
பொல்லெடுத்து
உனை அடித்தார்களா..!
சொல்லெடுத்து
மனம் சிதைத்தார்களா..!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து....
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!
சந்திரவதனா
யேர்மனி
10.3.2003
2 comments :
வணக்கம் அக்கா
உங்களின் ரெம்ப்ளேட்டில் ஏதோ பிழையிருக்க வேண்டும் , என் வீட்டு மற்றும் அலுவலகக் கணினியில் இதைத் திறக்கும் போது வெறுமையான பக்கமாகவே வருகிறது. இதனால் பல பதிவுகளைத் தவரவிட்டுவிட்டேன். சரிபார்க்கவும்.
உங்களிடம் எழுத்தாளர் இந்துமகேஷின் தொலைபேசி எண் இருந்தால் என் மின்னஞ்சல் இற்கு அனுப்புகிறீர்களா?
kanapraba@gmail.com
நன்றி பிரபா.
என்ன பிழை என்று தெரியவில்லை. பார்க்கிறேன்.
Post a Comment