Friday, February 11, 2005

எதற்காக எழுதுகிறீர்கள்..?


ஏன் எழுதுகிறோம்..? ஏன் எழுதுகிறார்கள்..? என்ற கேள்விகளுக்கான பதில்கள் எத்தனையோ விதமாக வருகின்றன. சில பதில்கள் குதர்க்கமாகக் கூட வருகின்றன. எனது கணவரின் நண்பர் ஒருவர் சொன்னார். "ஏதோ ஒரு தேவை கருதித்தான் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். தம்மை வெளிக்காட்டிக் கொள்ளவோ அல்லது தமக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெறவோதான் எழுதுகிறார்கள். ஏதாவது ஒரு லாபமில்லாமல் யாரும் எழுதுவதில்லை..." என்று.

இக்கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. தேவைகருதியும், தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவும், லாபம் கருதியும் எழுதுபவர்கள் இல்லாமல் இல்லை. அதற்காக எழுதுபவர்கள் எல்லோருமே லாபம் கருதித்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு போதும் சொல்ல முடியாது.

மீனாக்ஸ் எழுத்தைத் தவம் என்கிறார்.

மனுஷ்யபுத்திரன் எழுத்து எனக்கு தொழிலுமல்ல, தவமுமல்ல. அது ஒரு வாதை. ஒரு கனவின் திடுக்கிடல். தற்செயலாக வந்து சேரும் காதலின் ஸ்பரிஸம்... என்கிறார்.

உங்களுக்கு எழுத்து எப்படி..?
எதற்காக எழுதுகிறீர்கள்..?

14 comments :

Anonymous said...

வயிற்றுப்போக்குமாதிரி.
வாசித்தது ஜீரணிக்காதபோது எழுதிப்போகிறது

Kasi Arumugam said...

//தம்மை வெளிக்காட்டிக் கொள்ளவோ அல்லது தமக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெறவோதான் எழுதுகிறார்கள்.//
நானெல்லாம் முக்காவாசி இதுக்குத்தான். கூடவே கொஞ்சம் நமக்குத் தெரிந்த எதையாவது யாருக்காவது பயனாகுமாறு பகிர்ந்துக்கலாமேங்கிற ஒரு சமூக உணர்வும். (கொஞ்சமே கொஞ்சம், அபவ்வளவுதான்:-))

ilavanji said...

நாயகன் படத்து "நீங்க நல்லவரா.. கெட்டவரா..?" மாதிரி தான் இதுவும்...

தெரியலம்மா...!!

சனியன் said...

இது நாம் ஏன் உயிர் வாழ்கிறோம் என்ற கேள்வியைப் போன்றது. இதற்கு பொதுவான பதில் என்பது எதுவும் கிடையாது. அதேசமயம் சுயநலமில்லாத பதிலும் இக்கேள்விக்கு கிடையாது.

தகடூர் கோபி(Gopi) said...

GMAIL மின்னஞ்சல் முகவரி கிடைக்கும்ன்னு எப்படியோ ஆரம்பிச்சாச்சி, தமிழ்ல தட்டும்போது மனசுக்கு சந்தோசமா இருக்கு. சரி என்னத்தையாவது தட்டுவோம்ன்னு...

அன்பு said...

இது நாம் ஏன் உயிர் வாழ்கிறோம் என்ற கேள்வியைப் போன்றது. இதற்கு பொதுவான பதில் என்பது எதுவும் கிடையாது. அதேசமயம் சுயநலமில்லாத பதிலும் இக்கேள்விக்கு கிடையாது. அருமையா சொல்லியிருக்காரு...

தன் பெயரை கல்யாணப்பத்திரிக்கையாலாவது... பார்த்துவிடத் துடிக்கும் என்னைப்போன்றவர்களுக்கு வலைப்பதிவு ஒரு வரப்பிரசாதம். நாம எழுதலாம்... நாலு பேரு படிக்கலாம்.

Boston Bala said...

நல்ல கேள்வி

மேலும் சிலரின் பதிலுக்கு: Sandhill Trek: Why Do We Blog? (வழி)

யோசிப்பவர் said...

பொழுது போகாததால் எழுதுகிறேன்!!!

Mookku Sundar said...

செத்த பின்னாடி, பெத்த பிள்ளையத்தவிர விட்டுபோரதுக்கு ஏதாவது..??

மரணித்த பின்னாடி கூட எதுக்காகவாவது நினைக்கப்படணும்னு ஒரு நப்பாசை..??

பொழுதுபோக..

அங்கீகார அரிப்புக்கு சொறிஞ்சிக்க..

முழங்கையை கன்னத்தில் முட்டுக் கொடுத்துக்கொண்டு, கையில் பேனாவோடு போஸ் கொடுக்க..:-)

இவற்றில் ஏதோ ஒன்று..அல்லது எல்லாமும்

தாரா said...

உங்கள் வலைப் பூவின் தலைப்பிலேயே (மன ஓசை) பதில் இருக்கிறது. மனதின் ஓசை வெளியே கேட்க வேண்டுமென்றால் மனதில் தோன்றியதை எழுத வேண்டும்.

தாரா.

எல்லாளன் said...

ஏதாவது பிரியோசனமாக செய்துவிட்டுச் சாகலாமே என்று ஒரு ஆவல்!!!
மற்றவர்களுடைய கருத்தினை அறிந்த எனக்கு உங்கள் கருத்தினை அறியவும் ஆவல்!
உங்களைப் பற்றி நீங்களே சிந்திக்க கீழ் உள்ள இணையப்பக்கங்கள் உதவலாம் என நிச்சயமாய் நம்புகிறேன்.

http://www.selvakumaran.de/webalbum
http://www.selvakumaran.de/webalbum2
http://www.selvakumaran.de/webalbum3
http://www.selvakumaran.de/webalbum5
http://www.selvakumaran.de/webalbum9
http://www.selvakumaran.de/webalbum13
http://www.selvakumaran.de/webalbum15

Anonymous said...

மனதின் ஓசை வெளியே கேட்க வேண்டுமென்றால் மனதில் தோன்றியதை எழுத வேண்டும்

மாதவி

Chandravathanaa said...

என் எழுதுகிறீர்கள் என்று கேட்ட போது
ஓடி வந்து பதில் தந்த அனைவருக்கும் நன்றி.
உங்கள் பதில்களிலிருந்து உங்கள் மனங்களையும்
கொஞ்சமேனும் படிக்க முடிந்தது. நன்றி.

நான் ஏன் ஏழுதுகிறேன்?
உங்களது அனேகமான பதில்கள் எனக்கும் பொருந்துவனவாகவே உள்ளன.
ஆனாலும் விபரமான எனது பதிலை வரும் வாரம் செவ்வாய் புதன்களில் தர முயற்சிக்கிறேன்.

Anonymous said...

சந்திரா,

தமிழில் ஏதாவது எழுத வேண்டும் (எனக்காகவும்/மற்றவருக்காகவும்) என்ற ஆர்வத்தின் (ஆர்வக் கோளாறு?) வெளிப்பாட்டில் தான் "என்றென்றும் அன்புடன், பாலா" பிறந்தது

என்றென்றும் அன்புடன்
பாலா

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite