Wednesday, April 20, 2005

அழகி


அழகி படத்தை அருமையான படம் என்று எல்லோரும் புகழ்ந்தீர்கள்.
ஒரு படம் அருமையாவதற்கு கரு மட்டும் காரணமல்ல என்றாலும், அதன் கருவை அனேகமான ஆண்கள் எல்லோருமே வரவேற்றீர்கள்.

இப்போது எனது கேள்விகள்
1) தேவயானி தனது பள்ளிப் பருவத்து நட்பையும் காதலையும் மையப் படுத்தி, ஒருவனை வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருந்தால் பார்த்திபனின் நிலைப்பாடு எந்த வகையில் வெளிப்படும்? நீங்கள் அதை எந்த வகையில் வரவேற்பீர்கள்?

2) பார்த்திபனின் நிலையில் நந்திதா இருந்து, பார்த்திபனைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்திருந்தால் நந்திதாவின் கணவர் என்ன செய்திருப்பார்? அல்லது நீங்கள்தான் என்ன சொல்லியிருப்பீர்கள்?

7 comments :

வசந்தன்(Vasanthan) said...

நல்ல கேள்வி.
நான் அழகியை ரசித்தது கதைக்கருவுக்காக அன்று. மாறாக கதை சொல்லப்பட்ட விதம் பிடித்திருந்தது. பாத்திரங்களின் வாழ்க்கை பிடித்திருந்தது. கிராமத்தை அப்பிடியே கண்ணில் கொண்டுவந்திருந்தார் பச்சான். அதைவிட இயன்றவரை வழமையான சினிமா சமரசங்களைத் தவிர்த்திருந்தார். இருந்தும் ஏன்தான் விவேக்கை இடையிலே செருகினாரோ தெரியாது. குருவி கொடைஞ்ச கொய்யாப்பழமும் ஒரு வடு தான்.

ஆய் ஊய் என்று கத்தும் வில்லன்களில்லை. சண்டைகளில்லை. இப்படி நிறைய இருப்பதாலும் நிறைய இல்லாததாலும் பிடித்தது தான் அழகி. முக்கியமாய் நந்திதாதாசும் இளையராஜாவும் இருந்ததால் பிடித்தது அழகி. நெறியாழ்கைத் திறனிற்கு எடுத்துக்காட்டாய்ப் பிடித்தது இப்படம்.

இவற்றைத்தாண்டித்தான் கதையிலே கவனம் போகும். நீங்கள் கேட்டிருப்பது சரி. ஆனால் அவ்வாறு படம் எடுக்கப்பட்டிருந்தால் கதைக்கரு கேள்விக்குள்ளாகி இருக்குமே தவிர பட வெற்றியிலோ ரசனையிலோ எந்த மாற்றமும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

இளைஞன் said...

வணக்கம் சந்திரவதனா அக்கா...
(நீண்ட நாட்களின் பின்பு இளைஞன். நலமாக இருக்கிறீர்களா?)

இன்னும் அந்தளவுக்கு எங்கள் சமூகம் வளர்ச்சியடையவில்லை. ஆண்நிலையிலிருந்து அந்தத் திரைப்படங்கள் ஆண் படைப்பாளிகளால் படைக்கப்பட்டிருக்கின்றன. இதையே நீங்கள் கருதியது போன்று ஒரு திரைப்படத்தை உருவாக்க பெண்படைப்பாளிகள் முன்வருவார்களானால் முன்னேற்றமே.

thamillvaanan said...

பார்த்தீபனின் வீட்டில் நந்திதா இருப்பது (பார்த்தீபனோடு நந்திதா இருப்பது அல்ல ) பற்றிய வினாவுக்கு விடையளிக்க திணறியே அவள் எங்கோ சென்று விட்டதுபோல காட்டினர்கள். அது பார்த்தீபனின் நிலையிலோ அல்லது தேவயானி அந்த நிலையிலோ இருந்தால் கூட யதார்த்தங்கள் அப்படித்தான்.

பார்த்தீபன் செய்தது சரியென்று படம் சொல்லவில்லையே.

இன்னும் மிகவும் நல்ல படமாக இருந்திருக்கும் வசந்தன் சொன்னது போல அந்த பாட்டையும் விவேக்கையும் தவிர்த்திருந்தால்.

Muthu said...

கற்பென்றால் ஆணுக்கும் பெண்ணும் பொதுவில் வைப்போம் என்று பாரதி அரை நூற்றாண்டுக்கு முன்பே சொன்னான். அதற்கு முழுவடிவம் கிடைப்பதன் பெரும்பகுதி பெண்களிடமே உள்ளது.

பங்களாதேசத்தைச் சேர்ந்த தோழி ஒருவருடன் ஒரு விவாதத்தின்போது, ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் ஒரே சமயத்தில் வாழ்வதையும், அதேபோல் பெண் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று நான் கேள்வியெழுப்பியபோது அவர் அதை ஒத்துக்கொள்ளவே இல்லை.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//..ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் ஒரே சமயத்தில் வாழ்வதையும், அதேபோல் பெண் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று நான் கேள்வியெழுப்பியபோது அவர் அதை ஒத்துக்கொள்ளவே இல்லை.//

இலங்கையில் குறிப்பிட்டதொரு பிரதேசத்தில் ஒரு பெண் 2 கணவர்களுடன் வாழும் முறை இருந்தது. (இப்பவும் நடைமுறையில் இருக்கிறதா தெரியவில்லை)

இதிலே கணவர்மார் இருவரும் சகோதரர்களாயிருப்பர்.

Chandravathanaa said...

கருத்துத் தந்த வசந்தன், மதன், இளைஞன், தமிழ்வாணன், செல்வநாயகி, முத்து, செர்யா
அனைவருக்கும் நன்றி.

வசந்தன்
நீங்கள் சொல்வது போல இயல்பான முறையில் படம் எடுக்கப் பட்ட விதம், வழமையான சினிமாப்பாணியை விடுத்த வாழ்வோடு ஒட்டிய தன்மை எல்லாமும்தான் படத்தின் வெற்றிக்குக் காரணிகளாக இருந்தன. ஆனால் நான் கேட்டிருப்பது போல படம் எடுக்கப்பட்டிருந்தால், "பட வெற்றியிலோ ரசனையிலோ மாற்றமிருக்காது" என்ற உங்கள் கூற்றை மதன் போலத்தான் என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது பட வெற்றியைக் கண்டிப்பாகப் பாதித்திருக்கும்.

இளைஞன்
நீண்ட பொழுதுகளின் பின்னான உங்கள் வரவில் மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் சொல்வது போல பெண் படைப்பாளிகள் யாராவது அப்படியொரு படத்தை எடுத்திருந்தால், படம் ஓடுகிறதோ இல்லையோ, படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாவது மட்டும் நடந்திருக்கும்.

தமிழ்வாணன்
நந்திதாதாஸ் அந்தக் குடும்பத்துக்குள் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காகவும், தானும் தவறி விடக் கூடாது என்பதற்காகவும் வேறு இடம் சென்றதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தேவயானி பார்த்திபன் செய்தது போல தனது பால்யகாலத்து நண்பனை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்தால் தேவயானியே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரலாமல்லவா..?

செல்வநாயகி
என்னதான் புரட்சி, புதுமை என்று குரல் கொடுத்தாலும் நடைமுறையில் நீங்கள் சொல்வதுதான் வாஸ்தவமாக இருக்கிறது.

முத்து
இதுதான் யதார்த்தமாக உள்ளது. பெண்களின் விடுதலைக்கோ பெண்களின் முற்போக்குத் தன்மைக்கோ பல சந்தர்ப்பங்களில் ஆண்களை விடப் பெண்களே தடையாகவும் முட்டுக் கட்டைகளாகவும் இருக்கிறார்கள். ஒரு பெண் தவறினால் கூட, அவளைத் திருத்துவதற்கான வழிகளைப் பார்ப்பதை விடுத்து, அவளைத் தூற்றுவதிலேயே பல பெண்கள் நேரத்தைச் செலவழிக்கிறார்கள். இது கூட அடிமைத்தனத்தில் எழுந்த அறியாமை என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்களுக்கும் மெது மெதுவாக விடயங்களை எடுத்துச் சொல்லும் போது அவர்கள் ஒரு காலத்தில் மாறலாம் என்றும் நம்புகிறேன்.

செர்யா
ஒரு பெண் இரு கணவர்களுடன் வாழும் முறை.. அதுவும் இலங்கையில்... எனக்குத் தெரியாது. உங்களுக்கு இது பற்றி கூடிய விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்.

Chandravathanaa said...

திரைளபதையும், பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேரும் ஒன்றாக வாழ்ந்ததாகக் கதை.

இது எந்தளவுக்கு உண்மையானது என்பது யாருக்குத் தெரியும்!

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite