Saturday, November 01, 2008

கப்டன் மயூரன்

இயற்பெயர்: பாலசபாபதி
செல்லப் பெயர்: சபா
பிறப்பு: 01-11-1971.
வீரமரணம்: 11-11-1993

தந்தை: சபாபதிப்பிள்ளை தியாகராஜா,
தாய்: சிவகாமசுந்தரி தியாகராஜா.
பிறப்பிடம்: ஆத்தியடி, பருத்தித்துறை

பங்குபற்றிய இறுதித்தாக்குதல்: பூநகரி தவளைப் பாய்ச்சல்

தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது
1987- தை

இணைவதற்கு தூண்டு கோலாக அமைந்த சம்பவம்
யாழ் மாவட்டப் பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் கட்டு மீறிய அட்டூழியம். மற்றும் சகோதரான் கப்டன் மொறிஸ் இன் விடுதலை இயக்கப்பணிகளும் அவன் இணைந்து பணியாற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழின விடுதலை நோக்கும் அசைக்க முடியாத உறுதியும்!

போராட்டத்தில் இணைந்தவுடனான ஆரம்ப பயிற்சி
போராளிகளின் பாலை(காடும் காடு சார்ந்த நிலமும்)நில வாழ்வுடனான போராட்டப் பயிற்சி.

இணைந்திருந்த பயிற்சிக் குழு
ஆரம்பத்தில் கிட்டுமாமா தலைமை.
பின்னர் வீரமரணம் அடையும் வரை சொர்ணம் தலைமை.

பணியாற்றிய குழு
'ஓ' குறூப் அல்லது 'சைவர்' குறூப் எனப்பட்டது.

போராட்ட காலம் முழுவதும் வாழ்ந்தது தலைவரின் அருகாமை.
தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடி... விளையாடி... அதனோடு மண்ணிற்காய் போராடி வாழ்ந்தவன் மயூரன். தலைவரின் குழந்தைகள் அவனால் அவ்வப்போது தாலாட்டி உணவூட்டப்பட்ட கதைகளும் உண்டு.

மென்மையான உள்ளம், தளராத மனவுறுதி, தன்னிகரற்ற துணிச்சல் இவற்றிற்கு அவன் உதாரணமானவன்.

1988 காலப்பகுதிகளில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களில் பெரும்பாலும் மயூரன் பங்குபற்றி இருந்தான். ஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகள் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், மயூரன் தனியாக நின்று 70க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும் காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பிய கதைகள் சக போராளிகளால் சிலாகித்துப் பேசப்பட்ட சேதிகளாக ஒலித்துக் கொண்டிருந்தன.

காட்டு வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமான உணவு உறையுள் என்ற மிகச் சிரமமான விடயங்களை மிக இலகுவாக கையாளத் தெரிந்த மதிநுட்பம் நிறைந்த போராளிகளில் இவனும் முக்கியமானவன். போராளிகளிற்கான உணவுத் தேவைகளை இயற்கையுடன் ஒன்றிய வழிகளில் தேடிக் கண்டு பிடித்து தயார்ப்படுத்துவதில் திறமை பெற்றிருந்தான். அதற்காகவே தோழர்கள் இவனைத் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வது ஒரு வழமையான வேலையாக இருக்கும்.

கையினால் அவனாற்றும் பணிகள் கடுமையாக இருந்ததால் கை விரல்கள் இயங்க மறுத்த சுகவீன நிலைகளிற்கும் அவ்வப்போது ஆளாகி சிகிச்சை பெற்றிருந்தான்.

அம்மா, அப்பா, அண்ணாக்கள், அக்காக்கள், தங்கை... என்ற பெரும் உறவுகளுடன் உறவாடி வாழ்ந்த இனிய வாழ்க்கையின் நினைவுகள் அவனுக்குள் எப்பவும் ஒளிந்து கிடந்தன! இதனால் எப்போவாவது கிடைக்கும் அருமையான தனிமையில்.. பிரிவுத் துயரில் தோய்ந்து தொலைந்து போயிருக்கிறான். அது தலைவருக்கும் தெரிந்ததால் அவனை அவ்வப்போது உறவுகளைப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்திருக்கிறார்.

மோட்டார் வாகனம் எப்பவும் அவனின் பயணத் துணையாக இருந்தது.

கப்டன் மயூரன் பங்கு பற்றிய முக்கிய தாக்குதல்கள்
* இதயபூமி
* ஆகாய கடல் வழிச்சமர்
* ஆனையிறவுச்சமர்.
* மண்கிண்டி மணலாறு வெற்றிச்சமர். (1991)
* பூநகரி 2வது சமர்.
* பூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிச் சமர்(1993 கார்த்திகை)

அவனின் இறுதிச் சமரான இந்தச் சமருக்கு அவன் செல்ல விரும்பிய போது "இப்போ அவசரப்பட வேண்டாம்" என்று தலைவரால் அறிவுறுத்தப் பட்டதும், "இல்லை நான் போகப்போகிறேன்" என்று பிடிவாதமாக விருப்பப்பட்டு அவன் சென்றதும் நெஞ்சில் பதியும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.

பூநகரித் தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த மாபெரும் முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று காற்றும் தீயும் கலந்த கானக வெளியில் மூச்சும் வாழ்வும் நம் மண்ணிற்கே என்று கரைந்து போன உத்தமர்களில் மயூரனும் கலந்து மாவீரன் ஆனான்!!

கப்டன் மயூரன் வீரமரணம்: 1993 கார்த்திகை 11ம் நாள்.
பூநகரி தவளைப்பாய்ச்சல் வெற்றிச் சமர்.


அவனது மரணத்தின் பின் அவனின் இளைய சகோதரி சந்திரா.இரவீந்திரன் அவர்கள் லண்டனிலிருந்து ஷஎரிமலை இதழுக்கு எழுதிய கவிதை வரிகள்

'கடல் கொந்தளித்தது...
ஜனங்களின் மனங்களைப் போல...
பனிக்காற்று உடலைத் துளைத்தது...
கூரிய ஊசிகளைப் போல...
மேகம் நிலவுக்கு விடைகொடுத்து
மூளியாய் இருண்டு கிடந்தது!
வலது கண் அடிக்கடி துடித்தது..!
கனவுகள் திரைகளாய் தூக்கத்தை மறைத்தது!
இதயம் தாய் மண்ணை நினைத்துத் தவித்தது!
நாழிகள் மரத்தனமாய் ஓட மறுத்தது..!
மின்னல் கோடிட்டு இடிகள் முழங்கின..!
கம்பிகளுடாய் சேதிகள் வந்தன..!
களத்தில்.. அவன் காவியமானான் என்று...!!
கடலும் காற்றும் பனியும் மேகமும்...
நிலவும் உலக ஒலிகளும்...
எங்கோ ஒரு அந்தந்தத்தில் அடைந்து போயின!
ஸ்தம்பித்த பூமியில்... ஜில்லிட்ட குருதியில்...
`சபா´ என்ற கூவலின் நீண்ட கேவல்..!
மௌனத்தின் விறைப்பில் ஏமாந்த கோபத்தில்...
´மயூரன்` என்ற விநோதமான விக்கல்..!

என் இனிய உடன் பிறப்பே..!
என் ஆசைத் தம்பியே..!
அழகிய அந்த ஈழ பூமியில்....
நீ எங்கே உறைந்து கொண்டாய்..?

கடல் கடந்து...வான்பறந்து...
மலை தாண்டி... மண்குதித்து...
படை மீறி வந்தாலும்...
நானுன்னை இனி எங்கு தேடுவேன்..!?
தம்பி! நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்!?
கொடிய பசியுடன் கூடவே தோழருமாய்...
திடுமென்று என் வாசலைத் தட்டிய போதெல்லாம்
நானிட்ட சாதமும் சாதாரண குழம்பும்
ருசியென்று உண்பாயே!
ஒரு கையில் சுமையேந்தி...
மறு கையால் உதவி செய்வாய்!
பிறர் கஷ்டம் பொறுக்காத...
தூயவனே... மயூரா...!
நானுன்னை இனி எங்கு தேடுவேன்...?
தம்பி... நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்..!?'

கப்டன் மயூரனின் இளைய அக்கா
சந்திரா இரவீந்திரன்.

Friday, October 24, 2008

யுகமாயினி - நவம்பர் 2008













நவம்பர் மாத யுகமாயினி வெளிவந்து விட்டது.

ஏழாவது சர்சதேச தமிழ் திரைப்பட விழா

Independent Art Film Society cordially invites you to the Seventh International Tamil Festival.

சுயாதீன திரைப்பட மையம் ஏழாவது சர்சதேச தமிழ் திரைப்பட விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றது
Place: Scarborough Civic Ctr.
Date: November 01,2008 – Saturday
Time:10 a.m

Please feel free to call Rathan or Tam or Dusy for any questions or concerns.
416-450-6833, 416-804-3433
Rathan@roagers.com
Tamsivathasan@gmail.com
dushyg@gmail.com

Monday, October 20, 2008

அந்த நாட்கள்

பொன்னிலும், பளிங்கிலும் ஜேர்மனி பளபளக்கும் என்ற சிறுவயதிலான மேலைநாடுகளைப் பற்றிய கனவு ஐந்து நாட்களுக்கு முன் மொஸ்கோவில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட போது கலைந்து போய் விட்டது. ஏஜென்சியைப் பிழை சொல்லி என்ன பயன். மீண்டுமான முயற்சியில் மீண்டுமாய் பணத்தைக் கொட்டி விட்டு இன்னொரு ஏஜென்சியை நம்புவதுதான் அப்போதைக்குச் செய்யக் கூடிய காரியமாக இருந்தது. பணம் போய் விட்டதையும் விட முதல் தர பயணத்துக்கு காசு கொஞ்சம் குறைகிறது என்ற போது தம்பி செய்து தந்த சங்கிலியை அவசரமாய் ராணிநகை மாளிகையில் விற்ற போதிருந்த கவலை அடிமனதின் ஒரு ஓரத்தில் இன்னும் உரசியது. பொன் போய் விட்டதில் கவலை இல்லை. தம்பியின் அன்பினால் பின்னப்பட்ட ஒன்று போய் விட்டது என்பதில்தான் கவலை. கைமாறிய போது கண்களில் எட்டிப் பார்த்த துளிகளை யாருக்கும் தெரியாமல் சட்டென்று துடைத்து விட்டேன். மனதை அப்படித் துடைத்தெறிய முடிவதில்லைத்தானே.

விமானம் ஃபிராங்ஃபேர்ட்டில்(Frankfurt) தரையிறங்குகிறது என்ற போது அத்தனை சோர்விலும் மனம் படபடத்தது. எல்லாவற்றையும் சரியாகச் சொல்லி சமாளித்துக் கொள்வேனா என்ற பயமும் கூடவே வந்தது. "மூன்று பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு தன்னந்தனியாக விமானம் ஏறப் போகிறாளோ?" என்று முகத்தைச் சுளித்தவர்களும், நாடியைத் தோள்பட்டையில் இடித்தவர்களும் அந்த நேரத்திலும் மனசுக்குள் எட்டிப் பார்த்தார்கள்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் பிள்ளைகளைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற சுயநலம் மற்றைய எல்லாவற்றையும் அடித்துப் போட்டு விட்டிருந்தது. பெற்றவர்களையும், உடன் பிறப்புகளையும், உற்றவர்களையும், விட்டு விட்டு போர் சூழ்ந்த நாட்டில் இருந்து ஓடி வருவதில் உள்ள சரி, பிழைகளையெல்லாம் ஆழமாகச் சிந்தித்து, ஆராய்ந்து கொண்டிருக்க அப்போது அவகாசம் இருக்கவில்லை. அன்றைய பொழுதில் எனக்கு அயோத்தி ஜேர்மனிதான். புறப்பட்டு விட்டேன்.

துவண்டு போயிருந்த மூன்று குழந்தைகளையும் உஷார் படுத்தி விட்டு தலைக்கு மேலிருந்த கதவைத் திறந்து ஹான்ட்லக்கேஜை இழுத்தெடுத்தேன். மூத்தவன் அப்படியே விமான இருக்கையில் தன்னைக் குறுக்கிக் கொண்டு இன்னும் தூக்கக் கலக்கத்தில் இருந்தான். சின்னவனைத் தூக்கிக் கொண்டு ஹான்ட்லக்கேஜையும் இழுத்துக் கொண்டு வரிசையில் நகர மகளும் பின்னால் வந்தாள். சின்னவனையும், லக்கேஜையும் வெளியில் விட்டு விட்டு மீண்டும் வந்து மூத்தவனைக் கூட்டிச் செல்லும் எண்ணத்தில் விமானப் படிகளில் இறங்கி லக்கேஜை வைத்து விட்டு நிமிர்ந்த போது விமானப் பணிப்பெண்களில் ஒருத்தி மூத்தவனை கையில் பிடித்து அணைத்த படி கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். மிகவும் நன்றியாக இருந்தது.

சில்லென்ற காற்று உடைகளையும் தாண்டி மேனியைத் தீண்டியது. மே மாதம் குளிராது என்றுதான் சொல்லியிருந்தார்கள். ஆனாலும் ஜேர்மனி குளிர்ந்தது. ஃபிராங்போர்ட் விமான நிலையம் பெரிதாக இருந்தது. உள்ளே போய் அகதி அந்தஸ்து கோருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. கேள்விகளால் துளைத்தார்கள். அவர்களது ஜேர்மனிய மொழியில் ஒரு சொல்லேனும் எனக்குத் தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. பாடசாலையில் படித்த ஆங்கிலம் தான் அப்போது கை கொடுத்தது.

மூன்று குழந்தைகளும் எனது குழந்தைகள்தான் என்பதை அவர்களுக்கு நம்ப வைப்பதே பெரும்பாடாக இருந்தது. அதிசயப் பூச்சிகளைப் பார்ப்பது போல எம்மைப் பார்த்து, ஸ்ரேற்மென்ற் (Statement) எடுத்து, புகைப்படம் எடுத்து சில மணிகளின் பின் விமான நிலையத்தின் இன்னொரு அறையில் விட்டார்கள். அந்த அறை எட்டு இரண்டடுக்குக் கட்டில்களால் நிறைந்திருந்தது. அனேகமான கட்டில்களில் போர்த்திய படி வேற்று நாட்டவர்கள் படுத்திருந்தார்கள். எமக்காகக் கதவு திறக்கப் பட்ட போது எழுந்த சத்தத்தில் சிலர் ஆமை போலத் தலையை நீட்டிப் பார்த்து விட்டு மீண்டும் போர்வைக்குள் முடங்கிக் கொண்டார்கள்.

எனக்கும் மூன்று பிள்ளைகளுக்குமாக ஒரு கட்டில் தரப்பட்டு அரைமணியில் சாப்பாடு வந்தது. சாப்பாடு எதுவும் எனக்கோ பிள்ளைகளுக்கோ பிடிக்கவில்லை. ஆளுக்கொரு அப்பிளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டோம்.

அது அர்த்தஜாமம் என்று அங்கிருந்த ஒரு ஆப்ஃகானிஸ்தான் பெண் சொன்னாள். எங்களைப் படுத்து விடும்படியும் சொன்னாள். எங்களால் படுக்க முடியவில்லை. அதனால் வெளியில் போனோம். சந்நிதி, திருக்கேதீஸ்வரம்... போன்ற ஆலய மடங்களில் தங்கியிருப்பவர்கள் சுருண்டிருப்பது போலப் பலர் விமான நிலையத்தின் வாங்கில்களிலும், நிலங்களிலும் சுருண்டு படுத்திருந்தார்கள். ஏதோ ஒரு விமானம் அன்று பறக்கவில்லையாம்.

அன்றைய அந்த இரவை ஜேர்மனியுடன் ஒட்ட வைப்பது என்பது எனக்கோ, பிள்ளைகளுக்கோ முடியாத காரியமாகவே இருந்தது. இரவு நீண்டிருந்தது. உதடுகள் வெடித்தன. கால்கள் பொருக்குப் பூத்தது போல குளிரில் வெளிறின.

அடுத்தநாள் விமான நிலையத்துக்கு அருகிலேயே உள்ள அகதிகள் முகாமொன்றில் எங்களைக் கொண்டு போய் விட்டார்கள். அங்கும் பிடித்தமான சாப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. தஞ்சம் கோரி வந்த எங்களுக்கு மீண்டும் ஒற்றை அப்பிள்தான் தஞ்சம். ஊரில் சுண்டக் காய்ச்சிய பாலையே குடிக்கப் பஞ்சிப்படும் என் பிள்ளைகள் அவர்கள் தந்த பச்சைப் பாலைத் தொடக் கூட மறுத்து விட்டார்கள்.

இதற்கிடையில் நான் தொலைபேசியில் என் கணவருக்கு நாம் வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவிக்க, அவர் ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து இரண்டாம் நாள் இரவு எம்மிடம் வந்து சேர்ந்தார். ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து வேறெங்கும் செல்ல அவருக்கு அனுமதியில்லை. பிடிபட்டால், உடனடியாகப் புகைவண்டியில் ஏற்றி ஸ்வெபிஸ்ஹால் நகருக்கே திருப்பி அனுப்பி விடுவார்கள். அதுமட்டுமல்ல தண்டனையாக 400ஜேர்மனிய மார்க்குகளைக் கட்டவும் சொல்வார்கள். 350 மார்க் சமூகநல உதவிப் பணத்துடன் வாழும் எனது கணவரின் அப்போதைய நிலை அது.

அடுத்தநாள் காலை, - மூன்றாம் நாள் - எங்களுக்கு அகதி அந்தஸ்து கோரியுள்ளார் என்பதற்கான தற்காலிக அகதி அடையாள அட்டை தந்து, இன்னொரு அகதி முகாமுக்கு அனுப்புவதற்காக பேரூந்தில் ஏற்றினார்கள். கூடவே இன்னும் சில தமிழ்ப்பெண்கள். எனது கணவரும் அவரைப் போலவே அனுமதியின்றி வந்த இன்னொரு கணவரும் செய்வதறியாது நிற்க, எங்களை ஸ்வல்பாஹ்(Schwalbach) அகதி முகாமுக்கு அனுப்பி விட்டார்கள். பேரூந்தில் சில மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

அந்த முகாமில் ஓரளவு தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் என்னைப் போல மூன்று பிள்ளைகளுடன் வந்தவர்கள் யாரும் அங்கில்லை. களைத்துப் போன எனதும், பிள்ளைகளதும் முகங்கள் அவர்களுக்கு எங்கள் மீது இரக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கிட்ட வந்து அன்பாகவும் உதவும் நோக்குடனும் கதைத்தார்கள். எம்மைச் சாப்பிட வரும் படி அழைத்துச் சென்று ஒரு பெரிய ஹோலில் விட்டார்கள். அது கன்ரீனுடன் சேர்ந்த ஹோல். ஹோல் நிறைய பலவித மொழி பேசும் பல விதமான மக்கள் கசா முசா என்று கதைத்தபடி இருந்தார்கள்.

நானும் பிள்ளைகளும் இன்றைக்காவது சாப்பிடுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்க அந்தத் தமிழர்களே எமக்கான சாப்பாட்டை எடுத்து வந்து தந்து விட்டுப் போனார்கள். ஆவலுடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்த எனது மூத்தவனின் முகம் சாப்பாட்டைக் கண்டதும் ஏமாற்றத்தில் துவண்டு போனது. வந்த சாப்பாடு நாம் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்திக்கும் பிற்சா(Pizza). சிப்பி சோகியெல்லாம் அதன் மேல் போட்டிருந்தார்கள்.

"இதையெப்பிடிச் சாப்பிடுறது..?" கோபம், ஏமாற்றம், அழுகை எல்லாம் கலந்த கேள்வி அது.

ஏற்கெனவே ´எனது கணவர் எப்படி இங்கே வந்து சேரப் போகின்றார்?` என்ற யோசனையும், கவலையும் எனக்குள். அதை மிஞ்சிய வயிற்றுப் புகைச்சல். என் மகனும் இப்படிக் கேட்க உடனேயே எனக்கு, எங்கள் மேல் தாங்க முடியாத பச்சாத்தாபம் ஏற்பட்டது. ´திரும்பிப் போய் விடுவோம்` என்ற அங்கலாய்ப்பு வந்தது. போய் ´அம்மாவின் கையால் அம்மாவின் சமையலைச் சமையலைச் சாப்பிட வேண்டும்` என்ற அவா எழுந்தது. எல்லாமாய் அழுகையே வந்தது. ´மூன்று நாள் ஜேர்மனிய வாழ்க்கை போதும்` என நினைத்துக் கொண்டேன்.

அந்த நேரம் எனது மகன் என்ன செய்தான் தெரியுமா..? அவர்கள் மெனக்கெட்டு பக்குவமாகத் தயாரித்த பிற்சாவின் மேலே இருந்த எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கோப்பைக்குள் வழித்துக் கொட்டி விட்டு கீழேயுள்ள ரொட்டித்துண்டைச் சாப்பிடத் தொடங்கினான்.

´அட இவனுக்கு எப்படி இப்படியொரு மூளை வந்தது!` வியந்தேன். மற்றைய மூன்று பிற்சாக்களிலும் இருந்த எல்லாவற்றையும் என் கண்ணீரோடு சேர்த்து வழித்துக் கொட்டி விட்டு ஒன்றுமில்லாத வெறும் ரொட்டியை மற்றப் பிள்ளைகளுக்கும் கொடுத்து சாப்பிடத் தொடங்கினேன்.

சந்திரவதனா
பிரசுரம் - யுகமாயினி (ஒக்ரோபர் 2008)

Friday, October 17, 2008

நூல் வெளியீடு - குரு அரவிந்தனின்


நூல் வெளியீட்டு, அறிமுக விழா
நூலாசிரியர்: குரு அரவிந்தன்


நூல் விபரம்:
(1) நின்னையே நிழல் என்று ... சிறுகதைத் தொகுப்பு
(2) எங்கே அந்த வெண்ணிலா - நாவல்
(3) உன்னருகே நானிருந்தால் நாவல்
(4) தமிழ் ஆரம் - பயிற்சி மலர் -3 சிறுவர் பாடநூல்

இடம்: மல்வேன் நூல் நிலைய மண்டபம் - (ஸ்காபரோ)
Malvern Library Hall
30 Sewells Road, Scarborough. Canada. M1B 3G 5

காலம்: 26 - 10 - 2008 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 5:30

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நூல் வெளியீட்டுக் குழுவினர்.

Book Release – Venue & Date
Kuru Aravinthan, Writer is releasing four books on 26th October 2008 Sunday 5.30 p.m
Location: Malvern Library Hall
30 Sewells Road, Scarborough.
Canada. M1B 3G 5


அணிந்துரை

குரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று..

தேசத்தின் விடுதலைக்காய் தேய்கின்ற மக்களுக்கும்
நாசத்தால் வீடிழந்த நாடிழந்த மக்களுக்கும்.
பாசத்தால் தினம் தினம் விம்முகின்ற எம்மவர்க்கும் - அவர்
சோகத்தை தீர்க்க நீர் நாலுவரி எழுதிவைத்தால்
நாடே உமை வாழ்த்தும். நானும்
வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
வண்ணை தெய்வம் பிரான்ஸ்.


பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன்
ரொரன்ரோ பல்கலைக்கழகம், ரொரன்ரோ, கனடா

(சமகால ஈழத்தமிழ் அரசியல், சமூகவியல், வாழ்வியல், பொருளியல், அறிவியல் போன்ற பலதுறைகளையும் வருடி வருகின்ற குரு அரவிந்தனின் இக்கதைகள் எமது சமூகத்தின் பலத்தையும், பலவீனங்களையும் இனம் காட்டுவதன் ஊடாக தமிழ்ச் சமூகத்தின் வருங்கால வளர்ச்சிக்குத் திசைகாட்டும் கருவியாகவும் அமைகின்றன. இம்மாதம் (26-10-2008) ரொரன்ரோவில் வெளிவர இருக்கும் குரு அரவிந்தனின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய, பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாசன் அவர்களின் அறிமுகவுரையிலிருந்து) நவீன இலக்கியத்தின் வளர்ச்சியும், வளமும், வடிவங்களும் சமுதாயத்தின் பன்மை நிலைப்பட்ட சமூகத் தொடர்பாளர்களின் இயக்க நிலைகளினாலேயே உந்தப் படுகின்றன. இக்கருத்து பொதுவாக உலகப்பெருமொழிகள் அனைத்தினதும் ஆக்க இலக்கியப் படைப்புகளுக்கும் ஏற்புடையதாகும். இந்தியாவில் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலத்தில் புகுத்தப்பட்ட கல்வி முறைகளினதும், கருத்து நிலைகளினதும், கிறிஸ்தவமத பரப்புதல் சார்ந்த அணுகுமுறைகளினதும் அறாத்தொடர்ச்சியான விளைவுகளின் வழியாகவே தமிழ் இலக்கியத்தில் உரை நடை, சிறுகதை, நாவல் போன்ற நவீன இலக்கிய வடிவங்கள் வேரூன்றி வளர ஆரம்பித்தன.

கவிதைச் செழுமையிலும் காப்பிய வரம்பினுள்ளும் கட்டுட்பட்டிருந்த தமிழ் இலக்கியப் புலமையினை இந்த நவீன இலக்கிய வடிவங்கள் நெகிழ்ச்சியுறச் செய்தன. நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கிறிஸ்தவமத பரப்புரையாளர்களும், பணியாளர்களும் கணிசமான செல்வாக்கினைச் செலுத்தி வந்துள்ளனர். ஐரோப்பிய அரசுகளின் துணையோடு தென்னாசிய நிலப்பரப்பை வந்தடைந்த கிறிஸ்தவம் அதன் மறைப் பரப்புதல் தேவைகளை முன்னெடுப்பதற்கென தொடங்கி வைத்த மொழி பண்பாட்டுத் தொடர்புகள், ஆய்வுகள், உள்ளிணைவுகள், புலமைசார் உறவாடல்கள் ஆகியவற்றின் விளைவாகவே தமிழ் மொழிப் படைப்பிலக்கியத்தின் நவீன வரலாற்றில் பல புதிய இலக்கிய வடிவங்கள் பரிணமித்து மேம்பாடு பெற ஆரம்பித்தன.

ஐரோப்பிய இலக்கியத்தில் 17ம், 18ம் நூற்றாண்டுகளில் முனைப்பு அடையத் தொடங்கிய உரை நடை, இலக்கிய மரபு அதன் கால வளர்ச்சியில் இலக்கியத்தை சமுதாயத்தின் நுகர் பொருட்களில் ஒன்றாகச் சந்தைப் படுத்தியதென்பது வரலாறுதரும் செய்தி;. 19ம், மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் விரைவாகவும், விரிவாகவும் தமிழிலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை போன்றவை பரந்தும் உயர்ந்தும் வளர்வதற்கு அதே காலத்தில் துரித வளர்ச்சியுற்ற அச்சு வாகனத் தொழில்நுட்ப முறைகளும் உந்து சக்தியாக அமைந்தன. ஆங்கிலக் கல்வி அமைப்பின் விளைவாக தமிழ்ச்சமுதாயத்தில் ஓர் புதிய குழுமமாகத் தோன்றிய மத்திய வர்க்கத்தினராலேயே முதலில் இவ்விலக்கியப் படைப்புகள் ஆக்கப்பெற்றன. இப் படைப்பிலக்கியங்களின் கதைப்பொருளாக அவர்களது வாழ்வுப் பிரச்சினைகளே முன்கொணரப்பட்டன. இவற்றை விலைகொடுத்து வாங்கிய வாசகர் வட்டமும் அந்த வர்க்கத்தை சார்ந்தவர்களே. தமிழில் எழுந்த முதல் நாவலும் அதைத்தொடந்து வெளிவந்த படைப்புகளும் இதற்கு சான்றாதாரமாகும்.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் அலுவலக அருஞ்சுவடிக் காப்பாளராகப் பணி புரிந்த தேவநாயகம்பிள்ளையும், 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழ் நாவல் இலக்கியத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்த மாதவையரும் (1872- 1925) அவரது சமகாலத்தவரான நெய்யூர் அருமைநாயகமும் (1858 -1914) மத்திய வகுப்பினரின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பின்புலமாகவைத்துத்; தமது நாவல்களை எழுதினார்கள். நாவல் இலக்கியத்தைக்; தமிழ் உலகிற்கு முதன் முதலில் ஆக்கித்தந்த இவர்கள் ஆங்கிலேய அரசின் கல்வியமைப்பின் கனிகள் மட்டுமல்ல, அதே அரசின் கீழ் உயர்ந்த உத்தியோகம் பார்த்தவர்கள். இதனை அறியும்போது இவர்களது கதைகளின் களம் இன்னும் துலக்கமடைகின்றது. அதாவது தாம் சார்ந்திருந்த மத்திய வர்க்கத்தினரின் சமய சமூகப் பிரச்சினகளையும் கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்தினாலும் அதை ஒட்டி எழுந்த சமயமாற்றம் கலப்புத் திருமணப் பண்பாட்டு முரண்பாடு மேற்கத்தேய நாகரிக நாட்டம், போன்றவற்றையும் பின்புலமாகக் கொண்டே இவர்கள் நாவல்களை எழுதினார்கள்.

மேற்கத்திய நாகரிகத்தின் சில கூறுகளை ஏற்று அதன் வழியாகத் தமிழ்ப் பண்பாட்டினை வளமாக்கலாம் என்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் நாளடைவில சீராய்விடும் என்றும் எண்ணிய இவர்கள் சமுதாயத்தின் அடி மட்டத்தில் வாழ்கின்றவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையறிந்து அதை மாற்ற வழிதேடினார்களோ என்பது கேள்விக்குரியதே. தமது காலத்தை ஓரளவேனும் கடந்த நிலையில் எழுதிய இவர்களின் கதைகளில் காலத்திற்கும் சமூக மரபுகளுக்கும் கட்டுண்டு கதைபுனைந்த இரண்டக நிலையையும் காணமுடிகிறது.

இவை தவிர, ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கல்வி, தொழினுட்ப மாற்றங்கள் நாவல் இலக்கியம் முன்னேறி வளர முக்கிய காரணிகளாக அமைந்தன. கையெழுத்துப் பிரதியைப் பல பிரதியாக்கம் செய்யும் அச்சியந்திரங்களும், பாடசாலைக் கல்வியினை அடியொற்றி நூல்களை வாசித்து அறிவைப் பெருக்குவதற்கான தேடலும், ஆர்வமும் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு நல்லதொரு சூழலைப் பிறப்பித்தன என்று 21ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தில் ஆக்க இலக்கியத்தின் அத்தனை வடிவங்களும் முற்றிலும புதிய கருத்து வளங்களுடனும், களவெளிகளுடனும் படர்ந்து விரிதல் கண்கூடு.

நாவல் போன்ற இலக்கியபடைப்புகளின் இயங்குதளம் என்பது நாள்தோறும் நாம் நடமாடும் நனவுலகமாகும். ஓரு கதையின் யதார்த்தப் பாங்குகளும், பண்புகளுமே அக் கதைக்கு உரைகல் ஆகின்றன. தனி மனிதர்கள், குழுமங்கள், குடும்பங்கள், சமூகத்தின் பல்வேறு கட்டமைவுகளில் வாழுகின்றவர்கள் சந்திக்கின்ற சமர் புரிகின்ற பிரச்சனைகளையும் அவற்றை மாற்றவும,; அன்றேல் அவற்றினின்று விடுபட்டு புதிய சூழலை உருவாக்கவும் எழுகின்ற உணர்வலைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதிபலிக்கின்ற வண்ணமே நாவல்களும் சிறுகதைகளும், நெய்யப்படுகின்றன.

கதையின் பாதைகளையும், நெறிகளையும், இயங்கு தளத்தையும் அக்கதைகளின் பாத்திரங்களும் அவர்களுக்கு ஏற்படும் சவால்களும,; இன்னல்களும், சந்தப்பங்களுமே நகர்த்திச் செல்லுகின்றன. இத்தகைய பாத்திரங்களுக்கு நாளாந்த வாழ்வில் ஏற்படும் இரண்டக நிலைகளும், இரு கிளைப்பாடுகளும், விளுமிய முரண்பாடுகளும், குடும்ப, சாதி,சமய, சமூக உணர்வலைகளும், தனிப்பட்ட மனப்போராட்டங்களும், விரக்திகளும், வேதனைகளும், வெற்றிகளுமே, கதையின் நிகழ் தளத்திற்கு வலுவும், வளமும் சேர்க்கின்றன. தமிழ் ஈழத்தைக் தளமாகக் கொண்டு எழுதப்படும் இலக்கியப் படைப்புகளும் தமிழ் ஈழத்தவரால் எழுதப்படுபவையும் தனித்துவமான இலக்கிய பண்பைக் கொண்டிருப்பதற்கு வேறு காரணிகளும்; உண்டு.

20ம் நூற்றாண்டின் கடைசிக் காலத்திலிருந்து தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுத் தளம், மொழித் தளம், குடும்ப சமூக உறவு, சமய பண்பாட்டுத்தளம் என்பன சிதைவுறத் தொடங்கின. அரசியல் சார்ந்த அசைவியக்கங்களே இதற்கு அடிப்படைக் காரணிகளாய் அமைந்தன. இதனால் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுப் பரப்பின்மீது முன் ஒருபோதுமில்லாத புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழலைப் பிறப்பித்தன. இவை யாவுமே தமிழ், இலக்கிய உலகில் பல புதிய எண்ணக்கருக்களைத் தோற்றுவித்தன. பேரிடர்கள், பேரழிவுகள் இடைவிடாத இடப்பெயர்வுகள், குடிபெயர்வுகள், புலப்பெயர்வுகள் போன்றவை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழ்க் கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போன்றவற்றில் பிரதிபலிக்கப்படுவது வெறும் தற்செயல் நிகழ்வன்று, எனவேதான் குரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று... என்ற இச் சிறுகதைத் தொகுதியில் கதைகளின் களம் தமிழீழம், இலங்கை, இந்தியா, கனடா, ஜேர்மனி என்று பூகோள அளவிலே பரந்தும் விரிந்தும் செல்வதனைக் காண்கின்றோம்.

தமிழ் தேசிய எழுச்சியினதும் விடுதலைப்போராட்டத்தினதும் பாரிய பக்கவிளைவாக மேற்கத்தேய மற்றும் அமெரிக்கா, கனடா, போன்ற நாடுகளின் பெருநகர்களில் பல்லாயிரக்கணக்கில் ஈழத்தமிழர் 1980களிலிருந்து குடிபுகுந்து வாழ்கின்றனர். இப்புதிய வாழ்வுச்சூழலில் ஏற்படும் சமூக, குடும்ப, பொருளாதார, மற்றும் அரசியல் சவால்களுக்கு துணிவுடனும் தெளிவுடனும் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் உந்தப்படுகின்றனர். பல்வேறுபட்ட விழுமிய முரண்பாடுகளையும், மரபு மாற்றங்களையும் எதிர் கொள்ளும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். ஏனவே இப்பின்புலத்தில் ஆக்கப்படும் இலக்கிய வடிவங்களில் இந்தவாழ்வுச்சூழல் இயல்பாக வந்தமைகின்றது.

பல்வேறு பண்பாடுகள், பல் இனமக்கள், பல்வேறுமொழிகள், பூகோள இயற்கையின் தட்ப, வெட்பதாக்கங்கள், உறவுப்பிரிவுகளின் இன்னல்கள், கருத்து முரண்பாடுகள் சமூக நியதிகளை மறுப்பவர்கள், ஒரு மனிதனுக்குள் வாழும் பலமனிதக்கூறுகள், சிதைந்து கருகிய உள்மனங்கள், அடி மனங்களில் படர்ந்திருக்கும் துயரங்கள், தனிமையின் மனஏக்கங்கள், அழுத்தங்கள் இவை போன்ற எண்ணற்ற வாழ்க்கைச் சிக்கல்களையும், உள்மனத்தின் இயக்கநிலைப்பட்ட உணர்வு மோதல்களையும் இடையறாது அடிமனதில் நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஒர் உணர்வுச்சித்திரமே உயிருள்ள இலக்கியப்படைப்;பாக நிலைக்கின்றது. குரு அரவிந்தனின் உயிருள்ள இலக்கியப்படைப்பான இச் சிறுகதைகளுக்கு இது சாலப்பொருந்தும.;

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது பண்ணாட்டு வாழ்வுப் பிண்ணனியில் ஏற்படும் முரண்பாடுகளையும் தனிமனித, சமூக, குடும்ப சிக்கல்களையும் உள்மாற்றங்கள், மனமாற்றங்கள், சமூக மாற்றங்கள் போன்றவற்றை இதய சுத்தியோடு உள்வாங்க வேண்டும் என்ற தரிசன வீச்சுடனும் கதாசிரியரான குரு அரவிந்தன் தமது கதைகளை இங்கு நெய்திருக்கின்றார். இந்த ஆதங்கம் ஆசிரியரின் எழுத்துக்களில்பட்டுத் தெறித்து பரந்து ஒளி வீசுவதை அவரது கதைகளின் கருவிலும் கற்பனையிலும் காணக்கூடியதாக உள்ளது. 21ம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தின் சாய்வடுத்தகு தளநிலைகளை உயிர் ஊட்டத்துடன் அவர் படம்பிடித்துக் காட்டுகின்றார். முக்கியமாக இன்றைய தமிழ் சமூகத்தின் வரலாற்றுச் சிக்கல்களை ஒருவகையிலே தமது கதைகளிலே இக்கதாசிரியர் ஆவணப்படுத்துகின்றார். சிறந்த படைப்பாளியான குரு அரவிந்தன் அவர்களை இதற்காக நாம் மனம் திறந்து பாராட்டவேண்டும்.

சமகால ஈழத்தமிழ் அரசியல், சமூகவியல், வாழ்வியல், பொருளியல், அறிவியல் போன்ற பலதுறைகளையும் வருடி வருகின்ற குரு அரவிந்தனின் இக்கதைகள் எமது சமூகத்தின் பலத்தையும், பலவீனங்களையும் இனம் காட்டுவதன் ஊடாக தமிழச்சமூகத்தின் வருங்கால வளர்ச்சிக்குத் திசைகாட்டும் கருவியாகவும் அமைகின்றன. திரு. குரு அரவிந்தன் அவர்கள் மேலும் பல ஆக்கப் படைப்புக்களை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் சேர்க்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றோம்.

பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன். ரொரன்ரோ, கனடா.


சிறுகதை - 1
ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
(குரு அரவிந்தன் - கனடா. நன்றி – கல்கி)


இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.

'அன்புள்ள அப்பா'
பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.

'அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு 'அப்பா' என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.
(more)

சிறுகதை - 2
புல்லுக்கு இறைத்த நீர்..!
(குரு அரவிந்தன் - கனடா – நன்றி : ஆனந்தவிகடன்)

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.

எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.

'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு. (more)

சிறுகதை - 3
சுமை
(குரு அரவிந்தன் - கனடா)
(கனடியத் தமிழ் வானொலி (CTR) சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.)

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப்போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.

'எழுந்திருடா' பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.

துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுள்' என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.
'வெளியே வாடா நா..!' தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்டபோது அவனது குரலை இவனால் இனம் காணமுடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.
(more)

Thursday, October 02, 2008

கடந்து வந்த நமது சினிமா - 2

- மூனா -

சிங்களத்துக் குயில் என்று அழைக்கப் பட்ட யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த தவமணி தேவியின் தென்னிந்தியத் திரைப் பிரவேசம் உண்மையில் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1930களிலே அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்த் திரையுலகில் புகுந்து கவர்ச்சி காட்டி நடித்து பலரது புருவங்களை உயர வைத்தவர். ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றுடன் கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தவர். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலகிற்கு முதன் முதலில் கவர்ச்சியை அறிமுகப் படுத்தியவர் இவராகத்தான் இருக்கவேண்டும். இவரின் வரவிற்குப் பின்னரே பின்னாளில் திரையுலகில் ஒளிவீசிய சிலரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. ரி.ஆர். ராஜகுமாரி, மாதுரிதேவி, அஞ்சலி தேவி... எனப் பலரை இந்த வரிசையில் சேர்க்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் இலங்கையில் பாரிஸ்ரர் தொழிலில் முன்னணியில் திகழ்ந்தவர். தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள்.

உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா கலையகத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கான முதல் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் அதில் நடிக்கும் வாய்ப்பு தவமணி தேவிக்குக் கிடைத்தது.

சதிஅகல்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அவருக்கு அகலிகை வேடம். இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் ரி.ஆர்.சுந்தரம் பத்திரிகையாளர்களை அழைத்து தனது படத்தின் கதாநாயகியான தவமணிதேவியை அறிமுகப் படுத்தினார். பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக ரி.ஆர்.சுந்தரம் கொடுத்த தவமணியின் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். நீச்சல் உடையில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் அவர்களது புருவங்களை உயர வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான் ஏனெனில் பெண்கள் இழுத்துப் போர்த்தி சேலை உடுத்தும் காலம் அதுவாக இருந்தது.

தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அது பலரது பார்வையைக் கவர்ந்தது. வசிட்டரின் மனைவியான அகலிகையாக நடிக்கப் போகும் பெண் இப்படி உடுத்தலாமா? என்பது போன்று பல விதமான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. 1930களில் ஒரு ஆசியப் பெண்ணை நீச்சல் உடையில் பத்திரிகைகளில் காண்பது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும். இது போதாதா தவமணி தேவி பிரபல்யமாவதற்கு?

சதிஅகல்யா படப்பிடிப்பு தொடங்க முன்னரே தவமணி தேவி மிகப் பிரபல்யமாகி விட்டிருந்தார். ஆகவே 1937இல் வெளியான மொடேர்ன் தியேட்டர்ஸின் சதிஅகல்யா பெரு வெற்றி பெற்றதுக்கு தனியாகக் காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை. சதி அகல்யா வெற்றிக்குப் பின் தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வனமோகினி. இந்தத் திரைப்படம் 1940 இல் வெளிவந்தது. கொலிவூட்டில் டோர்தி லமோர் நடித்துப் பிரபல்யமான யங்கிள் என்ற திரைப்படத்தினையே தமிழில் வனமோகினி என்று எடுத்தார்கள். இதில் வனமோகினியாக ஆங்கிலத்தில் டோர்தி லமோர் உடுத்த கவாய் நாட்டுப் பாணியிலான உடையை இடுப்பில் கட்டி இவர் நடித்திருந்தார். இவர் தனது நடிப்போடு காற்றில் ஆடும் சிறு உடையின் மத்தியில் தனது உடல் அழகையும் காட்டிக் கொண்டது அன்றைய கால கட்டத்தில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். இவரது இந்தத் திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் பெரு வெற்றியையும் ஈட்டிக் கொண்டது. அறுபது வருடங்கள் கழிந்தாலும் தென்னகத் திரையுலகில் இன்னமும் வனமோகினி பேசப்படுகிறதென்றால் அன்றைய காலகட்டத்தில் வனமோகினி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.

தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,

அதோ இரண்டு Black eyes!
என்னைப் பார்த்து Once, twice!
கண்ணைச் சிமிட்டி Dolly!
கை கட்டி Calls me!
Is it true your eyes are blue?
I'll fall in love with you!
I will dance for you!

இந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் ஏ.ரி.கிருஸ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவர் நடித்து பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்த அடுத்த திரைப்படம் 1948இல் வெளியான ராஜகுமாரி. இந்தத் திரைப்படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி இயக்கியிருந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பில்தான் ஏ.எஸ்.ஏ.சாமி தனது படிப்பினை முடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பின்னாளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்று. ராஜகுமாரி திரைப்படத்தையும் யூபிட்டர் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஒரு பெருமையிருக்கிறது. பின்னாளில் தமிழகத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஆண்ட மூன்று தமிழக முதலமைச்சர்களின் திரையுலகப் பிரவேசம் இந்த நிறுவனத்தினூடாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 1949இல் வெளியான யூபிட்டர் நிறுவனத்தின் வேலைக்காரி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார். யூபிட்டரின் ராஜகுமாரி திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். அதில் முதன் முதலாக எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சான்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே இவரின் திரையுலகப் பிரவேசமாக அமைந்தது.

ராஜகுமாரி திரைப்படத்தில் தவமணி தேவி உடுத்தியிருந்த ஆடை பெரும் கவர்ச்சியாக இருந்ததால் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலேயே இவருக்கும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் இடையில் பெரும் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற தவமணி தேவியின் சில காட்சிகள் தணிக்கைக் குழுவின் கத்தரிக்கு இரையானது. ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிய போது அதில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆரின் புகழை மேலும் உச்சிக்குக் கொண்டு போனது. அதன் கதை வசன கர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சிறந்த வசன கர்த்தா என்னும் ஒரு அங்கீகாரத்தையும் தந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் வெற்றி தவமணி தேவிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இந்தத் திரைப்படத்தின் பின்னர் அவரது திரையுலக வரலாறு இறங்கு முகமாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இவரில் பெரும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியது.

இந்த நிலையில் தவமணி தேவி 1962இல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரியை காதலித்து மணந்து கொண்டார். திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேஸ்வரத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்த தவமணி தேவி அவர்கள் தனது 76வது வயதில் 10.02.2001இல் காலமானார்.

1990களில் அதாவது திரைப்படத்துறையை விட்டு தவமணிதேவி அவர்கள் வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல வார இதழ் தவமணி தேவியைப் பற்றி இப்படி எழுதியிருந்தது.

´சுதந்திரத்திற்கு முன் தமிழ்த் திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்திலிருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப்பட இரசிகர்கள் அந்த புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர், அதிசயித்தனர், பரவசப்பட்டுப் போயினர். படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தச் செய்ய ஆவலாக இருந்தனர். ´

1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.

(இனியும் வரும்)

Wednesday, October 01, 2008

கடந்து வந்த நமது சினிமா - 2

சிங்களத்துக் குயில் என்று அழைக்கப் பட்ட யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த தவமணி தேவியின் தென்னிந்தியத் திரைப் பிரவேசம் உண்மையில் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1930களிலே அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்த் திரையுலகில் புகுந்து கவர்ச்சி காட்டி நடித்து பலரது புருவங்களை உயர வைத்தவர். ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றுடன் கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தவர். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலகிற்கு முதன் முதலில் கவர்ச்சியை அறிமுகப் படுத்தியவர் இவராகத்தான் இருக்கவேண்டும்.. இவரின் வரவிற்குப் பின்னரே பின்னாளில் திரையுலகில் ஒளிவீசிய சிலரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. ரி.ஆர். ராஜகுமாரி, மாதுரிதேவி, அஞ்சலி தேவி.... எனப் பலரை இந்த வரிசையில் சேர்க்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் இலங்கையில் பாரிஸ்ரர் தொழிலில் முன்ணணியில் திகழ்ந்தவர். தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள்.
உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா கலையகத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கான முதல் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் அதில் நடிக்கும் வாய்ப்பு தவமணி தேவிக்குக் கிடைத்தது. சதிஅகல்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அவருக்கு அகலிகை வேடம். இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் ரி.ஆர்.சுந்தரம் பத்திரிகையாளர்களை அழைத்து தனது படத்தின் கதாநாயகியான தவமணிதேவியை அறிமுகப் படுத்தினார். பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக ரி.ஆர்.சுந்தரம் கொடுத்த தவமணியின் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். நீச்சல் உடையில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் அவர்களது புருவங்களை உயர வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான் ஏனெனில் பெண்கள் இழுத்துப் போர்த்தி சேலை உடுத்தும் காலம் அதுவாக இருந்தது.
தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அது பலரது பார்வையைக் கவர்ந்தது.. வசிட்டரின் மனைவியான அகலிகையாக நடிக்கப் போகும் பெண் இப்படி உடுத்தலாமா? என்பது போன்று பல விதமான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. 1930களில் ஒரு ஆசியப் பெண்ணை நீச்சல் உடையில் பத்திரிகைகளில் காண்பது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும். இது போதாதா தவமணி தேவி பிரபல்யமாகுவதற்கு? சதிஅகல்யா படப்பிடிப்பு தொடங்கு முன்னரே தவமணி தேவி மிகப் பிரபல்யமாகி விட்டிருந்தார். ஆகவே 1937இல் வெளியான மொடேர்ன் தியேட்டர்ஸின் சதிஅகல்யா பெரு வெற்றி பெற்றதுக்கு தனியாகக் காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை.
சதி அகல்யா வெற்றிக்குப் பின் தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வனமோகினி. இந்தத் திரைப்படம் 1940 இல் வெளிவந்தது. கொலிவூட்டில் டோர்தி லமோர் நடித்துப் பிரபல்யமான யங்கிள் என்ற திரைப்படத்தினையே தமிழில் வனமோகினி என்று எடுத்தார்கள். இதில் வனமோகினியாக ஆங்கிலத்தில் டோர்தி லமோர் உடுத்த கவாய் நாட்டுப் பாணியிலான உடையை இடுப்பில்; கட்டி இவர் நடித்திருந்தார். இவர் தனது நடிப்போடு காற்றில் ஆடும் சிறு உடையின் மத்தியில் தனது உடல் அழகையும் காட்டிக் கொண்டது அன்றைய கால கட்டத்தில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். இவரது இந்தத் திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் பெரு வெற்றியையும் ஈட்டிக் கொண்டது. அறுபது வருடங்கள் கழிந்தாலும் தென்னத் திரையுலகில் இன்னமும் வனமோகினி பேசப்படுகிறதென்றால் அன்றைய காலகட்டத்தில் வனமோகினி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.

தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,

அதோ இரண்டு டீடயஉம நலநள!

என்னைப் பார்த்து ழுnஉநஇ வறiஉந!
கண்ணைச் சிமிட்டி னுழடடல!
கை கட்டி ஊயடடள அந!
ஐள வை வசரந லழரச நலநள யசந டிடரந?
ஐ'டட கயடட in டழஎந றiவா லழர!
ஐ றடைட னயnஉந கழச லழர!
இந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் ஏ.ரி.கிருஸ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவர் நடித்து பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்த அடுத்த திரைப்படம் 1948இல் வெளியான ராஜகுமாரி. இந்தத் திரைப்படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி இயக்கியிருந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பில்தான் ஏ.எஸ்.ஏ.சாமி தனது படிப்பினை முடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பின்னாளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்று.
ராஜகுமாரி திரைப்படத்தையும் யூபிட்டர் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஒரு பெருமையிருக்கிறது. பின்னாளில் தமிழகத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஆண்ட மூன்று தமிழக முதலமைச்சர்களின் திரையுலகப் பிரவேசம் இந்த நிறுவனத்தினூடாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 1949இல் வெளியான யூபிட்டர் நிறுவனத்தின் வேலைக்காரி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார். யூபிட்டரின் ராஜகுமாரி திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். அதில் முதன் முதலாக எம.;ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில்; நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சான்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே இவரின் திரையுலகப் பிரவேசமா அமைந்தது.
ராஜகுமாரி திரைப்படத்தில் தவமணி தேவி உடுத்தியிருந்த ஆடை பெரும் கவர்ச்சியாக இருந்ததால் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலேயே இவருக்கும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் இடையில் பெரும் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற தவமணி தேவியின் சில காட்சிகள் தணிக்கைக் குழுவின் கத்தரிக்கு இரையானது. ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிய போது அதில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆரின் புகழை மேலும் உச்சிக்குக் கொண்டு போனது. அதன் கதை வசன கர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதிக்கு தமிழ்த் திiயுலகம் சிறந்த வசன கர்த்தா என்னும் ஒரு அங்கீகாரத்தையும் தந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் வெற்றி தவமணி தேவிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இந்தத் திரைப்படத்தின் பின்னர் அவரது திரையுலக வரலாறு இறங்கு முகமாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இவரில் பெரும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியது.

இந்த நிலையில் தவமணி தேவி 1962இல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரியை காதலித்து மணந்து கொண்டார். திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ராமேஸ்வரத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்த தவமணி தேவி அவர்கள் தனது 76வது வயதில் 10.02.2001இல் காலமானார்.
1990களில் அதாவது திரைப்படத்துறையை விட்டு தவமணிதேவி அவர்கள் வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல வார இதழ் தவமணி தேவியைப் பற்றி இப்படி எழுதியிருந்தது.
சுதந்திரத்திற்கு முன் தமிழ்த்; திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்திலிருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப்பட இரசிகர்கள் அந்த புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர், அதிசயித்தனர், பரவசப்பட்டுப் போயினர்.
படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தச் செய்ய ஆவலாக இருந்தனர்.

1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.

இனியும் வரும்.

Wednesday, September 24, 2008

கடந்து வந்த நமது சினிமா - 1

- மூனா -

இலங்கைத் திரைப்படத்துறை தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை 1997இல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல் போயிருக்கின்றது. ஆனாலும் இன்றுள்ள நிலையில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறையை வளர்த்தெடுக்கும் ஆர்வம் பலரிடம் தோன்றியுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

இலங்கையின் திரைப்படத் துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. அதிலும் சுதந்திரம் கிடைத்து நீண்ட ஆண்டுகளாக இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையினைப் பற்றி யாரும் அதிகளவு சிந்தித்ததாகத் தெரியவில்லை. கணிசமான தமிழ்த் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் உருவானதால் அதில் எங்களவர்கள் திருப்திப்பட்டுப் போயிருக்கலாம். அல்லது இலங்கையில் தமிழ் சினிமா தயாரிப்பதிலும் பார்க்க தென்னிந்திய திரைப்படங்களைத் தருவிப்பது மலிவாகப் பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் எங்களது இந்த நிலை சிங்களத் திரைப்படத்துறையில் இருக்கவில்லை.

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.

சிறீசேனா விமலவீரா 1951இல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்தை உருவாக்கினார். சிறீசேனா விமலவீராவின் தயாரிப்பில் 25.11.1955இல் வெளியான பொடிபுத்தா (இளையமகன்) என்ற சிங்களத் திரைப்படம் அவரால் உருவாக்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்திலேயே வைத்து தயாரிக்கப் பட்டது. இலங்கையில் வெளியான 32வது சிங்களத் திரைப்படமான பொடிபுத்தா என்ற இந்தத் திரைப்படமே பின்னாளில் இலங்கையின் பராம்பரியங்களைக் கூறவல்ல திரைப்படங்கள் உருவாக ஆதாரமாக இருந்திருக்கிறது.

