Wednesday, April 05, 2006

கழுதை பெண்ணை விட விசுவாசமானதா?


தலைப்பே அபத்தமாக இல்லையா!
இன்றைய ஜேர்மனியப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி இது.

இந்தியாவின் இராஜஸ்தானில் பாடசாலைப் பாடப் புத்தகங்களில் "ஒரு கழுதை, ஒரு குடும்பப் பெண்ணைப் போன்றது. சரியாகச் சொல்வதானால் கழுதை, குடும்பப் பெண்ணை விட ஒரு படி உயர்ந்தது" என்று குறிப்பிடப் பட்டுள்ளதாம்.

ஏன் கழுதை ஒருபடி உயர்ந்ததெனில், ஒரு பெண் சில சமயங்களில் கணவன் மேல் குற்றம் கண்டு தனது பிறந்த வீட்டுக்குப் போய் விடுவாளாம். ஆனால் கழுதை ஒரு போதும் அப்படிப் போக மாட்டாதாம். எப்போதும் எஜமானனுக்கு விசுவாசமாக இருக்குமாம்.

இந்தப் பாடப்புத்தகத்தை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்.

14 comments :

Muthu said...

சந்திரவதனா,
ஏதாவது திரிக்கப்பட்ட விஷயமாய் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏதாவது கிண்டலான நாட்டுப்புறப்பாடலாக இருக்குமோ என்னவோ?.

Chandravathanaa said...

இருக்கலாம் முத்து.
இந்தச் செய்தி ஜேர்மனியர்கள் எம்மை நையாண்டி செய்யக் கூடிய விதமாக அல்லவா உள்ளது.

- யெஸ்.பாலபாரதி said...

இருக்கலாம்...அக்கா...
நான் வட மாநிலங்களில் சுற்றியவன். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் பெண்களின் நிலை அப்படித் தான் உள்ளது.
இதை விட கொடுமை.. அந்தப்பெண்கள் தங்களை ஆண்களை விட தங்களை கீழானவர்களாகவே கருதுகின்றனர்.
மராட்டியர்களுக்கு மகாத்மா பூலேவும், நமக்கு தந்தை பெரியாரும் இல்லையெனில் நம் ஊரின் நிலை இதனைவிட கேவலமாக இருந்திருக்கும். ஏனெனில் நம் மொழி ஆண் குரலுடைய மொழி...

G.Ragavan said...

உண்மைதான் பாலபாரதி. முன்றைக்கு இன்று தேவலாம்தான். ஆனால் இன்றும் நிலமை பெரிதாக மாறிடவில்லை என்பதே உண்மை.

பெண்களை உரித்து உரித்து எழுதும் ஆண்கவிஞர்களை யாரும் கொஞ்சமும் வித்தியாசமாக நினைப்பதில்லை. ஆனால் காமம் கலந்து பெண்களின் உணர்வைக் கொண்டு வரும் பெண் கவிஞர்களைச் சாக்கடை என்று எள்ளி நகையாடுகிறார்கள். ம்ம்ம்....இன்னும் நிறையச் சொல்லலாம்.

- யெஸ்.பாலபாரதி said...

உண்மை தான் ராகவன்... அதனால் தான் தமிழை காட்டு மிராண்டி மொழி என்றார் பெரியார். இது கலாச்சார/பண்பாட்டு கோளாறு அல்ல... இது மொழியினால் விழைந்த கூறு.. உண்மையைச் சொன்னால்.. எவனாவது.. என்னை அடிக்க வருவான்..
:(

- யெஸ்.பாலபாரதி said...

அக்கா... நீங்க ஒண்ணும் சொல்லவில்லையே...?

aathirai said...

தமிழ்நாட்டிலா? ஆணாதிக்கமா?

நல்லா இந்த சுட்டியில இருக்க படத்தை பார்த்து சொல்லுங்க
http://thatstamil.oneindia.in/news/2006/04/05/jaya.html

Chandravathanaa said...

பாலபாரதி, ராகவன், ஆதிரை
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

பாலபாரதி
பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற கருத்து
மிகவும் ஆழமாகப் பெண்களின் மூளைகளில் பதிக்கப் பட்டு காலங்காலமாகக் காவப் படுகிறது.
அதன் பிரதிபலிப்புகள் இன்னும் முற்றாக அழிந்து விடவில்லை. இங்கு ஐரோப்பியாவில் வாழும் பெண்களிலேயே பலர் இதிலிருந்து மீளவில்லை. இராஜஸ்தான் மீள்வதற்கு இன்னும் எத்தனையோ காலங்கள் தேவைப்படும்.

மராட்டியர்களுக்கு மகாத்மா பூலேவும், நமக்கு தந்தை பெரியாரும் இல்லையெனில் நம் ஊரின் நிலை இதனைவிட கேவலமாக இருந்திருக்கும். ஏனெனில் நம் மொழி ஆண் குரலுடைய மொழி...

உண்மைதான் பாலபாரதி.
ராகவன் சொல்வது போல முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும் போது இன்றைய நிலையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் முழுமையான மாற்றங்கள் என்பது இன்னும் இல்லை. பெண்களாகப் பல விடயங்களை உணர வேண்டும். பெண்களே பெண்களைத் தூற்றும் அற்பத்தனமான செயல்களை விடுத்து அறியாமையில் இருக்கும் பெண்களுக்கு சரியான உணர்த்துதல்களைக் கொடுக்க வேண்டும். ஆண்களும் இதில் பெண்களின் முன்னேற்றத்திற்கு உகந்த வகையில் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

பெண்களை உரித்து உரித்து எழுதும் ஆண்கவிஞர்களை யாரும் கொஞ்சமும் வித்தியாசமாக நினைப்பதில்லை. ஆனால் காமம் கலந்து பெண்களின் உணர்வைக் கொண்டு வரும் பெண் கவிஞர்களைச் சாக்கடை என்று எள்ளி நகையாடுகிறார்கள். ம்ம்ம்....இன்னும் நிறையச் சொல்லலாம்.

ராகவன்
இதுவும் ஆண்களின் ஆதிக்கப் பார்வையே.
பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் இதை இதைத்தான் எழுதலாம். என்று அவர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். அதை மீறிய பெண்ணின் உணர்வுகளையோ அதன் வெளிப்பாடுகளையோ ஏற்றுக் கொள்ளும் மனப் பங்குவம் அவர்களிடம் இல்லை.

Chandravathanaa said...

ஆதிரை
சுட்டிக்கு நன்றி.

முத்து இதை நகைச்சுவையாகப் போட்டிருக்கலாம் என்ற கருத்துப் பட எழுதியுள்ளர்கள்.
ஆனால் ஜேர்மனியப் பத்திரிகைச் செய்திகள் கூறும் விதமோ வேறு பார்வையில் உள்ளன.
அதுபோக நகைச்சுவைக்கு கழுதையோடு ஒப்பிட பெண்களா கிடைத்தர்கள்?

thiru said...

ராஜஸ்தானில் தான் பார்ப்பனீய பாரதீய ஜனதா கட்சியின் மதவெறி, பிற்போக்குத்தன (வலதுசாரி) ஆட்சி நடக்கிறது. மாநில முதல்வராக ராஜமாதா (!) வசுந்தராஜே சிந்தியா என்ற பெண்மணி தான் இருக்கிறார். இருந்தும் இது தான் அந்த மாநில கல்வி என்றால், பார்ப்பனீய சங்க்பரிவார சிந்தனை பெண்களை எவ்வளவு கீழ்த்தரமாக பார்க்கிறது என விளங்குகிறது.

Albert said...

பரபரப்புதான் ஐரோப்பியக் கலாச்சாரம் என்றாகிவிட்டது. அதிலும் கிழ்காசியாவைப் பற்றி ஏதாவது எழுதி தனது பத்திரிக்கைகளை விற்க முனைவது ஐரோப்பாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவெ இஸ்லாம் மற்றும் இந்து மதக் கடவுளி உருவங்களை அவமானப் படுத்தி நல்ல பெயர் பெற்றனர். இப்போது பெண்களை இழிவு படுத்தி பிரச்சாரம். இருந்தாலும் பீகார், ராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களில் பெண்களின் நிலை இவ்வாறுதான் போலும்.
...ஆல்பர்ட்

Bharaniru_balraj said...

பெண்கள் இப்போது எல்லாத்துறையிலும் சாதனை படைக்கிறார்கள்.

ஒரு வேளை அதே போல் உதைத்தால் இப்படி சிந்திக்க மாட்டார்கள்.

Oodam said...

ஆசியர்களை மட்டந் தட்டுவதற்கு; ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பின் நிற்பதில்லை.

Chandravathanaa said...

திரு, அல்பேர்ட், பால்ராஜ், வில்லண்டம்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite