உதவுங்கள்!
எப்படித் தமிழில் எழுதுவது என்று ஒரு பெண் என்னிடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நான் அப்பெண்ணுக்கு தமிழ் எழுத்துக்களை எங்கிருந்து தரவிறக்கலாம், எப்படி சுரதாவின் செயலியில் விரும்பிய வடிவங்களுக்கு மாற்றலாம் என்பதையெல்லாம் தெரியப் படுத்தினேன். அதற்கான அவரது பதில் அஞ்சலைப் பார்த்த போதுதான் அவருக்கு தமிழில் தட்டுவதே எப்படி என்பது தெரியாமலிருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. சரி அதற்காக ஒரு விளக்கப் படத்தை அனுப்பலாமென்ற கூகிளில் தேடினேன். சரியான எதுவுமே கிடைக்கவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதற்கான முகவரியைத் தந்துதவுங்கள்.
7 comments :
நான் சிலவாரங்களுக்கு முன்னர் இந்த இடங்களிலில் இருந்துதான் தமிழில் தட்டுவதற்கு உதவிகளை பெற்றுக்கொண்டேன், எனினும் நீங்கள் ஒருமுறை பரிசோதித்துப்பார்த்துவிட்டு, உங்கள் முடிவை கூறுங்கள்
1.http://cadgraf.com/Tamil_Typing_tutor.htm
2.http://cadgraf.com/elangomanualhelp.zip
-குமரேஸ்-
மிகவும் நன்றி குமரேஸ்.
பரிசோதித்துப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.
தமிழில் எழுத வேண்டுமெனில் முதலில் தமிழ் தெரிய வேண்டும். Take it easy.
தமிழ் கற்பிக்கவென்றே ஒரு வலைப்பதிவை உருவாக்கினால் என்ன? நான் போன கிழமை முதல் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். முதலாம் வகுப்பிலிருந்து தொடங்குவது போலவே "அ" .."ஆ" வுடனேயே ஆரம்பிக்கலாம், ஆங்கிலத்தில் விளக்கங்களுடன்.(பிறகு தேவையேற்படின் பிரெஞ்சு, ஜேர்மன், இன்ன பிற மொழிகளில் விளக்கங்களை கொடுக்கலாம்.) என்ன நினைக்கிறீங்க? டோண்டு ராகவன் ஒரு மொழி பெயர்ப்பாளர். அவரிடமும் (அவர் விரும்பினால்) உதவி கேட்கலாம்.
அன்புடன் ஷ்ரேயா
தமிழினி
அந்தச் சுட்டியைத் தந்ததற்கு நன்றி.
யாழில் இருந்தது எனக்குத் தெரியும். ஆனாலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது.
மோகன் அழித்து விட்டாரோ என யோசித்தேன்.
ஷ்ரேயா
மிகவும் நல்ல ஐடியா.
உடனேயே தொடங்குங்கள். என்னாலான உதவிகளை நான் செய்கிறேன்.
Post a Comment