இன்றாவது அவளைப் பற்றி நான் எழுதி விட வேண்டும். 13 வருடங்களாக மன இடுக்குகளில் ஒளிந்திருப்பவள்.
அவள் ஒரு சிங்களப் பெண். பெயர் வலன்ரீனா. மிகவும் மென்மையாகப் பேசத் தெரிந்தவள்.
இடுப்பில் குடத்துடன் தண்ணீர் மொண்டு கொண்டு செல்ல வந்திருந்தாள். பார்த்த
மாத்திரத்திலேயே எனக்கு அவளைப் பிடித்துப் போயிருந்தது. அவளுக்கும்
என்னைப் பிடித்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். கிணற்றிலிருந்து தண்ணீரை
மொண்டு குடத்தை நிரப்பும் போதும் சரி, குடத்தை இடுப்பில் வைத்துத்
திரும்பும் போதும் சரி என்னுடன் கதைத்துக் கொண்டே இருந்தாள். எனது அந்தரமான
மனநிலை பற்றி அவளுக்கு ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
„தம்பி
விடுதலைப்போரில் மாவீரனாகி விட்டான்“ என்றாள். ஆச்சரியம் மேலிட „எங்கே
நடந்தது?“ என்று கேட்டேன். தாங்கள் முதலில் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும்
அங்கு நடந்த போரில்தான் தம்பியை இழந்ததாகவும் சொன்னாள்.
விடுதலைப்புலிகள்தான் தமக்கு இப்போது இங்கே பாதுகாப்புத்
தந்திருக்கிறார்கள் என்றாள்.
நான் எனது தம்பிமாரைப் பற்றியும் சொன்னேன்.
உடனே அவள் „நானும்
அம்மாவும் மட்டுந்தான் அங்கே எங்கள் வீட்டில் தனியாக வசிக்கிறோம்.
ஒருக்கால் வந்து விடு. உன்னைப் பார்த்தால் எனது அம்மா மிகவும் சந்தோசப்
படுவாள்“ என்றாள்.
இப்போது ஒரு முக்கியமான விடயத்துக்காகக்
காத்திருப்பதால் வர முடியாத சங்கடமான நிலையில் உள்ளேன் என்பதைச் சொன்னேன்.
என்ன விடயம் என்று சொல்லி விடலாமா என்று கூட யோசித்தேன். எனது தயக்கத்தைப்
பார்த்து „கனதூரம் இல்லை. பக்கத்தி லைதான் வீடு“ அவள் மீண்டும் மீண்டுமாய்
வலிந்தழைத்தாள். ஒரே ஒரு தடவை வரும்படி இரந்து கேட்டாள்.
நான்
அவள் காட்டிய பக்கம் பார்த்தேன். எந்த வீடும் என் கண்களுக்குத்
தெரியவில்லை. எல்லா வீடுகளுமே அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தனவோ?
„உடனை போயிட்டு வந்திடலாம்“ என்றாள்.
அவளது அன்பான வேண்டுதலும், கனிவான பேச்சும், என்னைத் தன் அம்மாவிடம்
அழைத்துப் போக வேண்டுமென்ற ஆர்வமும், ஆவலும் அதீதமானதாகவே இருந்ததால் என்
மனது மிகவும் சஞ்சலப்பட்டது. ஒருக்கால் போயிட்டு வருவோமா என்ற எண்ணம்
என்னை உந்திக் கொண்டே இருந்தது. ஆனாலும் போகவில்லை.
அன்று
30.05.2002 தலைவர் பிரபாகரனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி
வெண்புறாநிலையத்திலிருந்து புறப்பட்டு இடையில் மரங்களும், செடிகொடிகளும்
நிறைந்து மறைந்திருந்த ஒரு குடிசையடியில் அடுத்து வரப்போகும்
வாகனத்துக்காகக் காத்திருந்தோம். வாகனம் வருமா? எப்போது வரும்? அல்லது
பிரபாகரனே அங்குதான் வரப்போகிறாரா? என்று எத்தனையோ கேள்விகள் தொக்கி நிற்க
காத்திருந்த அந்த வேளையில்தான் வலன்ரீனா அங்கே குடத்துடன் வந்தாள். மிகவும்
மெல்லிய, சிறிய, அழகிய, இளம் சிங்களப் பெண்.
இன்றும் கூட எனக்குள் ஒரு வேதனை. அவளது ஆசைக்கு இணங்கி ஒரு தரம், ஒரே ஒரு தரம் போய் அவளது அம்மாவைச் சந்தித்திருக்கலாமே என்று.
சந்திரவதனா
24.7.2015
Friday, July 24, 2015
Friday, July 17, 2015
சாதல் என்பது...
பெண்களின் மனஉணர்வுகளை ஆண்களும், ஆண்களின் மனஉணர்வுகளைப் பெண்களும் எழுதித்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். ஒரு கணவன் தனது உண்மையான மனஉணர்வுகள் எல்லாவற்றையும் தனது மனைவியிடம் சொல்லி விடுவதில்லை. மனைவியும்தான். சொன்னால் பிரச்சனையாகி விடும் என்பதுதான் அதற்கான முக்கிய காரணம்.
வாசித்தலில் கூட மனம் ஒட்டாத ஒரு பொறுமையின்மையான நேரத்தில் இன்று தற்செயலாக பொ. கருணாகரமூர்த்தியின் சாதல் என்பது... என் கண்களில் பட்டது. கருணாகரமூர்த்தியினது என்பதால் அலையும் மனதை இழுத்து நிறுத்தி வாசித்தேன்.
இம்மாத காலச்சுவடில் பிரசுரமாகியுள்ளது.
கற்பனைகளை விட உண்மைக்கே முக்கியத்துவம் கொடுப்பவை பொ. கருணாகரமூர்த்தியின் படைப்புகள். இந்தப் படைப்பு மனதில் மெல்லிய சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. ஒருவித மனக்கவலையுடன் எழுதப்பட்டது போன்றும் தோன்றியது. கூடவே ஒரு ஆணின் உணர்வுகளும், சபலங்களும் தயங்காது எழுதப்பட்டிருந்தது.
எழுத்தின் போக்கு ஏனோ மனதை நெருடுகிறது. கருணாகரமூர்த்தி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
17.7.2015

http://kalachuvadu.com/issue-187/page64.asp
சாதல் என்பது... பொ. கருணாகரமூர்த்தி
Thursday, July 09, 2015
வக்கிரங்கள்
எனக்குத் தெரிய ஒரு பெண் குழந்தை தனது உறவுக்காரர் ஒருவர் தன்னுடன் பிழையாக நடக்கிறார், அத்து மீறுகிறார் என்பதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்து ஒருவாறு வெளியில் சொன்ன போது - சுற்றியுள்ள மற்றைய உறவுகள் - குறிப்பாகப் பெண்களே அவள் இப்படியொரு ஊத்தைத்தனமான பொய்யைச் சொல்கிறாள் என்று சொல்லி அவள் மீதே பழியைப் போட்டு அவளைப் பொய்காரி ஆக்கி விட்டார்கள்.
Wednesday, July 01, 2015
பெருவிரல்
என்ன நடக்கிறது என்று சிந்திக்க முன்னமே அது நடந்து விட்டிருந்தது. அடித்துச் சாத்திய கதவின் ஓசையா, வலி பற்றிய மூளைக்கான அறிவிப்பா முந்திக் கொண்டதெனத் தெரியவில்லை. திரும்பிய போதுதான் தெரிந்தது பொறியில் மாட்டிய எலியாய் நான் நிற்பது.
எப்படி நடந்தது? எல்லாமே சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தன. வழமையைப் போல மீண்டும் ஒரு கணத்தில் கவனத்தை எங்கோ சிதற விட்டு விட்டேனே!
அழக் கூட முடியவில்லை. வலி என்னை இனியில்லை என்றளவுக்கு வருத்தியது. என்னிலிருந்து 200மீற்றர் தூரத்தில் அந்த உணவகத்தை மொய்த்திருந்தவர்கள் சிரிப்பும், களிப்புமாய் உணவைச் சுவைத்துக் கொண்டும், ஐஸ்கிறீமை ரசித்துக் கொண்டும், அற்ககோல் நிரம்பிய பானங்களை ருசித்துக் கொண்டும் எத்துணை ஆனந்தமாக இருந்தார்கள். வழமையில் அதனருகில்தானே எனது வாகனத்தை பார்க் பண்ணுவேன். இன்று பார்த்து ஏன் இங்கே?
என்னைப் பார்ப்பார் யாருமில்லை. பார்த்தவர்களும் நான் என்ன செய்கிறேன் என்று பார்ப்பது அநாகரிகம் என்பது போல பார்த்தும் பார்க்காமல் இருந்தார்கள். உதவி, உதவி என்று நான் கத்தும் போதெல்லாம் காற்று அதை மறுபக்கமாக தன்னோடு அள்ளிச் சென்று கொண்டிருந்தது. கொஞ்சநஞ்சமாக மிஞ்சிய என் ஒலியும் அவர்களின் சிரிப்புக்குள் கரைந்து கொண்டிருந்தது.
யாராவது என்னைத் தாண்ட மாட்டார்களா என்று ஏக்கத்துடன் மனம் தவித்த போது என்னை நோக்கி ஒரு மோட்டார் வாகனம். அதில் ஒரு இளம்சோடி. அந்த வலியிலும் மனம் நம்பிக்கையில் மகிழ்ந்தது.
கஸ்ரப்பட்டு எனது இடது கையை கையை உயர்த்தி அவர்களை சைகையால் அழைத்து எனது வலது கையைச் சுட்டிக் காட்டினேன். வாய் உதவி உதவி என்று ஒலி எழுப்பியது. அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு எனக்குக் கையைக் காட்டி மகிழ்ச்சி தெரிவித்தவாறு என்னைக் கடந்தார்கள்.
இப்போது சட்டென்று அறுந்து விழுந்த நம்பிக்கையில் வலியோடு பயமும் தொற்றிக் கொண்டது. ஒவ்வொரு கணமும் யுகமாய் என்னை வதைத்துக் கொண்டிருந்தன.
எப்படி அது நடந்தது என்று தெரியவில்லை. டிக்கியைத் திறந்து சில பொருட்களை வைத்துச் டிக்கிக்கதவை அடித்துச் சாத்தியவாறே காரின் இடதுபக்கம் விரைந்த போதுதான் அது நடந்தது. கைவிரலை நெரித்து விட்டேன் என்று மட்டும் முதலில் உணர முடிந்தது. ஆனால் விரல் எடுக்க முடியாதபடி சிக்கி விட்டது என்பது பின்புதான் தெரிந்தது. லொக் விழுந்து விட்டதால் சும்மா கதைவைத் திறக்க முடியவில்லை. வலதுகைப் பெருவிரல் மாட்டியிருப்பதால் இடதுகையை வலது பக்கத்துக்கு நீட்டி சுவிச்சை அழுத்தவும் முடியவில்லை. எனது ஒவ்வொரு சிறு அசைவும் என் உயிரையே வதம் செய்தன. யாராவது வந்து திறந்து விடாமல் நான் அசையவே முடியாது.
எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை நோக்கி யாரும் வருவதாக இல்லை. அவர்களில் அனேகமானோர் தமது மாலைப் பொழுதை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உணவகங்களிலும், மதுபானச் சாலைகளிலும், கோப்பிக்கடைகளிலும் இனிதே கழித்துக் கொண்டிருந்தார்கள்.
மீண்டும் ஒரு இளம்சோடி. தேவாலயப்பக்கத்திலிருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். என்னிலிருந்து குறைந்தது 100மீற்றர் தூரமாவது இருக்கும். அவர்கள் என் பக்கம் திரும்பாமலே உணவகப் பக்கமாகப் போய் விடலாம். நான் அவசரமாக இடது கையை உயர்த்தி அசைத்தேன். அவர்கள் என்னைக் கண்டு விட்டார்கள். ஆனால் மகிழ்வோடு கையை அசைத்து விட்டு திரும்பி உணவகம் நோக்கி நடக்க எத்தனித்தார்கள்.
நான் மிகுந்த பிரயத்தனப்பட்டு எனது குரலை உயர்த்தி எனக்கு உங்கள் உதவி தேவை என்றேன். அதிர்ஸ்டம் அந்தளவேனும் இருந்திருக்க வேண்டும். என் வேண்டுதல் அவர்களது செவிகளைச் சென்றடைந்து விட்டது. ஆச்சரியமும், கேள்வியும் முகங்களில் தொக்கி நிற்க என்னை நோக்கி வந்தார்கள்.
என் நிலைமையை சைகோயோடு விளக்கினேன். புரிந்ததும் அந்த ஆண் அவசரமாக கதவை அழுத்தித் திறந்து விட்டான். வலது கையின் பெருவிரல் சப்பளிந்து போய் இருந்தது. தாளமுடியாத வலியில் கைகளை உதறினேன். பெருவிரல் வெடித்திருந்ததில் குருதி சிதறியது.
அந்தப் பெண் ஏதாவது வகையில் எனக்கு உதவ எத்தனித்தாள். „இந்தியர்களா நீங்கள்?“ எனக் கேட்டேன். „ஓம்“ என்றார்கள். பெயரையோ, வேறு விபரங்களையோ கேட்கும் நிலையில் அப்போது நான் இருக்கவில்லை.
பிறகென்ன மருத்துவமனை, அவசரப்பிரிவு, காத்திருப்பு... என்று நேற்றைய பொழுது (29.06.2015) நடுஇரவு 12 மணிவரை அங்கேயே போய்விட்டது.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து பெருவிரல் எலும்பு அந்த இடத்தில் நசிந்தும், சிதைந்தும் போயிருக்கிறது என்றார் மருத்துவர். இப்போது எல்லாம் ஸ்தம்பிதம். பத்துப் போட்ட வலது கையுடன் நான்.
சந்திரவதனா
30.6.2015

Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )