Google+ Followers

Tuesday, February 08, 2005

இது சுயநலமா?


அண்ணி தொலைபேசியில் அழைத்து "பரதன் இயக்கத்துக்குப் போய் விட்டான்" என்ற போது சுயநலமாக மனசு அழுதது. அவன் எனது அண்ணனின் மூன்றாவது மகன்.

"பன்னிரண்டே வயசுதானே! ஏன் போனான்? நன்றாகப் படிப்பானே! அண்ணி அனுப்பி வைக்கும் படங்களிலிலெல்லாம் துருதுருவென்ற விழிகளுடன் என்னைப் பார்ப்பானே! எனக்கு அழுகையாக வந்தது. இப்ப என்ன அவசரம் வந்து போனான்..?" மனசு கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டது.

அண்ணியை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. என் வயதுதான். அதற்கிடையில் அண்ணனையையும் இழந்து பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் தனியாக நிற்கிறா. அவவின் தழுதழுத்த குரல் அடிக்கடி மனசில் மோதியது.

இரண்டு கிழமைகளாக இதே நினைவுகள் என்னுள் அலைமோதி மனசை அலைக்கழித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் அண்ணியின் தொலைபேசி "அவன் திரும்பி வந்திட்டான்." சந்தோசம் கலந்த அழுகை பீறிட்டது.

"எப்பிடி வந்தவன்? போய்க் கூட்டிக் கொண்டு வந்தனிங்களோ...? "

"இல்லை அவையள்தான் திருப்பி அனுப்பீட்டினம். 12வயசிலை சேரேலாது..." எண்டு சொல்லி.

எனக்கு போன நிம்மதி திரும்பி வந்தது.

இதையும் விட கடுமையாக...

அன்று 26ந் திகதி. சுனாமி அலைகளோடு வந்த செய்திகளில் வற்றாப்பளை தேவாலயத்துக்குச் சென்ற அத்தனை பேரையும் கடல் கொண்டு சென்று விட்டது என்ற செய்தி மனதை இடித்தது. அண்ணி ஒவ்வொரு ஞாயிறு காலையும் தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு அந்தத் தேவாலயத்துக்குப் போவது நாமறிந்த விடயம். அன்றும் அவ போயிருப்பா என்ற எண்ணம்தான் என்னையும் எனது குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரையும் நிலைகுலைய வைத்தது.

தொலைபேசியோடு போராடினோம். தொடர்புகள் கிடைக்கவேயில்லை. அம்மா செய்வதறியாது மலைத்துப் போய் இருந்தா.

இரண்டுநாள் கழித்துத்தான் தொடர்பு கிடைத்தது.
அன்று(26ந் திகதி) மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அண்ணி தேவாலயத்துக்குப் போகாமல் மருத்துவரிடம் சென்றிருந்தா.

அத்தனை அனர்த்தங்களின் மத்தியிலும் ஒரு அசாதாரண நிம்மதியில் மனது குதூகலித்தது.

5 comments :

Jsri said...

இயக்கத்தில் சேர்ந்துவிட்டான் என்பதைப்படித்ததும், திரைப்பட இயக்கம் என்றே முதலில் நினைத்தேன் சந்திரவதனா. வருத்தமாக இருக்கிறது, வாழ்க்கைதான் மனிதர்களுக்கு எவ்வளவு வித்தியாசப் படுகிறது. என்னால் எல்லாம் அப்படித்தான் நினைக்கும் அளவுக்கு எங்கள் வாழ்க்கை இருக்கிறது. புரிந்துகொள்ளவே சிறிதுநேரம் ஆனது.

//அத்தனை அனர்த்தங்களின் மத்தியிலும் ஒரு அசாதாரண நிம்மதியில் மனது குதூகலித்தது.//

நாமும் சாதாரண மனிதர்கள்தானே. இதில் சுயநலம் எங்கே வந்தது. அது இயற்கையே.

சுனாமியிடமிருந்தும் காப்பாற்றி இருக்கும் கடவுள் உங்கள் அண்ணன் பையனுக்கு வேறு இனிய சாதனைகளையும் வெற்றியையும் தர காத்திருக்கிறாராயிருக்கும். :)

Thangamani said...

A simple and nice post! Thanks!

இராதாகிருஷ்ணன் said...

இதிலெங்கே வந்தது சுயநலம்?! இயற்கைதானே!

Balaji-Paari said...

Thanks for such a post. Ithu sollum seithigal yeraalam.

துளசி கோபால் said...

அன்புள்ள சந்திரவதனா,

இது மிகவும் இயற்கைதான்! சுயநலமில்லாமல் பொதுநலம் இருக்க முடியாது!

கடவுள் வேறு ஏதோ ஒரு ஐடியா வச்சிருக்கார்!

என்றும் அன்புடன்,துளசி.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite