
மீண்டும் ஒரு பெண்குழந்தை இந்தக் கோரத்துக்குப் பலியாகியிருக்கிறது.
6வயதுகள் மட்டுமே நிரம்பிய Ayla, 23.5.2005 அன்று, 37வயதுகள் நிரம்பிய ஒருவரால் கடத்தப் பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறாள். இது நடந்தது Zwickau (Sachsen)இல்.
இக்கொடுஞ்செயலைச் செய்த 37வயதானவர் 1998இல் தனது பெறாமக்கள் இருவருடன் பாலியல் துர்ப்பிரயோகத்தில் ஈடுபட்டதன் காரணமாக இருவருடத் தண்டனை அனுபவித்திருக்கிறார்.
இதே 37வயதானவர் தனது 17வயதில் ஒரு வயதான பெண்ணைக்கத்தியால் குத்தியதற்காக 15வருட தண்டனை பெற்றுள்ளார். ஆனாலும் இளம்வயதினருக்கான சட்டத்தைக் காட்டி தண்டனை பத்து வருடங்களாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.
இப்படியானவர்களுக்கான தண்டனைகளின் கனம் குறைவாக இருப்பதுதான் தவறுகள் தொடர்வதற்கான பெரும் காரணிகளாக இருக்கின்றனவோ?
இப்படியானவர்களை மீண்டும் மீண்டும் சமூகத்தின் மத்தியில் நடமாட விடுவது எத்தகைய பயங்கயரமானது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இருந்தும் சட்டங்கள் இவைக்கு உறுதுணையாகின்றனவே!
3 comments :
சந்திரவதனா,
இங்கேகூட இதுபோல் ஒரு விளம்பரம் பார்த்தேன் இதேபோல். காவல்துறை "Wanted" என நிழற்படத்துடன் நோட்டீஸ் ஒட்டியிருந்தது.
முத்து
இதை இங்கு எழுதிய பின் ஒரு பத்திரிகை வாசிக்கக் கிடைத்தது.
அந்நபர் இக்கொலையச் செய்து விட்டு, ஒரு நேர்காணலுக்குப் போயிருக்கிறார்.
நேர்காணலை முடித்து விட்டு வெளியில வரும்போதூன் பொலிஸ் அவரைக் கைது செய்துள்ளது.
இந் நபருக்கு ஏற்கெனவே 5வயது மகனும் 4மாத மகளும் இருக்கிறார்கள்.
//இந் நபருக்கு ஏற்கெனவே 5வயது மகனும் 4மாத மகளும் இருக்கிறார்கள்//
பிராபகரனுக்கும் அவரது சகோதிரிக்கும் கூடத்தான் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சிறுவர் சிறுமியராக இருக்கும் போழுதேவா விடுதலை போராட்டத்தில் இறக்கி விட்டார் உங்க தலைவர். பாதுகாப்பாத் தானே வைத்து இருக்கிறார். ஊரான் பிள்ளைகளைத்தானே சாக்காட்றிங்க. அது போலத்தான் இதுவும். இதுக்கு நீங்க ரொம்ப அலட்டிகாதிங்க அம்மா.
Post a Comment