உடல் சிதற முன்னமே மனம் சிதறிய
கோணேஸ்வரியின் மரணச் செய்தியிலும்
உடல் புதையும் முன்னரே மனம் வதை பட்ட
கிருசாந்தியின் மரணச் செய்தியிலும்…
இன்னும் இவை போலவே
வெளியுலகத்துக்குத் தெரிந்தும்
தெரியாமலும்
மனம் கருகியும் உடல் சிதறியும்
சிதை பட்டுப் போன சகோதரிகளின்
வந்ததும் வராது போனதுமான
மரணச் செய்திகளிலும்...
வந்த வேதனையையும் கோபத்தையும் விட
அதிக கோபம் வருகிறது
இன்றைய சிலரின் பேனா முனைகளில்
அந்த சகோதரிகளின்
அங்கங்கள் சிதையும் போது
கவிதைகளுக்கும் விவாதங்களுக்கும்
அவர்களின் அங்கங்கள்தான் கிடைத்தனவா?
மனசு தகிக்கின்றது
எங்கள் சகோதரிகளின் மூச்சை நிறுத்திய
இராணுவங்களின் துப்பாக்கிகளை விட
இவர்கள் பேனா முனைகள் கொடியன
எங்கள் தேசக்காற்றை மாசு படுத்திய
எக்காளங்களை விட
இவர்களின் சிந்தனைகளில் ஊற்றெடுக்கும்
எழுத்துக்கள் குரூரமானவை.
11.3.2007
Tuesday, March 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)






7 comments:
ஆவேசம் கொப்பளிக்கும் கவிதை, கேட்க வேண்டியவங்களுக்கு கேட்டு திருந்தினா சரிதான்... என்ன ஒரு கொடூரம்.. சே அவங்க எல்லாம் மனுசங்கதானா? இவுங்க வீட்டுலன்னா இப்படி பண்ண தோணுமா?
இன்றைய சிலரின் பேனா முனைகளில்
அந்த சகோதரிகளின்
அங்கங்கள் சிதையும் போது
கவிதைகளுக்கும் விவாதங்களுக்கும்
அவர்களின் அங்கங்கள்தான் கிடைத்தனவா?
மனசு தகிக்கின்றது
எங்கள் சகோதரிகளின் மூச்சை நிறுத்திய
இராணுவங்களின் துப்பாக்கிகளை விட
இவர்கள் பேனா முனைகள் கொடியன
அன்றைய காற்றை மாசு படுத்திய
எக்காளங்களை விட
இவர்களின் சிந்தனைகளில் ஊற்றெடுக்கும்
எழுத்துக்கள் குரூரமானவை--
குரூரமானவை
ஆமாம்.
அக்கா விளம்பரப் பிசாசுகளை விட்டுத்தள்ளூங்கள். இவர்களுக்கு எல்லாம் யுத்தம் என்பது டிவியில் பார்க்கும் செய்திமட்டுமே.
// வந்தியத்தேவன் said...
அக்கா விளம்பரப் பிசாசுகளை விட்டுத்தள்ளூங்கள். இவர்களுக்கு எல்லாம் யுத்தம் என்பது டிவியில் பார்க்கும் செய்திமட்டுமே.
//
வந்தியத்தேவன் சரியா சொல்லியிருக்கிறார் வதனா. மனதில் வடியும் குருதி இவர்கள் வீட்டு கதவில் வடியும் போது புரியும் வேதனையென்றால் என்னவென்று.
ம்..என்னத்தைச் சொல்ல.
Sorry. I don't know Tamil typing.When I read that poem, I could not sleep that day ! After reading the comments on this poem, I felt very sad. The feelings expressed in that poem are above criticism and come out of deep anger and no body has the right to question it. Please you need not praise the Tamil warriors of Srilanka, but don't hurt them.
Post a Comment