Friday, April 27, 2007

நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி...

வெற்றி கேட்டுக் கொண்டதின் பேரில்


இந்த விளையாட்டுப் பாடல்கள் யாருக்காவது தெரியுமா?

1 காற்றடிக்குது மழை அடிக்குது..

2 நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி..

3 அருப்புத் தட்டி இருப்புத் தட்டி...

முழுப் பாடலும் தேவைப் படுகிறது

16 comments :

Anonymous said...

நுள்ளுப்பிராண்டு கிள்ளுப்பிராண்டு கொககா தலையில் என்ன பூ?

ரோசாக் பூ

ரோ.. சா.. ப்.. பூ... ஹையா.. சந்திரவதனா.. கடைசியா நீங்க நீட்டியிருந்த உங்க கைவிரல்லதான் முடிஞ்சிருக்கு.. நீங்க அவுட்.. :)

Haran said...

நுள்ளுப் பிராண்டி... கிள்ளுப் பிராண்டி... கொக்கா தலையில் என்ன பூ??
முருக்கம் பூ...
முருக்கம் பூவைத் தின்றவனே... மிழகு சாறு குடித்தவனே... ஓர் கையை எடு...
(அவ்வளவு தான் எனக்குத் தெரியும்... இந்தப் பூக்களின் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்வார்கள் என நினைக்கின்றேன்)

சினேகிதி said...

எனக்கு நீங்க சொன்னவற்றில் நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டிட முதல் வரிதான் ஞாபகம் இருக்கு...மற்ற 2ம் கேள்விப்படவே இல்லை.

Avanthika said...

நாங்க விளையாடறது

பருப்பாம் பருப்பாம் பனிரண்டு பருப்பாம்,

சுக்கத் தட்டி சோத்துல போட்டு

உங்க அப்பன் பேர் என்ன?
முருங்கப் பூ

முருங்கப் பூ தின்னவனே, முள்ளாங் கஞ்சி குடிச்சவனே..

பாம்பு கைய மடக்கு...

மாட்டேன்னா மாட்டேன்

மாதுளங்காய் கோட்டை

சட்டியில வெண்ணை

சாமியார் பூசை....

ஹா ஹா...நல்லா இருக்கில்ல aunty

Chandravathanaa said...

மிகவும் நல்லா இருக்கு அவந்திகா.
நன்றி.

தமிழ் வாலிபன் said...

அக்கா தலையில என்ன பூ?
முருக்கம் பூ...
முருக்கம் பூவை பறிச்சவளே ..
முன்னாங்கு கெட்டவளே
ஒரு கையை மடக்கடி
தோழிப்பெண்ணே!!


எங்கள் குழுமத்தில் இட்டு கிடைத்ததை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி..
http://groups.google.com/group/Piravakam

தமிழ் வாலிபன் said...

இன்னும் சில

காற்றடிக்குது மழயடிக்குது
கண்ணாம் பூச்சி கண்ணுக்குள் அடிக்குது
அக்கக்கா கதவை திற..

என்ன?
அன்னம்!
என்னன்னம்?
சோத்தன்னம்.
என்ன சோறு?
பழஞ் சோறு.
என்ன பழம்?
மாம்பழம்.
என்ன மா?
அரிசி மா
என்ன அரிசி
குத்தரிசி?
என்ன குத்து
கைக் குத்து
என்ன கை
உலக்கை!

என்ன?
அன்னம்.
என்ன அன்னம்?
சோற்றன்னம்.
என்ன சோறு?
பழஞ் சோறு,
என்ன பழம் ?
வாழைப்பழம்
என்ன வாழை?
மா வாழை.
என்ன மா?
அம்மா!

கீச்சு மாச்சு தாம்பாழம்
கீயா மாயா தாம்பாழம்
மாச்சு மாச்சு தாம்பாழம்
மாயா மாயா தாம்பாழம்
(தாம்பாழம்) = பெரிய தட்டு

அக்கா வீட்டை போனன்.

அறுகரிசி தந்தா.

வேண்டாமெண்டு வந்தேன்.

வழியெல்லாம் பாம்பு.

பாம்படிக்க தடிக்கு போனேன்.

தசியெல்லாம் ஊத்தை

ஊத்தை கழுவ தண்ணிக்கு போனேன்

தண்ணியெல்லாம் மீன்

மீன் பிடிக்க வலைக்குப் போனேன்

வலையெல்லாம் பீத்தல்

பீத்தல் தைக்க ஊசிக்குப் போனேன்

ஊசியெல்லாம் வெள்ளி

வெள்ளியடி வெள்ளி

வெத்திலைக் (போயிலைக்) காம்பை நுள்ளி..

போட்டுக்கடி கள்ளி.



கொல கொலயா முந்திரிக்கா....
குலை குலையா முந்திரிக்காய்
நரியை நரியை சுற்றி வா
கொள்ளையடித்தவன் எங்கிருக்கான்?
கூட்டத்தில் இருக்கான் கண்டு பிடி.

http://groups.google.com/group/Piravakam
நன்றி..

Chandravathanaa said...

நன்றி சினேகிதி

Chandravathanaa said...

