முழுக்க முழுக்க பெண்களின் படைப்புக்களைக் கொண்டு இம்மாதத் திசைகள் இதழ் வெளிவந்துள்ளது. 27 பெண்கள் பங்களித்திருக்கிறார்கள்.
என் பங்காக
அவள்
நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. தொடர்ந்து வாசிக்க
2 comments :
வாழ்த்துக்கள். இந்த யாழ்ப்பாணப்பேச்சு நனவிடைதோய வைக்கிறது. நண்பர்களை மீண்டும் காணும் ஆவலைத்தூண்டுகிறது. கதையின் உண்மை முகத்தில் அறைகிறது. முன்பு ஜெயகாந்தன் எழுதிய மிருகம் என்ற கதை என்னுள் இந்த பாதிப்பை ஏற்படுத்தியது (சகோதர-சகோதரிக்குள் உள்ள உறவென்று நினைக்கிறேன்).
கண்ணன்
கருத்துக்கு நன்றி.
நட்புடன்
சந்திரவதனா
Post a Comment