Saturday, May 07, 2005

ஒரு நாளும் இல்லாத திருநாளாய்...


ஒரு நாளும் இல்லாத திருநாளாய் இண்டைக்கு எங்கடை நகரத்திலை சந்திரமுகி படம் ஓடீனம். நான் யேர்மனிக்கு வந்து 19 வருசமாச்சு. இதுவரையிலை ஒரு தமிழ்ப்படம் எங்கடை நகரத்திலை ஓடேல்லை. முந்தநாள்த்தான் ஒரு பெடியன் ரெலிபோன் அடிச்சு "அக்கா சந்திரமுகி படம் ஓடுறம், வாங்கோ அக்கா" என்றான்.

"எங்கை? எந்தத் தியேட்டரிலை?" எண்டெல்லாம் கேட்டுப் போட்டு, "ரிக்கற் என்ன விலை?" எண்டு கேட்டன். "15யூரோ" எண்டான்.

`அவ்வளவு காசோ...! நானும் என்ரை மனுசனும் போறதெண்டால் 30யூரோ வேணும். வீட்டிலை ஏதாவது படம் ரீவியிலை ஓடினால், ஆராவது என்னை ஆய்கினைப் படுத்தி கூப்பிட்டு படத்தைப் பார்க்க வைச்சாலே அரைவாசியிலை நித்திரையாப் போற ஆள் நான். இப்ப 30யூரோ குடுக்கட்டே!

ஓசிப்பேப்பர் ஓசி வலைப்பதிவு... எண்டு கொண்டு திரியிற என்னைப் பற்றி அவையளுக்கு விளங்கேல்லை.` நான் போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன். என்ரை மனுசனும் சொல்லிப் போட்டுது "இது ஊரிலை ஆடு அடிச்சு பங்குக்கு ஆள் சேர்க்கிற மாதிரித்தான்" எண்டு.

ஆனால் என்ரை பிள்ளையள் மட்டும் சொல்லிப் போட்டீனம். "எங்கடை தமிழ்ஆக்கள் படம் போடக்கை, அதுவும் எங்கடை நகரத்திலை போடக்கை, நாங்கள் போகாட்டில் சரியில்லை. அதால நாங்கள் போறம் எண்டு."

"சரி ஏதோ உங்கடை பிரச்சனை" எண்டு விட்டிட்டம்.

பார்த்தால் படம் தொடங்கிற நேரத்துக்கு அரைமணித்தியாலம் முதல்ல பிள்ளையைக் கொண்டு வந்த தந்து, "பேத்தியோடை கொஞ்சுங்கோ" எண்டு சொல்லிப் போட்டு அவை படத்துக் ஓடீட்டினம்.

பேத்தியோடை கொஞ்சிக் கொண்டிருக்கக்கைதான் ஓசியாய் வருகிற ஒரு பேப்பரிலை, சந்திரமுகியைப் பற்றி கனடா நண்பன் லண்டன் நண்பனுக்கு எழுதினது ஞாபகம் வந்தது. அட பேப்பர் வந்து கனநாளாப் போச்சு. இன்னும் அதைப் பற்றி ஒரு வார்த்தை வலைப்பதிவிலை எழுதேல்லை எண்டும் ஞாபகமும் வந்திச்சு.

இனி எழுதியும் என்ன...? அடுத்த பேப்பரே அங்கை லண்டனிலை வந்திட்டுது போலை இருக்கு. எல்லாளன் மறுபடியும் வந்தால் அங்கை பேப்பர் வந்திட்டுது எண்டுதான் அர்த்தம். (இது என்ரை ஒரு கணிப்புத்தான்.) ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. இந்தப் பேப்பரிலை எல்லாளன் எழுதியிருக்கிற கருத்திலை வழமைக்கு மாறா எனக்கும் நிறையவே உடன்பாடு.

எல்லாளன் மாதிரித்தான் எனக்கும். அப்பப்ப தொலைக்காட்சியிலை போற ஏதாவது நாடகங்கள் ஓரிரு நிமிடங்கள் என்ரை கண்ணிலையும் தட்டுப்படும். (ஓசியாய் ஏதாவது ஒளிபரப்பினால் மட்டுந்தான்). அந்த நேரங்களிலையெல்லாம் சடாரென்று தொலைக்காட்சி சணலை மாற்றிப் போடுவன். அவ்வளவு எரிச்சல் வரும் அந்த அழுகுணி நாடகங்களைப் பார்க்க. எந்த யுகத்துக் கதையளையெல்லாம் அவையள் எடுக்கினையோ எனக்குத் தெரியாது.

எங்கடை நாட்டுப் பொம்பிளையள் இந்த நாடகங்களைப் பார்க்கிறதுக்காண்டியே கார்ட் வேண்டி வைச்சிருக்கினமாம். இவையள் எல்லாளன் சொல்லுறது போலை அந்தந்த நாட்டு தொலைக்காட்சிகளில் போற தொடர் நாடகங்களைப் பார்த்தினம் எண்டால் எங்கடை தமிழ் தொலைக்காட்சிகளிலை போற நாடகங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்குது எண்டது விளங்கும். அது மட்டுமே அந்தந்த நாட்டு மொழிகளையும் ஓரளவுக்கேனும் தெரிந்து தமது வேலைகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளவும் முடியும்.

அடுத்து வசந்தனின் நாய்ப்பிறப்புகள் எப்பவோ வலைப்பதிவில் வந்தாலும் நான் ஒரு பேப்பரிலைதான் அதை வாசிச்சனான். நல்ல பதிவு. ஆனாலும் அந்தத் தலைப்புச் சரியோ எண்டு யோசிக்கிறன். அந்த நாய்களுக்குத்தான் எத்தனை வைராக்கியம். உயிரே போனாலும் வாழ்ந்த மண்ணையும் வீட்டையும் விட்டு வர மனமின்றி...

அறுவைப்பக்கத்தில் வழக்கம் போலை அல்வாசிட்டி விஜய் இடம் பிடிச்சிருக்கிறார்.

செல்வநாயகியின் ஆன்மீகம் அழகாகத் தொடர்கிறது.

சந்திரவதனா
7.5.2005

5 comments :

துளசி கோபால் said...

இங்கே எங்க ஊருலேயும் இதுவரை தமிழ்ப்படம் ஏதும் வந்ததேயில்லை! இங்கே எனக்குத்தான்
எப்பவும் ஒரு ஆஃபர் வரும், படம் போடுங்கோ போடுங்கோன்னு. இங்கே ஆக்கள் அதிகம் இல்லாததாலே
ஒரு டிக்கெட் 20 அல்லது 25 டாலர் வச்சாத்தான் நம்ம கையைக் கடிக்காம இருக்கும். இதெல்லாம்
நடக்கற வேலையா?

ஏற்கெனவே மூணு ஹிந்திப் படம் போட்ட அனுபவம் எனக்கிருக்கே! அதுலேயும்
ஒண்ணு 100 நஷ்டம். அடுத்தது 100 டாலர் லாபம்.மற்றது சொன்னா நீங்க நம்பணும்
சரிக்குச் சரியா ஈவனா போட்டது!

நானும் நம்ம லைப்ரரிக்கு வரும்போது பார்க்கலாமுன்னு இருக்கேன்.

( ஆனா நம்ம மூர்த்தி கொடுத்திருந்த இடத்துலே போய் இறக்கி ஓசியிலே பார்த்ததை
யாரிடமும் சொல்லலை. நீங்களும் சொல்லாதீங்கோ!)

என்றும் அன்புடன்,
துளசி.

Chandravathanaa said...

///ஆனா நம்ம மூர்த்தி கொடுத்திருந்த இடத்துலே போய் இறக்கி ஓசியிலே பார்த்ததை
யாரிடமும் சொல்லலை. நீங்களும் சொல்லாதீங்கோ
///

துளசி அப்ப நீங்களும் எனக்குச் சளைத்தவரில்லை.

Muthu said...

சந்திரவதனா,
பேப்பர் பேப்பர் என்று சொல்கிறீர்களே அது என்ன ?, எல்லாளன் , அல்வாசிட்டி விஜய் ஆகியோர் அந்தப் பேப்பரிலும் எழுதுகிறார்களா ?

Muthu said...

///ஆனா நம்ம மூர்த்தி கொடுத்திருந்த இடத்துலே போய் இறக்கி ஓசியிலே பார்த்ததை
யாரிடமும் சொல்லலை. நீங்களும் சொல்லாதீங்கோ///

துளசி அப்ப நீங்களும் எனக்குச் சளைத்தவரில்லை.///

இங்க போஹுமில் சந்திரமுகி தியேட்டருக்கு வந்தது. பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கம்ப்யூட்டரைத் திறந்தால் இணையத்தில் அந்தப் படம் இருந்தது. எனக்குக் கொஞ்சம் வருத்தம், இருந்தாலும் இதுவரை ஜெர்மனியில் தியேட்டரை பார்த்ததில்லை அதனால் மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன்.

ஜெர்மனியில் தியேட்டர் ஒன்றும் சென்னையைவிட வித்தியாசமாய் இல்லை. கிட்டத்தட்ட சென்னை சத்யம் தியேட்டர் மாதிரியே இருக்கிறது. என்ன ஒன்று, பிளாக்கில் டிக்கெட் வாங்கினால்கூட அங்கு 300க்கு மேல் ஆகாது, இங்கு தியேட்டரில் வாங்கினால்கூட 800 ரூபாய்க்கு மேல் ஆகிறது.

இந்தக் காசுக்கு அங்கேயென்றால் தோழ, தோழியர் ஏழெட்டுப் பேருடன் பெப்சி, கோலா, பாப்கார்ன் சகிதம் ஜாலியாகப் பார்த்திருக்கலாம் :-(.

Chandravathanaa said...

முத்து
ஒரு பேப்பர் என்பது லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு இலவசப் பத்திரிகை.
தமிழ் ஆங்கிலம் என்று இரு மொழிகள் ஒரே பேப்பரில் இடம் பிடித்திருப்பது இப்பத்திரிகையின் தனித்துவம். எந்த விதமான வாசிப்பு ரசனை உள்ளவருக்கும் ஏதோ ஒன்றாவது இருக்கக் கூடிய வகையில் பல் வேறு விடயங்கள் இப்பத்திரிகையில் உள்ளன. இதிலே அல்வாசிட்டி எல்லாளன்... மட்டுமல்ல வலைப்பதிபவர்களில் பலரது ஆக்கங்களும் அவ்வப்போது இடம் பிடிக்கின்றன.
எப்போதாவது உங்களது ஆக்கமும் வரலாம். ஒருபேப்பர்தான் பேப்பரின் பெயரே என்றால் ஆசிரியர்; குழுவினர் எந்தளவுக்கு சுவாரஸ்ய சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite