Google+ Followers

Sunday, July 09, 2006

கனவுகள்


கனவுகள் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பேன்.மறக்க முடியாத கனவுகளும், நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாத்தியமில்லாத விடயங்களைக் கொண்ட கனவுகளுமே என்னை அப்படிச் சிந்திக்க வைத்திருக்கின்றன
சில கனவுகள் கண்டு ஓரிரு நாட்களில் அதனோடு சம்பந்தமான சம்பவங்களும் நடந்துள்ளன.


இந்த நிலையில் இன்று உமா கதிரின் பதிவில் கண்ட கனவு பற்றிய சில தகவல்கள் என்னைக் கவர்ந்துள்ளன.

கனவுகளுக்கு ஜாதக ரீதியாக பலன்கள் உண்டோ, இல்லையோ, விஞ்ஞான ரீதியாக பலன்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருநாள் இரவில் ஆறு கனவுகள் வருகிகின்றன. ஒவ்வொரு கனவும் குறைந்தது 10 நிமிடங்கள் நீடிக்கின்றன!. என்கிறார் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள செம்டெக் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் ஹார்ட்மென்.

நமது தூக்க ஓய்வின் போது தசைகள் தூண்டி விடப் படுகின்றன. அதனால், மூளை லட்சக்கணக்கான நரம்பியல் தொடர்களை தூண்டி விடுகிறது. அவை பிம்பங்களாக தெரிகின்றன. நரம்பியல் சமிக்ஞைகளின் மூலம், தான்தோன்றித் தனமாகத் தோன்றும் பல்வேறு பிம்பங்களை நமது மூளை இணைத்து ஒரு கனவாக உருவாக்குகிறது.

விஞ்ஞான பூர்வமாக இப்படி 1973ல் கனவை பற்றிக் கூறினார்கள், ஆலன் ஹாப்ஸன் மற்றும் ராபர்ட் மெக்கார்லே எனும் விஞ்ஞானிகள்.

ஒரு பிரச்சினையில் சரியான தீர்வுக்கு வரமுடியவில்லையா? கவலையை விடுங்கள். அந்தப் பிரச்சினையைப் பற்றியே சிந்தித்தபடி தூங்கி விடுங்கள். அந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் அறிஞர் கார்பீல்டு. தினமும் ஏதேனும் பயங்கரமான கனவுகள் தோன்றினால் அவை உங்களுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த முயல்கின்றன என தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் கார்பீல்டு.

பிரபல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், துப்பறியும் நிபுணர்களுக்கு, சில விஷயங்களில் அவர்கள் மண்டையை போட்டு உடைத்து கொண்ட போதெல்லாம் அவர்கள் கண்ட கனவுகள் மூலமே நல்ல தீர்வு கிடைத்தது என்கிறது வரலாறு.

டாக்டர் ஜக்கைல் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க ராபர்ட் லூயிஸ்ஸ்டீவன்சனுக்கு அவர் கணட கனவு கனவுதான் உதவியது.

தையல் இயந்திரம் கண்டு பிடிக்கும் போது, பல தவறுகள் செய்த படி இருந்தார் எல்லீஸ் ஹோவோ என்பவர். இறுதியில் அவர் கண்ட கனவின் மூலமே அந்த தவறுக்குச் சரியான தீர்வு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இரவில் நீங்கள் கண்ட கனவினை துல்லியமாக நினைவில் வைத்திருந்து திரும்ப நினைத்துப் பார்க்க முடியுமானால், அது உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற பல நல்ல உத்திகளைத் தெளிவு படுத்தும் என்கிறார் டாக்டர் கோல்டர் ரூல்.

14 comments :

Sivabalan said...

நல்ல பதிவு.

நன்றி.

மலைநாடான் said...

/சில கனவுகள் கண்டு ஓரிரு நாட்களில் அதனோடு சம்பந்தமான சம்பவங்களும் நடந்துள்ளன./

உங்களுக்குமா ?

என் வாழ்க்கையில் பல முக்கிய நிகழ்வுகளைக் கனவில் முன்னமே கண்டுள்ளேன். நம்ப முடியாத ஆனால் நடந்த உண்மைகள் அவை.

கானா பிரபா said...

முன்னர் கனவில் கண்ட விடயமோ, இடமோ நீண்டகாலத்தின் பின் என் வாழ்வில் சில தடவை தோன்றியிருக்கின்றன. விடை காணாக் கேள்வி இது.

Venkataramani said...

Hi,

As part of my Archive Browser efforts, I have showcased the archives from your blog in this page. Please check it out.

http://www.anniyalogam.com/showcase/showcase.html

-Ramani

Chandravathanaa said...

சிவபாலன்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

Chandravathanaa said...

மலைநாடான்,
உண்மையே!
கனவுகளில் கண்ட விடயங்களை மீண்டும் ஓரிரு நாட்களிலோ அல்லது வாரத்திலோ வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்.
சில ஒரே மாதிரியான கனவுகளைப் பல தடவைகள் கண்டதுமுண்டு.

உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை முதலே கனவில் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். முடிந்தால் அவைகளில் ஒரு சிலதையாவது உங்கள் பதிவில் போடுங்கள்.

தம்பி said...

நன்றி சந்திரவதனா!

கொடுத்து வச்சவங்க நீங்க. கனவு பலிச்சுடுதே

கனவுகள் குறித்த ஏராளமான தகவல்கள் இருக்கு நான் பதிவிட்டது கொஞ்சம்தான். விரைவில் இன்னும் போடணும்

அன்புடன்
தம்பி

Chandravathanaa said...

பிரபா
உங்கள் அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.
முடியும் போது ஒன்றொன்றாக எழுதுகிறேன்.
நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

Chandravathanaa said...

உமா கதிர்
சில கனவுகள் பலிக்காமல் இருந்திருந்தால் சந்தோசப் பட்டிருப்பேன்.

உங்களுக்குத் தெரிந்த மற்றைய தகவல்களையும் பதியுங்கள்.
படித்தறிய ஆவலாயுள்ளேன்.

paarvai said...

சந்திரவதனா!
கனவு ஆச்சரியமான விடயந்தான் சிலவேளைகளில்; வீட்டாரைக் கனவு கண்டு ,விடிந்து பார்த்தால் கடிதம் வந்திருக்கும்; எனக்கு இளமை முதல் திருச்செந்தூர் முருகனில் ஏதோ ஓர் இனம் புரியாப் பற்று; (வீட்டில் பேரனார்,பேத்தியார் கதைத்ததைக் கேட்டோ தெரியவில்லை); " தெய்வம்" படம் பார்த்தபின் பலகாலங்களுக்குப் பின் ஓர் கனவில் நான் திருச்செந்தூர்க் கடலில் தீர்த்தமாடுவது போல் கனவு கண்டேன்.விடிந்து ,என் வாழ்வில் திருச்செந்தூரா??, என வியந்து;நடக்கவே வாய்ப்பில்லை. என மறந்தே விட்டேன்.ஆனால் 2004;இந்தியா சென்ற போது; நான் சென்ற ஒரே முருகன் கோவில்; திருச்செந்தூர்; முடியிறக்கித் தீர்த்தமாடினேன்.கிட்டத்தட்ட 25 ஆண்டுகளின் பின் ;என்வாழ்விலுமா??? என நான் உதாசீனப்படுத்திய; பலித்த கனவு.
"விளக்கிட முடியாத விடயம்"
யோகன் பாரிஸ்

chinthamani said...

நாம் ஒவ்வொரு கணமும் எத்தனையோ விடயங்களைப் பார்க்கிறோம். அத்தனையையும் அவசரமாக எமது மூளை தனக்குள்ளே பதிந்து கொள்கிறது. ஆனால் அத்தனையையும் ஒழுங்கு படுத்தவோ நேர் சீராக்கி வைக்கவோ மூளைக்கு நேரம் இருப்பதில்லை. தூங்கும் போதுதான் மூளை இந்த ஒழுங்கு படுத்தலைச் செய்கிறது. இந்த ஒழுங்கு படுத்தலின் போதான படங்காட்டலே கனவுகளாகின்றன. இது ஆய்வாளர்கள் சிலரின் கண்டு பிடிப்பு.

பாலசந்தர் கணேசன். said...

மனித மனத்தின் ஆற்றல்களை இன்னமும் நான் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. பயன்படுத்தவும் இல்லை. டிசில்வா மெதட், ஹிப்னாசிஸ் போன்றவற்றை அனுபவித்திருக்கிறீர்களா.

Chandravathanaa said...

யோகன்
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
எல்லாமே புரிந்து கொள்ள முடியாத ஆற்றல்கள்.

சிந்தாமணி
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

பாலசந்தர் கணேசன்
ஹிப்னாசிஸ் ஐக் கொஞ்சம் அனுபவித்தேன் என்றுதான் சொல்லலாம்.
எனது அனுபவத்தை முடிந்தால் பின்னர் எழுதுகிறேன்.

Om Santhosh said...

சில கனவுகள் சில நேரம் உண்மையாகும். அது நம் மனம் எடுக்கும் முடிவை போன்றது

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite