
வாழ்க்கை
அது மிக வேகமாக விரைகிறது
எந்த அவசரத்திலும்
உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் செல்லாமல்
2)
அன்பு காதல் நன்றி...
போன்ற சொற்களுக்குள்
அடக்க முடியாத உணர்வுகள்
சமயத்தில் என்னை
திக்கு முக்காட வைக்கின்றன
3)
நடுநிசியில்
உன் நினைவுகள்
என்னைத் தட்டி எழுப்புகின்றன
4)
பகல் பொழுதுகளில்
ஆழ்ந்த மௌனத்தில் இருப்பதாய் நினைக்கிறார்கள்
நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பது தெரியாத
அயலவர்கள்
5)
சிலதை வாய் திறந்து
யாரோடாவது பேச வேண்டும் போல
மனசு அந்தரிக்கும்
அப்படித்தான் இப்போது
உன்னைப் பற்றியும்
6 comments :
பாசாங்கில்லாத நல்ல கவிதை. உணர்வுகளை உணர்த்தியுள்ளீர்கள்.
அழகான கவிதை. உயிரோட்டமானது வாழ்த்துக்கள்.
நான்காவது சூப்பர்! ம்ம்ம்... உணர்ந்தவர்களுக்கு புரியும் உண்மை. உணராதவர்கள் என யாரும் இருக்க முடியாது, இல்லையா?
ஹ்ம்ம்ம்...அருமை
// சிலதை வாய் திறந்து
யாரோடாவது பேச வேண்டும் போல
மனசு அந்தரிக்கும்
அப்படித்தான் இப்போது
உன்னைப் பற்றியும்//
அருமையான உணமையான வரிகள்..
மனதின் வேகத்திற்கு நிகர் ஏது. உடல் அசையாமலேயே உள்ளம் பல காலம் பின்னோக்கி சென்று அசை போட வைக்கும் உணர்வுகளின் வெளிப்பாடுகள். வாழ்த்துக்கள்.
ஜெஸிலா, வித்யா கலைவாணி, காட்டாறு, மங்கை, காரூரன்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இவைகளைக் கவிதை என நான் கொள்ளவில்லை. கவிதைக்கான வரைவிலக்கணமும் எனக்குத் தெரியவில்லை.
இன்பமோ, துன்பமோ, இயலாமையோ அன்றி சாதனையோ.. ஏதாவதொரு காரணத்தினால் மனதில் எழும் உணர்வுகள் சிலசமயங்கள் வார்த்தைகளாக மனதிலோ அல்லது டயறியிலோ பதியப்பட்டு விடுவதுண்டு. அவைகளில் சிலவே இவை.
Post a Comment