சிரித்த படி கை காட்டி விட்டுப் போய் வெடித்துச் சிதறுபவர்களை நினைத்தாலே... மனசு பதறும். எப்படி..? எப்படி...? என்று உள்ளுக்குள் ஏதோ ஒன்று அலறும்.
திடீரென்று வந்த ஒரு வேகத்தில் தற்கொலை செய்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.
சாவேன் என்று தெரிந்து கொண்டு... அதற்கான ஆயத்தங்களை முற்கூட்டியே செய்து கொண்டு... உடம்பிலே குண்டைக் கட்டிக் கொண்டு... சிரித்துக் கொண்டு... கை காட்டிச் செல்லும்... அந்த மனசுக்குள் என்ன இருக்கும்...?
என்னுள் ஆயிரந்தடவைகள் அல்லது இலட்சந்தடவைகள் அல்லது அதையும் விட அதிகமான தடவைகள் எழுந்து விட்ட கேள்வி இது.
சாகப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு, குண்டு வெடிப்பதற்கான ஆழியை அழுத்தும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான அந்தக் கணப்பொழுதில்... 21வயதுகள் மட்டுமே நிரம்பிய பலஸ்தீனப் பெண்ணான Wafa al-Biss
பரிதாபம். சாகவில்லை என்பதற்காகச் சந்தோசப்பட முடியாத பொழுதுகளும் உண்டென்றால் இதுதான். குண்டு வெடிக்கவில்லை. Wafa al-Biss இப்போ சிறையிலிருந்து அழுகிறாள்.
புகைப்படங்கள் - ஈ.பீ.ஏ
3 comments :
வாழ்வதற்கு இனி ஒன்றுமில்லை. தனக்குப் பின்னால் வரும் சமுதாயமாவது தான் படும் அவதைகளிலிருந்து மாறட்டும் என்ற எண்ணமே இவ்வாறு அவர்களை மனித வெடிகுண்டுகளாய் மாற்றிவிடுகிறது. இது உளவியல் மற்றும் சமூகவியலின் அடிப்படையைக் கொண்டே நிகழ்கிறது. இதற்கு தீர்வு என்ன என்பது பலருக்குத் தெரிந்தாலும் இது ஒரு தனிமனித வாழ்வை மட்டும் சார்ந்ததல்ல எனும்போது அந்த தீர்வை செயல்படுத்த இயலாமல் போய்விடுகிறது.
பிரச்சனைகளின் ஆழத்தை ஆய்ந்துப் பார்ப்பதே இதற்கு சிறந்த மருந்து.
சந்திரவானா, இதில் கவனிக்கப் படவேண்டிய விடயம், அந்தக் கணம். இறக்கப் போகிறேன் என்ற அந்தக் கணத்தினை அவளது முகம் பிரதிபலிக்கிறது. குண்டோடு போய் வெடிக்கும் வேறு எந்தப் படத்தையும் நான் இந்த நிலையில் காணவேயில்லை.
இந்தப் பெண்ணானவள் ஒரு தடவை சமையலறையில் எரிவாயு வெடித்து கடுமையான எரிகாயங்களுக்குள்ளானவள். உற்றுக் கவனித்தால் அவளது உடலில் உள்ள எரிகாயங்கள் தெரியும். இவள் சிகிச்சைக்காக காஸா பகுதியில் அனுமதிக்கப் பட்டிருந்தவள். உடலில் வடுக்களோடு அவள் வாழ விரும்பாமல் இருந்திருக்கலாம். எதுவானாலும் மனிதக் குண்டாக அவள் வெடிக்காமல் போனதால் பல உயிர்கள் காப்பற்றப் பட்டதே அந்தளவில் நிம்மதி.
இளங்கோ, அக்பர் பாட்ஷா, அருமை
உங்களது வரவுகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
அருமை நீங்கள் தந்த மேலதிக தகவல்களுக்கும் நன்றி.
Post a Comment