Tuesday, April 04, 2006

நேபாளத்தில் பசுவைக் கொன்றதாக பெண்ணுக்கு சிறைத்தண்டனை


நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நீதிமன்றம் ஒன்று, பசுமாட்டினை கொன்ற குற்றத்திற்காக, பெண்மணி ஒருவருக்கு நீண்ட கால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. இந்து மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நேபாளத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டு, அவற்றினை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

தலைநகர் காத்மண்டுவின் வடமேற்கு பகுதியில், சுமார் ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சன்குவாசபா மாவட்டத்தின் நீதிமன்றமானது, குற்றம் சாட்டப்பட்ட பெண்மணிக்கு, அதிகபட்ச தண்டனையான 12 ஆண்டு கால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. கிரிபா போதேனி என்று அழைக்கபடும் இந்த பெண்மணி, பசு மாட்டினை கொன்று, உண்டு விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதினை தொடர்ந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஆனால் தான் பசு மாட்டினைக் கொல்லவில்லை என அப்பெண்மணி மறுத்துள்ளார்.

Quelle-BBC 03.06.2006

13 comments :

பரஞ்சோதி said...

ஆச்சரியமான செய்தி.

நேபாளத்தில் மனித உயிரை விட பசுவின் உயிர் விலை அதிகம் போலிருக்குது.

சந்திப்பு said...

நேபாளம் அதிகாரப்பூர்வமான இந்து நாடு. மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் எந்த நாடாக இருந்தாலும் மனிதனுக்கு முதலிடம் கொடுப்பதில்லை. இது ஆப்கானிசுதான், அரபு நாடுகள் என எங்கும் வியாபித்திருக்கிறது. நேபாளத்தில் பசுவைக் கொன்தற்காக ஒரு பெண்மணிக்கு சிறைத் தண்டனை விதித்திருப்பது வன்மையா கண்டிக்கத் தக்கது. நமது இந்தியாவில் இதைவிட பெரிய கொடுமையல்லவா நடந்தது. செத்துப்போன மாட்டின் தோலை உரித்ததற்காக 5 தலித்துக்களை கல்லால் அடித்தே கொன்றது சங்பரிவார கும்பல். இவர்களைப் பொறுத்தவரை மனித உயிரை விட மாட்டின் உயிரே பெரியது. ஒரு வேலை இந்த சங்பரிவார கும்பல் மக்களிடம் செல்வாக்கிழந்து நிற்கும் நிலையில் பசுமாட்டிற்கெல்லாம் வாக்குரிமை கொடுத்து வெற்றி பெறுவார்களோ என்னவோ? மத அடிப்படைவாதம் எந்த நாட்டில் இருந்தாலும், அது எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியதே. மதச்சார்பின்மை கொள்கைதான் இன்றைய முன்னேறிய உலகிற்கு பொருத்தமானது.

யாத்ரீகன் said...

மைனர் பெண்ணை கற்பழித்ததற்காக போலிஸ்காரர் ஒருத்தருக்கு இந்தியாவில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை... ஹீம்...................

G.Ragavan said...

ம்ம்ம்....என்ன சொல்வது.....

அபூர்வ கருப்பு மானைக் கொன்றவனெல்லாம் வெளிய சுத்திக்கிட்டு இருக்கான். அது இந்தியா...அங்க மாட்டக் கொன்னதுக்கு உள்ள போடுறாங்க...

ஊரூருக்கு இப்பிடி விசித்திரங்கள். ஒலகம் பூராவுந்தான்.

thiru said...

//சந்திப்பு says… 5 தலித்துக்களை கல்லால் அடித்தே கொன்றது சங்பரிவார கும்பல். இவர்களைப் பொறுத்தவரை மனித உயிரை விட மாட்டின் உயிரே பெரியது. ஒரு வேலை இந்த சங்பரிவார கும்பல் மக்களிடம் செல்வாக்கிழந்து நிற்கும் நிலையில் பசுமாட்டிற்கெல்லாம் வாக்குரிமை கொடுத்து வெற்றி பெறுவார்களோ என்னவோ? மத அடிப்படைவாதம் எந்த நாட்டில் இருந்தாலும், அது எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியதே.//
http://aalamaram.blogspot.com/2006/03/blog-post.html

SnackDragon said...

சந்திப்பு மிக அழகாக சொல்லியுள்ளார். நன்றி.

ramachandranusha(உஷா) said...

சந்திரா, பல கோவில்கள் வாசலில் பசுக்கள் நின்றுக் கொண்டு இருக்கும். அவற்றிற்கு மட்டும் அகத்திகீரை கட்டைக் கொடுத்துவிட்டு, அதன் பின் பக்கத்தைத் தொட்டு கும்பிட்டு விட்டுப் போவார்கள்.
அங்கத்தான் லஷ்மீ குடியிருக்கிறாள் என்று ஐதீகம். பக்கத்தில் எருமை மாடுகள் பரிதாப பார்வைப்
பார்த்தாலும் யாரும் அதைக் கண்டுக் கொள்ள மாட்டார்கள்.
அந்த காலத்தில் சிறுவயதில் பெண்ணுக்கு கல்யாணம் செய்துவிடுவார்கள். கர்பிணி சாவும், பிள்ளைப் பெற்றதும் சாவும் வெகு சாதாரணம். அதன் காரணமாகவே கர்பிணி பெண்கள் கேட்டதையெல்லாம்
வாங்கிக் கொடுப்பதும். செய்து போடுவது போன்ற வழக்கங்கள்! அந்த தாயில்லாத பிள்ளைகள், பசும்பாலை குடித்து பிழைத்துக் கொள்ளும். அதன் வழியாய் பசு தாயாக பூஜிக்கப்பட்டும், பல கதைகள் சேர்க்கப்பட்டு பிறகு இந்து கடவுள்களில் ஒன்றாய் ஆகிவிட்டது.
கோசாலை ஆரம்பிக்கப்பட்டு, வயதான பசுக்கள் மட்டும் பராமரிக்கப்படுவதும், குஜராத் (ப.ஜ.க) தில் பசுவதை
தடை சட்டம் இருப்பதும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் தொடரும் நம்பிக்கைகள்! ( மூட)
"புல்லுக்கொடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால் முடியாது தம்பி" :-)))))))))))))))))

Chandravathanaa said...

பரஞ்சோதி, சந்திப்பு, ராகவன், யாத்திரீகன், திரு, கார்த்திக், உஷா

உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி.

மதம், கடவுள் நம்பிக்கை... எல்லாமே மனிதர்களின் ஒழுக்கத்தைக் கருதி உருவான போது
அவைகளே வாழ்வின் பல அவலங்களுக்குக் காரணமாவதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வதென்றே தெரியவில்லை. ஒரு கொடுமையான தீர்ப்பு.

நேற்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் பலதிலும் இது செய்தியாக வந்துள்ளது.
50வயதுகள் நிறைந்த அந்தப் பெண்ணின் வீட்டில் காய்ந்த இறைச்சி இருந்து கண்டெடுக்கப் பட்டதாகவும், ஆனால் அந்தப்பெண் தான் மாட்டைக் கொல்லவில்லை என்று சொன்னதாகவும் செய்திகள் சொல்கின்றன.

வேண்டுமென்றே திட்டமிட்டு அப்பெண்ணின் மேல் இப்படியொரு மதம் சார்ந்த பழியைச் சுமத்தியுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Chandravathanaa said...

கர்பிணி சாவும், பிள்ளைப் பெற்றதும் சாவும் வெகு சாதாரணம். அதன் காரணமாகவே கர்பிணி பெண்கள் கேட்டதையெல்லாம்
வாங்கிக் கொடுப்பதும். செய்து போடுவது போன்ற வழக்கங்கள்! அந்த தாயில்லாத பிள்ளைகள், பசும்பாலை குடித்து பிழைத்துக் கொள்ளும். அதன் வழியாய் பசு தாயாக பூஜிக்கப்பட்டும், பல கதைகள் சேர்க்கப்பட்டு பிறகு இந்து கடவுள்களில் ஒன்றாய் ஆகிவிட்டது.


உஷா,
உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகவே உள்ளது.
நன்றி.

Chandravathanaa said...

யோகன்
இந்தச் செய்தியும் கொஞ்ச நாட்களில் மறக்கடிக்கப் பட்டு விடும்.
இன்னொரு அக்கிரமம் எமது காதுக்கு எட்டும் போது மீண்டும் நினைத்து.. குமுறி..
அடங்கிப் போவோம். மேலதிகமாக நாமும் ஒன்றும் செய்து விடுவதில்லை.

- யெஸ்.பாலபாரதி said...

//இந்தச் செய்தியும் கொஞ்ச நாட்களில் மறக்கடிக்கப் பட்டு விடும்.
இன்னொரு அக்கிரமம் எமது காதுக்கு எட்டும் போது மீண்டும் நினைத்து.. குமுறி..
அடங்கிப் போவோம். மேலதிகமாக நாமும் ஒன்றும் செய்து விடுவதில்லை.//
நிசம் அக்கா... என்ன செய்வது.. நம்மில் பலர் அதைக்கூட செய்வதில்லையே...

Chandravathanaa said...

பாலபாரதி

அதனால்தான் ஒவ்வொரு விடயத்துக்காகவும் இன்னும் போராடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

Anonymous said...

Hi there, I begin your blog via Google while searching in redress as a remedy for real prod representing a marrow enlist in struggle and your brief looks vertically stimulating exchange for me

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite