எனது இந்தக் கட்டுரையை திண்ணையில் வாசித்து விட்டு கலைமணி இம்மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். கலைமணி அவர்களை அவமதிக்கும் எண்ணத்துடனோ, அல்லது அவரோடு சண்டை பிடிக்கும் எண்ணத்துடனோ இதை இங்கே நான் பதியவில்லை. அவரது கருத்தை கருத்தாக ஏற்று, இதற்கான மற்றவர்களின் கருத்துக்களை அறியும் நோக்குடனேயே இதை இங்கு தந்துள்ளேன்.
கற்பனைகள் கற்பனைகளாகவே இருக்கட்டும்.
7/11/2005 தேதி திண்ணையில், புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும் என்ற தலைப்பில் உங்களது கட்டுரையினை படித்தேன். கட்டுரையின் பொருளும், நோக்கமும் பொது கருத்தையோ அல்லது ஒரு கருத்தாக்கத்தையோ கொண்டு உருவாக்கவில்லை என்று நம்புகிறேன். உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் அனுபவம் கொண்டு எழுதினீர்கள் போலும்.
இதற்கு முன்னர் இப்படி ஒரு கட்டுரை வெளியிட்ட போது, எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன். இருந்தாலும் நீங்கள் அதை எல்லாம் ஒரு பொருட்டாகவே கொண்டதாக தெரியவில்லை. மாறாக இன்னமும் அதிக வேகத்துடன் உண்மைக்கு மாறான கருத்துகளை உண்மை போல எழுதுவருகிறீர்கள்.
இந்த கட்டுரைகளை படிக்கையில் எனக்கு தோன்றுவதெல்லாம், அப்படி என்ன உங்களிடம் அப்படி ஒரு தாழ்வு மனட்பான்மை. ஒருதலை பட்சமாக ஆண்வர்கத்தையே விமர்சிப்பது கண்டனத்துகுறியது.
உலகில் உள்ள அத்தனை தமிழர்களையும் ஒவ்வொருவராக கேட்ப்போம், உங்களின் வீட்டில் சந்திரவதனா எழுதியதுபோல் நடக்கிறதா என்று. அனேகமாக 97% மக்கள் இல்லை என்றுதான் கூறுவார்கள்.
ஆணும், பெண்னும் சமம் என்று ஒத்துக்கொண்டதோடு மட்டும் நில்லாமல், பெண் ஆண்களைவிட பல விஷியங்களில் இன்னமும் திறம்பட செயலாற்ற முடியும் என்று நிறுபித்தாகியும் விட்ட இந்த கால கட்டத்தில், பொருந்தாத, உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
இந்த கட்டுரைகள் மூலம் நீஙகள் தேடுவது என்ன, தொன்று தொட்டு
கெட்டப்பழக்கங்கள் என்று பிரித்துவிடப்பட்ட ஆணின் பழக்க வழக்கங்களிலே
பெண்ணுக்கு சம உரிமைவேண்டும் என்றா? அல்லது ஆண்கள் தனக்கு இளயவளாக தாரம் வேண்டும் என்று கேட்பது போல், இனி பெண்களும் தங்களுக்கு இளையவனாக மாப்பிள்ளை வேண்டும் என்று கோரும் புரட்சியோ? அல்லது கணவன்மார்கள் என்னதான் எடுத்து சொன்னாலும், அடம் பிடித்து வேலைக்கு போய். தனது நலனையும் வீணாக்கியதோடு மட்டும் இல்லாது குடும்பத்தார் அனைவரது நலனையும்
கவலைக்கிடமாக்குவதையா? அல்லது இப்படி வேறு ஏதேனும் ஒரு விஷியத்தில் சண்டித்தனம் செய்வதைத்தான் பெண் சுதந்திரம் என்று கற்பனையாக நினைப்பதோடு மட்டும் இல்லாது. அதை கருத்தாக்கம் செய்யும் வேலை எல்லாம் ஒன்றும் வேண்டாம்.
கதைகளும், நாவல்களும், திரைப்படங்களும், மற்றும் அத்தனை ஊடகங்களும்
கொடுக்கும் அடிமை பெண் கதா பாத்திரங்கள் பார்ப்பவர்கள் பார்த்து சந்தோஷ படுவதற்காக கற்பனையாக உருவாக்கப்பட்டவைகள். அவைகளை பார்த்துவிட்டு இப்படி பிதற்றல் கட்டுரைகளை படைக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்,
கலைமணி.
10 comments :
கண்டிப்பாக அவர் உங்கள் நண்பராக இருக்க வாய்ப்பில்லை. நான் எப்படி அவ்வளவு அறுதியிட்டு சொல்கிறேன் என்று யாராவது சொல்ல முடியுமா?
அன்பின் சந்திரவதனா அக்காவுக்கு,
வழைமையான கூச்சல்கள் தானே இவையெல்லாம். என்னைப் பொறுத்தவரை இந்தக் கருத்தை பொருட்படுத்தியிருக்கவே தேவையில்லை. இவர்கள் திரும்பத் திரும்ப சொல்லும் ஒரே விடயத்தைக் கேட்டுக் கேட்டு எம் செவிகளுக்கும் சலிப்பு ஏற்பட்டுவிட்டது, அதேபோல் இவர்களுக்கு திரும்ப திரும்ப பதில் சொல்லிச் சொல்லி நாவும் சலித்துபோய்விட்டது. கட்டுரையில் ஒட்டுமொத்தமான ஆண்களையும் குறை சொன்னதாக அவர் எழுதியிருப்பதிலிருந்தே தெரிகிறது, எந்தளவு தூரம் கட்டுரையை வாசித்து உள்வாங்கியிருக்கிறார் என்று. வெறுமனே, பெண்கள் பற்றிய கட்டுரை ஏதும் வந்தால் - அதில் ஆண்கள் என்ற சொல்லைக் கண்டாலே போதும் இவர்களுக்கு - உடனே ஒட்டுமொத்த ஆண்களையும் குறைசொல்வதாக எண்ணிக்கொண்டு - தன்மான உணர்வு பீறிட்டெழ - "சிறுபிள்ளைத்தனமாக" அழுது தீர்ப்பார்கள்.
நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்
கலைமணியின் விளக்கங்கள் ஏற்புடையவாக இல்லை. ஆண்கள் என்ன கொடுப்பது? பெண்கள் என்ன வாங்குவது? அவரவர் சுதந்திரம் அவரவர்க்கு.
என்னதான் பெண் வேலைக்குப் போனாலும் படித்தாலும் இன்னும் பல இடங்களில் முழுச் சுதந்திரமில்லை. வீட்டில் மட்டும் என்ன வாழுகிறதாம். சமையற் கட்டுக்குள் பெண்களைக் கிடக்கச் செய்து பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க வேண்டுமா? அதுவும் முக்கியம்தான். ஆனால் அதை ஆண் பெண் இருவரும் செய்ய வேண்டும்.
இன்றைக்குப் படித்து வேலைக்குப் போகும் பெண்களின் நிலை என்ன? அலுவலகத்திலும் வேலை பார்த்து வீட்டிலும் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது.
இப்படியெல்லாம் சும்மா கதை விட வேண்டாம் கலைமணி. கண்களைத் திறந்து பாருங்கள். உண்மை புரியும்.
கலைமணி
என்னுடைய வேலையில் ஒருநாள் இருந்து பார்த்தால் தெரியும் பெண்கள் படும் அவஸ்தை. எனக்கு தெரிந்த் அமென்பொருள் பணியாளர் இரவு வேலையிலிருந்து வர தாமதமானால் அவருடைய கார் நிறுத்துமிடம் வந்து கூச்சல் போடும் கணவன், அவர் வேலையை விட்டுவிடுகிறேன் என்று சொன்ன போது அவரை அடித்து துன்புறுத்தினார். காவலர் வந்த போது, அந்த பெண் புகார் கொடுக்கவில்லை. இன்னொம் ஒரு பெண் மேலாண்மை படித்தவர். அவர் இரண்டு முறை தற்கொலை செய்ய துணிந்துள்ளார். ஒரே ஒரு நாள் என் பணியை செய்து பாருங்கள். பெண்களில் சுதந்திரம் எத்தன்மையது என்று? குழந்தை நலன் காக்க பல பெண்கள் அடிக்கும் உதைக்கும் பணிந்தே வாழ்கின்றனர். நல்ல ஆண்கள் பலர் இருக்கின்றனர். அதே போல வன்முறி செய்யும் பெண்களும் உண்டு. ஆனால் சதவிகதம் பார்த்து உலகளாவிய சம்பவங்கள் பார்க்கும் போது, அடிமைத்தனம் இன்னும் நீங்கவில்லை.
கலைமணிக்கு,
நீங்கள் சொல்லும் அந்த சமுதாயம் இன்னும் வரவில்லை. இந்த மாற்றம் நிகழ பெண்களுக்கான கல்வியோ அல்லது அவர் சார்ந்த உடமைகளோ இந்த சமயத்தில் முழுவதுமாக அவர்களுக்கு ஓர் ஆணுக்கு இருக்கும் விடுதலையை கொடுப்பதில்லை. இதை நான் என் அனுபவமாக சொல்கின்றேன். எந்த ஒரு சமூகமும் பெண்களுக்கு விடுதலை என்ற நிலையை முன் வைக்க நினைக்கின்றதோ அந்த சமூகம் தன்னளவில் ஓர் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், எப்படி போலியோ, எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு அரசின் பிரச்சாரம் இருக்கின்றதோ அத்தகைய பிரச்சாரம் இந்த பெண்ணடிமை என்ற நோய்க்கு எதிராகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து, பெண்களை கொச்சை படுத்தும் வகையில் இளைய ஆண்களை மணப்பது, சம உரிமை என்ற மட்டையடிகளால் இனியாவது பேசாமல் இருக்க வேண்டும். மேலும் கணவன் எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் என்று நீங்கள் சொல்வது, அன்பின் பெயரில் நடக்கும் ஆதிக்கம் என்பதை நீங்கள் என்றாவது உணர்ந்தால் அன்று நான் இந்த பின்னூட்டத்தில் சொன்னது உங்களுக்கு விளங்கும்.
அன்புடன்
பாலாஜி-பாரி
வணக்கம் மூர்த்தி
உங்கள் கருத்துக்கு நன்றி. கூடவே
அந்த இணைப்பையும் தந்ததற்கு மிகவும் நன்றி.
இதுவரை அந்தப் பக்கம் கண்ணில் படாமலே இருந்து விட்டது.
சொல்வதெல்லாம் உண்மை
உங்கள் வரவுக்கும் நன்றி
இளைஞன்
நீங்கள் சொல்வதும் சரிதான். அவரது மெயிலைப் பொருட்படுத்தாமலே விட்டிருக்கலாந்தான்.
அவரது எழுத்தில் இருந்த நியாயமற்ற தன்மை என்னை அதை இங்கே பதிய வைத்தது.
இங்கு அதைக் கொண்டு வந்ததால் மூர்த்தி தந்த இணைப்பையும் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
ராகவன், பத்மா, பாலாஜி-பாரி
நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் கலைமணிக்கு விளங்குகிறதா அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி
நடந்து கொள்கிறாரா என்பது எனக்கு விளங்கவில்லை. உங்கள் புரிந்துணர்வான கருத்துக்களுக்கு மிகவும் நன்றி
கலைமணி என்பவர் கற்பனை உலகில் வாழ்கிறார் போல இருக்கு.
எனக்கு இது:
//..அல்லது கணவன்மார்கள் என்னதான் எடுத்து சொன்னாலும், அடம் பிடித்து வேலைக்கு போய். தனது நலனையும் வீணாக்கியதோடு மட்டும் இல்லாது குடும்பத்தார் அனைவரது நலனையும்
கவலைக்கிடமாக்குவதையா//
விளங்கவில்லை.... என்ன சொல்ல வருகிறார்? பெண்கள் வேலைக்குப் போவது தேவையற்றது என்றா? வேலைக்கும் போய்வந்து வீட்டு வேலையையும் தனியாளாகச் செய்யும் போது 100% எல்லாருடைய நலனும் கவனிபடாதுதான்..அதற்காக இப்படியெல்லாம் சொல்வது அதிகப்பிரசங்கித்தனமாய்த் தோன்றுகிறது.
இந்த மாதிரியெல்லாம் கண்டனம் ..இல்லை.. "பிதற்றல்" வருதெண்டா அதைத் தூக்கிப் போட்டிட்டு உங்கட வேலையைச் செய்யுங்கோ சந்திரவதனா. இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி மாளாது. இவர்கள் புரிந்து கொள்ளப்போவதுமில்லை!
சில விஷயங்களைப்பற்றிய இவர்களின் புரிதல் இவ்வளவுதான் என்று விட்டுவிட வேணும். செவிடன் காதில் ஊதிய சங்கு என்று சொல்வார்களே..அதுதான் கலைமணி போன்றவர்களுக்குப் பொருத்தமானது.
nantri Sherya
சாரா
எனது தளத்துக்கு வந்தது மட்டுமல்லாமல், அந்த இணைப்பையும் தந்து சென்றதற்கு மிகவும் நன்றி.
"ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் வருகையில், ஆண் வந்து கதிரைக்குள் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதுவும், பெண் வந்து கால் வலிக்க, கை வலிக்க வீட்டு வேலைகளைத் தொடர்வதுவும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது."
வேலைக்கு சென்று தனது நலனையும் கெடுத்துக்கொண்டு, வீட்டின் நலனையும் கெடுத்துக்கொண்டு என்று சொன்னது இது தான். ஆண்களால் எப்படி வெளியிலும் வீட்டிலும் வேலை பார்க்க முடியாதோ அதே போல் தான் பெண்ணும். அவளாலும் வீட்டிலும் வெளியிலும் 2 வேலைகள் பார்க்கவே முடியாது. ஆனால் இன்றைக்கு 80% பெண்கள் இப்படி தான் தன்னை வாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
பெண்களின் சுதந்திரத்தை ஆண்கள் என்ன கொடுப்பது என்று கேட்டிருக்கிறார்கள். உண்மையில் பெண்கள் பெண்களிடம் இருந்து தான் சுதந்திரம் பெறவேண்டி உள்ளதே தவிர ஆண்களிடம் அல்ல.
ஆண்களை போல் பெண்கள் எல்லாம் வல்லவர்களே அதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை...
கலைமணி.
Post a Comment