7000 இந்தியப் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்
பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியாவில் புதிய சட்டம்
இந்தியப் பெண்கள் தமது குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்திய நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
பெண்கள் மீது அவதூறான வார்த்தைகளை கூறி துன்புறுத்தல், அடித்து துன்புறுத்துதல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய குற்றங்களைப் புரியும் குடும்பத்தினருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனையை இந்தச் சட்டம் வழங்குகிறது.
பெண்களிடம் அல்லது அவர்களது உறவினர்களிடன் சட்டவிரோதமாக வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தில் பெண்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படல் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுவதாக மனித உரிமை இயக்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
சொந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் வருடாந்தம் சுமார் 7000 பெண்கள் வரதட்சினை பற்றிய தகறாறுகளால் கொலை செய்யப்படுவதாக அனைத்துலக அபய நிறுவனம் கூறுகிறது.
thagaval-bbctamil
4 comments :
நேற்று இதைப் பதிந்த போது நீளமான தலைப்புடன் பதிந்து விட்டேன். அதனால்
நேற்றைய பதிவு வெளியே தற்காலிகமாகத் தெரிந்தாலும் மேற்கொண்டு தெரியாத விதமாகக் காணாமற் போய் விட்டது. உள்ளே இருக்கிறது.
நரேன் கருத்தெழுத முடியவில்லை என்று தெரிவித்த போதுதான் இப்பிழையைக் கண்டு பிடித்தேன். அதனால் மீள்பதிவு செய்துள்ளேன்.
சுட்டிக்காட்டிய நரேனுக்கு நன்றி
சந்திரவதனா
பெண்களின் மிக நெருக்கமான பகைவனே அவர்களுடைய நண்பர்கள் அல்லது கணவன் போன்ற நெருங்கிய உறவினர்களே.
உண்மை பத்மா
Post a Comment