தமிழ் வாலிபன்,
மிகவும் நன்றி.
மறந்து போனபவைகளை ஞாபகப் படுத்தியுள்ளீர்கள்.
மேலதிக பாடல்களும் கிடைத்துள்ளன.

Anonymous said...

நுள்ளுப் பிராண்டி... கிள்ளுப் பிராண்டி... கொக்கா தலையில் என்ன பூ??

முருக்கம் பூ...

முருக்கு தரிச்சு முன்னால வச்ச விளாம்பழமெங்க,

கொக்காள் திண்டுட்டாள்.

கொக்காள் பெருமாள் பஞ்சத்தடி மடக்கு.

வெற்றி said...

சந்திரவதனா அக்கா,
மிக்க நன்றி. தமிழ் வாலிபனின் புண்ணியத்தில் மேலும் தகவல்கள் கிடைச்சிது.

Chandravathanaa said...

வெற்றி
உங்களுக்கும் பயனாக இந்தப் பதிவு இருந்ததில் மகிழ்ச்சி

Chandravathanaa said...

thanks Anonymous

த.அகிலன் said...

உண்மையாகவே மிகவும் பால்ய நினைவுகளிற்குள் கொண்டு போய்விட்டது உங்கள் தலைப்பு எங்கே முழுப்பாடலும் இருக்குமோ என்று ஓடிவந்தேன் ஏமாற்றம்தான் பரவாயில்லை. யாரும் பின்னூட்டமாக இட்டாலும் அது முழுமையாக கிடைத்தவுடன் பதிவாக இடுங்கள்.

நிலவிரவுகளில் எல்லாக்கைகளையும் விரித்து வைத்து விளையாடிய மனம் இன்னமும் ஓவியமாய்க்கிடக்கிறது.வார்த்தைகள்தான் மறந்து போய்விட்டன.இப்போதைக்குகையை மடக்கிக்கொண்டு போகிறேன். நீங்கள் பதிவு போடுங்கள்...

Chandravathanaa said...

அகிலன்
உங்களுக்கும் இப்பதிவு சந்தோசமான நினைவுகளைத் தந்ததில் எனக்கும் சந்தோசம்.

இப்பதிவு எப்படியோ இரண்டு தரமாகப் பதியப் பட்டு கருத்துக்களும் இரண்டாகப் பிரிந்து விட்டன.
அவைகளையும் கீழே தருகிறேன்.

http://manaosai.blogspot.com/2007/02/blog-post_27.html

மலைநாடான் hat gesagt...
சந்திரவதனா!

ஒரு பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது.

நுள்ளுப் பிராண்டு கிள்ளுப் பிராண்டு, கொக்காதலையில் என்ன பூ. முருக்கம்பூ.
முருக்கதறிச்சு விளாத்தியடிச்சு நொறுக்கித் திண்ட அவன் யார்?

க..ள்..ள..ன்


Garunyan hat gesagt...
நீங்கள் எழுதியவற்றுள் 3 தெரியவில்லை.
ஏனையவையும் பெரிய பாடல்கள் இல்லை. சும்மாதானும் Riddles மாதிரித்தான் சொல்வோம் சிறுவயதில்.

காற்றடிக்குது மழையடிக்குது கந்தப்பன் பொண்டிலை தூக்கிக் கொண்டு ஓடுது

மின்னல் பொறிக்குது வெள்ளம் வருகுது
சின்னப்பன் பொண்டிலை அள்ளிக் கொண்டோடுது

இவை நாட்டுப்புற மருவல்களாகவோ/ திரிபுகளாகக்கூட இருக்கலாம்.

Garunyan hat gesagt...
நுள்ளூப்பிராண்டு கிள்ளுப்பிராண்டு கொக்கா தலையிலே என்ன பூ?

முருக்கம்பூ

முருக்குத்தறிச்ச விழாம்பழத்தை எடுத்துத்தின்ற கள்வன் யார்?

அச்சுதன் ( உதாரணம்)

அ1 ச்2 சு3 த4 ன்5

ஒவ்வொரு கையையும் குத்தி பெயரின் (எழுத்தின் எண்ணிக்கையால்)

எவரில் பெயரில் முடிகிறதோ அவர் கையை திருப்புவார்.

திருப்பிய கையில் மறுதடவையும் விளையாட்டு முதலில் இருந்து விளையாடப்படும்.

இது எல்லாப்பெண்களும் அறிவார்கள் என்றே நினைக்கிறேன்.

Anonymous hat gesagt...
"நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி.."
இது சரியா? அல்லது
"நுள்ளுப் பிராந்து கிள்ளுப் பிராந்து.."
சரியா??

தமிழன்-கறுப்பி... said...

நெடுநாட்களாகவே என் மனதிலும் இருக்கிற விசயம்தான்; இந்த விளையாட்டுகள் என்ன இன்னும் பல விளையாட்டுகளே இப்ப இல்லாமல் போய்விட்டது உதாரணமாக கிட்டிப்புல்லு ஏன் போலை(டோங்குண்டு என்று சொல்லுவோம்) கூட இப்ப விளையாடுவதில்லை…கிளித்தட்டு கூட ஒரு சில போட்டிகளின்போது மட்டுமே விளையாடுகிறார்கள்…

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite