பதை விட ஆழமாக ஆராய்வதே(சிறப்பாக பாலியல் குற்றங்கள்) ஆரோக்கியமனது என்fஉ நம்புகிறேன்.
இதுபற்றிய வலைக்குறிபு ஒன்றினை இரண்டொரு நாட்களில் என் வலைக்குறிபில் இடுகை செய்கிறேன் முடிந்தல் ஒருமுறை பார்க்கவும்.

மு.மயூரன் maruan.blogspot.com

Chandravathanaa said...

ஒரு சில தமிழர்களின் இது போன்ற செய்ல்களால் வெளிநாட்டவர் மத்தியில் நாம் தலை குனிய வேண்டி ஏற்படுகின்றது.
Suren | Email | Homepage | 06.07.04 - 12:24 am | #

--------------------------------------------------------------------------------

பிரான்ஸில் மரண தண்டனை இல்லை என்று கேள்விப்பட்டேன் இப்படிப்பட்ட மனித மிருகங்களுக்கு மரணதண்டனை தான் சரியாக இருக்கும்
ஈழநாதன் | Email | Homepage | 06.07.04 - 2:05 pm | #

--------------------------------------------------------------------------------

இதற்கு பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் எதுவாக இருக்கின்றன என்பது மிகவும் முக்கியமாக இருக்கும் எனக் கருதுகிறேன். அல்லது நமது மக்களில் உள்ள பாலியியல் பகுத்தறிவில் ஆரோக்கியம் ஆராயப்பட வேண்டியது அவசியம். (சதவீத விதத்தில் கொஞ்சம் என்றாலும் கூட)
John Bosco | Email | Homepage | 06.09.04 - 11:45 pm | #

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite