Wednesday, December 28, 2005
ஊருக்கு உபதேசம்
தொலைக்காட்சித் தொடர்களிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிளிலோ அதிக ஈடுபாடு கொள்ள முடியாத நான், பாலுமகேந்திராவின் `கதைநேரம்` போனால் விட்டுவிடாமல் பார்ப்பேன். ஒரு பிரச்சனையை எடுத்து அதை கச்சிதமாகச் சொல்லி விடும் திறமை பாலுமகேந்திராவுக்குத்தான் என வியப்பேன்.
உண்மையிலேயே கதைநேரத்தில் வரும் ஒவ்வொரு பிரச்சனையுமே சாதாரணகுடும்பங்களில் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகள். அதைப் பார்ப்பவர்கள் தாமாகவே தமது தவறுகளை உணர்ந்து கொள்ளும் விதமாகவும், பெண்களுக்கு... ஆண்களுக்கு... என்று உள்ள பிரச்சனைகளை சுற்றியுள்ளவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதமாகவும்.. மிகவும் நன்றாக தயாரித்து வழங்கப் படுகின்றன.
அதில் நடிக்கும் மௌனிகா உட்பட எல்லோருமே மிக இயல்பாக நடிப்பார்கள்.
இன்று எதேச்சையாக பழைய குமுதம் ஒன்றைப் புரட்டிய போது... - ஒரு பழைய செய்திதான் - என் கண்ணில் பட்டது.
இந்தளவு உபதேசிக்கும் விதமான கதைகளைப் படமாக்கித் தரும் பாலுமகேந்திராவும் அந்தப் பெண் மௌனிகாவும் திருமணம் செய்து கொண்டு விட்டார்களாம். எனக்குச் சப்பென்றாகி விட்டது. என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஏமாற்றமாகவும் போய்விட்டது. இந்தளவுக்கு ஊரைத் திருத்தும் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஒரு பெண்ணால் எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிந்ததோ..? இந்தளவு பிரச்சனைகளை உணர்ந்து கதைகளைத் தரும் பாலுமகேந்திராவால் எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிந்ததோ...?
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
▼
2005
(
172
)
- ▼ December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
26 comments :
உபதேசம் ஊருக்குத்தான்.
சந்திரவதனா, இதில் என்ன விஷயமிருக்கு ஏமாற? மெளனிகாவிற்கு பாலுவையும், பாலுவிற்கு மெளனிகாவையும் பிடித்திருந்ததால் மணம் செய்துக் கொண்டார்கள். இது ஒரு பிரச்சனையாக எனக்கு தெரியவில்லை. இது தாண்டி, பாலுமகேந்திராவின் மகன் என்னுடைய நண்பர். இதே கேள்வியை இரண்டு வருடங்களுக்கு முன்பு கேட்டதற்கு அவரின் பதில் His life, his choice.
என்ன நரேன் இப்படிக் கேட்டு விட்டீர்கள்!
பாலுமகேந்திராவுக்கு ஏற்கெனவே ஒரு மனைவியும் இருக்கிறார்.
அந்தக் குடும்பத்துக்குள் நுழைந்து கொள்ள மௌனிகாவுக்கு என்ன உரிமை இருக்கிறது.
மனைவி இருக்கும் படியாக இன்னொருவரை மணந்து கொள்ள பாலுமகேந்திராவிடம் என்ன நியாயம் இருக்கிறது.
பிடிப்பு என்பது எப்போதும் எங்கேயும் வரலாம். தடுமாற்றம் கூட வரலாம்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறையில்லையா? பாலுமகேந்திரா படங்களிலேயே
சீதனம், நாத்தனார், கணவனின் சந்தேகம், நட்பின் தன்மை, கூடப் பழகுபவர் ஆணாயினும் பெண்ணாயினும் பழகும் முறை... என்று பிரச்சனைகளை ஆராய்ந்து கதைபோல நடப்பைச் சொல்லும் ஒருவர். அவரே தனது மனைவியின் மனதைப் புண்படுத்தலாமா...?
அவரது மகன் அப்படிச் சொல்லியிருக்கலாம்.
வேறுவழி அவருக்கு இல்லை.
சந்திரவதனா,
இது பாலுமகேந்திராவுக்கு புதிது போல எழுதியிருக்கிறீர்களே - ஷோபாவை மறந்துவிட்டீர்களா?
இது கண்டிப்பாக முதல் மனைவிக்கு தெரியும். இந்த விஷயத்தில் தான் இயக்குநர் பாலாவுக்கும், பாலுமகேந்திராவுக்கும் சண்டையே வந்தது. ஆனாலும், மெளனிகாவினை மணம் செய்துக் கொண்டது ஒரு தனி மனிதரின் பிரச்சனை. முதல் மனைவிக்கு தெரியாமலா இதை செய்துக் கொண்டார். சமீபத்தில் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முழுவதுமாய் பார்த்துக் கொண்டது மெளனிகா தான்.
இது ஒரு தனிநபர் பிரச்சனை. பாலு, பாலுவின் முதல் மனைவி, மெளனிகா இவர்களிடத்திலிருக்கும் புரிதலும், பரஸ்பர இணைப்பும் தான் அடிவேர்.
நிலா, அப்படிப் பார்த்தால், திரையுலகின் எல்லா ஆளுமைகளையும் பேசலாம். இதனால் நான் பாலு மகேந்திரா செய்தது மிக உத்தமமான காரியம் என்று வாதிடவில்லை. ஆனால், அவரவர் வாழ்வின் தேர்வு என்பது அவரவர்களின் இடத்தில்.
பிரபலங்களின் தொழிலையும் அவர்கள் வாழ்க்கையையும் தனித்தனியாகப் பார்க்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்விலும் ஆயிரம் சிறு சிறுத் தவறுகள் இருக்கலாம். நம் அலுவலகத்துக்கு வருவோர் போவோர் எல்லாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்ட ஆரம்பித்தால் நமக்கு எவ்வளவு கடுப்பாக இருக்கும். அது போல் தான் பாலு மகேந்திராவுக்கும். கமல்ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கையையும் இப்படித் தான் கிண்டினார்கள். அவர்கள் கலைஞர்கள் தான். படமாக்குவது அவர்கள் தொழில், ஆர்வம். படம் பிடித்திருந்தால் பார்க்கலாம். இல்லையென்றால் விட்டு விடலாம். அவ்வளவு தான். அவர்கள் ஒன்றும் சமய போதகர்கள் அல்ல. அவர்கள் யோக்கியதையை கேள்வி கேட்க. மேலும் இயக்குனராக இருப்பவர் பிறரது கதைகளையும் இயக்குவார். அதில் வரும் அனைத்து பாத்திரங்களையும் அவருடன் பொருத்திப் பார்க்கக்கூடாது. அவரும் மௌனிகாவும் மனம் இணையக்காரணமான சம்பவங்களை விளக்கி விகடனில் போன ஆண்டு நெகிழ்ச்சியான பேட்டி கொடுத்திருந்தார். பகிரங்கமாக தன் மனைவிக்கு முதல் மனைவிக்கு வருத்தமும் தெரிவித்தார். இதற்கு மேல் இதில் நாம் வேற்றுமனிதர்கள் பேச ஒன்னும் இல்லை. அவருக்கு வக்காலத்து வாங்க வில்லை. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டக்கூடாது. அவர்களும் மனிதர்கள் தாம். தங்களைப் பின்பற்றி வாழுங்கள் என்று அவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. பிரபலங்களைப் பார்த்து கலாச்சாரம் கெட்டு விடுமே, வளரும் பிள்ளைகள் கெட்டு விடுவார்களே என்பதும் வெட்டி வாதம்.அப்படியென்றால் தெருவுக்கு தெரு தான் கோயில்கள் இருக்கின்றன...குருமார்கள் இருக்கின்றன..நாட்டில் தவறே நடப்பது இல்லையா என்ன?
இது தொடர்பில் எனக்குக் கருத்தெதுவுமில்லை. உங்கள் பதிவின்படி, மெளனிகா, கதைநேரத்தில் நடித்த பிறகுதான் பாலுவின் மனைவியானார் என்ற தொனி தெரிகிறது. நான் நினைக்கிறேன், அதற்கெல்லாம் முதலே இருவருக்குமான பிணைப்புள்ளதென்று.
பாலுவின் கூற்றுப்படி மொனிகா பதினாறு வயதிலேயே பாலுவிடம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்.
நரைன்
//நிலா, அப்படிப் பார்த்தால், திரையுலகின் எல்லா ஆளுமைகளையும் பேசலாம். இதனால் நான் பாலு மகேந்திரா செய்தது மிக உத்தமமான காரியம் என்று வாதிடவில்லை. ஆனால், அவரவர் வாழ்வின் தேர்வு என்பது அவரவர்களின் இடத்தில்.//
சரியா தவறா என்ற வாதத்துக்கே நான் வரவில்லை. ஷோபாவை நினைவிருந்தால் சந்திரவதனாவுக்கு இது வியப்பாய் இருந்திருக்காது என்பதை மட்டுமே இங்கு சுட்டிக்காட்ட விரும்பினேன்
ANPEN VATHANAVUKKUU
IPPA UNNKALLUU CINEMA MUKEEYAMA VITTUTHA, EMATHUU PEENNKAAL KAIPALLIKAPADUMM POTHUUU CINEMA THEVAYA
NEINKAL ENN THARSHINIKKUU NADATHA KODUMAIYA PATTE ELUTHA KUDATHUUU
NAMM EVALAVUKALLAM IPPADEE IRUPATHUU
THAYAVUU SAITHUUU ITHAI PATTEE ORU NALLA PATHEEVUU ELLUTHOINKOO
NANREE
சந்திரா, பாலூவுக்கு என்ன வயது
மெளனிகாவுக்கு என்ன வயது? வயதான் ஆண், ஏழை இளம் பெண்ணிடம் தன் வசதியை, பிரபலத்தைக காட்டி வழிக்கு கொண்டு வந்ததாய் தோணுகிறது. சந்திரா அதையும் ஆரம்பத்திலேயே தைரியமாய் பொதுவில் சொல்லி, அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அவமானங்களை நீக்கியிருக்கலாம் இல்லையா? இதற்கு தெய்வீக காதல் என்று மெய்சிலிர்த்து பேட்டி வேறு?ஷோபனாவை விடுங்க, அடுத்து அர்ச்சனாவைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
நாராயன், சொந்த விஷயம்தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த விஷயம், பெண் என்றும் ஆணின் போக பொருள் என்று ஆகிறதே? சினிமாகாரர்கள் ஆத்ர்ச புருஷர்களாய் கொள்ள வேண்டாம், ஆனால் சமூகத்தில் மனைவி, பிள்ளையுடன் வாழ்பவர்கள், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டாமா? பிறகு கல்யாணம், குடும்பம், குட்டி ஏன்?
கடைசி காலத்திற்கு மட்டுமா? ஜெமினி கணேசன் போல?
உஷாக்கா...
1)பாலுமகேந்திரா ஒரு வசதி வாய்ந்த இயக்குநர் அல்ல.ஆகையால் உங்களுடைய அந்த வாதம் மிகத் தவறு.(வாய்ஸ் கொஞ்சம் சவுன்டா இருந்த மன்னிச்சுடுங்க)
2)"அது ஒரு கனாக்காலம்" திரைப்பட கலந்துரையாடலுக்காக "ஆட்டோ"வில் சென்று, தயாரிப்பாளரிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்ததாகப் படிக்க கண்டேன்.
பொதுவாக ஒரு கேள்வி!
அது சரி...பாலு, கமல் போன்ற கலைத் திறன் வாய்ந்தவர்களின் (மட்டுமே) "தனிப்பட்ட" வாழ்க்கையை நோன்டி நுங்கு எடுக்கிறார்கள்?
ஆஸ்திரேலியாவில் ஒரு "ரிசர்ச்" நடந்தது. அதில் கலைத்திறமையும், கிரியா ஊக்கியும் உள்ளவர்கள் (மற்றவரோடு ஒப்பிடும் போது) ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் துணைகள் வைத்திருந்ததாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குடையும் நோக்கம் எனக்கில்லை.
ஒரு கலைஞனின் திறமையை மட்டும் நோக்கி அதை ரசிக்கும் மனப்பாங்குதான் எனக்குண்டு.
கலைஞர்கள் மட்டுமென்றில்லை. பிரபல்யமானவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட நான் குடைய விரும்புவதில்லை.
கமலின் நடிப்பை ரசிக்கும் எனக்கு கமலின் தனிப்பட்ட வாழ்வில் சம்மதமில்லை. சம்பந்தமுமில்லை.
அதே போல கிளின்டனின் பிரச்சனையைக் கூட நான் பெரிதாகப் பார்க்கவில்லை. அவர் பிரபல்யமாக இருந்ததால் அவரது வாழ்வின் சில சம்பவங்கள் எல்லோர் பார்வைக்கும் வந்து விட்டன. சாதாரணமாக இருக்கும் பலர் இதை விடப் பெரிய தவறுகள் செய்து விட்டு பூனைகள் போல இருக்கிறார்கள். அதை விடுங்கள்.
இங்கு நான் சொல்ல வந்தது பாலுமகேந்திரா எப்படியான படங்களை எடுக்கிறாரோ...! என்ன கருத்துக்களை அதன் மூலம் முன் வைக்கிறாரோ...! எதைத் தவறென்று சுட்டிக் காட்டுகிறாரோ...! அதையே தன் வாழ்வில் செய்திருக்கிறார். அதையும் தற்போது சில நாட்களாக தொலைக்காட்சியில் பார்த்து விட்டு.. அதன் தாக்கம் என்னை விட்டு அகலும் முன்னரே அவரது மௌனிகாவுடனான திருமணம் பற்றிய செய்தியைப் பார்த்த போது... அது என்னைப் பாதித்தது.
மற்றும் படி நான் சினிமாச் செய்திகளில் ஆர்வம் கொள்வதில்லை. அதனால் நிலா குறிப்பிட்ட சோபனா விடயமோ, உஸா குறிப்பிட்ட வயது விடயமோ எனக்குத் தெரியாது.
நரேன், நீங்கள் கூறும் நியாயங்களை எந்தவிதத்துக்கு பொதுப்படையாக ஏற்றுக்கொள்ளமுடியும் என்று தெரியவில்லை. பாலுமகேந்திராவின் குறிப்பிட்ட பேட்டியையும், பாலாவின் இவன் தான் பாலா தொடரையும் வாசித்தளவில், பாலுமகேந்திரா, மெளனிக்கா தன்னிடம் 'அடைக்கலம்' கேட்டபோது அவருக்கு பதினாறு வயது பதினேழு வயது இருக்கும் என்று கூறியதாய் நினைவு. அவ்வாறான ஒரு பதின்மத்தில் இருப்பவர்கள் ஒரு வித குழப்பத்தில் இருப்பார்கள் என்று பாலுவுக்குத் தெரியாதமல்ல. எனக்கென்னவோ சிக்கலில் தப்பி வந்த இரையை பாலு சரியாக கொழுவி போட்டு தனக்காகிக் கொண்டார் என்றே நினைக்கின்றேன். முதலாம் மனைவி, இரண்டாம் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் ஒத்துக்கொண்டால் நாம் அதையேன் கதைக்கவேண்டும் என்பது நியாயாமாயிருதாலும், பிறருக்கு பெண்ணியம், பெண் உரிமை என்று போதிப்பவர் அதற்கு முற்றிலும் மாறாக இருப்பதை எப்படி ஒத்துக்கொளவது? தன்னால் அப்படி இருக்கமுடியாது என்றால் கம்மென்று இருக்கவேண்டியதுதானே.
அகிலா எங்கேயாவது வாய் திறந்து வெளிப்படையாகக் கூறுயிருக்கின்றாரா, இரண்டாம் மனைவி வைத்திருப்பது சம்மதம் என்று. பாலு தான் அகிலாவின் குரலாய்க் கதைக்கொண்டிருக்கின்றார். திருமணம் எல்லாம் சட்டரீதியாகச் செய்தவுடன் பாலு செய்தது எல்லாம் நியாயாமாகிவிடுமா? கவனமாகப் பாருங்கள், பாலு தனக்கு, heart attack வந்து உயிர் போகப்போகின்றதோ என்ற பயந்த நேரத்தில் தான் மெளனிகாவுடனான தனது உறவை வெளிப்படையாக அறிவித்தவர. அதற்கு முன் அல்ல.
ithu karuththu
பாலுமகேந்திரா, மெளனிக்கா தன்னிடம் 'அடைக்கலம்' கேட்டபோது அவருக்கு பதினாறு வயது பதினேழு வயது இருக்கும் என்று கூறியதாய் நினைவு. அவ்வாறான ஒரு பதின்மத்தில் இருப்பவர்கள் ஒரு வித குழப்பத்தில் இருப்பார்கள் என்று பாலுவுக்குத் தெரியாதமல்ல. எனக்கென்னவோ சிக்கலில் தப்பி வந்த இரையை பாலு சரியாக கொழுவி போட்டு தனக்காகிக் கொண்டார் என்றே நினைக்கின்றேன். முதலாம் மனைவி, இரண்டாம் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் ஒத்துக்கொண்டால் நாம் அதையேன் கதைக்கவேண்டும் என்பது நியாயாமாயிருதாலும், பிறருக்கு பெண்ணியம், பெண் உரிமை என்று போதிப்பவர் அதற்கு முற்றிலும் மாறாக இருப்பதை எப்படி ஒத்துக்கொளவது?
சந்திரவதனா,
பாலுவின் இரட்டை வால் குருவி பார்த்தீர்களென்றால், இதை நியாயப்படுத்தின மாதிரியிருக்கும்.
ஆளுமைகளின் தாக்கம் சமூகத்திற் கனதியானது. தங்கள் செயல்களுக்குப் பிரபலங்களை உதாரணத்துக்கு இழுப்பார்கள். குறிப்பாக சினிமாக்காரர்களை. இது புகைப்பழக்கத்துக்கு ரஜனியைச் சொல்வதிலிருந்து விரிந்து செல்லும்.
அந்த வகையில் இவர்களும் சமூகத்துக்குத் தவறான முன்னுதாரணங்களே.
//உஷாக்கா...
1)பாலுமகேந்திரா ஒரு வசதி வாய்ந்த இயக்குநர் அல்ல.ஆகையால் உங்களுடைய அந்த வாதம் மிகத் தவறு.(வாய்ஸ் கொஞ்சம் சவுன்டா இருந்த மன்னிச்சுடுங்க)
2)"அது ஒரு கனாக்காலம்" திரைப்பட கலந்துரையாடலுக்காக "ஆட்டோ"வில் சென்று, தயாரிப்பாளரிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்ததாகப் படிக்க கண்டேன்.//
தம்பி, இது இப்பத்து கதை. ஒரு காலத்துல ஓஹோன்னு கொடிகட்டிப் பறந்தார். சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கிட்டாரு என்று நினைக்கிறேன்.
உங்களில் யாரவது பாலகுமாரனின் 'என்றென்றும் அன்புடன்' படித்திருக்கிறீர்களா????
சந்திரவதனா,
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
பாலுமகேந்திராவோ மெளனிகாவோ செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. சராசரி மனிதர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை இயல்பாக அழகாக படம் பிடித்துக்காட்டுவதில் பாலுமகேந்திரா திறமை வாய்ந்தவர். அவ்வளவுதான். தன் படங்கள் மூலமாக உபதேசம் செய்வது அவர் நோக்கமா என்று எனக்குத் தெரியவில்லை.
//இந்தளவுக்கு ஊரைத் திருத்தும் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஒரு பெண்ணால் எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிந்ததோ..? இந்தளவு பிரச்சனைகளை உணர்ந்து கதைகளைத் தரும் பாலுமகேந்திராவால் எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிந்ததோ...?//
சினிமா ஹீரோக்கள்/ஹீரோயின்கள் அத்தனை பேரும் ஊரைத் திருத்தும் பாத்திரங்களில் தானே நடிக்கிறார்கள்? அதற்காக நிஜ வாழ்க்கையிலும் அப்படியே நடந்துகொள்வார்கள் என்று எப்படி நாம் எதிர்பார்க்கலாம்?
தாரா.
எல்லாரும் மன்னிச்சுக்குங்க..நீங்க சொல்ற விஷயத்தோடு சேர்ந்ததுதான்; ஆனால் ஆள் வேறு. எப்படி அவரை மட்டும் தமிழ் மக்கள் அனைவரும் எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார்கள்? ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் அவரை சிலர் தெய்வமாகவே பார்த்தார்களே, அது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று?
நான் சொல்றது: எம்.ஜி.ஆர்.
இந்தக் கேள்வியும் என் மனசில் அந்தக் காலத்திலிருந்தே உண்டு.
பாலு, கமல் -இவர்கள் இருவரையும் அந்த மனிதரோடு சேர்த்துப்பார்ப்பது எனக்கு சரியாகத்தெரியவில்லை. அந்த இருவரையும் நாம் எல்லோருமே கலைஞர்களாக மட்டுமே பார்க்கிறோம்; பார்க்கவேண்டும். மற்றவர் அப்படியல்ல.
சந்திரா, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் விமர்சிப்பது தவறு. மிக சரி. வெளிநாடுகளில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை யாரும் கண்டுக் கொள்வதில்லை. ஆனால் சமூகத்தில் பெரிய மனிதர்களை விட்டு வைப்பதில்லை. நம் ஊரில் உல்டா. தருமி சொன்னதை நாம் வெளியே பேச முடியுமா?
தருமி சார்! அவர் போய் சேர்ந்துவிட்டார். இப்பத்திய மாண்புமிகுகளை
சொல்ல முடியுமா? தேர்தலின் பொழுது, சொத்து கணக்கைக் காட்டிய பல மாண்புமிகுக்கள், ஒன்று இரண்டின் கணக்கைச்
சொன்னார்கள். ஆனால் சட்டப்படி இரண்டு குற்றம்.
சமீபத்தில் அமீர்கான் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு இருக்கிறார்.
பார்வையாளர்களில் முதல் மனைவி பெற்ற குழந்தைகளும் வந்துள்ளார்கள். இது சரியான வழி. அந்த பெண்ணுக்கும் சமூகத்தில்
ஒரு அந்தஸ்து கிடைக்கும்.
மெளனிகாவை நினைத்தால் பரிதாபமாய் இருக்கிறது.
மோகன் தாஸ், அதுதானே ரெண்டு பொண்டாட்டிக்காரன் லிஸ்டில் முக்கியமானவரை விட்டு விட்டோமே :-)
ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யலாமா? (முதல் மனைவியே சம்மதித்தாலும்) இது சட்டப்படிச் செல்லுமா?
அப்படி என்றால் இது பெண்ணுக்கும் பொருந்துமா? அதாவது கணவன் இருக்கும் போது இன்னொரு ஆணைத் திருமணம் செய்யலாமா? சட்டம் என்ன சொல்கிறது?
காதல் இல்லாத போது சும்மா மனைவி என்ற உறவு மட்டும் எதற்கு? பிரிந்து விடலாமே? விவகாரத்து செய்துவிட்டு அடுத்தவரை மணப்பதே நல்லது.
நாராயணன்,
//மெளனிகாவிற்கு பாலுவையும், பாலுவிற்கு மெளனிகாவையும் பிடித்திருந்ததால் மணம் செய்துக் கொண்டார்கள். இது ஒரு பிரச்சனையாக எனக்கு தெரியவில்லை. //
என்ன இப்படிச் சொல்லீட்டீங்க.
மெளனிகாவிற்கு பாலுவையும், பாலுவிற்கு மெளனிகாவையும் பிடித்திருந்ததால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இங்கே கேள்வி அது இல்லை.
திருமணம் என்ற உறவின் அடிப்படை என்ன?
அப்படி ஒரு உறவு தேவை இல்லை என்றால் அது பற்றி விவாதம் வேண்டாம். ஆனால் அந்த உறவுக்குள் இருக்கும் போது அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும். பாலுவின் திருமணம் பற்றிய கருத்து என்ன? பாலு செய்தாலும் குப்பன் செய்தாலும் சட்டம் ஒன்றே என்ன சினிமாக்காரன் செய்தி பத்திரிக்கைக்கு காசு சேர்க்கிறது. அவ்வளவே.
//His life, his choice. //
FYI: In his life, there is an another female called wife.That wife has some feelings and இரத்தமும் சதையுமாக இருக்கும் மனது.
சந்திரவதனா,
பாலுவின் படத்தையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்துவிட்டு அவரும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது மாற வேண்டும்.அவருக்கு அது ஒரு தொழில் அவ்வளவே. எதை வித்தால் பணம் வரும் என்று தெரிந்து செய்வதுதான் தொழில் இலாபமாக இருக்க ஒரே வழி.
கதை எழுதும் தொழிலார்கள் (அதாவது இலக்கியவாதிகள்), நடிக்கும் தொழிலார்கள் (அதாவது நடிகர்/நடிகை), அரசியல் தொழிலார்கள் (அதாவது அரசியல்வாதிகள்..
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க/ எதிர்பார்க்க உரிமை உள்ளது.) ..இது போல் பல...இவர்கள்மேல் அபிமானம் ,நம்பிக்கை வைப்பவர்களுக்கு இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது ஏமாற்றமே. ஏனென்றால் நீங்கள் என்ன நினக்கின்றீர்கள் என்பது அவர்களுக்கு தேவை இல்லாதது.அதுதான் நிசமும் கூட.
// நான் சொல்றது: எம்.ஜி.ஆர் // குசும்பு ??
*
இந்த விஷயத்தோடு ஒப்பிட முடியாவிட்டாலும் எனக்கு தெரிந்து நீனா குப்தா ரிச்சர்ட்ஸோடு தைரியமாக குழந்தை பெற்றார்.
மற்றபடி இதுவரை இந்தியாவில் (ஏன் உலகத்திலேயே) யாராவது பெண் இது போல் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மேற்பட்ட துணையோடு வாழ்ந்ததற்கு விபரம் இருக்கிறதா?
நல்ல வேளையாக இந்த நேரத்தில் அரசியல் தலைவர்கள் யோக்கியதை பத்தி ஞாபகப்படுத்தி விட்டார்கள். அவர்களை வலைப்பதிவு போட்டு கேள்வி கேளுங்களேன்..கலைஞர்களை விட அவர்களுக்கு தான் சமூகப்பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும்...பாவம் பாலு..அவரது கடைசி காலத்தில் ஏன் அவரைப் போட்டு படுத்துகிறீர்கள்..கதை, ஓவியம், என்று எந்தக் கலையானாலும் அதில் சமூகத்துக்கு ஒரு செய்தி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயமன்று. அவர்கள் மனதுக்கு பிடித்தது எதுவானாலும் கலையாக செய்யலாம். நமக்கும் பிடித்திருந்தால் ரசிக்கலாம். அவ்வளவு தான். நிறைய பேர் ரசித்தால் அவர்கள் அதையே தொழிலாக செய்கிறார்கள். இல்லையென்றால் அவர்கள் அதை பொழுது போக்காக செய்வார்கள். யாரும் யாரையும் முன்னுதாரணமாக பார்த்துக் கெட்டுப் போனால் அது அவர்கள் பிழை...ரஜினியைப் பார்த்து அவர் பிள்ளை புகைப்பிடிக்க ஆரம்பித்தால் அதற்காக வேண்டுமானால் அவர் தன் பழக்கத்தை மாற்ற நினைப்பதில் நியாயமாக இருக்கிறது..ரசிகர்கள் கெட்டுப் போவார்கள் என்பதற்காகவெல்லாம் யாரும் தன் பழக்கத்தை மாற்ற முடியாது..அவர் அவர்களுக்கு சொந்தமாக மூளை இருக்க வேண்டும்..தீதும் நன்றும் பிறர் தர வரா..முதலில் யாரையும் முன்னுதாரணமாகப் பார்க்காதீர்கள்..கேள்வி கேட்கும் துணிவிருந்தால் சிறியவர் பெரியவர் பாராது முன்னாள் இன்னாள் தேசத்தலைவர்கள் தொடங்கி அனைவரையும் கேள்வி கேளுங்கள்..பாலு தான் அப்பாவி மாட்டினார் என்று அவரைப் போட்டு மண்டையை உடைக்காதீர்கள்
//மற்றபடி இதுவரை இந்தியாவில் (ஏன் உலகத்திலேயே) யாராவது பெண் இது போல் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மேற்பட்ட துணையோடு வாழ்ந்ததற்கு விபரம் இருக்கிறதா?//
முகமூடி...வாயைக் கிளறாதீங்க...ஏதாவது உளறிவிடுவேனா?
கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்ட உங்களனைவருக்க்கும் நன்றி.
விடுமுறையில் நிற்பதால் உடனடியாக எனது கருத்துக்களை உங்களோடு பகிர முடியவில்லை
Post a Comment