காணாமற்போகும் பதிவுகள்
தற்போது நேசகுமாருக்கு இப்பிரச்சனை வந்துள்ளது. எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. என்னைப் போல இன்னும் பலருக்கு இருந்தது.
ஒவ்வொன்றாகச் செய்து பார்த்து, ஒரு விடயத்தைக் கண்டு பிடித்தேன். தலைப்பு எப்போதும் சிறிதாக இருக்க வேண்டும். பெரிய தலைப்புகளில் போடப் பட்ட விடயங்கள்தான் காணாமற் போகின்றன.
இது எனதே எனதான கண்டு பிடிப்பு. அதனால் சரியோ! பிழையோ! என்பதை நீங்களும் செய்து பார்த்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் இந்த Title விடயத்தில் நான் கவனமெடுக்கத் தொடங்கிய பின் எனது பதிவில் காணாமற் போவது நின்று விட்டது.
3 comments :
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமென்றே தோன்றுகிறது. என்பதிவும் காணாமல் போனது. பாலாஜி-பாரிதான் இப்படி ஒரு விசயமிருக்கிறது என்று கூறினார். ஆனால், கொடுமை பாருங்கள். என் அடுத்த பதிவு முந்தைய பதிவினை அழித்துவிட்டதால், தொலைந்து போன பதிவினைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நாராயணன்
உங்கள் blogஇன் setting பகுதியில் உள்ள email க்கு உங்களது மின்னஞ்சல்முகவரியொன்றைக் கொடுத்து வையுங்கள். உங்கள் பதிவுகள் எல்லாம் அங்கே சேமிக்கப் படும். இங்கு காணாமற் போனாலும் அங்கு பத்திரமாக இருக்கும். gmail முகவரி என்றால் தாராள இடமும் இருக்கும்.
எல்லாம் நான் பட்டதில் நடைமுறைப் படுத்திய விடயங்கள்தான். எனக்கும் சில பதிவுகள் காணாமற் போய் அதை எவ்வளவு முயற்சித்தும் மீளப் பெற முடியாமற் போன பின்தான் இவைகளைச் செய்தேன்.
கணேசன்
உங்களுக்கு உதவ முடிந்ததில் சந்தோசமே.
Post a Comment