
நேற்று அந்த ஆசையைத் தீர்த்துக் கொண்டு போய் பேரூந்துக்காகத் காத்திருந்த போதுதான் அலுப்புத் தட்டியது. வாகனங்கள் எதுவுமே வழமை போல குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து சேரவில்லை. ஆங்காங்கு தடம் புரண்டு போனவையும், மதில்களிலும் மரங்களிலும் மோதியவையும், சில்லு சுற்றவே மறுத்ததால் நின்று போனவையும் என்று... வேலைக்கு யாருமே நேரத்துக்குப் போய்ச் சேரவில்லை.
இன்றும் அதே நிலைதான். காலை எழுந்ததிலிருந்து பனியை அள்ளிக் கொட்டுவதே முக்கிய பணியாய் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எவரது வீட்டின் முன்பாவது வழுக்கி வீழ்ந்து, அங்கு நோகுது, இங்கு நோகுது என்று வழக்குப் போட்டார்களோ..!
வீட்டின் முன்னுள்ள பனியை அள்ளாவதர் பாடு திண்டாட்டமாகி விடும். என் வீட்டின் முன் மீண்டும் குவிந்து விட்டது. அள்ளி விட்டு அல்லது தள்ளி விட்டு வருகிறேன்.
4 comments :
இங்கு போஹுமிலும் பனி கொஞ்சம் விழுகிறது. ஆனால் உங்கள் ஊர் அளவுக்கு அதிகமில்லை. பனி விழுந்தால் நடப்பதற்குத்தான் கொஞ்சம் கடினம்.
நான் உங்களிடம் கவனித்த ஒரு விஷயம். நீங்கள் எப்போதும் யெர்மனி என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள்? ஈழத் தமிழ் வழக்கமா அல்லது ஜெர்மன் மொழியில் ஜே சப்தம் கிடையாது என்பதாலா? பின்னதாகக் கூறப்பட்டக் காரணம் என்றால் அது தவறு. ஏனெனில் ஜெர்மன் மொழியை அந்த நாட்டில் டாய்ட்ஷ் என்றுதான் கூறுவர். ஆகவே நீங்கள் ஜெர்மனை யெர்மன் என்றழைக்கத் தேவையில்லை. செர்மானிய மொழி என்று வேண்டுமானால் தூயத் தமிழில் அழைக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu,
Nice thoughts.. I agree with you.
ராகவன், முத்து
நீங்கள் சொல்வது சரிதான்.
ஜேர்மனிதான் சரியானது. முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில்
இங்கு யேர்மனியில் எமது தமிழர்கள் ஜ வைத் தவிர்த்தார்கள்.
அந்த நேரத்தில் நானும் தவிர்க்க வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டது.
அப்படியே பழகியும் விட்டது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
Post a Comment