Tuesday, September 26, 2006
உவருக்கு வேறை வேலை இல்லை.
உவருக்கு வேறை வேலை இல்லை.
உதைச் செய்யிற நேரத்துக்கு உவர் வேறை வேலையைச் செய்யலாந்தானே!
உது என்ன பிரயோசனம் எண்டு இவர் எழுதிக் கொண்டிருக்கிறார்?
உந்த நேரத்துக்கு வேறையேதும் பிரயோசனமா எழுதலாந்தானே!
இப்படிக் கதைப்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கிறார்கள்.
இப்படிக் கதைப்பதிலேயே அவர்களது பாதி நேரங்களும் போய் விடுகின்றன.
மற்றவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதிலும் அதைக் குறைந்தது பத்துப் பேருக்காவது சொல்வதிலும் தாம் செய்ய வேண்டிய பிரயோசனமான வேலைகளை அவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
ஒருவருக்கு அவருக்கான நேரத்தில் என்ன செய்யப் பிடிக்கிறதோ, அதை அவர் செய்யலாம். அது யாரையும் பாதிக்காத வரை... அதனால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராதவரை... அவர் அப்படிச் செய்வதில் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் இல்லை. அவருக்குப் பாட்டுக் கேட்கப் பிடித்தால் கேட்கலாம். வாசிக்க விருப்பமாக இருந்தால் வாசிக்கலாம். இல்லை இவை ஒன்றுமே இல்லாமல் நித்திரை கொள்ள விருப்பமாக இருந்தால் நித்திரை கொள்ளலாம். இது ஒரு மனிதனுக்கான சுதந்திரங்களில் ஒன்று. இந்த மனித சுதந்திரத்துக்குள் யாராவது மூக்கை நுழைத்து ஏன் நீ நித்திரை கொண்டாய்? இந்த நேரம் முழிச்சிருந்திருக்கலாமே! என்று கேட்பதோ அல்லது ஏன் இதை எழுதுகிறாய்? அதை எழுதலாமே! என்று கேட்பதோ அர்த்தமற்ற அநாகரீகமான செயல்.
இந்த அர்த்தமற்ற செயலைப் பலரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
▼
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ▼ September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
10 comments :
உந்த நேரத்துக்கு வேறையேதும் பிரயோசனமா எழுதலாந்தானே!
:)
வணக்கம் அக்கா
நான் இது போல் நிறையச் சந்திச்சிருக்கிறன். றேடியோவில் நிகழ்ச்சி செய்தால், உமக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்டும் தெரியாதே என்பார்கள், பிறகு என்ன ஓரே அரசியல் விசயம் கதைக்கிறீர் என்பார்கள், சிலர் என்னப்பா பொது அறிவு எண்டு சொல்லி விளங்காத விசயம் சொல்லி அறுக்கிறீர் என்பார்கள். வேறு சிலர் உமக்கு எப்பிடி உதுக்கெல்லாம் நேரம் கிடைக்குது என்பார்கள் ( அவர்கள் வீட்டில் மனைவி சீரியல் 35 கசற், செல்வி 20 கசற் அடுக்கியிருக்கும் அதைப் பற்றியெல்லாம் நான் கேட்பதில்லை)
ஆனாலும் சந்திரவதனா!
இடம், பொருள்,ஏவல் அறிந்து இதைக் கூற பலருக்கு; உரிமையுள்ளது. படிக்கும் பையன்; அதிக நேரம் விளையாட்டில் செலவு செய்யும் போது;தந்தைக்கு அந்த உரிமையுண்டு. இப்படிப் பல கூறலாம். அதனால் கூறக் கூடாதெனில் விமர்சனமே! இல்லாமல் போய் விடும்.இதே வேளை சிலர்; தாங்கள் செய்வது தான்; சரி! ஏனையோர் எல்லாம் வெட்டிப் பொழுது போக்கிறார்கள்; என மிதப்பில் கூறுவது; பெரிய தவறே! இவ்வகையில் உங்களுடன் ஒத்துப் போகிறேன். இப்படிப்பட்டவர்களுக்கு நான் கூறுவது" உனக்கு பிட்டுப்பிடிக்குது!;ஆனால் எனக்கு வெறும் வயிற்ரோடு கிடக்கணும் போல இருக்கு!"-விடப்பா??,என ஒதுங்கி விடுவேன்.
பேர்னாட் சா பற்றி ஓர் கதை கேள்விப்பட்டேன். அவர் உதைபந்தாட்டம் பார்த்து விட்டுக் கேட்டாராம்; "ஏன் இந்த 22 பேரும்;ஒரு பந்துக்கு ஆலாப் பறக்கிறாங்க!! ஆளுக்கு ஒன்று வாங்கி வீட்டில் விளையாட வேண்டியது தானே"!;
இப்படித்தான் உலகம்!!!!
யோகன் பாரிஸ்
தீவு
நீங்கள் சொல்வதும் சரிதான்.
பிரபா
இன்னுமொன்றை விட்டு விட்டீர்கள்:
தொலைபேசயில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதும், இன்னொருவரைப்பற்றி இன்னோருவருக்குச் சொல்வதும் ஒருவரிடம் கதை விட்டு கதை வாங்கி அதைப் ஒலிப்பேழையில் பதிவு செய்து ஊரெல்லாம் போட்டுக் காட்டுவதும் என்றும் பொழுதைக் கழிக்கிறார்கள்.
அப்படியானவர்கள்தான் கூடுதலாக இப்படியான கதைகளையும் கதைக்கிறார்கள்.
யோகன்
தந்தை மகனுக்கோ அல்லது சகோதரத்துவத்திலேயோ நட்பிலேயோ ஒருவரின் தவறை ஒருவர் சுட்டிக் காட்டுவதும் திருத்த முனைவதும் பிழையென்று காணும் பட்சத்தில் நாசூக்காக அதைத் திருத்தி ஆலோசனை வழங்குவதும்... எல்லnமே அவசியமனாவையே.
ஆனால் நான் குறிப்பிட்டது
அதற்கும் அப்பாற் பட்டவைகளை. நீங்கள் குறிப்பிட்டது போல நடந்து கொள்பவர்கள் ஒரு சாரார்.
இன்னோரு சாரார் இன்னொரு விதமாக நடந்து கொள்வார்கள்.
உதாரணமாக இன்று ஒரு பாலியல் வன்முறை நடந்து விட்டது என வையுங்கள். அதை 20க்கும் மேற் பட்ட வலைத்தளங்களும் 50க்கு மேற்பட்ட இணையத் தளங்களும் கூட்டிக் காட்டியும் வருந்தியும் விட்டன என்று வையுங்கள். இந்த நேரத்தில் யாராவது வேறொரு பிரச்சனையப் பற்றி எழுதினால் உடனே ஒரு சிலர் ஓடி வந்து அதைப்(பாலியல் வன்முறை) பற்றி நீ ஒன்றும் எழுதவில்லை. இதை எழுதுகிறாய்? என்று அங்கலாய்ப்பார்கள்.
இன்னும் பல விதமான குறுக்கீடுகள், தலையிடல்கள் .....
வைசா
அது என்ன கதை?
எனக்கு ஞாபகத்தில் இல்லை.
"வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானாடா"
என்பது போல் நாம் எதைச் செய்தாலும் யாராவது ஏதாவது சொல்வார்கள். நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அதேநேரம் பிதற்றுபவர்களின் கருத்துக்களை உதறித்தள்ளிவிட்டு நாம் செயலில் இறங்கிய கருமத்தை வெற்றியாக முடிக்க வேண்டும்.
அய்யன் வள்ளுவன் அன்றே சொல்லி விட்டாரே:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அதேநேரம் பிதற்றுபவர்களின் கருத்துக்களை உதறித்தள்ளிவிட்டு நாம் செயலில் இறங்கி கருமத்தை வெற்றியாக முடிக்க வேண்டும்.
மிகச்சரியான கருத்து வெற்றி.
நன்றி.
இது உண்மைதான். நான் அனுபவித்தது. இப்போதும் அனுபவிப்பது.
ஒருவிதத்தில் முதிர்ச்சியற்ற சிந்தனையோட்டமே இது. தவிர சுயவிமர்சனத்தை விரும்பாதவர்களும், தமக்கு சார்பற்ற கருத்துக்களை ஏற்க முடியாதவர்களும் இதையே கைக்கொள்ளுகின்றனர்.
:(
சஞ்சயன்
கருத்துக்கு நன்றி சஞ்சயன்.
Post a Comment