சிறீசேனா விமலவீரா கலையகத்தை உருவாக்கி சுயமான சிங்களத் திரைப்படங்களை உருவாக வழி சமைத்துத் தர, இன்னும் ஒரு படி மேலே போய் வெளிப்புறங்களில் படம்பிடித்து இயற்கையான காட்சிகள், ஒளிகளுடன் யதார்த்தமான சிங்களப் படங்கள் உருவாக காரணமாக இருந்தவர் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள். இவ்வாறு வெளிப்புறப் படப்பிடிப்புக்களுடன் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள் உருவாக்கிய ரேகாவா (விதியின் கோடு) 28.12. 1956இல் வெளியானது.

தங்களது சுற்றாடல்களையும் பாரம்பரியம் பண்பாடுகளையும் திரையில் பார்க்க முடிந்ததால் இந்தத் திரைப்படம் சிங்களவர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உலகலாவிய அளவில் பலரது பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிங்களத் திரைப்படத்துறைக்கு சினிமா உலகில் ஒரு நல்ல இடத்தையும் பெற்றுத் தந்தது. இவையெல்லாம் சேர்ந்து இலங்கையில் சிங்களத் திரைப்படத் துறை வளர பெரிதும் காரணங்களாகின.

முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் 21.01.1947இல் திரையிடப் பட்டிருக்கிறது. கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும் கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது இலங்கை வானொலியிலும் இவரது பணி நிறைந்திருக்கிறது.

கடவுணு பொரன்டுவ திரைப்படத்தை சித்திர கலா மூவிரோன் என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்கு பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.

இலங்கையின் முதல் திரைப்படத்தில் நடித்த ருக்மணி தேவி, பின்னாளில் சிங்களத் திரையுலகில் பிரவேசித்த பல நடிகைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். நடிகை ருக்மணிதேவியைப் பின்பற்றி 1950களிலும் 1960 ஆரம்ப காலங்களிலும் பல நடிகைகள் சிங்களத் திரையுலகில் பிரவேசித்தார்கள். அவர்களில் முக்கியமானவர்களாக சந்யாகுமாரி, விஜிதா மாலிகா, புளொரிடா ஜயலத், கிளாரிஸ் டீ சில்வா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

15.01.1923 பிறந்த ருக்மணி தேவி சிங்களத் திரையுலகில் தனது பதிவை ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் பதித்திருக்கின்றார். தனது ஏழு வயதில் நத்தார் பாடல்களை இசைக்கத் தொடங்கிய ருக்மணிதேவி பின்னாளில் பல மேடை நாடகங்களிலும், நாட்டிய நாடகங்களிலும், இசை மேடைகளிலும், சிங்களத் திரைவானிலும் மிகப் பிரகாசமாகப் பரிணமித்திருக்கின்றார். இவர் நடித்த பிரபலமான கடவுணு பொரண்டுவ என்ற மேடை நாடகமே பி.ஏ.ஜயமனே அவாகளால் சிங்ளத் திரையுலகின் முதல் திரைப்படமாக நெறியாளப் பட்டிருந்தது. தனது முப்பது வருட திரையுலக வாழ்க்கையில் ருக்மணி தேவி அவர்கள் ஏறக்குறைய 90 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் ருக்மணிதேவி பொப் இசைக்குழுவிலும் பாடி தனது திறமையை அங்கும் பதிந்திருக்கின்றார்.

25.09.1978 இலங்கையின் மாத்தறைப் பகுதியில் உள்ள உயன்வத்தை என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி விட்டு வரும் வழியில் நடந்த வாகன விபத்தில் இலங்கையின் இராப்பாடி என்று அழைக்கப்பட்ட ருக்மணி தேவி அவர்கள் காலமானார்.

28.09.1978 இல் நீர்கொழும்பு மயானத்தில் நடைபெற்ற அவரது இறுதிக் கிரியைகளில் பங்கு பற்றிய பெரும் திரளான அவரது ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பட உலக பிரமுகர்கள், அரசியல் வாதிகள், நாடக உலகக் கலைஞர்கள் அவரது கலையுலக வாழ்க்கையின் சிறப்புக்கு அத்தாட்சியாக இருந்தார்கள். அவரது மறைவுக்கு அன்றைய இலங்கையின் ஜனாதிபதி ரணதுங்க பிரேமதாசா வழங்கிய இரங்கல் உரை ருக்மணி தேவி அவர்கள் கலைக்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய பணியைக் காட்டி நிற்கின்றது. இலங்கையின் இராப்பாடி என்று ருக்மணிதேவி இலங்கையில் அழைக்கப்பட்டார். அதுபோல் தென்னகத்தில் சிங்களத்துக் குயில் என்று யாழ்ப்பாணத்து நடிகையான தவமணி தேவி இருந்திருக்கின்றார்.

(தொடரும்)

Monday, September 01, 2008

அவள் வருகிறாள்

அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.

குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய் அலுமாரிச் சிலைகளை ஒரு சென்ரிமீற்றர் அரக்கி வைத்தால் நன்றாக இருக்கும் போலவும், யன்னல் சேலையின் சுருக்குகள் சற்று ஒழுங்கற்று இருப்பது போலவும், புத்தக அலுமாரியில் புத்தகங்களை இன்னும் நேராக்கி விடலாம் போலவும்.. தோன்றிக் கொண்டே இருந்தன.

அவள் வரப்போகிறாள் என்பதில் எனக்குள் மிகுந்த பரபரப்பாகவே இருந்தது. 23வருடங்களின் பின் சந்திக்கப் போகிறேன். என்னைப் போல எடை போட்டிருப்பாளா? அல்லது அப்போது போலவே அழகாக இருப்பாளா? மனசு கற்பனை பாதியும், கேள்விகள் பாதியுமாக அவளின் வரவுக்காகக் காத்திருந்தது.

எத்தனை தடவைகள் புகைப்படங்கள் அனுப்பும் படி கேட்டிருப்பேன். "ம்.. கூம். நான் வருகிறேன் பார்" என்று சொல்லிச் சொல்லியே இத்தனை வருடங்களை இழுத்து விட்டாள்.

ஒரே வகுப்பில் ஒன்றாகத்தான் படிக்கத் தொடங்கினோம். ஒரே வகுப்பு என்பதையும் விட ஒரே ஊர் என்பது எங்களுக்குள் இன்னும் ஒட்டுதலை ஏற்படுத்தியிருந்தது. என் வீட்டில் போல அவள் வீட்டில் அதீதமான கட்டுப்பாடுகள் இல்லை. எனக்கு மாலைவேளைகளில் யார் வீட்டுக்கும் போய் விளையாடுவதற்கு அனுமதி கிடைப்பதில்லை. அவள்தான் என் வீட்டுக்கு வருவாள். ஓடிப்பிடித்து, ஒளித்துப்பிடித்து, கெந்திப்பிடித்து, கல்லுச்சுண்டி, கொக்கான்வெட்டி, கரம் விளையாடி.... எங்கள் பொழுதுகள் சிரிப்பும், கும்மாளமாகவுமே கரையும். என் தம்பி, தங்கைமாரும் எமது விளையாட்டுக்களில் வந்து இணைவார்கள். சில சமயங்களில் சூரியகுமாரியும் எங்களுடன் இணைந்து கொள்வாள். யாருக்கும் தெரியாத இரகசியங்களும் எங்களுக்குள் இருக்கும்.

எட்டாம் வகுப்பில் பாடசாலையில் பிரிக்கும் போது அவள் ஆர்ட்ஸ்க்கும், நான் சயன்ஸ்க்கும் என்று பிரிந்து விட்டோம். இடைவேளையில் ஓடிவந்து என்னுடன் கதைத்து விட்டுப் போவாள். இடையிடையே கிளித்தட்டு விளையாடும் போது அவள் வகுப்பும் எமது வகுப்பும் இணைந்து விளையாடுவோம். நெற்போல் (கூடைப்பந்து) என்றால் சொல்லவே தேவையில்லை. நேரம் போவதே எமக்குத் தெரிவதில்லை. மாலைவேளைகளில் தொடர்ந்தும் எமது வீட்டுக்கு வருவாள்.

நான் அவசரத் திருமணம் செய்து கொண்ட போதும், எனக்குக் குழந்தை பிறந்த போதும் ஓடி வந்து வியந்து வியந்து பார்த்தாள். நான் ஜேர்மனிக்குப் புறப்படும் வரை அவள் கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை.

சில வருடங்களில் அவள் திருமணமாகி கனடா சென்று விட்டதாக அம்மா எழுதியிருந்தாள். அங்கிருந்து எப்படியோ எனது தொலைபேசி இலக்கத்தைத் தேடிப்பிடித்து அழைத்துக் கதைத்தாள். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கும் வரை அடிக்கடி தொலைபேசியில் உரையாடினோம். குழந்தைகள் வளர வளர நாங்கள் பேசும் இடைவெளியும் வளர்ந்தது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் "நான் உன்னிடம் வருகிறேன்" என்பாள். இன்றிரவு கணவர் குழந்தைகளுடன் வரப் போகிறாள். மனசு இன்னும் பரபரத்துக் கொண்டே இருந்தது.

மீண்டும் மீண்டுமாய் வீடு அழகாக இருக்கிறதா எனச் சரி பார்த்துக் கொண்டேன். அவளுக்குத் தோசை பிடிக்கும் என்பதால், அடுத்தநாள் தோசை சுடலாம் என்ற நினைப்பில் உழுந்தை ஊறப் போட்டேன். சில கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கும் ஆசியாக் கடைக்கு முதல்நாளே சென்று, வாங்கி வந்த தேங்காயை சுத்தியலால் அடித்து, உடைத்து சம்பலுக்காகத் துருவி எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். தோசைக்கு கத்தரிக்காய் வதக்கல் நல்லாயிருக்கும் என்று இன்னொரு கடைக்குச் சென்று வாங்கிய கத்தரிக்காயையும் வெட்டிப் பொரித்து எடுத்தேன். இரவுச் சாப்பாட்டுக்கு இடியப்பம் அவித்து, கோழி நெஞ்சுஇறைச்சியில் பிரட்டல் கறி, பொரியல், வெந்தயச் சொதி..., என்று செய்து முடித்தேன்.

உள்ளியும், வெங்காயமும், பொரிந்த எண்ணெயும்... என்று கலந்த சமையல் மணம் வெளியில் போய் விடும் படியாக யன்னல்களையும், பல்கணிக் கதவையும் திறந்து வைத்தேன்.

எங்கள் படுக்கையறையைத்தான் ஒரு வாரத்துக்கும் அவர்களுக்குக் கொடுக்க இருப்பதால் படுக்கை விரிப்புகளை மாற்றினேன். அந்த ஒரு வாரத்துக்கும் எமக்குத் தேவையான எமது உடுப்புகளையும், மற்றைய அத்தியாவசியப் பொருட்களையும் மற்றைய சிறிய அறைக்குள் கொண்டு போய் வைத்தேன்.

இப்படியே தொட்டுத் தொட்டு வேலைகள் நீண்டு கொண்டே போயின. கால்கள் ஆறுதல் தேடின. மனம் எதையாவது கண்டு பிடித்துப் பிடித்து வேலை தந்து கொண்டே இருந்தது.

மாலையில் கொறிப்பதற்கென முதல்வாரமே கணவரின் உதவியோடு தட்டை வடை செய்து வைத்திருந்தேன். அத்தோடு இன்னும் ஏதாவது பலகாரங்கள் செய்து வைத்தால் ஒரு கிழமையும் சுவையாகப் போகும் என்ற எண்ணம். அவளது பிள்ளைகளுக்கென சிப்ஸ், சொக்கிளேற்ஸ், பிஸ்கிட்ஸ் எல்லாம் வாங்கி அடுக்கி வைத்தேன்.

சூரியகுமாரியும் கனடாவில்தான் இருக்கிறாளாம். அவளைப் பற்றியும் நிறையக் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இன்னும் என்னோடு அரிவரியிலிருந்து கபொத உயர்தரம் வரை படித்த பல மாணவிகள் கனடாவில்தானாம். ´வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் சந்திப்பு´ என்று சொல்லிச் சந்திப்பார்களாம். நெற்போல் விளையாடுவார்களாம்.

நெற்போல் என்றதுமே எனக்குள் சட்டென்று ஒரு ஆசை அலை மோதியது. ஜேர்மனியில் அனேகமாக எல்லாத் தமிழர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தள்ளித தள்ளித்தான் இருக்கிறோம். சேர்ந்து வருபவர்களில் ஒருவரேனும் என்னோடு படித்தவர்களாயோ, அல்லது எனது ஊரவர்களாயோ இருப்பதில்லை. இந்த நிலையில் ´வடமராட்சி மாணவர்கள் சந்திப்பு´ என்பதைக் கனவில் கூட இங்கு நினைத்துப் பார்க்க முடிவதில்லை. எங்காவது சிறுவர் விளையாட்டு மைதானங்களில் நெற்போலுக்கான கூடையையும், பந்தையும் சேர்த்துக் கண்டால் போதும். பாடசாலை நினைவுகள் மனதில் நர்த்தனமிட நானும் ஒரு சிறுபிள்ளை போல ஓடிச் சென்று பந்தை கூடைக்குள் திரும்பத் திரும்பவாகப் போடுவேன். படிக்கும் காலங்களில் நெற்போல் என்றால் எவ்வளவு பைத்தியமாக இருந்திருக்கிறேன். ஏதாவதொரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை என்றால் போதும். நான் பந்துடன் மைதானத்துக்குச் சென்று விடுவேன்.

அவள் வந்த பின கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் சிறுவர் விளையாட்டு மைதானத்துக்குப் போய் அவளோடு நெற்போல் விளையாட வேண்டும் எனவும் நினைத்துக் கொண்டேன்.

இப்படியே மனம் நினைவுகளுடனும், கைகள் வேலைகளுடனும் என்று 90சதுர மீற்றர் வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டே இருந்தேன். எல்லாவற்றையும் முடித்து விட்டேன் என்றால் அவள் வந்து நிற்கும் ஒரு வாரமும் அவளுடன் கதைத்து, அவளோடு வெளியில் போய்.. என்று கூடிய நேரங்களை அவளுடனேயே களித்துக் கழிக்கலாம் என்ற பேராசை எனக்கு. அதற்காகவே ஒரு வாரம் வேலைக்கு விடுப்பும் எடுத்திருந்தேன்.

இரவும் வந்தது. அவளும் வந்தாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா..?இனம்புரியாத மகிழ்வலைகளில் திக்கு முக்காடினோம். காலங்களும், குடும்ப பாரங்களும் அவளிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. என்னை விட அதிக குண்டாக இருந்தாள். என் கற்பனைக்குத் துளியும் எட்டாத தூரத்தில் அவள் கணவன். கனேடிய ஸ்ரைலும், தமிழர் என்ற அடையாளங்களும் கலந்து அனேகமான எல்லா வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தைகள் போலவும் அவளது குழந்தைகள்.

கனடாவில் இருந்து வெளிக்கிட்டு இலண்டனில் இரண்டு வாரம், ஸ்பெயினில் ஒரு வாரம்... என்று நின்று நின்று வந்ததில் கொஞ்சம் களைத்தும் இருந்தார்கள். ஆனாலும் கலகலத்தார்கள். சாப்பிட்டு, நிறையக் கதைத்து நித்திரைக்குச் செல்ல சாமமாகி விட்டது.

அடுத்த நாள் ஆறுதலாகவே அவர்களுக்கு விடிந்தது. கதையும், சிரிப்புமாய் இருந்து விட்டு மதிய உணவை தயார் செய்யத் தொடங்கினேன்.

அவள் தனது சூடகேஸைத் திறந்து பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்ட இரு பெரிய பார்சல்களை வெளியில் எடுத்தாள். ஏதோ அன்பளிப்புக் கொண்டு வந்திருக்கிறாள் என்ற நினைப்பில் மெலிதான ஆவல் என்னுள் தோன்றப் பார்த்துக் கொண்டு நின்றேன். பைகளைப் பிரித்து இருபதுக்கும் மேலான வீடியோ கசட்டுகளை வெளியில் எடுத்து வைத்தாள்.

"என்னது?" ஆவல் ததும்பக் கேட்டேன்.

"இது இவ்வளவும் ´சித்தி´, இதுகள் ´அரசி´, இதுகள் ´கோலம்´, இதுகள் ´செல்லமடி நீ எனக்கு´, இது ... இது ..." என்று சொல்லிச் சொல்லி கசட்டுகளைப் பிரித்துப் பிரித்து வைத்தாள்.

"என்ன படமா?"

"என்ன நீ, யூரோப்பிலை இருந்து கொண்டு இது கூட உனக்குத் தெரியாதே?" என்றாள்.

பின்னர்தான் விளங்கியது அத்தனையும் தொலைக்காட்சித் தொடர்கள் என்பது. பயண அலுவல்களால் கனடாவில் நின்ற கடைசி சில வாரங்கள் அவளால் தொடர்களைப் பார்க்க முடியாது போய் விட்டதாம். எல்லாவற்றையும் ரெக்கோர்ட் பண்ணிக் கொண்டு வந்து விட்டாளாம். இலண்டனில் கொஞ்சத்தைப் பார்த்து முடித்தாளாம். மிகுதியை இங்கு தொடரப் போகிறாளாம்.

நான் சமைத்து முடித்து மேசையில் சாப்பாடுகளை வைத்த போதும் சரி, தொடர்ந்த நாட்களிலும் சரி அவள் கண்களைத் துடைத்தும், மூக்கை உறிஞ்சியும் தொடர்களோடு கலங்குவதும், களிப்பதுமாய் இருந்தாள். கிடைக்கும் இடைவெளிகளிலும், சாப்பிடும் போதும் தொடர்களில் வரும் கதைகளையும், கதாபாத்திரங்களையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் முடிந்து அவளும் அவள் குடும்பமும் போன பின் சூரியகுமாரியும், கூடைப்பந்தும் இன்னும் பலவும் வழக்கம் போலவே நினைவுகளாயும், நிராசைகளாயும் எனக்குள்ளே மிதந்து கொண்டிருந்தன.

சந்திரவதனா
18.7.2008

பிரசுரம்: ஓகஸ்ட் யுகமாயினி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite