Thursday, December 01, 2005
சேலைக்கும் பெண்விடுதலைக்கும் முடிச்சு
நிலாவின் இப்பதிவைப் என்னைப் புடவையில் பார்த்ததும் ‘என்னக்கா இன்னும் பட்டிக்காடாவே இருக்கீங்க’ என்று கேலி பேசுகிறார்கள் என் கிராமத்துப் பெண்கள்! பார்த்ததும் என் மனதைச் சுரண்டும் ஒரு விடயம் ஞாபகத்தில் வந்தது.
ஏதாவது நிகழ்ச்சிகளுக்குச் சேலையுடன் போனால் "என்னக்கா பெண்ணியம் பேசிக் கொண்டு சேலை உடுத்துகிறீர்கள்" என்கிறார்கள். சேலைக்கும் பெண்விடுதலைக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.
எப்போதும் சேலைதான் உடுத்த வேண்டுமென யாராவது கட்டாயப் படுத்தினால் அது என் சுயத்தின் மேலான சீண்டல். கொட்டும் பனியில் சேலை உடுத்த வேண்டுமெனக் கட்டாயப் படுத்தினால் அது பண்பாடு என்கின்ற பெயரில் என் மேல் போர்த்தப் படும் அதிகாரம்.
எனக்குப் பிடித்த உடைகளில் ஒன்றான சேலையை, என் சுய விருப்பத்தோடு, நான் உடுத்தும் போது கேள்வி கேட்டால்...?
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
▼
2005
(
172
)
- ▼ December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
17 comments :
உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது
மிகச் சரியாகச் சொன்னீர்கள். இதே கருத்தில் நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.
உங்கள் பதிவின் தாக்கத்தில் இன்னொரு பதிவு:
http://nilaraj.blogspot.com/2005/12/blog-post.html
//எப்போதும் சேலைதான் உடுத்த வேண்டுமென யாராவது கட்டாயப் படுத்தினால் அது என் சுயத்தின் மேலான சீண்டல். கொட்டும் பனியில் சேலை உடுத்த வேண்டுமெனக் கட்டாயப் படுத்தினால் அது பண்பாடு என்கின்ற பெயரில் என் மேல் போர்த்தப் படும் அதிகாரம்//
athu
நல்ல கேள்வி சந்திரவதனா. கண்டு கொள்ளாமல் விடுங்கள் இந்தக் கேள்விகளை.
சகோ.சந்திரவதனா,
ஏன் பெண்கள் விடுதலை பற்றிய விவாதங்களில் மட்டும் பெண்ணின் ஆடை சுதந்திரமும் சேர்த்தே பேசப்படுகிறது? மற்ற உரிமைப் போராட்டங்களில் அவ்வாறு பேசப்படுவதில்லையே ஏன்?
உண்மையான பெண் சுதந்திரத்திலிருந்து திசை திருப்பவே ஆடை சுதந்திரம் பற்றிய தேவையற்ற தர்க்கங்கள் எழுகின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து.
An important posting. It should be a good start for a healthy discussions. To my knowledge, Usha has already taken this topic.
I don't know how ur people can face the question of Saree is mixed with the cultural values?!
/ஏன் பெண்கள் விடுதலை பற்றிய விவாதங்களில் மட்டும் பெண்ணின் ஆடை சுதந்திரமும் சேர்த்தே பேசப்படுகிறது? மற்ற உரிமைப் போராட்டங்களில் அவ்வாறு பேசப்படுவதில்லையே ஏன்?/
ஏனென்றால் பெண்கள் அவர்களுக்கு பிடித்த ஆடை அணிய ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் அனுமதிப்பதில்லை.அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாமா?பெண்கள் அவர்களுக்கு பிடித்த உடையை அணிந்து கொள்வதை தடுக்க இவர்கள் யார்?
/உண்மையான பெண் சுதந்திரத்திலிருந்து திசை திருப்பவே ஆடை சுதந்திரம் பற்றிய தேவையற்ற தர்க்கங்கள் எழுகின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து./
உண்மையான பெண் சுதந்திரம் என்பது
1.இந்திய அரசியல் சட்டம் அனுமதியளிக்கும் எந்த உடையையும் அணிவது.
2.ஒருவனுக்கு ஒருத்தி என மட்டுமே வாழ்வது.
3.கல்வி கற்று நாட்டுக்கு தலைமை தாங்குவது
4.ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை.
இவற்றிலிருந்து துவங்குகிறது
//ஒருவனுக்கு ஒருத்தி என மட்டுமே வாழ்வது.//
ஒருத்திக்கு!
//1.இந்திய அரசியல் சட்டம் அனுமதியளிக்கும் எந்த உடையையும் அணிவது.//
dress code'kum arasiyal sattamaa?
nalla koothuthaan mr. anonymous.
nalladiyaar,
not everyone's interested in your politics. why do you drag them around like a dead weight?????????
சகோ.சந்திரவதனா,
நான் கேட்டதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம் அல்லது உங்களின் கருத்தைச் சொல்லலாமே?
//ஏனென்றால் பெண்கள் அவர்களுக்கு பிடித்த ஆடை அணிய ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் அனுமதிப்பதில்லை.//
அணானிமஸ் நீங்கள் ஆணா பெண்ணா? என்று யூகிக்க முடியவில்லை. பரவயில்லை. நான் கேட்டது பெண்ணுரிமைப் பற்றிய விவாதங்களில் "ஆடை" ஏன் விவாதிக்கப்படுகிறது என்பதே. ஆடைக்கு சுதந்திரம் கொடுப்பதை நான் பெண்ணுரிமையாகக் கருதவில்லை.
//பெண்கள் அவர்களுக்கு பிடித்த உடையை அணிந்து கொள்வதை தடுக்க இவர்கள் யார்?//
சரியாகச் சொன்னீர்கள்! "பிடித்த" என்பதை விட "தோதான" என்று சற்று மாற்றி எழுதினால் மிகச்சரியாக இருந்திருக்கும்.
//இந்திய அரசியல் சட்டம் அனுமதியளிக்கும் எந்த உடையையும் அணிவது//
எந்தெந்த உடை என்று முடிந்தால் அறியத்தாருங்கள்.
/அணானிமஸ் நீங்கள் ஆணா பெண்ணா? என்று யூகிக்க முடியவில்லை. பரவயில்லை. நான் கேட்டது பெண்ணுரிமைப் பற்றிய விவாதங்களில் "ஆடை" ஏன் விவாதிக்கப்படுகிறது என்பதே. ஆடைக்கு சுதந்திரம் கொடுப்பதை நான் பெண்ணுரிமையாகக் கருதவில்லை./
நீங்கள் என்ன கருதுகிறீர்கள்,நான் என்ன கருதுகிறேன் என்பது முக்கியமல்ல.அந்த பெண் என்ன கருதுகிறார்,அரசியல் சட்டம் என்ன கருதுகிறது என்பது தான் முக்கியம்
அரசியல் சட்டம் அனுமதிக்கும் ஆடை அணிய பெண்களுக்கு உரிமையில்லை என்று வாதிடும் ஆணாதிக்கவாதிகள் இருப்பதால் தான் பெண்ணுரிமை பற்றி பேசும்போது ஆடை பற்றிய பேச்சும் வருகிறது.
/சரியாகச் சொன்னீர்கள்! "பிடித்த" என்பதை விட "தோதான" என்று சற்று மாற்றி எழுதினால் மிகச்சரியாக இருந்திருக்கும்./
அந்த பெண்ணுக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் தோதான உடை என்று வைத்துகொள்வோமா?
/எந்தெந்த உடை என்று முடிந்தால் அறியத்தாருங்கள்/
எனக்கு தெரியவில்லை.நான் பார்த்தது வரை ஜீன்ஸ்,மினிஸ்கர்ட்,அரை டிரவுசர்,புடவை என்று பலவகையான உடைகளை பல பெண்கள் அணிகிறார்கள்.அவர்கள் யாரையும் போலீஸ் பிடித்ததில்லை.ஆக அதெல்லாம் அரசியல் சட்டம் அனுமதிக்கும் உடை என்று தான் கருதவேண்டியுள்ளது
dress code'kum arasiyal sattamaa?
nalla koothuthaan mr. anonymous. /
There is a dress code for citizens.Nudity isnt allowed in streets.So there certainly is a dress code in constitution.
//கொட்டும் பனியில் சேலை உடுத்த வேண்டுமெனக் கட்டாயப் படுத்தினால்
அது பண்பாடு என்கின்ற பெயரில் என் மேல் போர்த்தப் படும் அதிகாரம்.//
வதனா,
சினிமாக்களில் பார்த்திருக்கின்றீர்கள்தானே? பனியில் ஆடிப்பாடும் நாயகி எப்போதும் சேலைதான்
அணிந்திருப்பாள். ஆனா நாயகன் மட்டும் லெதர் ஜாக்கெட்டுடன்!
பெண்ணுரிமைக்கும் சேலைக்கும் பொருத்தம் வேணுமாம்:-)
// சினிமாக்களில் பார்த்திருக்கின்றீர்கள்தானே? பனியில் ஆடிப்பாடும் நாயகி எப்போதும் சேலைதான்
அணிந்திருப்பாள். ஆனா நாயகன் மட்டும் லெதர் ஜாக்கெட்டுடன்!
பெண்ணுரிமைக்கும் சேலைக்கும் பொருத்தம் வேணுமாம்:-) //
டீச்சர்....சூப்பர் டீச்சர்.
இன்னோன்னு தெரியுமா? பெண்கள் தங்களுக்குப் பிடித்த உடையை அணிய வேண்டும் என்று எந்த ஆணாவது சொன்னால் அவன் ஜொள்ளு விட்டுக் கொண்டு அலைகிறான் என்று சொல்வார்கள். சேலை அணிய விரும்புகின்றவர்கள் அணியட்டும். சுடிதார் போடுகின்றவர்கள் போடட்டும். அது அவர்கள் விருப்பம் என்று சொல்வதைக் கூட கேவலப்படுத்துகிறார்கள்.
பாதுகாப்பு என்றும் சொல்லி ஆடைத்திணிப்பு நுழையும். பாதுகாப்பு யாரிடமிருந்து தேவை? ஆணிடமிருந்துதானே? அந்த பாதுகாப்பே தேவையில்லை என்ற வகையில் ஆண்களைத் திருத்தப் போகின்றார்களா என்றால் அதற்கும் விடையில்லை.
+
சந்திரவதனா
பெண்களின் அதீத ஆடைகளுக்கு ஆண்களின் குறுக்கீடு தான் காரணம் என்று சொல்பவர்கள் யாரும் பெண்களின் அரைகுறை ஆடைக்கும் ஆண்களின் தலையீடு இல்லை என்று சொல்லாதது ஆச்சர்யமே.
மேடம் துளசியவர்கள் சொல்வது போல,
சென்னையில் காட்சி என்றாலும், பனிபொழியும் காஷ்மீரில் காட்சி என்றாலும் கதாநாயகன் முழு ஆடை அணியாமல் ஆடிப்பாடுவதில்லை. பெண் என்றால் மட்டும் இரு கச்சைகள் மட்டும் அணிந்த இருபத்து நான்கு துணையாட்களும் வேண்டும்.
Post a Comment