Google+ Followers

Tuesday, February 15, 2005

பாடலைக் கண்டு பிடியுங்கள்


வழமையாக பாலாதான் பல்லவியும் சரணமும் என்று தன் பதிவுக்கு எங்களை சந்தோசமாக அழைப்பார். இன்று ஒரு மாற்றத்திற்காக பாடல்களிலிருந்து எனக்குப் பிடித்த சில இடைவரிகளைத் தருகிறேன். பாடலைக் கண்டு பிடியுங்கள். முடிந்தால் படம் பாடியவர் போன்றவற்றையும்.

1)நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

2) உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்
என் தோட்டப் பூவெல்லாம் காணாமல் வாடும்
மரம் என்னைத் தேடி கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றிப் போகும்

3)விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

4)விண்மீன்களைக் கேட்டால் அண்ணன்கள் எல்லாம்
பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியில் ஏறி
ஒடித்து ஒடித்துத் தருவார்கள்

5) பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?


6) எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கை போல எண்ணங்கொள் வாழ்வது துயரமில்லை
எந்த மேடை என்பதை அன்பே மறந்து விடு
ஏற்றுக் கொண்ட பாத்திரம் அதிலே கலந்து விடு

7)...... மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது..

பேச முடியவில்லையே..

8) சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினை காட்டுதடா..!

9) முகிலனங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ


10) நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது
பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்

12 comments :

Jsri said...

1. கண்ணில் என்ன கார்காலமோ..
3. நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்- மறுபடியும்
4. அவரவர் வாழ்க்கை- பாண்டவர் பூமி
9. இளைய நிலா பொழிகிறதே- பயணங்கள் முடிவதில்லை
10. ஓ ஒரு தென்றல் புயலாகி- புதுமைப் பெண்

மிச்சமெல்லாமும் தெரியும். ஆனா ஒரு பெருந்தன்மைல மத்தவங்களுக்கு விட்டிருக்கேன். :)

யோசிப்பவர் said...

3) நலம் வாழ, எந்நாளும் - மறுபடியும் - எஸ்.பி.பி
4)
9) இளைய நிலா பொழிகிறது

எல்லாம் தெரிந்த பாடல்கள், ஆனால் சட்டுன்னு நினைவுக்கு வரமாடேங்குதே!! சே!!!!

யோசிப்பவர் said...

Jsri நாலாவது பாட்டுக்கு நீங்கள் கொடுத்துள்ள விடை தவறு. ஜோடி படத்தில் வெளிவராத பாடல். ஜோதிகா நடித்த முதல் படத்தில்(Hindi) வந்த Hindi பாடல். பாட்டு முதல் வரிதான் ஞாபகம் வர மாட்டேங்குது!!

Boston Bala said...

7. தேவனே என்னைப் பாருங்கள் ?

Jsri said...

யோசிப்பு, ரொம்ப சரி, அந்தப்பாடல் 'வண்ணப் பூங்காவைப் போலெந்தன் வீடல்லவா' பாட்டு. மஹாலஷ்மின்னு நினைக்கிறேன். அதெல்லாம் தெரியாமலா இருக்கோம். நீங்க விழிப்பா இருக்கீங்களான்னு செக் பண்ணத்தான்.(எதுக்கும் வழியறதையும் கொஞ்சம் அழுந்த துடைச்சுக்கறேன்.)

:) வந்து பார்த்தா யாருமே பதில் சொல்லாம ப்ளெயினா இருந்ததா, ரொம்ப excite ஆகி அப்படி ஆயிடுச்சு. :(

வெளிவராத பாடலா? எங்க வீட்டு விசிடில இருக்கே. ஆனா என் சாய்ஸ் சிவசிதம்பரம் பாட்டுதான்.

Chandravathanaa said...

Jsri, யோசிப்பவர், பாலா
நீங்கள் தந்த பதில்கள் சரியானவையே. நன்றி

உங்களுக்குத் தெரியாத பாடல்களில்
2வது
உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்
என் தோட்டப் பூவெல்லாம் காணாமல் வாடும்
மரம் என்னைத் தேடி கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றிப் போகும்....
இது
"என்றென்றும் காதல்" படத்தில் ஹனீபா குழுவினர் பாடிய
நாடோடி மன்னா போகாதே....பாடலில் வரும் வரிகள்.

5வதையும் 6வதையும் வேறு யாராவது கண்டு பிடிக்கிறார்களா எனப் பார்த்து விட்டுத் தருகிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

ஆறாவது பாட்டு உன்னி கருஷ்ணன் பாடின பாட்டு. மனசுக்க நிக்குது ஆரம்ப வரிகள் வரமாட்டனெண்டுது.

-/பெயரிலி. said...

8. மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்

Boston Bala said...

பாக்கி விடைகள் :-?

Chandravathanaa said...

வசந்தன் நீங்கள் சொன்னது போல ஆறாவது பாடலை என்னவளே படத்துக்காக.
உன்னி கிருஸ்ணன்தான் பாடினார்.
பாடல் - ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு....

எட்டாவதைச் சொன்ன பெயரிலிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

5)
படம் - தலைவன்

பாடல்-
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும் ?
நம்மால் நாடும் மாற வேண்டும்.

மண்வெட்டி கையில் எடுப்பார் ?
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம் மனதுக்குப்
பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்

பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும் ?
நம்மால் நாடும் மாற வேண்டும்.

பாலா எல்லாவற்றிற்கும் இப்போது விடை வந்து விட்டதுதானே.

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite