Saturday, June 03, 2006

நட்பு


எனக்காகச் சிரிக்கவும்
எனக்காக அழவும்
நான் சிரிக்கும் போது என்னோடு சிரிக்கவும்
நான் அழும் போது என் கண்ணீரைப் போக்கவும்
விழும் போது தூக்கி விடவும்
தவறும் போது திருத்தி விடவும்
முக்கியமாக
என்னில் நம்பிக்கை வைக்கவும்
எனக்கு நம்பத்தகுந்தவராகச் செயற்படவும்
ஒரு உறவு இருக்குமேயானால்
அது நட்பு

நட்பு
காதலை விடப் புனிதமானது
சுயநலமற்றது
பொறாமை அறியாதது

நல்ல நட்புக் கிடைப்பது அரிது
கிடைத்து விட்டால் அது ஞாலப் பெரிது.

சந்திரவதனா
1999

13 comments :

மலைநாடான் said...

//நட்பு
காதலை விடப் புனிதமானது//

கடவுளை விடவும் புனிதமானது

பாராட்டுக்கள்.

சின்னக்குட்டி said...

ஆமாங்க...நீங்கள் சொல்றது ரொம்ப சரிங்க

கொலையும் செய்வாள் பத்தினி

உயிர் கொடுப்பான் தோழன்

யாரோ...திராவிட அரசியல் பெரிசு சொன்னதாக நம்ம கூட்டாளி விக்டர் அந்த நாளிலை சொன்னது

Chandravathanaa said...

மலைநாடான், யோகன், சின்னக்குட்டி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

யோகன் நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அது நட்பாகாது என்பது எனது கருத்து.

Chandravathanaa said...

நட்பென்று நம்பி ஏமாந்த போது நான் எழுதியது

நட்பென்றுதானே நம்பினேன்...!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்...?


சந்திரவதனா
12.12.2001

நாமக்கல் சிபி said...

//நட்பு
காதலை விடப் புனிதமானது
சுயநலமற்றது
பொறாமை அறியாதது
//

உண்மையான வரிகள்!

Chandravathanaa said...

நன்றி நாமக்கல் சிபி

வெற்றி said...

நல்ல பதிவு.
அய்யன் வள்ளுவன் நட்புப் பற்றிச் சொன்ன ஒரு குறள்:

அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

அழிவைத் தரும் அல்லல்களிலிருந்து நீக்கி, நல்ல நேரான வழியில் நடக்கச் செய்து, அதையும் மீறித் துன்பம் வந்தபோது, அவர்களுடனிருந்து துன்பத்தையும் தாங்கிக் கொள்வதுதான் சிறந்த நட்புக்கு இலக்கணமாம்.

Chandravathanaa said...

வெற்றி
திருக்குறளோடு தந்த நட்பைப் பற்றிய விளக்கத்துக்கு மிகவும் நன்றி.

காரூரன் said...

*\\காதலை விடப் புனிதமானது
சுயநலமற்றது
பொறாமை அறியாதது

நல்ல நட்புக் கிடைப்பது அரிது
கிடைத்து விட்டால் அது ஞாலப் பெரிது. \\*

இந்த வரிகள் போதும் நட்பை விளக்க. நான் தேடிய கேள்விக்கு பதில் கிடைத்துவிட்ட ஒரு மன நிறைவு.

Chandravathanaa said...

காரூரன்
உங்களுக்கு நிறைவு தரக்கூடிய விதமாக எழுத முடிந்ததில் எனக்கும் சந்தோசம்

கோவி.கண்ணன் said...

கவிதையின் பொருள் அழகு,

உறவுகளிலிடமிருந்து பிறப்பதைவிட நட்பிடமிருந்து பிறப்பதே 'துரோகம்' என்ற சொல். அதற்கு 'கனமும்' அதிகம் என்ற உணர்ந்திருக்கிறேன்.

வந்தியத்தேவன் said...

மனிதனுக்கு நல்ல பெற்றோர் கிடைக்கலாம் நல்ல மனைவி அல்லது கணவன் கிடைக்கலாம் ஏன் நல்ல காதலி கூட கிடைக்கலாம். ஆனால் நல்ல நண்பன் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தால் அந்த நட்புக்கு இணையாக வேறு ஒன்றும் இல்லை. அருமையான கவிதை அக்கா.

Chandravathanaa said...

கோவிக்கண்ணன், வந்தியத்தேவன்.
வரவுக்குமஇ கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite