(diana)தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறித்தான் சாதனைகளை அளவிட முடியுமா?
இளவரசி டயானா இளவரசியாக மட்டும் இராது ஒரு சமூகசேவகியாகவும் இருந்தார். அவரை சாதனைப்பெண்கள் பட்டியலில் ... நான் சேர்த்தேன். அது தவறு என எல்லாளன் தனது கருத்தைப் பதித்துள்ளார்.
சாதனை படைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறிப் பார்த்துத்தான் அவர்களின் சாதனைகளை அளவிட முடியுமா?
(டயானாவின் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவைதானா அல்லது பொய்யானவையா என்பது ஒரு புறமிருக்க... அவை உண்மையாயினும் அவை குற்றந்தானா, இல்லையா என்பதும் அதற்கான தீர்வுகளும் எனக்கு அப்பாற் பட்டவை. குற்றமேயாயினும், அக்குற்றங்களுக்கான காரணிகளும் கவனத்தில் எடுக்கப் பட வேண்டியவை.)
எனது பதிலை நான் எல்லாளனுக்குக் கொடுப்பதற்கு முன் உங்கள் பதில்களை எதிர் பார்க்கிறேன்.
ஏற்கெனவே இருமுறை பதிந்து காணாமற் போனதை மீண்டும் பதிந்துள்ளேன்..
இன்று நான்காவது தரம்
எல்லாளனின் கருத்துஎனது கேள்வி
டயனா குறித்து எனக்குத் தவறான அபிப்பிராயம் எதுவும் கிடையாது. ஆனால் அவர் நீங்கள் காண்பிக்கும் அளவிற்கு இரக்கப்படவேண்டியவர் அல்ல என்பது என் கருத்து! 'சார்ள்ஸ்" தாழ்வு மனப்பான்மை உடையவர் (இதுவும் என் கருத்து). அதனால்த்தான் டயனா மக்களுக்குள் அழகு தேவதையானதை அவரால் சகிக்க முடியவில்லை. இந்த நேரத்தினை கமிலா சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார். இருப்பினும் டயானா விவாகரத்துப் ""பெற முன்னரே"" பலருடன் 'மன்னிக்கவும்" சிலருடன் 'நெருக்கமாக" இருந்தவர் (சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு.) அதனால்த்தான் மகன் Harryயின் தலைமுடியினை இரண்டு வருடங்களுக்கு முன் D.N.A பரிசோதனைக்கு அனுப்பினது 'ராணிமாளிகை" (உள்ளுர்ப் பத்திரிகையில்ப் படித்தேன்). ஆக மறுபடியும் சொல்லுகிறேன். எனக்கு டயானா மீது தவறான அபிப்பிராயம் இல்லை, வெள்ளைப் பெண்மணி என்ற வரையறைக்குள் பார்க்கிறபோது மட்டும் (குறிப்பிட நினைப்பது 'நெருக்கமான உறவுகளை"). ஆனால் எங்களுக்கு (தமிழர்) அவரை சாதனை படைத்தவர் என்று உதாரணத் தாரகை ஆக்குவதில்த்தான் உடன்பாடு இல்லை.
சாதனை படைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிளறிப் பார்த்துத்தான் அவர்களின் சாதனைகளை அளவிட முடியுமா?
(டயானாவின் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவைதானா அல்லது பொய்யானவையா என்பது ஒரு புறமிருக்க... அவை உண்மையாயினும் அவை குற்றந்தானா, இல்லையா என்பதும் அதற்கான தீர்வுகளும் எனக்கு அப்பாற் பட்டவை. குற்றமேயாயினும், அக்குற்றங்களுக்கான காரணிகளும் கவனத்தில் எடுக்கப் பட வேண்டியவை.)
எனது பதிலை நான் எல்லாளனுக்குக் கொடுப்பதற்கு முன் உங்கள் பதில்களை எதிர் பார்க்கிறேன்.
ஏற்கெனவே இருமுறை பதிந்து காணாமற் போனதை மீண்டும் பதிந்துள்ளேன்..
இன்று நான்காவது தரம்
2 comments :
சந்திரவதனா,
இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்! இவ்வாரம் தங்களிடமிருந்து பலதரப்பட்ட கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். என் சமீபத்திய "சிறுவயது சிந்தனைகள்" பகுதிகள் 6,7 படித்தீர்களா?
http://balaji_ammu.blogspot.com/2005/01/6.html
http://balaji_ammu.blogspot.com/2005/01/7.html
என்றென்றும் அன்புடன்,
பாலா
பாலா
உங்களது பதிவுகளில் அனேகமான எல்லாவற்றையுமே வாசிப்பேன்.
அந்த நினைவுக்குறிப்புகளையும் வாசித்தேன். நேரப்பற்றாக்குறையினால் கருத்தைத்தான் எழுதவில்லை. நேரமிருக்கும் போது வந்து கருத்தைத் தருகிறேன்.
Post a Comment